வியாழன், 8 ஆகஸ்ட், 2013

துப்பறியும் சுட்டி- ஈரோடு புத்தகத் திருவிழா (5th day) 7-8-2013

ஈரோடு புத்தகத் திருவிழா (5th day)
* கடந்த இரு நாட்களைவிடவும் மிக அதிகமாக இன்று பள்ளி/கல்லூரிகளின் கூட்டம் காலையில் துவக்க நேரத்திலிருந்தே ஆரம்பித்து, மாலை வரை மொத்த அரங்கமும் திக்குமுக்காடிப் போனது. நமது டைம்-டேபிளை வாங்கிட ஏக தள்ளு-முள்ளு; கூட்டத்தை சமாளிப்பதற்குள் எங்களுக்கு ஆங்ஞை வற்றிவிட்டது. ;)
* சிவகாசியிலிருந்து இன்று அனுப்பட்டிருந்த 10 ரூபாய் இதழ்களை மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். கொஞ்சம் வசதிபடைத்த மாணவர்கள் சுட்டி-லக்கியை விரும்பி வாங்கினர். சிலர் சுட்டி-லக்கியின் விலையைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் உறைந்ததும் நடந்தது.
* ஒரு மாணவர் கும்பல் ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு சுட்டி லக்கியை வாங்கிக்கொண்டு, யார் முதலில் படிப்பது என்ற விவாதத்துடன் நடையைக் கட்டினர்.
* சில மாணவர்களுக்கு ஆர்ச்சியையும், இரும்புக்கை மாயாவியையும் தெரிந்திருந்தது!
* பல மாணவர்கள் ஆங்கிலத்தில் காமிக்ஸ் ஏதும் இல்லையாவெனக் குறைபட்டுக்கொண்டனர்.
* தந்தையுடன் வந்திருந்த மாணவன் ஒருவன் பத்து ரூபாய் இதழ்கள் அடங்கிய 217 ரூபாய் பண்டில்தான் வேண்டுமென்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது வினோதமாய் இருந்தது!
* ஒரு மாணவன் 4 புத்தகங்களை எடுத்துவந்து என்னிடம் காட்டி அவை எந்தமாதிரியான கதையைக் கொண்டவை என்று கேட்டுத் தெரிந்து, பிறகு அதில் ஒன்றைத் தேர்வு செய்து வாங்கிச்சென்றான். அவன் வாங்கியது 'நிலவொளியில் ஒரு நரபலி'.
* மாலையில், ஒரு மாணவன் நம் ஸ்டாலுக்குள் புகுந்து வெகுநேரமாகப் புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்க, அவன் பெற்றோர் அமைதியாக அவனது நடவடிக்கையைக் கவனித்தபடியிருந்தனர். அவன் பெற்றோரிடம் நைஸாகப் பேச்சுக் கொடுத்ததில், அந்த மாணவன் நிறையப் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவனாம்; சில நாட்களுக்கு முன்பு 'மாண்டவன் மீண்டான்' கதையை எதேச்சையாகப் படித்தவனுக்கு அது ரொம்பவே பிடித்துப்போய்விடவே, எனக்கு நிறைய காமிக்ஸ் வேண்டுமென்று சொல்லி பெற்றோரை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வந்தானாம். அவனே தேர்வு செய்த தங்கக் கல்லறை, மேற்கே ஒரு சுட்டிப் புயல் உட்பட ஐந்தாறு புத்தகங்களை வாங்கிக் கொண்டார் அவன் தந்தை! மாணவனை அழைத்துப் பாராட்டிவிட்டு, அவன் பெற்றோரிடம் காமிக்ஸ் படிப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்கிக்கூறி, நமது காமிக்ஸ் ஈரோட்டில் எங்கு கிடைக்குமென்பதையும் சொன்னோம். ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் தொடர்புகெள்ள 'ஈரோடு காமிக்ஸ் க்ளப்'பின் விசிட்டிங் கார்டையும் கொடுத்தனுப்பினோம்.
* அந்தியூர், நாமக்கல், திருச்செங்கோடு, மேட்டூர் ஆகிய ஊர்களிலிருந்தும் இதுவரை நாம் சந்தித்திராத பல பழைய வாசகர்கள் வந்திருந்து தங்களிடம் இல்லாத புத்தகத்தை வாங்கிக்கொண்டு, சிறிது நேரம் தங்களது காமிக்ஸ் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, எடிட்டர் வருகைதரும் நாளன்று நிச்சயம் வருவதாக உறுதியளித்துச் சென்றனர்.
* மற்றொரு நிறைவானதொரு நாள்!

அன்புடன்

விஜய்          பழய டெக்ஸ் வில்லருக்கு ஏங்கும் திருச்செங்கோடு லோக நாதன்


* நண்பர் விஜய் தான் கொடுத்த வாக்குப்படி பல சுட்டிகளுக்கு மிக குறைந்த பணத்தை பெற்றுக்கொண்டு தனது சார்பாக சுட்டி லக்கியை வாங்கிகொடுத்தார் . super....... vijai
* விஜய் குறிப்பிட்ட அந்த குட்டிக்கு ஆக்ஸன் கதைகள் மட்டும் வேண்டுமாம். இன்னொரு சிறப்பு விஷயம் அவருக்கு பிடித்த படங்கள் எதுதெரியுமா? பழயகாலத்து ஜெய்சங்கர் படங்கள் ( CID யாக வருவதினால் ) இரண்டாவது எம்.ஜி.ஆர் படங்கள். இந்த படங்களைப் பற்றி கேள்விகேட்டால் பயல் குஷியாக பதிலளிக்கிறார். இவருக்கு பிடித்த நாயகன் இரும்புக்கை என்பதனை கேட்ட்கும்பொழுது இந்த சுட்டி இப்பொழுதே பழமைவிரும்பியாக உள்ளது ஆச்ச்ரியத்தை ஏற்படுத்துகிறது. வீடியோவில் பேசச்சொன்னால் அதெல்லாம் நான் பேச மாட்டேன் அதை எங்க அப்பா பாத்துக்குவார் என நழுவுகிறான். அவர்களின் பேட்டி இதோ... வருங்கால துப்பறியும் சுட்டிக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்
ம.ஸ்டாலின்
 நாளை தொடருவோம்  நண்பர்களே.....

15 கருத்துகள்:

 1. Puratchi Thee + பூம் பூம் படலத்துடன் - would be awesome stalin - instead of that Reporter Johnny digest which is a 'uttaalakkadi' this would be more cherished by all - old timers and new !

  பதிலளிநீக்கு
 2. மீண்டும் ஒரு நிறைவான பதிவு.
  விஜய் தனக்கே உரிய முறையில் நிகழ்வுகளை விளக்கி உள்ள விதம் மிக நன்றாக உள்ளது.
  படிக்கும் பொழுதே ஒரு வித சந்தோசம் வருகிறது.

  // நண்பர் விஜய் தான் கொடுத்த வாக்குப்படி பல சுட்டிகளுக்கு மிக குறைந்த பணத்தை பெற்றுக்கொண்டு தனது சார்பாக சுட்டி லக்கியை வாங்கிகொடுத்தார் //

  Hats off விஜய்.

  பகிர்விற்கு நன்றி நண்பர்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கிருஷ்ணா! அடுத்த ஈரோடு புத்தகத் திருவிழாவில் உங்களையும் சந்தித்திட ஆவலாய் இருக்கிறேன்!

   நீக்கு
 3. // பல சுட்டிகளுக்கு குறைந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு தனது சார்பாக சுட்டி-லக்கியை வாங்கிக் கொடுத்தார் //

  'பல' என்பது மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது. மிகுந்த ஆர்வம் காட்டிய இரண்டு சிறுவர்களுக்கே அவ்வாறு வாங்கிக் கொடுத்தேன்.

  ஸ்டாலின்ஜி, என்னை ரொம்பவே நெளிய வைக்கிறீங்களே?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஜய் தன்னடக்கத்தின் காரணமாக நீங்கள் குறைத்துக்கொண்டது புரிகிறது நண்பரே! ( எனக்கு தெரிந்தே நான்குக்கு மேல்)

   நீக்கு
 4. //பல' என்பது மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது. மிகுந்த ஆர்வம் காட்டிய இரண்டு சிறுவர்களுக்கே அவ்வாறு வாங்கிக் கொடுத்தேன். //

  இங்கே எண்ணிக்கையை விட உங்களது உயர்ந்த மனமே முன் நிற்கிறது நண்பரே ... Hats Off ...

  ஈரோடு புத்தக திருவிழா முழுமைக்கும் அங்கு இல்லாமல் போனதற்கு மனம் வருத்தபடுகிறது ....

  :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ ப்ளூ

   அதனாலென்ன, அடுத்தவருட புத்தகத் திருவிழாவுக்கு பத்து நாள் லீவு போட்டுட்டு வந்திருங்க. அடுத்தவருடத்திற்குள் காமிக்ஸ் படிப்பவர்களின் எண்ணிக்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் என்று எனக்குள் ஒரு பட்சி உறுதியாய் ஒலிக்கிறது.

   நீக்கு
 5. நண்பர் விஜய் மற்றும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தினமும் இத்தளத்தில் உங்களது daily -updates மிக நன்றாக உள்ளது. kudos to your efforts. ஆகஸ்ட்-11-ல் உங்களது special-updates-ற்காக காத்திருக்கிறேன். சிறுவயதில் என்னிடமிருந்த ரூ.2.50-க்கு 'சிறுபிள்ளை விளையாட்டு', 'மிஸ்டர் மர்மம்' மற்றும் 'மரண ராகம்' இதழ்களில் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறி, கடைசியில் 'சிறுபிள்ளை விளையாட்டை வாங்கினேன். மற்ற இரு இதழ்களை வாங்க நான் கிட்டத்தட்ட 30 நாட்கள் போராட வேண்டியிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. ஆர்வமுள்ள சுட்டிகளுக்கு comics பரிசு, நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் இது ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய விசயமும் கூட. எதோ நம்மால் முடிந்தால் ஒரு 5-10 சுட்டிகளுக்கு மட்டுமே செய்யமுடியும். எனவே ஒரு 'காமிக்ஸ் plus' series-களை (aka மினி லயன்) சுட்டிகளை கருத்தில் கொண்டு, ஆசிரியர் முயற்சிக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுகளுக்கு நன்றிகள் திரு.ராஜவேல் அவர்களே! நீங்கள் கூறியதுபோலவே சிறுவர்களுக்கான ஒரு பிரத்யேக இதழ் வெளிவருமென்றால் நமக்கும் கொண்டாட்டமே!

   நீக்கு
 6. sir
  nalaiku (Ramzan) boOk festival irukuma?
  yaravathu solUngalen plz...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ பெயரில்லா

   ரம்ஜான் தினத்தன்றும் புத்தகத்திருவிழா கோலாகலமாய் நடந்திடும்!

   நீக்கு
 7. பதில்கள்
  1. @ ஸ்டாலின்

   யார்கிட்டயோ தனியா பேசிட்டிருக்கீங்க போலிருக்கு? :D

   நீக்கு