வியாழன், 1 ஆகஸ்ட், 2013

ஈரோடு புத்தகத்திருவிழா - 2013




வணக்கம் நண்பர்களே!

ஆகஸ்ட் மாதம் வந்தாலே ஈரோடு சுற்று வட்டார மக்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான் . ஒன்று எந்த மாவட்டத்திலும் இல்லாத ஆடிப்பதினெட்டு திருவிழா கொண்டாட்டம் அதில் குவியும் மக்கள் வெள்ளம். இரண்டாவது புத்தகத்திருவிழா. முதலாவதைவிட இரண்டாவது விழாவிற்கு கொஞ்சம் மவுசு ஜாஸ்தி. காரணம் 12 நாட்கள் திருவிழா என்பது மட்டுமல்ல அனைத்து மக்களும் மேற்கொள்ளும் ஒரு தவம் என்றால் அது மிகையாகாது

இவ்வாண்டு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 3 முதல் 14 வரை நடைபெற உள்ளது. உங்கள் அனைவரையும் வருக வருக என ஈரோடு நண்பர்கள் சார்பில் வரவேற்கின்றோம்.

சிறப்பு நிகழ்வாக இம்முறை காமிக்ஸிற்காக ஒரு பிரத்தியேக அரங்கத்தில் பிரகாஷ் பப்ளிகேஷன் மிளிரப்போகின்றது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் விஜயன் அவர்கள் 11 ம்தேதி வருகை தர உள்ளார் . அனைவரும் தவராமல் வருகை புரியா மீண்டும் அழைக்கின்றோம்

புத்தக கண்காட்சி மற்றும் காமிக்ஸ் நண்பர்களின் கொண்டாடம் இங்கு அவ்வபொழுது  பதிவேற்றப்படும்.











 Up date 2-8-2013
* இன்று ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி மற்றும் வேலுவும் புத்தக திருழாவுக்கு இன்று ஆஜராகிவிட்டார்கள்
   * நமது ஸ்டாலை அழகுபடுத்திக்கொண்டிருந்த பொழுது ஒவ்வொரு ஸ்டாலாக  தேநீர் விற்பனை செய்து கொண்டிருந்த ஒரு நண்பர் நமது அரங்கத்திற்கு வந்த பொழுது கேட்ட முதல் கேள்வி மாயாவி(வேதாளர்) கதைகள் எல்லாம் நீங்கதான் போடுறீங்களா? அது இருக்கா என்றார்?
    * அடுத்த நபர் அரங்கத்தின் உள்ளே பார்த்துவிட்டு இரும்புக்கை மாயாவி இப்பொழுது வருகிறா ? என வினவியபோது அனைத்து 30+ வயதை அடைந்த அனைவரும் கண்டிப்பாக இரும்புக்கையை இன்னும் மறக்கவில்லை என்பதனை உணர்த்தியது
    * அடுத்து வந்த நபர் நமதுபோஸ்டர்களைப்பார்த்து பிரமித்து இதெல்லாம் எங்கிருந்து வருகிறது என்று கேட்ட பொழுது வாசகரின் கைவண்ணங்கள் என்றோம்.  "வாசகர்களா"ஆச்சரியப்பட்டார். விளக்கம் அளித்தபோது சந்தோஷப்பட்ட அவர் கேட்ட கேள்வியும் இரும்புக்கை மனிதரைப்பற்றியதுதான்

அனைத்து அரங்கத்திலிருந்தும் பிரகாஷ் பதிப்பகத்தின் அரங்கம்மட்டும் தனித்துவம் பெறப்போவது இப்போதே உறுதியாகிவிட்டது

                                             78-பிரகாஷ் பதிப்பகத்தின் அரங்கம்
                                     
                                


சிவகாசியின் சிங்கங்கள் 

 

நாளைக்கு தயாராகும் புத்தக அரங்கங்கள்

பழய இதழ்களுக்கு மாற்றுஇதழ்கள் பெறவிரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்

12 கருத்துகள்:

  1. காமிக்ஸ் ஸ்டாலில் ஒரு ஸ்டாலின்!!! வாழ்த்துக்கள் ஸ்டாலின்! :) அந்தப் பக்கமா பிரபல ஓவியர் விஜய் வந்தார்னா ஒரு ஹலோ சொல்லுங்க பாஸ்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருப்பூர் வருவதாக சொல்லிவிட்டு ஈரோடு வந்துவிடுங்களேன் :)

      நீக்கு
  2. நம்ம நண்பர்கள் கும்மாளத்தை அவ்வபொழுது பதிவேற்றுங்க ஸ்டாலின்.

    பதிலளிநீக்கு
  3. @Erode M.STALIN:
    பகிர்வுக்கு நன்றி ஸ்டாலின்!!!

    //அனைத்து அரங்கத்திலிருந்தும் பிரகாஷ் பதிப்பகத்தின் அரங்கம்மட்டும் தனித்துவம் பெறப்போவது இப்போதே உறுதியாகிவிட்டது//
    நிச்சயமாக, இவ்வளவு பேனர்கள் யாரும் கட்டியோ ஒட்டியோ இருக்க மாட்டார்கள்! குட்டி சுட்டி கட்டி ஒட்டி என்று ஒரே கலக்கல்தான் போங்கள்! :) தன்னார்வத்துடன் உதவி வரும் உங்கள் முயற்சிகள் பாராட்டுக்குரியது!

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. Stalin,

    Great arrangement from your team at Erode!

    உங்கள் அணியின் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    கார்த்திக்,

    '30 நாட்களில் போஸ்டர் செய்வது எப்படி?' என்ற புத்தகமெல்லாம் படிக்காமல் - on spot creativity கொண்டு ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள் ! இரண்டாவது முறை ஒரு லயன் போட்டியில் வெல்வதற்கும் congrats!

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஸ்டாலின்! இந்த புத்தகவிழா இளையதலைமுறையினரிடையே நம் புதிய பொலிவுடைய தமிழ்காமிக்ஸை கொண்டு சேர்க்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன்! வாழ்த்துக்கள் கார்த்திக்! செனர் ஆப்ஃ அட்ராக்‌ஷன் அந்த மெகா போஸ்டர். இரும்புகை மாயாவியையே எண்ணிகொண்டிருக்கும் பழையவாசகர்களின் கவனத்தை கண்டிப்பாக அது ஈர்கும்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே!
      //பழையவாசகர்களின் கவனத்தை கண்டிப்பாக அது ஈர்கும்! :)//
      இன்று வந்தவர்களில் 70% நபர்கள் இரும்புக்கையையும் , மான்ரேக்கையும் , வேதாளரயும் இன்னும் தேடுகிறார்களே ;)

      நீக்கு
  7. சூப்பர்! போஸ்டர்களில் மாயாவியோ,ஸ்பைடரோ, ஆர்ச்சியோ இல்லாதது நாம் அடுத்த கட்டத்திற்கு தாவி விட்டதை உணர்த்துகிறது! அவர்கள் தேவை இல்லை என என என்னும் நண்பர்களையும் காட்டுகிறது! எங்களுக்கோ என்ன செய்ய வரும் கதைகள் அனைத்தும் சிறப்பாய் உள்ளதால் இது ஒரு பிரச்சினையாக தெரியவில்லை ! ஆனாலும் ஓங்குக ஸ்பைடரின் புகழ்! போஸ்டரை பார்க்கும் ஒவ்வொரு கண்களும் நிச்சயமாய் ஸ்பைடரை தேடும் போது அவர்களது மன கண்களில் நிச்சயம் மின்னி மறைவார் நமது குற்றவியல் சக்கரவர்த்தி என்பது மட்டும் உண்மை!
    இதுதானே காலம் காலமாய் நடந்து வருகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோயம்புத்தூரில் இருந்து என்ன செய்யப்போரீங்க உடனே அடுத்த பஸ்ஸ புடிச்சு வாங்க . சூடான பஜ்ஜி ஆறிடப்போகுது ....:)

      நீக்கு