வணக்கம் நண்பர்களே
2-8-2015 ஞாயிறு என்பதனால் நண்பர்களின் வருகை அதிகம் என்ற போதிலும் ஆசிரியரின் அட்டனன்ஸ் இல்லாததால் நட்புகளின் கூட்டம் குறைவே.
நண்பர் 17 ஆம் சித்தர் சிபிஜியின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடினோம். ஞாயிறு என்பதால் விற்பனையும் சூடு பிடித்திருந்தது... நண்பர்களுடன் இரவுவரை பொழுது போனதே தெரியவில்லை
அடுத்த சனி ஞாயிறு ஆசிரியர் விஜயன் அவர்களின் வருகை என்பதனால் இன்னும் அதிகமான் நண்பர்களை எதிர்பார்க்கிறோம்...
அன்புடன்
ம. ஸ்டாலின்
ஈரோடு விஜய் , பாரதி நந்தீஸ்வரன்,ஸ்டாலின், சோமசுந்தரம் (எ) புனித சாத்தான், சிபிஜி

2-8-2015 ஞாயிறு என்பதனால் நண்பர்களின் வருகை அதிகம் என்ற போதிலும் ஆசிரியரின் அட்டனன்ஸ் இல்லாததால் நட்புகளின் கூட்டம் குறைவே.
நண்பர் 17 ஆம் சித்தர் சிபிஜியின் பிறந்த நாளினை கேக் வெட்டி கொண்டாடினோம். ஞாயிறு என்பதால் விற்பனையும் சூடு பிடித்திருந்தது... நண்பர்களுடன் இரவுவரை பொழுது போனதே தெரியவில்லை
அடுத்த சனி ஞாயிறு ஆசிரியர் விஜயன் அவர்களின் வருகை என்பதனால் இன்னும் அதிகமான் நண்பர்களை எதிர்பார்க்கிறோம்...
அன்புடன்
ம. ஸ்டாலின்
" ஒரு ஒத்திகை ஞாயிறு " (EBFன் மூன்றாம் நாள்)
* முதலிரண்டு நாட்கள் மாலையில் பெய்த மழையால் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம்
வராத நிலையில், மூன்றாம் நாள் (ஞாயிறு) வருணபகவான் சற்றே இறக்கம் காட்ட, எல்லா
ஸ்டால்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிற்பகலில் லேசான தூறல் இருந்தாலும்,
வெயில் இல்லாத இதமான வெப்பநிலை சூழ்நிலையை வசந்தமாக்கிக் கொண்டிருந்தது.
பெரும்பாலான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். பல பெற்றோர்கள் தங்கள்
பிள்ளைகளை அழைத்துவந்திருக்க, சில பிள்ளைகள் தங்கள் பெற்றோரை அழைத்து
வந்திருந்ததையும்(!) காணமுடிந்தது!
* நண்பர்கள் புனித சாத்தான், டெக்ஸ் விஜயராகவன், யுவா கண்ணன், பழனிவேல்
ஆறுமுகம், கோவையிலிருந்து செல்வராஜ், மொய்தீன், திருப்பூரிலிருத்து சிபி, சிம்பா,
அசோக் குமார், பெருந்துறை செல்வகுமார், 'அன்புத் தம்பி' சத்யா கோபியிலிருந்து அருள்
பிரகாசம், கரூரிலிருந்து டாக்டர் சுவாமிநாதன், திருநெல்வேலியிலிருந்து கார்த்திகை
பாண்டியன் மற்றும் பெயரை நினைவுகூற இயலாத இன்னும் ஏராளமான பழைய/புதிய நண்பர்கள்
வந்திருந்தனர். அனைவரது முகத்திலும் கரைபுரண்டோடும் காமிக்ஸ்!
* நண்பர் கார்த்திகை பாண்டியனுடனான உரையாடல் உற்சாகமானதாகவும்,
உபயோகமானதாகவும் இருந்தது. 'பெளன்சர்' தொடரின் கதாசிரியர் Alexandro Jodorowskyயின்
திரைப்படங்களைப் பற்றி விளக்கம் கொடுத்துக் கொஞ்சம் பயமுறுத்தினார். நண்பரின்
சிறுகதைத் தொகுப்பு 'மர நிற பட்டாம்பூச்சிகள்' என்ற பெயரில் இன்று
(3/8/2015)ஈரோட்டில் வெளியீட்டுவிழா காண்கிறது. வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்
அவர்களே!
* நமது ஸ்டாலில் விற்பனை சீராக நடந்துகொண்டிருக்க, பலதரப்பட்ட மக்களும்
ஆர்வமாய் நமது புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து வாங்கிச் சென்றனர். பல பெற்றோர்கள்
பதின்பருவத்தை எட்டிப்பிடிக்கக் காத்திருந்த தங்களது பிள்ளைகளுக்கு தங்களது சொந்த
விருப்பத்தின்பேரிலோ அல்லது தங்கள் பிள்ளைகளின் விருப்பத்தின்பேரிலோ ஒன்றிரண்டு
புத்தகங்களை பில் போட்டனர். அவர்களின் தேர்வு பெரும்பாலும் லக்கிலூக் அல்லது
ஊதாகோட்ஸ் ( ப்ளூ = ஊதா என்று எடிட்டர் சொல்லியிருக்காரில்ல?) ;)
* இன்றைய man of the day யாரென்று கேட்டால் யோசிக்காமல் "சிபி" என்று
சொல்லிவிடலாம்! தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடும் பொருட்டு மதியம் ஆஜரானவர்
இரவுவரை உற்சாகமாத்தின் உறைவிடமாய் இருந்ததோடு, சுவையான மதிய விருந்தளித்து
நண்பர்களின் வயிற்றிலிருக்கும் கிரைண்டர்களுக்கு ஏக வேலை கொடுத்தார். வழக்கம்போல
அதே மரத்தடியில் ஸ்டாலின் வாங்கிவந்த ஒரு அழகிய கேக் பிறந்தநாள் பேபியால்
கூறுபோடப்பட்டு, அவரது கைகளாலேயே நண்பர்களின் வாய்க்குள்ளும் திணிக்கப்பட்டது (
கிரைண்டர் லோடு தாளாமல் திணறியது).
* நாங்கள் ஸ்டாலில் இல்லாத நேரத்தில் 55+ வயதுடைய பெண்மணி ஒருவர் மிகுந்த
ஆர்வத்துடன் நமது புத்தங்களைத் தேர்வுசெய்து ₹3000+ க்கு வாங்கிச் சென்றதாக
'பிரின்டர்' குமார் தெரிவித்தார்! ( மறுபடியும் அந்தப் பாட்டிம்மாவைப் பார்க்க
முடிந்தால் ஒரு வீடியோ பேட்டியைத் தயார் செய்துவிடலாம். போராட்டக் குழுவின்
மகளிரணித் தலைவி பதவியைக் கொடுத்து கெளரவிக்கவும் ஆசை!). தலீவியே, நீங்க எங்க
இருக்கீங்க?
* 40+ வயதுள்ளவர்களின் புத்தகத் தேர்வுகளில் டெக்ஸ் புத்தகங்களோடு மாயாவி,
ஸ்பைடர், லாரன்ஸ்-டேவிட் மறுபதிப்புகள் கட்டாயமாக இடம்பிடித்திருந்தது.
* பில் போட்டவர்களில் 10ல் ஒருவராவது 'The lion-250'யை தேர்வு செய்திருந்தனர்.
30ல் ஒருவர் 'மின்னும் மரணம்'! ( தோராயமான கணிப்பு மட்டுமே)
* டெக்ஸ் டைட்டில் அதிகமில்லாதது பலருக்கும் ஏமாற்றமே! இதனால், விற்பனையில்
ஒரு கணிசமான இழப்பை சந்திக்கநேரிடும் என்பதும் உண்மை!
* ஒவ்வொரு வருடமும் நாம் சந்திக்கும் மிக முக்கியமான விசாரிப்புகளில் ஒன்று "
இரத்தப்படலம் தொகுப்புக் கிடைக்குமா?". இப்படிக் கேட்பவர்களிடமெல்லாம் நாம்
சொல்லும் பதில் : "கொஞ்சநாள் பொறுங்க சார்... கலர்லயே கிடைக்கவும் வாய்ப்பிருக்கு"
(ந..நான் சொல்றது சரிதானே எடிட்டர் சார்?)
* நம்மிடம் பேச்சுக்கொடுத்தவர்கள் அனைவரிடமும் எடிட்டரின் வருகையைப் பற்றிய
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The CCC, எடிட்டர், ஏராளமான நண்பர்களுடன்
ஏகத்துக்கும் களைகட்டப்போகும் அடுத்த ஞாயிறுக்கு இதுவொரு 'ஒத்திகை ஞாயிறு' (
அப்பாடா! டைட்டிலைக் கொண்டுவந்துட்டேன்) என்றால் அது மிகையாகிடாது!
அன்புடன்
ஈரோடு விஜய் |

8ஆம் தேதி என் பிறந்தநாள் என்பதை யாரும் மறந்திட வேண்டாம்
பதிலளிநீக்குஷலூம் நீங்களும் மாத்திகிட்டீங்களா......
நீக்குஎந்த 8ங்கோ....அக்டோபர் ஆஆஆஆஆ.....
பதிலளிநீக்குஒரு இடத்தில் பேரு குட்டி யா இருக்கு ....பதிவு நீளுதுஉஉஉ......
பதிலளிநீக்குஒரு இடத்தில் பேரு பெத்த பேரு....ஆனா பதிவை துளவித்தான் படிக்க வேண்டி இருக்கு.....க்ரர்ர் .....க்ர்ர்.....
நீக்குடெக்ஸ் உங்கள மாதிரி எனக்கும் ஒரு ஸ்டெனா கிடைச்சா டைப்புறது சுழுவு.....:)
Good pictures stalin ji
பதிலளிநீக்குthank u ji
நீக்கு8ம். தேதி சிபிஜீ யின் பிறந்த நாள் மீண்டும் கொன்டப்படும்
பதிலளிநீக்கும்றுபடியும் முதல்ல இருந்தா......
நீக்குமறுபடியும் முதல்ல இருந்தா......
நீக்குஸ்பைடர் அய்யா போதும்
இத்தோட நிப்பாட்டிக்குவோம் நன்றி :))
.
ஆஹா..ஊட்டி விட்ட ஆடம் ஜாஸ்தியா இருக்கே..! என்னம்மா இப்படி ஊட்டிவிடறீங்களேம்மா..!!!
பதிலளிநீக்குநீங்க வந்திருந்தா ஆட்டம் இன்னமும் சூடு பிடித்திருக்கும் மாயாவி ஜி :))
நீக்கு.
அருமை மக்கள் ஜீ :)
பதிலளிநீக்குஇது போன்ற பதிவுகளை பார்த்து இரசிப்பதன் மூலம் அங்கு வர இயலாத கவலை மறக்கிறது .நன்றி ஸ்டாலின் ஜி.
பதிலளிநீக்குஒத்திகை ஞாயிறு ....சூப்பர் விஜய் ....டைட்டிலே கலக்ககலக்கிறது ....ஆனால் நான் பார்த்த வரை வந்தவர்கள் முதலில் அதிகம் தூக்கியது பெரிய புள்ளை ங்கள் 2யும் தானே ....மி.மி .& தி 250...... டெக்ஸ் டைட்டில்கள் குறைவு மற்றும் இம்மாத வெளியீடுகள் இல்லாத காரணங்களால் விற்பனை சற்றே சுணக்கம் என்பதை சிறு கலக்கத்துடன் ஒத்து கொள்கிறேன் .......வரும் வார ஆசிரியர் வருகை + புதிய வெளியீடுகள் ,விற்பனையை அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை .....
பதிலளிநீக்குசெயலாளரே அருமை ...
பதிலளிநீக்குதலீவையை மிஸ் பண்ணிட்டீங்களே ...:)
செயலருக்கேற்ற தலிவரா
நீக்குஇல்ல
தலிவருக்கேற்ற செயலாளரா
ஜாடிக்கேத்த மூடி மாதிரி கச்சிதமா பேசிக்குறாங்க ;-)
.
Good post
பதிலளிநீக்கு//சிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும் //
பதிலளிநீக்குர்..........................
ஆமாம் விஸ்வா ஜி
நீக்குநீங்க ஜஸ்டுல மிஸ்ஸு :((
.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குயாருப்பா அது ஈரோடு ஸ்டாலின் அப்படின்னு சொல்லிக்கிட்டு வேறு யாரோட படத்தை இங்கு போட்டு இருக்கிறது! It seems you are in very good diet, please maintain this forever!
பதிலளிநீக்கு-Parani from Bangalore
ஸ்டாலின் ஜி மிக்க நன்றி
பதிலளிநீக்குஉங்களின்/நண்பர்களின் பெரிய பரந்த மனதுக்கு மிக்க நன்றி _ /\_
உங்களுடன் மற்றும் நண்பர்களுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் கலகலப்பாக இருந்தது
அந்த நாளை மிகவும் கலகலப்பாக ஆக்கிக் கொடுத்ததற்கு நான்தான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்
நண்பர்களின் அன்புக்கு முன் நான் மிகச் சிறியவன்
நண்பர்களின் வயிற்றிலிருக்கும் கிரைண்டர்களுக்கு ஏக வேலை கொடுத்தார்
விஜய் ஜி
சொல்லவே இல்ல நீங்க கிரைண்டர முளுங்கினதா :))
( மறுபடியும் அந்தப் பாட்டிம்மாவைப் பார்க்க முடிந்தால் ஒரு வீடியோ பேட்டியைத் தயார் செய்துவிடலாம். போராட்டக் குழுவின் மகளிரணித் தலைவி பதவியைக் கொடுத்து கெளரவிக்கவும் ஆசை!). தலீவியே, நீங்க எங்க இருக்கீங்க? //
நீங்களும் எப்படியாச்சும் ஒரு பெண்மணிய சங்கத்துல சேத்திடலாம்னு பாக்குறீங்க
ஆனா நடக்க மாட்டேங்குதே ;-)
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
பதிலளிநீக்குபணம் அறம் இணையதளம்
ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்
உதவிக்கு பயன்படுத்து லிங்க்
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News