ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

LMS எனும் புதிய சாகாப்தம்

நண்பர்களே
வணக்கம் . இன்றய LMS வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது
* ஆசிரியர்,ஜூனியர் ஆசிரியர் விக்ரம் ஆகியோர் காலை 10.30கு கண்காட்சி திறக்குமுன்ன்ரே ஆஜர்
* முதல் பிரதியை வாங்க வாய்ப்பளித்த  ஆசிரியருக்கும் விஜைய்க்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்
* முத்து விசிறி அவர்களின் இல்லத்தரசி அவர்கள் எழுதிய உல்லாச கப்பல் குறித்த தமிழின் முதல் பயண நாவல் கருத்தரங்கம் நடந்தேறியது

* திருப்பூர் நண்பர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்ட விழா அமர்களமாக நடந்தது
* நண்பர்களின் தொடர்ந்த பிக்கல் பிடுங்களுக்கு பிறகு ஆசிரியர் அறிவித்த 700+ பக்க வண்ண டெக்ஸ் வில்லரின் இரு கதை தொகுப்பு
   இன்னும் ஏறாளமான விசயங்களை ஈரோடு விஜய சேகர் கீழே அவர்பாணியில் கலக்கப் போகிறார்.....


ஈரோடு புத்தகத் திருவிழா : 2ம் நாள் : LMS என்ற பொக்கிஷம் வெளியிடப்பட்ட நாள்
எதை எழுத; எதை விட? விளக்கிச் சொல்ல முடியாத குதூகலத்தை ஒரு நாள் முழுக்க நெஞ்சில் சுமந்த நாள்! அளவிலா மகிழ்ச்சியை அள்ளித் தெளித்த நாள்! கொண்டாட்டத்தின் உச்சங்களை கொட்டித்தந்த நாள்!!
நினைவிலிருக்கும் சில முக்கிய சம்பவங்கள் மட்டும், நண்பர்களுக்காக இங்கே:
* அதிகாலையிலேயே Radja from france, கிங்-விஸ்வா, பிரசண்ணா from bangalore, shallum fernandez (with his wife) from nagergoil - ஈரோடு மாநகருக்குள் ஆஜராகிவிட்டிருந்தனர்.
* பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்திற்கு வெகு நேரம் முன்பாகவே எடிட்டருக்காகவும், நண்பர்களுக்காகவும் காத்திருந்தது - Radja from France. ரஜினியின் 'Boss' ஸ்டைலில் மெல்லிய தாடியுடன் அசத்தலாக இருந்தார்.
* EBF அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படும் நேரமான 11 மணிக்கு பத்து நிமிடம் முன்பாகவே எடிட்டர் ஆஜராகியிருந்தார். இம்முறை விக்ரமும் உடன் வந்திருந்தது எதிர்பாரா சர்ப்ரைஸ்!
* அரங்கத்தின் உள்ளே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சில வினாடிகளிலேயே நமது ஸ்டாலின் முன்பு மட்டும் ஒரு சிறு கூட்டம் LMSஐக் கண்டிடும் ஆவலுடன் கூடியிருந்தது.
* சுமார் 11:10 மணியளவில் LMS ஐ எடிட்டர் வெளியிட ஈரோடு ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பலத்த கரகோஷங்களும், கூக்குரல்களும் (யாருப்பா அது விசிலடிச்சது?) அப்பகுதியிலிருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அழகாக Gift wrap செய்யப்பட்டிருந்த LMS அடங்கிய பார்சலை ஸ்டாலின் திறக்க, கூடியிருந்த நண்பர்களுக்கு heart beat எகிறிக் கொண்டிருந்தது. அட்டகாசமான அட்டைப்படத்துடன் குண்ண்ண்டாய் LMSன் பிரதான புத்தகம் நண்பர்கள் அனைவரையும் பிரம்மிக்கச் செய்தது. Hard-bound அட்டையை சற்றும் எதிர்பாரா நண்பர்கள் அனைவரும் பிரம்மிப்பில் வாய்பிளந்து நின்றனர்.
* LMS வெளியீடு நடைபெற்ற சில நிமிடங்களிலேயே நடைபாதையில் ட்ராஃபிக் ஜாம் ஆகுமளவுக்கு வாசக நண்பர்கள் கூடிவிட்டிருந்தனர். மற்ற ஸ்டால்களில் ஓரிருவர் மட்டுமே பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில் நம் ஸ்டால் மட்டும் திருவிழாக் கோலத்தில் திளைத்திருந்தது.
* நண்பர் சேலம் சிவக்குமார் தானே தயாரித்திருந்த பல வகையான போஸ்டர்களுடனும், டீஷர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த டெக்ஸ், வேதாளர் உருவப்படம், லயன்-முத்து லோகோ சகிதம் அசத்தினார். அவரது ஈடுபாடும், நண்பர்களை பரிவோடு அவர் கவனித்த விதமும் அவரது காமிக்ஸ் காதலை அப்பட்டமாய் பறைசாற்றியது. நன்றி சிவா சார்!
* உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் நண்பர்கள் நாள்முழுக்கத் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். மேற்கூறிய நண்பர்களோடு,
AKK Raja
Parani from Bangalore
Ajay palanisamy, Bangalore
tex vijayaragavan, salem
karnan, salem
sridhar, salem
Ravi kannan, salem
kumar, salem
steel claw ponraj, Coimbatore
Dr.Sathish, Coimbatore
Selvaraj, Coimbatore
Gogul C
Dr. swaminathan, kodumudi
Senthil Madhesh (குடும்பத்துடன்)
Vinoj, Erode
vinoth, Erode
vishnu, Erode
Dharmaraj, vellode
Blueberry, tiruppur
Devaraj, tiruppur
tex sampath
Ramesh (RummiXIII)
Govindaraj, Mettur
Rajkumar, Ataiyampatti
Paranitharan, Tharamangalam
Jeyaganthan, puliyampatti
Kumar, Erode
Nambi, Erode
Palanisany, veppadai
gunasekaran, veppadai
Sarathi, kangayam
Palanivel arumugam (குடும்பத்துடன்)
postal phoenix Raja, mayiladudurai
sankar, erode
sathyamurthy, kangayam
Dr. sundar, Salem
Barathi nandeeshwaran, komarapalayam
karthik (குடும்பத்துடன்), Salem
Anand, chennimalai
Cibi, tiruppur
kruthika (writter)
இவர்களோடு...
அறிமுகம் செய்துகொள்ள நேரம் கிடைக்காத, அறிமுகம் செய்தும் மறந்துவிட்ட, நான் ஸ்டாலில் இல்லாத நேரங்களில் வந்து சென்ற பலரும் உண்டு.
இவர்களோடு,
saint satan,
Auditor Raja
(தொடரும்)
6 கருத்துகள்:

 1. உங்கள் அன்புக்கும் அரவனைப்புக்கும் முதல் வணக்கம் சார்!
  காலை முதல் இரவு உணவு வரை உங்களுடன் இருந்து பெற்ற உணர்வுகள் நண்பர்
  நல்லபிசாசு சொன்னது போல்...
  ்்்்வாழ்க்கையில் நினைத்து நினைத்து மகிழும் அற்புத தருணங்கள் நம்மில் யாருக்கும் அடிக்கடி சித்திப்பதில்லை.அப்படியொரு உன்னத தருணத்தை லயன் மேக்னம் ஸ்பெசல் வெளியீட்டில் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.அந்த தருணம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.்்்
  என்பது மிக சரியான வார்த்தைகளின் வரிகள்.

  இவ்வளவு பெரியவேலைக்கு பின்பும் அசதி ,அலைச்சல், கவனிப்புக்கு பின்பும்
  ஒன்றுமே செய்யதவர் போல அமைதியாக( இரவில் எவ்வளவு நேரமோ) உட்கார்ந்து
  2 பக்கத்திற்க்கு எழுதி புகைபடம் போட்டு நண்பர்கள் நம் பதிவிற்க்காக காதிருப்பார்களே என அழகாக பதிவை போட்ட உங்கள், ஆர்வம், அக்கறை, வேகம் தான்
  சார் காமிக்ஸ் மேல் காதலை அப்பட்டமாக பறைசாற்றுகிறது சார்!

  நம்மை இனைத்த காமிக்ஸ் வாழ்க !

  பதிலளிநீக்கு
 2. Very good coverage, if possible add you typical (comical) comments to each picture :)

  பதிலளிநீக்கு
 3. உங்கள் அன்புக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு