திங்கள், 5 ஆகஸ்ட், 2013

காமிக்ஸ் 7 முதல் 77 வரை மட்டுமா ?

 நண்பர்களே வணக்கம்.
இன்றய காமிக்ஸ் திருவிழா (4-8-2013)  பல மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாக அமைந்துவிட்டது .

*காலை முதலே நண்பர்கள் கூட்டம் அலை மோத துவங்கிவிட்டது. 10 மணிக்கு சேலம் டெக்ஸ் விஜய ராகவன் தனது குடும்பத்துடன் ஆஜரானவர் மாலைவரை இருந்தார்

* காலை 11.00முதல் மாலை 4.00மணி வரை காமிக்ஸ் அரங்கில் தான் அதிகம் கூட்டமிருந்தது ( திருமதி டெக்ஸ் விஜய ராகவனின் அறிக்கை)

* NBS இதழ்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டது

* சேலத்திலிருந்து வந்திருந்த ஒருகாமிக்ஸ் குடும்பத்தினர் ஒரு குழந்தையை எடுப்பதுபோல் அனைத்து இதழ்களையும் அள்ளிச்சென்றனர். அதில் 78 வயது இளைஞர் அளித்துள்ள பேட்டியை பாருங்கள் அதன் பிறகு 7 முதல் 77 வரை என்ற ரைமிங்க் வார்த்தையை மாற்றுவதற்கு ஒரு போட்டி நடத்த வேண்டும் அவரது துணைவியாரும் அதி தீவிர காமிக்ஸ் ரசிகர் . பல மணி நேரம் செலவிட்டவர்களின் காமிக்ஸ் குறித்த அனுபவங்களையும் , தங்கள் சந்ததியினருக்கு அதுகுறித்து அவர்கள் ஏற்படுத்திய ஈடுபாட்டையும் குறித்து தனியாக ஒரு பதிவே போடலாம்.

* மாலையில் நண்பர்கள் சேலம் மேனேஜர் குமார் , ஹவுசிங் போர்டு குமார், ஆட்டயாம்பட்டி ராஜ் குமார், தாரமங்கலம் பரணீதரன், பெங்களூரு சுப்பிரமணி, கோவை Dr சுரேஷ் , சேலம் Dr சுந்தர் , சென்னிமலை ஆனந்த் மற்றும் பலர்.

* ஆரம்பத்தில் நண்பர்கள் அனைவரையும் புகைப்படம் எடுக்க எண்ணியிருந்தோம் ஆனால் அதிகமான கூட்டம் கரணமாக பல நண்பர்களை புகைப்படம் எடுக்க நேரம் கிடைக்கவில்லை

* ஈரோட்டிற்கு இந்த காமிக்ஸ் அரங்கம் ஒரு புதிய் ஜனனம் என்பதால் புத்தகம் வரவில்லை என நினைத்துகொண்டிருந்த வாசகர்களுக்கும் புதிய வாசகர்களுக்கும் நமது இதழ்களை அறிமுகப்படுத்துவதில் அனைத்து நண்பர்களும் ஆர்வத்துடன் உதவினார்கள்
*  இரும்புக்கை மாயாவி ,மாண்ரேக் ஆகியோரின் கதைகள் வராத கோபத்தில் ஒரு வாசகர் தான் எடுத்திருந்த இரு இதழ்களையும் வாங்காமலேயே சென்று விட்டார்
* கோவை Dr சுரேஷ்  வரைந்து கொண்டு வந்திருந்த ஆசிரியர் விஜயன் அவர்களின் ஓவியம் அமர்களப்படுத்தியது
* இரத்த படலம் இதழை தேடி அலைத்த வாசகர்களை எண்ணமுடியவில்லை

video
                                                                               78 வயது இளம் வாசகர் பேட்டி
                                           
                                                                நண்பர் சுரேஷ் வ்ரைந்த ஓவியம்


கலக்கல் காமிக்ஸ் குடும்பம்

டெக்ஸ்விஜய ராகவன் குடும்பம்
                                                                                                                                                                                             அரங்கம் கிடைப்பதற்கு பெரும் உதவி புரிந்த ஸ்ரீ வித்யாமில் சேர்மன் திரு அம்பலவானன் அவர்களின் புதல்வர் திரு . சுந்தர் குடும்பம் 

 காமிக்ஸ் குடும்பத்தின் பேட்டிகள் தொடரும் நண்பர்களே!......

12 கருத்துகள்:

 1. அருமை நண்பரே !!! அதிலும் ஆசிரியரின் ஓவியம் ... அடடா ...

  பதிவுகளின் தலைப்புகளை 'ஈரோடு புத்தக கண்காட்சி 2013 - நாள் 1, 2, 3' என வரிசைப்படுத்தி பதிவு இட்டீர்கலேயனால் (?) பின்பு படிக்கும் பொழுது ஈசியாக இருக்கும் என்பது என் எண்ணம்.

  வரலாறு ரொம்ப முக்கியம் தலைவரே !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. நீங்க சொன்னா சரி தலைவா. ... ஏன்னா ப்ளூபெரி ரொம்ப முக்கியம்.
   கீழே சிபி கேட்டுள்ள கேள்விக்கும் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லைதானே?

   நீக்கு
 2. நேரில் வந்து பார்க்காத குறையை போக்கிவிட்டீர்கள் ...நன்றி நண்பரே .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது உடம்பு எப்படியுள்ளது 11 ம் தேதி ஆஜராகிவிடுங்கள்

   நீக்கு
 3. ஆசிரியரின் ஓவியம் அமர்களமாக உள்ளது.
  அந்த 78 வயது இளைஞரின் முகத்தில் தெரிந்த சந்தோசம் அப்பப்பா அருமை.

  பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி ஸ்டாலின் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் பொறுத்திருந்தால் 100 வயது இளைஞரும் கிடைப்பாரோ?

   நீக்கு
 4. நண்பரே தங்களின் ஆறாவது போட்டோவில் உள்ள முதல் மற்றும் இரண்டாவது நபர்களை எங்கோ பார்த்ததுபோல இருக்கிறதே உங்களுக்கு தெரிந்தவர்களா ;-)
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டோ என்றவுடன் போஸ் கொடுக்க ஓடோடி வந்த பெயர் திரியாத இருபுண்ணிய கனவான்ங்கள் :) :) :)

   நீக்கு
  2. @சிபி

   நண்பரே முதாவதாக இருப்பது ஈரோடு இளம் சிங்கம் சுட்டி லக்கி என அழைக்கப்படும் திரு மனோஜ் அவர்கள்,

   இரண்டாவதாக இருப்பது சேலத்து புயல் குட்டி டெக்ஸ் ...

   உங்களது சந்தேகம் தீர்ந்ததா நண்பரே ? முக்கிய குறிப்பு - புத்தக கண்காட்சிக்கு வரும்பொழுது போட்டோ எடுப்பங்க,

   உஷார் அய்யா உஷார் ... முஞ்சி எல்லாம் உஷார் ... :)

   நீக்கு
 5. நன்றி நண்பரே, ஆசிரியர் வரும் நாள் அதகளமாக இருக்கபோகுது.

  Please upload more pics and videos.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆசிரியர் வரும் நாள் அதகளமாக இருக்கபோகுது. //
   விழி பிதுங்க போகுது :)

   நீக்கு