வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆசிரியரின் TOP -10 இதழ்கள்நண்பர்களே
வணக்கம் . ஈரோடு புத்தகத்திருவிழா நிறைவடைந்தாலும் அது குறித்த பதிவு பின்னர் வெளிவரும் .
இன்று நண்பர் மாயாவி சிவா அனுப்பியுள்ள ஆசிரியரின் டாப் டென் இதழ் குறித்த  தொகுப்பினை இப்பொழுது பார்க்கலாம்.....மாயாவி சிவா அவர்களின் கைவண்ணத்தில் அட்டப்படங்கள் மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதனை என்னப்போல் நீங்களும் மிகவும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
             ----------------------------------------------

எடிட்டர்-ன் டாப் டென்

30 ஆண்டுகளில் 230+ இதழ்களில் இருந்து எடிட்டர் பத்தே பத்து இதழ்கள் தேர்வு செய்கிறார் என்றால் அந்த இதழ்கள் எடிட்டரிடம் எத்தகைய கமெண்ட் பெற்றிருக்கும் என்பதை
உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன..!

1- நானே நானாய் உருவாக்கிய முதல் இதழ்; என் பெயரை     அச்சில் முறையாக பார்க்க உதவிய படைப்பு !

2- நிறைய விதங்களில் நமது பால்யங்களை ஒரு அதிரடி அனுபவமாய் மாற்றிய பெருமை இந்த இதழுக்கு; மறக்க முடியாத இதழ்இது.!3- பொங்கல் மலராய் வெளியாகி அச்சான பிரதிகள் சகலமும் 3வது நாளே காலியாகி போன பெருமை சேர்த்த இதழ் இது !

4- இலண்டனிலிருந்து வரவழைத்த ஒரு சுவாரஸ்யமான கதை இந்த இதழுக்கு உண்டு என்பதால் எப்போதும் பளிச்சென்று நினைவில் நின்ற இதழ் !


5- இன்றளவிற்கும் இந்த இதழின் விளம்பரங்களும் வெளியான முதல் வாரத்து விற்பனைகளும் ஏற்படுத்திய பரபரப்பை வேறு எந்த இதழும் தொட்டுக்ககூட பார்த்திராதென்பது நிச்சயம் !

 6- இன்றளவில்  ever green நாயகராக வலம் வருபவரை கதையோடு அறிமுகம் செய்த இதழ் amongst my all time favorites!


7- 532 பக்கங்கள்; ரூ10 விலையில் என்ற combo காலத்தால் அழியா சாதனை என்பது சர்வநிச்சயம்.!

8- எத்தனையோ கதைகளை நண்பர்கள் ரசித்திருந்த போதிலும் என் பிள்ளை ரசித்த கதை இது என்ற விதத்தில் இது ஒரு... memorable issue !


9- இந்த இதழ் வெளியான முதல் வாரத்தில் எங்கள் அலுவலக போன்கள் கிறிஸ்துமஸ் நாளில் வேடிக்கனில் அடிக்கும் மணிகளை விட ஜரூராய் ஒலித்தன என்று சொன்னால் மிகையாகாது.அதகளம் செய்ததொரு இதழ் !

10- ஏதேனும் ஒரு கால இயந்திரம் என் கைக்கு சிக்கி அதனில் ஏறி பின் செல்ல வாய்பிருக்கும் பட்சத்தில் என் ஆசை ஒன் È¡கதனிருக்கும் இந்த இதழ் முழு தொகுப்பின் பணிகள் நடத்திய அந்த இறுதி 2 மாதங்கள் மீண்டும் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஒற்றை ஆசை !


 எடிட்டரின் topten பற்றி LMS ல் அவர் எழுதிய நச் தான் இவைகள் ! இதை மீண்டும் இங்கு படிக்கும்போது அந்த இதழ்களை கண்களில் தடவும் ஆசை பொங்குகிறது
அல்லவா !
உங்கள் ஆசைக்கு விருந்தளிப்பதே இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே ! இதோ அட்டகாசமான டாப் டென் அட்டைபட வரிசைகள். பார்த்து மகிழுங்கள் !!!
நட்புடன்,
மாயாவி.சிவா

16 கருத்துகள்:

 1. முதல் இரண்டும் இடம் மாறிவிட்ட மாதிரி இருக்கு. அவர் வரிசையில் எத்தனுக்கு எத்தன் இரண்டாம் இடம்தான் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சரியாக சொன்னீர்கள் ! விரைவில் வரிசை எண் மாற்றப்படும் நண்பரே !

   நீக்கு
  2. நண்பரே , அருமை .....முதல் இதழ் கத்தி முனையில் மாடஸ்டி

   நீக்கு
  3. பெயரில்லா,கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: தவரை சுட்டி காண்பித்தமைக்கு நன்றி மாற்றப்பட்டுவிட்டது நண்பர்களே

   நீக்கு
 2. எடிட்டரின் டாப்-10ஐ LMSல் படித்தபோது 'அட்டைப்படங்களையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே' என்று நினைத்தேன். கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் கொடுத்து அசத்திவிட்டீர்கள் மாயாவி சிவா அவர்களே!

  நன்றிகளும், வாழ்த்துகளும்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் Erode M.STALIN சாருக்கு,வாழ்த்துக்கள் எடிட்டருக்கு,
   உங்களின் வழிகாட்டலும்,நட்பும் எனக்கு ஓகே !

   நீக்கு

 3. மாயாவி சிவா,
  உங்கள் காமிக்ஸ் ஆர்வத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
  வாழ்க.! வளர்க.!

  பதிலளிநீக்கு
 4. அப்புடியே அந்த கதைகளையும் போட்டா படிச்சிருப்பேன் ....!

  பதிலளிநீக்கு
 5. நன்று! அப்படியே இந்த புத்தகம்களை (ரத்த படலம் தவிர) அனைத்தையும் ஒரு பார்சல் அனுபினால் நலம் :-)

  சிவா செய்வீர்களா செய்வீர்களா :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Parani from Bangalore: தராவிட்டல் நம்ம ஸ்டீல் க்ளாவிடம் சொல்லி சுட்டுட்டா போச்சு

   நீக்கு
  2. அவரு நம்மகிட்ட இருந்து சுடாம இருந்தா போதும் ஸ்டாலின் :-)

   நீக்கு
  3. அது என்ன (ரத்த படலம் தவிர) ஒரு வேளை கலரில் போட எடிட்டர் பணிகள் துவக்கிவிட்டாரா..... நண்பரே...!.

   நீக்கு
 6. super, timing. Good work on the presentation.
  thanks to siva and erode stalin

  i have only 8,9 and 10 :'(

  பதிலளிநீக்கு
 7. வண்ணமிகு அட்டைப் படங்களைப் பார்க்கும் பொழுது மறுபடியும் வாங்கத் தோன்றுகிறது .ஆசையாகத்தான் இருக்கிறது .

  பதிலளிநீக்கு