சனி, 2 ஆகஸ்ட், 2014

முத்(து)தான முதல் நாள்

 நண்பர்களே

வணக்கம். இன்றய புத்தகத்திருவிழாவின் நிகழ்வுகளை நண்பர் விஜய் தொகுத்துள்ளார்(நாம ஒன்லி போட்டா மட்டும்தான் )



ஈரோடு புத்தகத் திருவிழா
முதல் நாள்:
* மாலை 6 மணிக்கு இசை ஞானி இளையராஜா அவர்களால் துவங்கப்படயிருந்த புத்தகக் கண்காட்சி சுமார் ஒருமணிநேரம் லேட்டாகத் தொடங்கியது. சுமார் 7:15க்குப் பின்னரே பொதுமக்கள் புத்தங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
* நான் 5:45க்கே நம் ஸ்டாலில் ஆஜராகியிருந்தேன் (பின்பக்க வாசல் வழியாகத்தான்). மற்ற எல்லா ஸ்டால்களும் விற்பனைக்குத் தயாராய் இருந்த நிலையில், நம் ஸ்டாலில் அப்போதுதான் புத்தக மூட்டைகளைப் பிரித்துக் கொண்டிருந்தனர். மற்ற பதிப்பகத்தார்களெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவரவர் ஸ்டால்களை அலங்கரிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்க, நம்முடைய ஸ்டால் மட்டும் கடைசி நிமிடங்களில் தயாராகி வயிற்றில் புளியைக் கரைத்தது. புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களின் கண்ணில் பட்டிருந்தால் விளைவு ரசிக்கும்படி இருந்திருக்காது. நல்லவேளையாக அவர்கள் புத்தக அரங்கத்திற்கு வெளியே இளையராஜாவைக் கவனிப்பதில் மும்முரமாய் இருந்ததால் பிழைத்தோம். கண்காட்சியை திறந்துவைத்த கையோடு எங்கே இளையராஜாவும் உள்ளே பார்வையிட வந்துவிடுவாரோ என்ற பதட்டம் எனக்குள்.அவர் வந்தால் கூடவே கண்காட்சி அமைப்பாளர்களும் வருவார்களே? நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்கவில்லை.'பிழைச்சோம்டா சாமி' என்ற பெருமூச்சு எனக்குள்! :) :(
* துவக்க நாள் என்பதாலும், இளையராஜாவை இலவசமாக தரிசிக்கவே மொத்தக் கூட்டமும் வந்திருந்தது என்பதாலும் எல்லா ஸ்டால்களிலுமே ஓரிரு தலைகள் மட்டுமே தட்டுப்பட்டன. நமது ஸ்டாலிலும் அவ்வாறே. எனினும் நமது ஸ்டாலில் விற்பனை துவங்கியதுமே ரசீது புத்தகமும் பிஸியாகிவிட்டிருந்தது. சூப்பர் - என்றில்லாவிட்டாலும், சுமாராகவாவது.
* விற்பனை துவங்கிய 7 மணியிலிருந்து 9 மணிக்குள் சுமார் 20க்கும் மேற்பட்ட வாசகர்களைச் சந்தித்து உரையாட முடிந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு LMS பற்றித் தெரிந்திருந்தது. எடிட்டரின் வருகை பற்றி ஒரு 25% பேருக்கே தெரிந்திருந்தது. சிலர் எடிட்டர் வரும் தேதியை தவறாகத் தெரிந்து வைத்திருந்தனர்.
* விஸ்ணு என்ற வாசகர் 'மின்னும் மரணம்' முன்பதிவைத் தொடங்கி வைத்தார்.
* வழக்கம்போல சிலர் 'இரும்புக்கை மாயாவி புத்தகம் இருக்கா?' என்று விசாரித்துவிட்டு 'இல்லை' என்றதும் வேகவேகமாக நடையைக் கட்டினர்.
* '500 ரூவா புத்தகம் வந்துடுச்சா?'
'நாளைக்குத்தான் வரும்'
'சரி அப்புறமா வர்ரேன்' - இந்த பாணியில் அவசரமாக வந்துபோனவர்கள் ஓரிருவர்.
* இன்று விற்பனையில் டெக்ஸ், லக்கிலூக் பிரதானமாய் இருந்தனர்.
* 8 மணிக்குப் பிறகு ஈரோடு ஸ்டாலினும், புனித சாத்தானும் வந்து சேர்ந்துகொள்ளவே, ஆளுக்கு ஒரு வாசகரை வரவேற்று பேசிக்கொண்டிருக்க முடிந்தது.
* கணிசமான எண்ணிக்கையில் லக்கிலூக், மந்திரி, (சமீபத்தில் கொலை செய்யப்பட்ட) ஆர்ச்சி ஆகியோரது ஆங்கிலப் பதிப்புகளும் நம் ஸ்டாலில் இடம்பிடித்திருந்தது ஆச்சர்யம்!!!

அன்புடன்
விஜய சேகர்










                                        மைண்ட் வாய்ஸ்......





 

7 கருத்துகள்:

  1. ஆங்கில புத்தகங்களும் விற்பனைக்கு உண்டா ? ஆச்சர்யமான தகவல் தான்.

    பதிலளிநீக்கு