புதன், 19 ஜூன், 2013

காமிக்ஸ் சுற்றுலா

நண்பர்களே வணக்கம்.
கடந்தமாதம் குடும்பத்துடனான கோடைகால சுற்றுலா காமிக்ஸ் தேடலுடன் தொடர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும் சுற்றுலா சென்ற இடமெல்லாம் பழயபுத்தக கடையை தேடி நான் அலைய... எனது ஜூனியரோ "அப்பா நீங்க  ஒரு சாக்கு பையை வச்சுக்கிட்டு தனியா வரவேண்டிய விசயத்துக்கு எங்களை ஏப்பா சுற்றுலானு கூட்டி கிட்டு வந்திங்க" என சினுங்கினான்
எனக்கென்னமோ இந்த சுற்றுலாவில் அதிகமான சிறமமே இல்லாமல் ஒரு ரூபாய் முத்து காமிக்ஸ் 4 இதழ்கள் 10 ரூபாய்க்கு; அதுவும் பைண்டிங்குடன் கிடைத்தது. ஒதுவும் காமிக்ஸே கிடைக்காது என நினத்த ஊரில் கிடைத்தது பெரிய விடயம்.
44 ராணி காமிக்ஸ் 130 ரூபாய்க்கு கிடைத்ததும் ஒரு ம்கிழ்வுதான். (திருநெல்வேலி பேருந்து நிலையம்)






ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது இன்னும் மிகக்குறைந்த விலையில் காமிக்ஸ் கிடைக்கத்தான் செய்கின்றது.

நமது நண்பர்களில்  அதிகப்படியானவர்கள் பழைய காமிக்ஸ் புத்தகங்களை மற்ற நண்பர்களுடன் மாற்றுப்பிரதியாக மாற்றிக்கொள்ள நினைக்கின்றனர் அந்த பட்டியலை விரைவில் இங்கு பதிவிடுகிறேன்....