ஈரோடு புத்தகத்திருவிழா (day 3):
Part-1
* வார இறுதிகளில் வரும் மக்கள் கூட்டத்தின் அளவைவிட, வார நாட்களில் கூட்டம் சற்று குறைவாகவேயிருக்கும் என்ற பொது விதி நாம் அனைவரும் அறிந்ததே! இன்றைய தினம் அவ்விதிக்கு உட்பட்டே இருந்தது!
* குழந்தைகளை பள்ளிக்கும், கணவனை ஆபீசுக்கும் அனுப்பிவைத்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன குடும்பத் தலைவிகளை நடுப்பகல் பொழுதில் அரங்கத்தில் நிறைய எண்ணிகையில் பார்த்திட முடிந்தது.
* பல குடும்பத் தலைவிகள் நம் ஸ்டாலுக்கு வந்து புத்தகங்களைப் பார்வையிட்டாலும், பலர் 'அட இப்படி காமிக்ஸெல்லாம் வருதா?' என்றபடி நடையைக் கட்டினார்கள். ஒரு சிலருக்கு ஸ்பைடரையும், மாயாவியையும் தெரிந்திருந்தது.
* ஒரு குடும்பத் தலைவி 3 புத்தகங்களை தேர்வுசெய்தபின் பில் போடும்போது அண்ணாச்சியிடம் "ஏங்க, கொஞ்சம் பில் கொறச்சுப் போடுங்க" என்றார்.
"பத்து பர்செண்ட் டிஸ்கவுண்ட் உண்டும்மா"
"பார்த்து இன்னும் கொஞ்சம் கொறைங்க"
" கொறச்சுத்தான்மா போட்டிருக்கு"
" நீங்க கொறைங்க"
"அவ்வளவுதாம்மா கொறைக்க முடியும்"
"அதெல்லாம் கொறைக்கலாம். கொறைங்க"
ஒருவழியாக அந்தப்பெண் அரைமனதோடு புத்தகங்களை வாங்கிக்கொண்டு நகர்ந்தாலும், அடுத்த சில நொடிகள் அண்ணாச்சி எனக்கு காய்கறி வியாபாரி மாதிரி தோன்றியதில் வியப்பில்லைதானே? ;)
* மதியப்பொழுதில் பள்ளிச் சிறுவர், சிறுமியர்களை பள்ளி நிர்வாகமே அழைத்துவந்திருந்தது. நண்பர் புனித சாத்தான் கொடுத்திருந்த ஐடியாவின்படி நமது லோகோக்களுடன் காமிக் கேரக்டர்களும் பிரிண்ட் செய்யப்பட்ட 'டைம் டேபிள்' எடிட்டரால் சிவகாசியிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. அவை அனைத்து குட்டீஸ்கும் இலவசமாக வழங்கப்பட்டன. சிறிது நேரத்திற்குப் பிறகு, புத்தகத் திருவிழாவில் உலவிக்கொண்டிருந்த எல்லா குட்டீஸ் கைகளிலும் நம் 'டைம் டேபிள்' இடம்பெற்றிருந்தது சந்தோசமளிக்கும் காட்சி!
* இரண்டு புத்தகங்களைத் தேர்வு செய்து பில்போட வந்த ஒரு குடும்பத்தலைவியிடம் சுட்டி-லக்கியை எடுத்து நீட்டி "உங்க குழந்தையோட ரீடிங் ஹேபிட்டை இம்ப்ரூவ் பண்ண நீங்க இதை வாங்கிக்கொடுக்கலாமே மேடம்" என்றேன். புரட்டிப்பார்த்துவிட்டு "இது வேணாங்க" என்று மற்றவைகளை மட்டும் வாங்கிச் சென்றார் ( கதை புத்தகம் படித்தால் குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்கன்னு நெனச்சாங்களோ என்னவோ!)
*சற்றே புஷ்டியான பள்ளிச் சிறுவன் ஒருவன் விற்பனையாளர் வேலுவிடம் "அங்கிள், சிக்ஸ்டீன் ருப்பீஸ்க்கு ஏதாவது காமிக்ஸ் கிடைக்குமா; எங்கிட்ட அவ்வளவுதான் இருக்கு"
"எவ்வளவுப்பா?"
"சிக்ஸ்டீன். ஒன்-சிக்ஸ்"
"பதினாறு ரூபாய்க்கு எந்தப் புத்தகமும் இல்லையேப்பா"
அவனது ஆர்வத்தை பாராட்டும் விதத்தில் ஒரு சுட்டி-லக்கியைப் பரிசளிக்க நான் முடிவுசெய்திருந்ம கணத்தில் வேறொருவர் என்னிடம் பேச்சுக்கொடுக்க, அவருக்கு பதில் சொல்லிவிட்டுத் திரும்பிய சில வினாடிகளுக்குள் அச்சிறுவன் காணாமல் போயிருந்தான். ஒரு எதிர்காலச் சந்தாதாரரை இழந்த வருத்தமெனக்கு!
* ஒரு சிறுவனுக்கு நான் டைம்-டேபிள்களில் இரண்டை எடுத்துக் கொடுத்தபோது அது கை தவறி கீழே விழுந்துவிடவே, அவன் அதை எடுத்துக்கொண்டபின் 'ஸாரி' சொல்லி "இந்தா, கீழே விழுந்ததுக்காக இன்னும் இரண்டு டைம்-டேபிள் சேர்த்து வச்சுககோ" என்று கொடுக்கவே, சந்தோசமாய் வாங்கிக்கொண்ட அச்சிறுவன் தன் நண்பர்களிடம் சென்று "கீழே தவறவிட்டா இரண்டு டைம்-டேபிள் ஃப்ரீயாம்" என்று ஒளிபரப்பவே, அடுத்த நிமிடமே சில சிறுவர்கள் என் முன் வந்து அவர்களிடமிருந்த டைம்-டேபிள்களைத் தவறவிட்டுத் தவறவிட்டு எடுத்தனர். :D
(மதியத்திற்குப் பிறகு நான் ஆபீஸுக்குச் சென்றுவிட்டதால், மாலையில் நடந்த சம்பவங்களை நண்பர் ஸ்டாலின் தொடர்வார்)
அன்புடன்
ஈரோடு விஜய்
part-2
நண்பர்களே வணக்கம்.
இன்று ம்ணி 7 இருக்கும்போது ஒரு நண்பர் நமது அரங்கினுள் வேகமாக வந்து ஒவ்வொரு இதழாக பார்வையிட்டார். கைலி அணிந்திருந்த அவரை பார்த்தபோது ஒரு சராசரி மனிதராகவே அவரை எடைபோட்டது எனது அறியாமயின் உச்சம் என்பதனை அப்போது நான் உணரவில்லை. அவரின் செயல்களை மட்டும் நோட்டமிட்டேன்.
தான் தேடிய இதழ் கிடைத்து விட்ட திருப்தியில் டைகர் கதை ஒன்றையும் சிகப்பாய் ஒரு சொப்பனத்தையும் எடுத்துச்சென்று பில்போட கொடுத்துவிட்டார் .
ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நான் அவரிடம் சென்று நீங்கள் காமிக்ஸ் அதிகம் படிப்பீர்களா என்று கேட்டேன் . அதற்கு அவர் ...
சார் நான் ஒரு தீவிர காமிக்ஸ் வெறியன், நான் கட்டிடத்திற்கு கம்பி கட்டும் வேலை செய்து வருகிறேன் வாரம் இருமுறை ஈரோடு ப்ஸ்டாண்டில் புத்தகம் வந்துவிட்டதா என பார்த்துவிட்டு போவேன்.புத்தகம் வராத பல மாதங்கள் கூட அவ்வாறு வந்து பார்த்து ஏமாந்து சென்றுள்ளேன். என்றவர் கூடவே ஒரு தன்னம்மிக்கை தகவலையும் கூறினார்.
சிறு வயது முதலே நான் யாரிடமும் அதிகம் பேசமாட்டேன். நான் ஒரு அமைதியான பையன் வீட்டில் கூட அதைபார்த்து சங்கடப்பட்டனர். என்று நான் டைகர் கதை படிக்க ஆரம்பித்தேனோ அன்றுமுதல் ஒரு தைரியம் வந்துவிட்டது . துணிச்சலும் பேசும் திறனும் என்னுள் வளர்ந்தது விட்டது. இன்று எதனையும் எதிர்கொள்ளும் எனது திறமைக்கு முதல் காரணம் காமிக்ஸ் தான். அது இல்லை என்றால் நான் இல்லை ....... என்று அவர் அடுக்கிக் கொண்டே போக எனது மயிர்கால்கள் நடனமாட ஆரம்பித்துவிட்டன. அடச்ச...இன்றுபார்த்து நமது வீடியோ கேமராவை கொண்டுவரவில்லையே என வருத்தத்தில் எனது அலைபேசி வீடியோவில் அவரை மீண்டும் பேச சொன்னேன் . அதன் பதிவு இதோ ...... அவர் பேச்சில் சிறிதும் கலப்படமில்லை என்பதனை நீங்களே பாருங்களேன்....
வார இறுதியில் (சம்பள நாள் ) மீண்டும் புத்தகம் வாங்க வருவதாக கூறினார். 11ம் தேதி வந்தால் ஆசிரியரை காணலாம் என்றபோது அவர் அடைந்த மகிழ்சிக்கு அளவே இல்லை
இன்றய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் பல இருந்தாலும் இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது
அன்புடன்
ம.ஸ்டாலின்

கைலி அணிந்திருந்த அவரை -
பதிலளிநீக்குBlueberry can inspire this kind of guts to anyone who reads those stories - especially the confederate gold saga - Minnum Maranam !
Nice little piece Stalin ..!
thanks ji
நீக்குசூப்பர் நண்பரே ,
பதிலளிநீக்குஇந்த வீடியோ இலிருந்து எமது வாசக நண்பர்களின் மன தைரியத்துக்கும் எமது காமிக்ஸ் நாயகர்கள் உறுதுணையாக உள்ளார்கள் என்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி . வித்தியாசமான ஒரு வாசகர் . சம்பள நாள் அன்று மீண்டும் வருவதாக விடைபெற்றது நெகிழ்ச்சி.
பேசவைக்கும் (வி)சித்திரங்கள்
நீக்குபுத்தகம் வாங்க வரும் வாசகர்களிடம் நைசாகப் பேச்சுக்கொடுத்து அவர்களை பேட்டி வரை கொண்டு வந்து நிறுத்தும் உங்களது திறமை மகத்தானது ஸ்டாலின்ஜி! சூப்பர் வீடியோ!
பதிலளிநீக்கும்யாவ்...
நீக்குடைகர் = தன்னம்பிக்கை
பதிலளிநீக்குநன்றி ஸ்டாலின் ....
டைகர் = திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன்
நீக்குநன்றி விஜய், ஸ்டாலின்! கண்களில் ஆனந்தகண்ணீரோடு இதை எழுதுகிறேன்! அந்த காமிக்ஸ் வாசக நண்பரின் பேட்டி எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. இன்றும் கூட என் குடும்பத்தின் எந்த உறுப்பினரும் என் காமிக்ஸ் வாசிப்பை ரசித்ததோ, விமர்சித்ததோ கிடையாது. “இந்த காமிக்ஸை கொஞ்சம் படிச்சு பாரேன்” என்று சொன்னால் அதை வாங்கி புரட்டகூட நேரமில்லாதவர்களாக பறப்பார்கள் :( என் தந்தைக்கு இருந்த காமிக்ஸ் வாசிப்பு ஆர்வமே எனக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்தியது!
பதிலளிநீக்கு//கண்களில் ஆனந்தகண்ணீரோடு//
நீக்கு100% உண்மை
//என் தந்தைக்கு இருந்த காமிக்ஸ் வாசிப்பு ஆர்வமே எனக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்தியது!//
இளம் வயதில் எனது தாயாரின் ஊக்குவிப்பு எனக்கு அந்த பழக்கத்தை ஏற்படுத்தியது
கிரேட் வொர்க் நண்பரே ...
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குமிகவும் அற்புதமான காமிக்ஸ் தருணம். நீங்கள் மகிழ்ந்து அதனை எங்களுக்கும் பார்க்க தந்ததற்கு மிகவும் நன்றி. அழகான, எளிமையான படிக்க சுவாரசியமான ரிபோர்ட் அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஒவ்வொரு நாள் நிகழ்வும் மிக அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி.
ஹ்ம்ம் நம்ம டெக்ஸ் பாத்து வந்தது யெற்று கூறி இருந்தால் எல்லோரும் இனிப்பு வழங்கி கொண்டாடீருப்பென்.
நகைச்சுவை தவிர்த்து மகிழ்ச்சியான தருணம்.
//டெக்ஸ் பாத்து வந்தது//
நீக்குமீண்டும் ஒரு முறை கூர்ந்து பாருங்கள் இனிப்பு வழங்குவீர்கள்
அருமையான வீடியோ ... வாழ்த்துக்கள் விஜய் , ஸ்டாலின்
பதிலளிநீக்கு