வியாழன், 15 ஆகஸ்ட், 2013

காமிக்ஸிற்காக வீட்டைவிட்டு ஓடினேன் ( புத்தக திருவிழா 10&11வது நாள்)

நண்பர்களே வணக்கம்.

12 -8-2013 இன்று கொஞ்சம் சுமாரான கூட்டமாக இருந்தாலும் . இரு மிக முக்கியமான நபர்களை சந்தித்தேன். ஒருவர் இந்திய மாஜிக் சங்கத்தின் தலைவர்  எனது நண்பருமான திரு கார்டீசியன் சந்திர சேகர் ( சீட்டுக்கட்டு வித்தைகளில் நிபுணர்) . ம்ற்றொருவர் வீட்டில் தெரியாமல்  விலைக்கு போட்டுவிட்ட காமிக்ஸை அடைந்தே தீருவதற்காக வீட்டைவிட்டு தெரியாமல் சிவகாசிக்கே பஸ் ஏறி ஓடிப்போய் புத்தகம் வாங்கியவர் இவர்களின் இருவருடய பேட்டிகளை அலைபேசியில் எடுத்தவற்றை இத்துடன் பகிற்துள்ளேன்
13-8-2013 இன்று எனது நண்பரும் மிகச்சிறந்த காமிக்ஸ் ஓவியருமான வினோத் அவர்களை சந்திக்க நேரிட்டது. பல வருடங்களுக்கு முன் அவர் வரைந்த காமிக்ஸின் சில பக்கங்கள் இன்றும் என்னிட்ம் பாதுகாப்பாக உள்ளது
                                                 11-8-2013 தின காட்ச்சிகள்


                                   காமிக்ஸிற்காக வீட்டை விட்டு ஓடினேன்,,,,
                                                  நான் மாண்ட்ரேக் ரசிகன்












                                                             மக்கள் அலை
 (விரைவில் நண்பர் விஜய் உதவியுடன் நண்பர்கள் பெயர்கள் எழுதப்படும் )
மைண்ட் வாய்ஸ்-part-2



மைண்ட் வாய்ஸ் தொடரும் நண்பர்க்ளே......

 அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


9 கருத்துகள்:

  1. அந்த அண்ணாச்சி [எடிட்டர் ] மைன்ட் வாய்ஸ் சூப்பர்...இருந்தாலும் எடிட்டர் அண்ணாச்சியை அவ்வளவு சுலபமா விட்டுடுவார்னு தோனல........

    பதிலளிநீக்கு
  2. முதன் முறையாக ஈரோடு புத்தகத் திருவிழா நமக்கு கிடைக்க ஆதாராமாக இருந்து; கண்காட்சி முடியும்வரை அதற்கு தூண்போல் துணை நின்ற மிஸ்டர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ! நம் காமிக்ஸ் ஸ்டாலின் பக்கபலமாக இருந்து, கடந்த 12 நாட்களும் களப்பணியில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட நம் நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு என் நன்றிகளும், காமிக்ஸை உளமார நேசிக்கும் நம் காமிக்ஸ் ரசிகர்களின் அளவற்ற பாராட்டுகளும் உரித்தாகுக !

    உண்மையாகவே நீங்கள் இருவரும், காமிக்ஸ் தீவிரவாதிகளாகிய எங்கள் நெஞ்சத்தில் உயர்ந்து நிற்கிறீர்கள் நண்பர்களே !

    பதிலளிநீக்கு
  3. திறம் வாய்ந்த நகைச்சுவையை தன்னிடத்தே கொண்டுள்ள, அந்த மைண்ட் வாய்ஸ் உண்மையாகவே அற்புதமாக இருக்கிறது. இதற்கு வசனம் எழுதிய நண்பருக்கு கிரடிட் கொடுப்பதே நாம் அவரின் திறமைக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கக்கூடும் ! எனவே அந்த திறமைசாலி நண்பரின் பெயரை அறிந்து, அவருக்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவிப்பதே எங்களின் தற்போதைய அளவில்லாத உவகையாக எண்ணுகிறோம்; ஆவன செய்வீர்களா மிஸ்டர் ஸ்டாலின் ?

    பி.கு: இந்த பதிவில் மிஸ்டர் புனித சாத்தான் மட்டுமே, தன் கையில் தங்க கல்லறை புத்தகத்தை வைத்துக் கொண்டு ஓவராக சீன போடுகிறார் :) மற்றபடி இதுவரை வெளிவந்த அனைத்து மைண்ட் வாய்ஸும் யதார்த்தத்தை தன்னிடத்தே உருவகமாக கொண்டு எங்கள் மனதில் கொல்லி வாய் பிசாசாக உலா வருவதால், அவையனைத்தும் ஜீவகளையோடு இங்கே ஜீவித்து வாழ்கிறது !

    பதிலளிநீக்கு
  4. மைண்ட் வாய்ஸ் ற்கு என்றே ஒரு மைண்ட் வாய்ஸ் தலைப்பிட்டு; அதன் தொகுப்பை ஒரு பதிவாக இங்கு பதிவிடுமாறு, நகைச்சுவையை எட்டி நின்று பார்த்து; ரகசியமாக உள்ளுக்குள்ளே ரசிக்கும், அப்பாவி காமிக்ஸ் வாசகர்களின் சார்பாக கோரிக்கை வைக்கிறேன் !

    இவண்;

    வாழ்நாள் உறுப்பினர்,
    சண்டை சச்சரவுகளால் மனம் நொந்து போனவர் சங்கம்

    பதிலளிநீக்கு
  5. நண்பர் பாரதி நந்தீஸ்வரனை சந்திக்க ஒவ்வொரு சுதந்திரத் தினத்தன்றும் குமாரப்பாளையம் சென்ற நாட்கள் உண்டு. அவரை சந்தித்த்து/பார்த்து சுமார் 13 ஆண்டுகள் ஆகிறது. பாரதி என்ற பெயரின்மேல் கவிஞரைத் தாண்டி ஒரு பற்றை உண்டாக்கியவை அவரது வாசகர் கடிதங்கள். வாசகர் கடிதங்கள் எழுதுவதில் எனது குரு.

    பதிலளிநீக்கு
  6. ஈரோடு ஸ்டாலின்,

    //எங்கள் ஈரோடு "MAFIA GANG"(ஈரோடு ஸ்டாலின்,ஈரோடு விஜய்,ஆடிட்டர் ராஜா,மற்றும் அடியேன்!)//

    புனித சாத்தான் அவர்கள் இப்படி ஏதோ MAFIA GANG எழுதி இருக்கிறார்.

    எனக்கு ஒன்றும் புரியவில்லை.

    சற்று விரிவாக விளக்குங்களேன்?

    பதிலளிநீக்கு