செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

கனவல்ல நிஜம்- ஈரோடு புத்தகத்திருவிழா 9வது நாள் ( 11-8-2013)

 நண்பர்களே வணக்கம்

மனம் முழுக்க சந்தோஷ உணர்வுகள் ஏகத்தும் நிரம்பிக் கிடக்கும்போது அங்கே கூக்குரலிட்டு குதூகலிப்பதைக் காட்டிலும் வார்த்தைகளால் எழுதமுடிவது ஒரு துளியாய் இருந்திடும்தானே?!

எனினும், நண்பர்களுக்காக இதோ சிறு துளிகள்...

* புத்தகத்திருவிழா ஆரம்பிக்கும் நேரமான காலை 11 மணிக்கே எடிட்டர் நமது ஸ்டாலில் ஆஜராகிவிட, நமது வெளியூர் நண்பர்களில் சிலர் காலை 8:30 மணியிலிருந்தே 'உள்ளேன் ஐயா' போட்டிருந்தனர்.

* எடிட்டர் ஸ்டாலுக்கு வந்ததும் அவருக்காகக் காத்திருந்த நண்பர்கள்  ஆர்வமாய்ச் சூழ்ந்துகொள்ள, மொத்த அரங்கத்திலும் எங்குமே காணமுடியாத உற்சாகமான ஒரு கூட்டம் நம் ஸ்டாலில் மட்டுமே காணக்கிடைத்தது. கேமரா ஃப்ளாஷ்களும், ஒருவரையே மையமாகக் கொண்டு குழுமியிருந்த கூட்டமும் அங்கே கடந்து சென்ற பொதுமக்களை 'யாராவது சினிமா நடிகர் வந்திருப்பாரோ?' என்று நினைக்கத் தூண்டியிருப்பது சத்தியம். நம் எடிட்டரை 'ஒருவேளை இவர் நடிகர் ப்ரேம்-ஆக இருக்குமோ?' என்று கூட நினைத்திருக்கலாம். ;)

* 12 மணி சுமாருக்கு ஆஜரான பிரபல பதிவர் கார்த்திக் சோமலிங்கா-வைப் பார்த்ததுமே அதுவரை 'கார்த்திக்' என்ற பெயரைக் கேட்டாலே எனக்குள் தோன்றி வந்த கொலைவெறி 'சூரியனைக் கண்ட பனி'போல் விலகியதோடு, 'குபீர்' என்று ஒரு பாச உணர்வு ஓடோடி வந்து ஒட்டிக்கொண்டதையும் எவ்விதம் நான் வார்த்தைகளில் விளக்குவேன்!! நாள் முழுக்க பலரும் என்னை 'கிறுக்கு(ம்) பூனையார்' என்றே அழைத்தபோது, அந்தப் பெயரை எனக்கு வைத்த நபர் ஒன்றுமறியாத குழந்தையைப் போல் ஒரு புன்னகையுடன் ஓரமாய் நின்று ரசித்துக் கொண்டிருந்ததே!!

* இயல்பில் தான் யாருடனும் அதிகம் பேசாதவரென்று நம்மிடம் அறிமுகப் படுத்திக் கொண்ட நண்பர் சிவ.சரவணகுமார், எடிட்டரிடமும் மற்ற நண்பர்களிடமும் தனது உற்சாகம் தெறிக்கும் பேச்சுக்களால் அந்த இடத்தேயே கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்!

* கரூரை அடுத்துள்ள ஒரு ஊரிலிருந்து (ஈரோட்டிலிருந்து சுமார் 110 கி.மீ) மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் பைக்கிலேயே வந்திருந்த நண்பர் பழனிவேல், அதே காரணத்திற்காக எடிட்டரிம் வாங்கிக் கட்டிக் கொண்டார்!

* திருச்செந்தூரிலிருந்து தனது மனைவியுடன் வந்திருந்த ஷல்லூம் பெர்ணான்டஸின் ஆர்வமும் நண்பர்களை வியப்பிலாழ்தியது!

* வீட்டுக்கு வந்திருந்த உறவினர்களை உபசரிக்க வேண்டிய கடமை இருந்தாலும், நம் எடிட்டரை முதன்முதலாகக் கண்டிடும் ஆர்வத்தில் தன் சகோதரியோடு (தீவிர காமிக்ஸ் ரசிகை) வந்திருந்த 'சேலம் கார்த்திக்' , எடிட்டருக்கு அன்புப் பரிசுகொடுத்து தன் நீண்டநாள் கனவு பலித்துவிட்ட திருப்தியில், போக மனமின்றி விடைபெற்றார்.

* சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நம் எடிட்டரை தனியொரு மனிதனாய் தன் கேள்விக் கணைகளால் வாட்டியெடுத்த பெங்களூரு மகேஷ், 'சிங்கத்தின் சிறுவயதில்' ஒரு தொகுப்பாக வந்தே தீருமென்று வாதாடினார். பலன் 'இப்போதைக்கு' பூஜ்யம்தான் எனினும் 'எறும்பு ஊற கல்லும் தேயும்' என்பதை இந்தப் போராட்டக்குழு அறியாததல்லவே?!! ;)

* நண்பர் சிபியும், நண்பர் கார்த்திக் சோமலிங்காகாவும் ஈரோடு நண்பர்களுக்கு பரிசுகளை வாங்கி வந்திருந்து இன்ப அதிர்ச்சியளித்தனர். நன்றி நண்பர்களே!! உங்களின் இந்த நிபந்தனையில்லா அன்புக்கு என்றென்றும் கடன்பட்டவர்களாகிறோம்!

* கேள்விகளாலும், மறுபதிப்பு நச்சரிப்புகளாலும் துளைத்தெடுத்த நமது நண்பர்களையும், தீர்மானமாய் மறுத்துவந்த எடிட்டரையும் சற்றே தள்ளியிருந்து நோக்கியபோது 'ஓ! இதுதான் விடாக்கண்டன்-கொடாக்கண்டன் கதையா?!' என்று நினைக்கத் தோன்றியது!  ;)

* கடந்த வாரத்தில் நமது ஸ்டாலுக்கு வருகைபுரிந்திருந்த பழைய வாசகர்கள் அனைவருக்கும் எடிட்டரின் வருகைபற்றி முன்பே அறிவித்திருந்தோம். அவர்களில் பலரும் தேற்று வந்திருந்து எடிட்டரைச் சந்தித்து உறையாடிச் சென்றனர்.

* சில பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளோடு வந்திருந்து, தங்கள் குழந்தைகளுக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்தியிருப்பதாக பெருமையுடன் சொல்லிச் சென்றனர்.

* 'டைகர் கதைகளைப் படித்தே தனக்கிருந்த பய உணர்வுகளை விட்டொழித்ததாக' ஸ்டாலினின் வலைப்பூவில் பேட்டியளித்திருந்த நண்பரொருவர் நேற்று எடிட்டரிடம் அவர்தான் எடிட்டர் என்று தெரியாமலேயே சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் குறுக்கிட்டு 'இவர்தான் எடிட்டர் விஜயன்' என்று அறிமுகப் படுத்தி ஆர்ப்பாட்டமாய் சிரித்ததெல்லாம் கலாட்டா நேரங்கள்! ;)
 * ரத்தப் படலம் பற்றிய விசாரிப்புகள் நேற்றும் தொடர்ந்தன. 'அடுத்த சில வருடங்களுக்காவது நிச்சயமாய் கிடையாது' என்பதே எடிட்டரின் பதிலாக இருந்தது.

* அடுத்தமாதம் அறிமுகமாகப் போகும் அந்தப் புது காமெடி கார்ட்டூன் யாரென்ற கேள்விகளுக்கு 'அடுத்த மாதம்வரை பொறுக்கக் கூடாதா?' என்ற எடிட்டர் ஒருவாறாக 'சரி, அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்' என்றார்!

* 'இதுவரை நாம் படித்திடாத எத்தனையோ கதைகள் நமக்காக் காத்திருக்கும்போது, மறுபதிப்புகளில் கவனம் செலுத்திடுவது எவ்வகையில் சுவாரஸ்யம் தந்திடும்?' என்று கேள்வியெழுப்புகிறார் நம் எடிட்டர் ( அதானே?!)

* ஐந்து 'லாங்-சைஸ்' பக்கங்களில் பழைய ஹீரோக்களைப் பற்றிய தங்கள் மனக்குறையை கொட்டி ஒரு கடுதாசி எழுதியிருந்தனர் மேட்டூரைச் சேர்ந்த வாசகர் குடும்பம் ஒன்று!

* 'வருகின்ற ஜனவரி-சென்னை புத்தகத் திருவிழாவிற்கென ஏதேனும் சிறப்பிதழ் தயாராகி வருகிறதா சார்?' என்ற கேள்விக்கு கிடைத்ததோ ஒரு (மர்மப்) புன்னகையையும், ஒரு (அர்த்தமுள்ள) பார்வையையும் மட்டுமே!

கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட நண்பர்களில் சிலர்...
பரணிதரன், தாரமங்கலம்,
கர்ணன், சேலம்
டெக்ஸ் விஜயராகவன், சேலம்
கார்த்திக், சேலம்
பாரதி நந்தீஸ்வரன். குமாரபாளையம்
செல்வராஜ், கோவை
கார்த்திக் சோமலிங்கா, பெங்களூரு
கார்த்திகை பாண்டியன், மதுரை
கார்த்திக், ஈரோடு,
சிவகுமார், ஈரோடு,
சங்கர், ஈரோடு
பழனிவேல் ஆறுமுகம் -மனைவி, குழந்தையுடன், கரூர்
ஷல்லூம் ஃபெர்ணான்டஸ், மனைவியுடன், திருச்செந்தூர்
சி. பிரபாகரன் (சிபி), திருப்பூர்
வால் பையன், ஈரோடு
சிவ. சரவணகுமார், திருப்பூர்
பூபதி, திருச்செங்கோடு
கோகுல், நாமக்கல்
கணேஷ், பள்ளிபாளையம்
சிபிசக்கரவர்த்தி, ஈரோடு
சதீஸ், ஈரோடு
ராஜா, ஈரோடு
அஸ்லம் பாட்ஷா, மதுரை
சாரதி, கொடுவாய்
ஜெய்லாணி, தாராபுரம்
கிருபாகரன், சேலம்
டாக்டர். பாலு, ஈரோடு
சக்திவேல், ஈரோடு
சுவாமிநாதன், கரூர்
கே.டி.எஸ். ஆனந், சென்னிமலை
மொஹமத் அன்சாரி, சென்னிமலை
செல்வம், கோவை
கெளதமன், பெருந்துறை
சந்திரகலா, சேலம்
செந்தில் மாதேஸ்
மொய்தீன், ஈரோடு
சக்திவேல், சித்தோடு
இவர்களுடன்...
ஸ்டாலின்,
சோமசுந்தரம்(புனித சாத்தான்)
ஆடிட்டர் ராஜா,
விஜய்
(பெயர்விடுபட்ட நண்பர்கள் மன்னிக்கவும்! பல்வேறு காரணங்களால் அவசரகதியில் வந்து சென்ற நிறைய நண்பர்களின் பெயர்களைக் குறித்துவைக்க இயலவில்லை)  :(

விடுபட்ட நண்பர்களின் பெயர்கள் வேறு யாருக்கேனும் தெரிந்திடும்பட்சத்தில் இங்கே பின்னூட்டமாக இட வேண்டுகிறேன்.

அன்புடன்
விஜய்

 ஈரோடு புத்தகத்திருவிழா ஆரம்பிக்கும்பொழுதே நண்பர் விஜயும் நானும் செய்து கொண்ட  ஒப்பந்தத்தின் படி அலுவல் பணி காரணமாக ( காலையில் புத்தகத்திருவிழா இரவில் எனது வீட்டில் எனது அலுலக ப்பணி ) இந்த வலைப்பூவை விழா முடியும் வரை இருவரும் பயன்படுத்த முடிவு செய்தோம் ஆகவே எனது கருத்துபதிவிகளையும் சேர்த்து விஜயின் பதிவுகளில் சேர்த்துவிட்டதால் இங்கு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு இடமளிக்கிறேன்.  விரைவில் சில ஜாலியான நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். சில போட்டாக்களில் மைண்ட் வாய்ஸயும் இணைத்துள்ளேன் அது ஒரு நகைச்சுவை உணர்வுக்காகத்தான் நண்பர்களே :)

அன்புடன்
ம.ஸ்டாலின் 






















 சில காமிக்ஸ் கலாட்டாக்கள்
                             







.காமிக்ஸ் கலாட்டாக்கள் தொடரும்...

17 கருத்துகள்:

  1. நண்பர்களே(விஜய் & ஸ்டாலின்), புத்தக திருவிழா coverage சூப்பர். தமிழகத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன். மைன்ட் வாய்ஸ்/ காமிக்ஸ் கலாட்டா அருமை. காணொளிகள் இருப்பின் அடுத்தபதிவில் upload செய்யவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேற்கிலிருந்து ம. ராஜவேல்:
      நன்றி நண்பரே, அடுத்த முறை கண்டிப்பாக கலந்துகொள்ளுங்கள்

      நீக்கு
  2. மைண்ட் வாய்ஸ் அனைத்ததும் அருமை ஜி.

    ஒரே ஒரு குறை படங்களுக்கு கீல் அவர்களது பெயர்களை குறிப்பிட்டு இருந்தால் நாங்கள் அறிய உதவியாக இருந்திருக்கும் ஒரு சில முகங்கள் தவிர பலர் அறியாதவர்களே.

    ஒரு சந்தேகம் மின்னும் மரணம் முழுவதும் என்றாள் தொடர் முழுவதுமா அல்லது அந்த புத்தகம் மட்டுமா?

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே
    //பெயர்களை குறிப்பிட்டு இருந்தால் நாங்கள் அறிய உதவியாக இருந்திருக்கும்//
    சில நபண்பர்களின் பெயர்கள் தவறாக எழுதிட்டால் வருத்தப்படுவார்களே என யாருக்கும் எழுதாமல் விட்டுவிட்டோம். விரைவில் அவைகள் சேர்க்கப்படும்
    //மின்னும் மரணம் முழுவதும் என்றாள்//
    அனைத்து பாகங்களும் கொண்டது

    பதிலளிநீக்கு
  4. நேரில் வந்து பார்க்க முடியாத குறையை தீர்த்துவிட்டது உங்கள் தொடர் பதிவுகள். நன்றாக விவரித்துள்ளீர்கள்.! காமிக்ஸ் கலாட்டா புகைப்படங்கள் அனைத்திற்கும் வசனம் எழுதிய புண்ணியவான் யாரோ? நண்பர் பழனிவேலின் குழந்தை சொல்லும் வசனத்தை பார்த்தவுடன் சிரிப்பு அடக்கமுடியவில்லை.. :-)

    ஒன்று மட்டும் நிச்சயம்.. வாசக நண்பர்களை ஒருங்கிணைப்பதில் நமது காமிக்ஸ் தவிர வேறு எந்த ஒரு பத்திரிக்கைக்கும் சாத்தியமில்லை.!

    பெங்களுரு போல ஈரோட்டில் களப்பணி ஆற்ற முடியாமல் போனது எனக்கு வருத்தமே. :-( நான் 8-ம் தேதி மாலையே சொந்த ஊருக்கு சென்றுவிட்டு நேற்று காலையில் தான் திரும்பினேன். God willing, அடுத்த ஆண்டு நிச்சயமாக உங்கள் அனைவருடன் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //புகைப்படங்கள் அனைத்திற்கும் வசனம் எழுதிய புண்ணியவான் யாரோ?//
      இதுபோல் தொடரலாம நண்பரே? :)
      //ஆண்டு நிச்சயமாக உங்கள் அனைவருடன் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன்..!//
      அவசியம் வாருங்கள்

      நீக்கு
  5. ஆசிரியருடன் நாம் அனைவரும் நிற்கும் படத்தை வெளியிட்டதற்கு நன்றி நண்பரே...... எனது மொபைலில் எடுத்த புகைப்படங்களில் ஆசிரியர் இல்லை....... தங்களை அழைக்கலாமென்று நினைத்தேன்.... நீங்களே வெளியிட்டுவிட்டீர்கள்........

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவ.சரவணக்குமார்: உங்களுடைய நகைச்சுவை கலாட்டாக்கள் அருமை நண்பரே! ஆமா சாத்தான் இந்த மாதம் பின்னூட்டத்துக்கு சம்பளாம் கொடுத்துட்டாரா ?.... :) :) :)

      நீக்கு
    2. '' உண்மை '' வெளிப்பட்டுவிட்டதால் , கையும் களவுமாக பிடித்த உங்களிடமும் , ஆடிட்டர் ராஜாவிடமும் மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டார்....... எப்படி வசதி ? [ கேஷா , செக்கா இல்லை இ.சி.எஸ் ஆ?]

      நீக்கு
  6. நண்பர் ஸ்டாலின் அவர்களே , பிரம்மாதம்...அமர்களப்படுதிடீங்க ! வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்கத்தில் இருந்தும் நீங்களும் வரவில்லை உங்க இரும்புக்கையாரும் வரவில்லையே ஏன் தலைவா?

      நீக்கு
  7. அன்பின் (விழா ஒளிப்பதிவாளர்) ஸ்டாலின்,

    இந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் நமது காமிக்ஸுகளுக்காக நீங்களும் விஜயும் செய்திருக்கும் அனைத்துக்கும் ஒரு ராயல் சல்யூட். உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.

    பிரியமுடன்,
    கார்த்திகைப்பாண்டியன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சிதான் நண்பரே! அடிக்கடி வாருங்கள்

      நீக்கு
  8. dear stalin,உங்க mindvoice comment படித்து மனசுல இருந்த கவலை எல்லாம் போய்யிடிச்சி! hatsoff நண்பரே!
    சென்றவாரம், ஏதொ ஒன்றிற்காக என் மனைவி, என்னுடைய பெண்ணை 5வயது திட்டியதற்க்கு,mobileல் சிறிது நெரம் angrybird விளயாடிவிட்டு, அப்பாடி இப்பதான் மனசுல இருந்த கவலை எல்லாம் போச்சு , என்று என் மகள் என்னிடம் சொன்னது போல் ,, நண்பரே, என்னுடைய கவலைகளை மறக்கடித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Dr.Sundar,Salem: என்ன பண்ணறது நீங்கதான் மாட்டாம தப்பிச்சுட்டீங்களே!..... ;)

      நீக்கு
  9. நண்பரே, போட்டோக்களின் கீழே அவர்களது பெயர்களையும் போட்டிருந்தால் தெரிந்துகொள்ள ஏதுவாயிருக்குமே!

    பதிலளிநீக்கு
  10. @ கிருஷ்ணா மற்றும் ராஜா G . .......

    முதல் படத்தில் இருக்கும் நண்பர்களின் பெயர் வருமாறு...[ அதில் அடியேனும் இருப்பதால்....]


    இடமிருந்து வலமாக..... ஈரோடு விஜய் , ம.ஸ்டாலின் , திரு.கர்ணன் , புனித சாத்தான், எடிட்டர் , அடியேன் மற்றும் சேலம் டெக்ஸ் விஜயராகவன்.....

    பதிலளிநீக்கு