ஞாயிறு, 24 ஜூன், 2012

நைலான் கயிறு- ( பொக்கிஷம் -4)


சுஜாதாவின் "நைலான் கயிறு"


பெயர் : நைலான் கயிறு
ஆசிரியர் : சுஜாதா
ஒவியர் : ஜெயராஜ்
பதிபகம் : தெரியவில்லை
பதிப்பு : இருவண்ணம்

அட்டைபடம் : இல்லை (வழக்கம் போல்)





"சுஜாதா"  இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு கட்டுப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரியது.

கணிப்பொறியியல், இலக்கியம், தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று மனிதர்  தொடாத துறைகளே இல்லை . காமிக்ஸயும் இவர் கதை பதம்பார்துள்ளது நமக்கு ஒரு மிகப்பெரிய வரம். 


சென்ற ஆண்டு ஈரோடு புத்தக கண்காட்ச்சியின் பொழுது சுஜாதாவின் பழய புத்தகங்களின் மீதி இருந்த சிலவற்றை 10 புத்தகம் 112 ரூபாய்க்கு வாங்கினேன். அனைத்தும் 80களில் அவர் எழுதிய பொதினங்கள். 

 எனது பொக்கிஷப்பெட்டியை அழகு படுத்தும் நைலான் கயிறு இப்போது
BPK, நிஜாம் மற்றம் பல நண்பர்களுக்காகவும்.... 




 கணேஷ் -வசந்த்

ஆரம்ப காலத்தில் டில்லியில் வசித்து வந்ததாக கணேஷை சித்தரித்து அதனை மையமாக வைத்து   உருவாக்கியது இந்த கதை. முதலில் கணேஷை மட்டும் வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில் வசந்த் கிடையாது . பின்னர் வந்த கதைகளில் கணேஷ் - வசந்த் இணைந்து பல ஹிட் கொடுத்ததால் மறுஅவதாரமாக வந்த இந்த சித்திர கதைக்காக வசந்தை இணைத்திருக்கலாம். அனேகமாக கணேஷ் - வசந்த் இருவரும் வந்த "நைலான் கையிறு " கதை இதுவாகத்தான் இருக்கும் .



கதைச்சுருக்கம்:

அனைவரும் படித்திருக்கும் கதைதான் என்றபோதிலும் மறுபடியும்.....

நைலான் கையிறு மூலம் கொலை செய்யப்படும் கிருஷ்ணன் , அதற்கு தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கை சந்திக்கும் தேவ்தத்தன் மற்றும் ஹரிணி, இவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிதரும் கணேஷ் . இப்படி போகும் கதை இதன் பிறகு தான் சூடுபிடிக்கிறது





,உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க கணேஷ் - வசந்த் எடுக்கும் முயற்சிகள் ஒரு சிறு நூலிலையை பிடித்து முன்னேறுகிறது

 இறுதியில் கொலை செய்யப்பட்டதற்கு கூறப்படும் நியாயமான காரணம் ( இன்றய பல கதைகளுக்கு இதுதான் முன்னோடி), 

கதையின் மிக முக்கிய பலம் ; ஃப்ளாஷ் பேக் என்ற பெயரில் கதையின் மூலக்கருவை ஒரேடியாக சொல்லி போரடிக்காமல் டைரி மூலமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லுவது சுஜாதாவிற்கே உள்ள டச்... (இதுதான் பின்னர் கமலின் ஆளவந்தான் படத்தில் பிரதிபளித்தது )

ஓவியம்: ஜெயராஜின் அற்புத தூரிகை கதையை மேலும் பிரகாசிக்க செய்கின்றது . பொதுவாக  பெண்களின் ஓவியத்தில் ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனாடமி விசயத்தில் பின்னுவார். இதற்காகவே பலர் அடிமையாகிவிடுவார்கள்
 இந்த கதையில் நீதி மன்ற காட்சிகளயும் , சில கிளுப்பான இடங்களிலும் , வழக்கம் போல தனது முத்திரையை பதித்து விட்டார் ஜெயராஜ் 


சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திக்கும்முன் ஒரு கொசுறு செய்தி : ஓவிய மன்னன் ஜெயராஜ் எனது சிறுகதை ஒன்றுக்கு ஓவியம் வரைந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? 83 ல் வந்த அந்த புத்தகம் எனது பொக்கிஷத்தில் எங்கோ புதைந்துள்ளது.

அப்புறம் இன்னும் ஓட்டு போடாத நண்பர்கள் மேலே ஒரு பதம் பார்த்தால் நல்லது ........


22 கருத்துகள்:

  1. சில இடங்களில் Font மாறி கட்டம் கட்டமாக தெரிகிறது நண்பா கவனிக்கவும்.!

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் முழுமையாகப் படிக்க இயலவில்லை...

    பதிலளிநீக்கு
  3. http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/06/blog-post.html#comment-form

    நீங்கள் தந்த இந்த லிங்க் திறக்கவேயில்லை நண்பரே! ஏன்? கவனியுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. எனது PC இல் நன்றாக தெரிந்ததால் விட்டு விட்டேன்
    unicode க்கு மாற்றாததால் இந்த தவறு நடந்து விட்டது நண்பர்களே ! தெரிய படுத்தியமைக்கு மிக்க நன்றி !திருத்தப்பட்டு விட்டது

    பதிலளிநீக்கு
  5. எனது பதிவில் நான் கொடுத்துள்ள கமெண்ட் உங்கள் பார்வைக்கு:
    //நண்பரே... உங்கள் நைலான் கயிறு பற்றிய பதிவின் சரியான தலைப்பு தலைப்பு இதோ:
    http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/06/blog-post.html //

    பதிலளிநீக்கு
  6. மேலும் பதிவினில் ஒருவரை அல்லது அவரது பதிவை குறிப்பிடும்போது அந்த பெயரை சொடுக்கினால்
    அந்த பதிவு திறக்குமாறு லிங்க் கொடுப்பது வழக்கம். உதாரணமாக பின் வரும் முகவரியில் சென்று பதிவில் எனது பெயருடன் எனது வலைப்பூவின் லிங்க் கொடுக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். நானும் எனது முந்தின பதிவுகளில் இவ்வாறுதான் செய்துள்ளேன்.

    http://www.sumazla.blogspot.in/2012/06/blog-post.html


    (கடைசியாக பதிவிட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. பலப்பல மின்னஞ்சல்கள் பதிவிடக்கோரி. குறிப்பாக நிஜாம் அண்ணனுக்கு என் நன்றிகள். )

    பதிலளிநீக்கு
  7. என்ன தலைவா செய்றது.... எனது உற்ற நண்பன் உடன் இருக்கும் போது இதேல்லாம் கத்துக்கவே முடியல....அவன தொலைச்சுக்கட்ட எதாவது வழி சொல்லுங்க.
    என்னுடய நண்பன் பேரு தெரிய வேண்டுமா? - 'சோம்பேறித்தனம்"

    பதிலளிநீக்கு
  8. சுஜாதா நாவல்கள் படித்திருக்கிறேன். காமிக்ஸ் படித்து இல்லை . நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  9. //நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன்//
    சுஜாதாவின் எந்த கதையும் சோடைபோனதில்லை . நன்றி நண்பரே ! வருகைக்கும் பதிவிற்கும்

    பதிலளிநீக்கு
  10. அட! இது எப்படி என் பார்வையில் இருந்து தப்பியது?! அரிய இதழை பற்றிய அருமையான பதிவு! எத்தனை சுஜாதா ரசிகர்களுக்கு இதைப்பற்றி தெரியும்?! சந்தேகம்தான்!

    பதிலளிநீக்கு
  11. நன்றி BPK!

    சுஜாதாவின் இன்னும் ஒரு கதை " மீண்டும் ஜுனோ" சித்திரக்கதயாக வந்துள்ளது என விஷ்வா கூறினார்.
    யாரிடம் உள்ளதோ!.......

    பதிலளிநீக்கு
  12. சாரி நண்பரே நாம் எப்பொழுது கூகிள் reader இல் தோன்றும் படிக்காத பதிவுகளை படிப்பேன்.
    ஆனால் உங்களது பதிவு எப்படி மிஸ் ஆனது என்று தெரியவில்லை.
    நல்ல பதிவு.அரிதான புத்தகம்.இதுதான் பொக்கிஷத்தின் speciality.
    மீண்டும் அதனை நிருபித்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  13. ஏனோ ஸ்டாலினின் பதிவுகள் நான் தொடரும் வலைப்பூ பட்டியலில் தெரிவதில்லை (முகவரியை மாற்றியும்!)

    பதிலளிநீக்கு
  14. BPK: எனது வளர்ச்சி பொறுக்காத (?!) எதோ அயல் கிரகவாசியின் சதி என நினைகிறேன் !
    ஏதாவது வழிஇருந்தால் செப்பவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :)

      உங்கள் வலைப்பூவை நான் தொடரும் ப்ளாக் பட்டியலில் இருந்து ஒருமுறை நீக்கி மறுபடி இணைத்துள்ளேன், நீங்கள் புதிய பதிவிடும்போது தெரியவரும் - வேலை செய்கிறதா என்று!

      நீக்கு
  15. நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு. தமிழின் முக்கியமான ஆளுமையின் காமிக்ஸ் படைப்பு ஒன்றை பார்க்க ஆவல். 'அயல் கிரகவாசியின் சதி' யினால் இன்றுதான் இந்த தளம் பக்கம் வரமுடிந்தது. இது பதிப்பக காமிக்ஸா அல்லது பத்திரிக்கையில் தொடர்கதையாக வந்ததா என்று தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  16. ஆரம்பத்தில் இது தொடர்கதையாக வந்தது என இணையதளம் மூலம் அறியமுடிந்தது . பல வருடங்கள்கழித்து காமிக்ஸாக வந்துள்ளது. "மீனா" காமிக்ஸாக இருக்கலாம். ஏனேன்றால் இதே பானியில் மற்றும் ஒரு காமிக்ஸ் என்னிடம் உள்ளது ( ஜெயராஜ் ஓவியத்துடன் ) அது மீனா பதிப்பகம்.

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நண்பாஸ்.....

    பதிலளிநீக்கு
  17. நண்பரே

    பதிவுகள் இட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. புதிய பதிவுகள் எதுவும் தயாராகி வருகிறதா நண்பா ?

    பதிலளிநீக்கு
  18. நாளை "புத்தக திருவிழா பதிவு" நண்பா!

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள ஸ்டாலின்,

    உங்களது இந்தப் பதிவை எனது தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்த சித்திரக் கதை இப்போது கிடைக்கிறதா என்று தெரியுமா ?

    அன்புடன்,
    பாலஹனுமான்

    பதிலளிநீக்கு
  20. balhanuman: உங்களுடய பதிவில் இதனை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    இந்த புத்தகம் இப்பொழுது கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் ஆகியவை மட்டும் வந்து கொண்டிருக்கின்றது . அதற்கான மற்ற விபரங்களுக்கு இந்த வலைப்பதிவை பார்க்கவும்
    http://lion-muthucomics.blogspot.in/

    பதிலளிநீக்கு