ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

சுட்டியை ரசிக்கும் சுட்டி ஈரோடு புத்தகத்திருவிழா (7 + 8 வது நாள் ) 9&10-8-2013

காமிக்ஸ் திருவிழா (7வது நாள்- வெள்ளிக்கிழமை)

* ரம்ஜான் விடுமுறையென்பதால் நிறைய எண்ணிக்கையில் குடும்பம் குடும்பமாக மக்கள் அரங்கம் முழுவதும் காணக்கிடைத்தனர். கூடவே நிதானமாக புத்தகம் தேடும் இளைஞர்களும், யெளவன யுவதிகளும்!

* நம் ஸ்டாலிலும் இன்று நிறையவே கூட்டம். பெரும்பாலான நேரங்களில் நம் ஸ்டால் நிரம்பி வழிந்தது. நீண்ட நெடுங்காலமாக காமிக்ஸ் படித்துவரும் பல புதிய நண்பர்களையும், அங்கிள்களையும் பிரகாசமான முகங்களோடு நிறைய எண்ணிக்கையில் கண்டிட முடிந்தது. அதே உற்சாகம்! அதே ஆர்வம்! ஈரோடு பகுதிகளில் இத்தனை காமிக்ஸ் ரசிகர்களா!!!

* இன்றைய நாளின் முக்கிய நிகழ்வாக, பல பதின்பருவ சிறுவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்து தங்களுக்குப் பிடித்த காமிக்ஸ்களை அள்ளிச் சென்ற சந்தோஷ சம்பவங்களைக் கூறலாம். எதிர்கால சந்தாதாரர்கள் நிறைய எண்ணிக்கையில் உருவாகிவருவதை மனது நிறைவாய் உணர்ந்தது.

* ஒரு பதினாலு வயதுச் சிறுவன் தினமும் நமது ஸ்டாலிற்கு வந்து காமிக்ஸ் வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனிடம் விசாரித்ததில் சமீப காலத்தில்தான் தனக்கு காமிக்ஸ் அறிமுகமானதாகவும், தனக்கு லார்கோ, டெக்ஸ் வில்லர் கதைகள் பிடித்திருப்பதாகவும் தெரிவித்தான்.

* 'சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்' தனக்குப் பிடித்திருப்பதாக பனிரெண்டு வயது சிறுமி ஒருத்தி சொன்னது நம் நண்பர்களை இன்பஅதிர்ச்சியடைய வைத்தது. SHSSஐ தான் இருமுறை படித்துவிட்டதாகவும், சுட்டிலக்கியை தான் விரும்பவுல்லை என்றும் கூறி மேலும் அதிர்ச்சியடைய வைத்தாள் (தியாகராஜ பாகவதர் படங்களை விரும்பிப் பார்த்திடும், நண்பர் கார்த்திக்கின் பக்கத்துவீட்டுப் பெண் ஞாபகம் வந்தது).

* கணவன்-மனைவி இருவருமே தீவிரக் காமிக்ஸ் பிரியர்களாக இருந்திடுவது அத்தி பூத்தாற்போல் மிகவும் அரிததென்பது நாம் அறிந்ததே! அப்படிப்பட்ட ஒரு தம்பதிகளையும் சந்தித்திட முடிந்தது. தான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகையென்றும், கிட்டத்தட்ட எல்லா டெக்ஸ் கதைகளையும் தான் படித்துவிட்டதாகவும் அப்பெண்மணி பெருமை பொங்க சொன்னபோது, கார்ஸனுடன் துப்பாக்கி பிடித்து சண்டைக்கு ரெடியாகிக்கொண்டிருந்த (நண்பர் பொடியனின் கைவண்ணம்) என் 'தல' யை பெருமையுடன் பார்த்துக் கொண்டேன்.

விற்பனையிலும், மக்கள் காட்டிய ஆர்வத்திலும் நிறைவாய் உணரவைத்த மற்றுமொரு அழகான நாள்! :)

 அன்புடன்

விஜய்

காமிக்ஸ் திருவிழா (8வது நாள்) 10-8-2013
 ஒரு குட்டி பயலின் காமிக்ஸ் ரசனையை சற்று பாருங்களேன்
                                                    சுட்டியை ரசிக்கும் சுட்டி
                                                            டாக்டர் பாலு

                                          சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்

                 சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் தான் என்னைகவர்ந்த இத்ழ்






                                                         காமிக்ஸ் குடும்பம்
*நண்பர் ராஜ்குமார் தொடர்ந்து நான்கு நாட்களாக காலை முதல் இரவுவரைஸ்டாலில் இருந்து வரும் நபர்களுக்கு காமிக்ஸ் குறித்து எடுத்துரைக்கிறார்
* ஞாயிற்றுக்கிழமை ஆசிரியரை சந்திக்க புதிய வாசகர்கள் அனேகம் நபர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்
* இன்று இரவு கரூரை சார்ந்த சாமி நாதன் என்ற நண்பர் சந்தா செலுத்திய நபர்களை மட்டும்தான் ஆசிரியர் பார்ப்பாரா? என ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்ட பொழுவது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ( இவரை உச்ப்பிவிட்ட அந்த குறும்புக்கார நண்பர் யாரோ? ). புதிய வாசகர்களை பார்க்கத்தான் அவர் மிகவும் சந்தோஷ்ப்படுவார் என்றவுடன் நாளை காலை முதல் ஆளாக ஆஜராகிவிடுவதாக கூறினார்
* மகாஜனா பள்ளியை சேர்ந்த ஒவிய ஆசிரியர் பழைய கதைகள் குறித்து பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 70+ தாண்டிய தனது தந்தையுடன் வந்திருந்த அவர் தனக்கு காமிக்ஸை அறிமுகபடுத்தியது தனது தந்தைதான் என்றும் அதற்காக என்றும் நன்றிகடன் பட்டுள்ளேன் என்றார். அவர் தந்தையும் காமிக்ஸ் அரங்கை பார்ப்பதற்காகவே  வந்ததாக கூறியது நெகிழ வைத்தது . அவர் நாளை ஆசிரியரை சந்தித்து பழைய இதழ்களுக்காக சண்டைப்போடப்போவதாக கூறியது வேறுகதை
* இதுவரை பள்ளிகளின் ஓவிய ஆசிரியர்கள் மட்டும் எனக்கு தெரிந்து  குறைந்த பட்சம் 15 நபர்களாவது இருப்பார்கள்

நாளைய திருவிழாவிற்கான கணவுகளுட்ன் உறங்க செல்கிறேன்

அன்புடன்
ம.ஸ்டாலின்

படங்கள் : விஜய்

நாளை சந்திப்போம் நண்பர்களே



5 கருத்துகள்:

  1. சுட்டியை ரசிக்கும் சுட்டியின் 4 படங்களுக்கும் 4000 likes...such a lovely timing pics. பகிர்விற்கு நன்றி. நாளைய பதிவிற்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நண்பர் ஸ்டாலின் அவர்களே

    நல்லதொரு அருமையான பதிவு.

    எனக்கு நேரமின்மை காரணமாக நான் ஆரம்பித்த ப்ளாக் பொங்கல் வாழ்த்துடன் அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது :(

    எழுத கூடிய சீக்கிரம் முயற்சி செய்கிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. ungalai vida periya chutti irukkarathu santhegame! pathivukku nanri! panichumai konjam athigam ji! sorry for the delay!

    பதிலளிநீக்கு