ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

செங்குருதிச் சாலைகள்

வணக்கம் நண்பர்களே
மீண்டும் நமது நண்பர் மாயாவி சிவா ஆசிரியரின் நேற்றய பதிவின் "செங்குருதிச் சாலைகள்" பற்றிய படத்தொகுப்பினை அதிரடியாய் உடனடியாக தயாரித்து அனுப்பியுள்ளார்
நன்றி மாயாவி விரைவில் முகமூடி மாயாவியின் ஒவ்வொரு கதை குறித்து விமர்சித்தால் சூப்பராக இருக்கும்

---------------------------


வணக்கம் நண்பர்களே !
விடை தேடிடும் வினாக்கள்...!வலைப்பதிவு-ல் எடிட்டர்....

 //பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது லயனில் "ஓநாய் கணவாய் " என்ற பெயரில் வெளியாகியுள்ளது சமீப வாசகர்கள் அறிந்திருக்க இயலாதென்று நினைக்கிறேன் //

லயன்காமிக்ஸ் -ன் 144 வது வெளியீடாக வந்த இதழை பற்றி குறிபிட்டிருந்தார். அந்த இதழை
புரட்டிப்பார்த்தேன்.......அருமையான ஓவியர் ஹெர்மனின் சித்திர நுணுக்கங்கள்
எடிட்டர் குறிப்பிட்டது போல அற்புதங்கள் செய்திருக்கின்றன.
அந்த இதழில் வந்த 'ஹாட்லைன்' முதல் பக்கம்,முக்கியமாக அட்டைபடம் உங்கள்
 பார்வைக்குஇங்கு பதிவு செய்துள்ளேன் நண்பர்களே!
பார்த்து மகிழுங்கள்!!!

நட்புடன்,
மாயாவி.சிவா




வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆசிரியரின் TOP -10 இதழ்கள்



நண்பர்களே
வணக்கம் . ஈரோடு புத்தகத்திருவிழா நிறைவடைந்தாலும் அது குறித்த பதிவு பின்னர் வெளிவரும் .
இன்று நண்பர் மாயாவி சிவா அனுப்பியுள்ள ஆசிரியரின் டாப் டென் இதழ் குறித்த  தொகுப்பினை இப்பொழுது பார்க்கலாம்.....மாயாவி சிவா அவர்களின் கைவண்ணத்தில் அட்டப்படங்கள் மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதனை என்னப்போல் நீங்களும் மிகவும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
             ----------------------------------------------

எடிட்டர்-ன் டாப் டென்

30 ஆண்டுகளில் 230+ இதழ்களில் இருந்து எடிட்டர் பத்தே பத்து இதழ்கள் தேர்வு செய்கிறார் என்றால் அந்த இதழ்கள் எடிட்டரிடம் எத்தகைய கமெண்ட் பெற்றிருக்கும் என்பதை
உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன..!

1- நானே நானாய் உருவாக்கிய முதல் இதழ்; என் பெயரை     அச்சில் முறையாக பார்க்க உதவிய படைப்பு !

2- நிறைய விதங்களில் நமது பால்யங்களை ஒரு அதிரடி அனுபவமாய் மாற்றிய பெருமை இந்த இதழுக்கு; மறக்க முடியாத இதழ்இது.!



3- பொங்கல் மலராய் வெளியாகி அச்சான பிரதிகள் சகலமும் 3வது நாளே காலியாகி போன பெருமை சேர்த்த இதழ் இது !

4- இலண்டனிலிருந்து வரவழைத்த ஒரு சுவாரஸ்யமான கதை இந்த இதழுக்கு உண்டு என்பதால் எப்போதும் பளிச்சென்று நினைவில் நின்ற இதழ் !


5- இன்றளவிற்கும் இந்த இதழின் விளம்பரங்களும் வெளியான முதல் வாரத்து விற்பனைகளும் ஏற்படுத்திய பரபரப்பை வேறு எந்த இதழும் தொட்டுக்ககூட பார்த்திராதென்பது நிச்சயம் !

 6- இன்றளவில்  ever green நாயகராக வலம் வருபவரை கதையோடு அறிமுகம் செய்த இதழ் amongst my all time favorites!


7- 532 பக்கங்கள்; ரூ10 விலையில் என்ற combo காலத்தால் அழியா சாதனை என்பது சர்வநிச்சயம்.!

8- எத்தனையோ கதைகளை நண்பர்கள் ரசித்திருந்த போதிலும் என் பிள்ளை ரசித்த கதை இது என்ற விதத்தில் இது ஒரு... memorable issue !


9- இந்த இதழ் வெளியான முதல் வாரத்தில் எங்கள் அலுவலக போன்கள் கிறிஸ்துமஸ் நாளில் வேடிக்கனில் அடிக்கும் மணிகளை விட ஜரூராய் ஒலித்தன என்று சொன்னால் மிகையாகாது.அதகளம் செய்ததொரு இதழ் !

10- ஏதேனும் ஒரு கால இயந்திரம் என் கைக்கு சிக்கி அதனில் ஏறி பின் செல்ல வாய்பிருக்கும் பட்சத்தில் என் ஆசை ஒன் È¡கதனிருக்கும் இந்த இதழ் முழு தொகுப்பின் பணிகள் நடத்திய அந்த இறுதி 2 மாதங்கள் மீண்டும் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஒற்றை ஆசை !


 எடிட்டரின் topten பற்றி LMS ல் அவர் எழுதிய நச் தான் இவைகள் ! இதை மீண்டும் இங்கு படிக்கும்போது அந்த இதழ்களை கண்களில் தடவும் ஆசை பொங்குகிறது
அல்லவா !
உங்கள் ஆசைக்கு விருந்தளிப்பதே இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே ! இதோ அட்டகாசமான டாப் டென் அட்டைபட வரிசைகள். பார்த்து மகிழுங்கள் !!!
நட்புடன்,
மாயாவி.சிவா

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களும் இரும்புக்கை வாசகர்களும்

நண்பர்களே வணக்கம்

         ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் ஒரே அரங்கினுள் ஒட்டு மொத்தமாக குவிந்து கிடக்கின்றன . அரங்க எண் 195 ன் புகைப்பட தொகுப்பு கீழே...








வழக்கம் போல இரும்புக்கை மாயவியின் அதி தீவிர ரசிகர்களின் சில வாக்குமூலங்கள் கீழே

 

 

 

                                               

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

புத்தகத் திருவிழாவில் சில துளிகள்...

 வணக்கம் நண்பர்களே...

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சில துளிகள்...
* வழக்கம்போல டெக்ஸ் வில்லரே விற்பனையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். 'காமிக்ஸ்னு எதைக் கொடுத்தாலும் படிப்பேன்' என்ற வாசகர்களைத் தாண்டி 'செலக்ட்டிவ்வாக காமிக்ஸ் படிப்பேன்' ரக வாசகர்களின் ஏகோபித்த தேர்வு எப்போதும் டெக்ஸ் புத்தகங்களாகவே இருக்கிறது. இவருக்கு அடுத்து நிற்பவர், வேறு யார் லக்கிலூக் தான்!
* பழைய ( மாயாவி, ஸ்பைடர்) ரசிகர்களில் பலர் தன்னுடன் அழைத்துவந்தவர்களிடம் 'நானெல்லாம் அந்தக்காலத்துல...' என்று தொடங்கி இரும்புக்கையின் புகழ் பாடி பீற்றிக்கொண்டனர். இவர்களில் பலர் நமது தற்போதைய வெளியீடுகளைத் புரட்டிப் பார்த்ததோடு சரி!
* "அட! இது லயன் காமிக்ஸுப்பா! இதெல்லாம் இன்னுமா வந்துகிட்டிருக்கு?!!" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு அவசர அவசரமாக மாயாவியைத் தேடியவர்கள் உண்டு. "இப்பல்லாம் இரும்புக்கை மாயாவி ஏன் வர்றதில்லை?" என்று கேட்டவர்களின் எண்ணிக்கை கணிசமானது. பதில் சொல்லி மாளல.
* மாதிரிக்காக வைக்கப்பட்டிருந்த LMS ஐ புரட்டிப்பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்தியவர்கள் ஏராளம். டெக்ஸ், டைலன் பக்கங்கள் அதிகம் ரசிக்கப்பட்டன.
* புதிய வாசகர்களைக் கவரவும், வாங்கத் தூண்டவும் வண்ணமயமான அட்டைப்படம் பிரதானப் பங்கு வகிப்பதை உணரமுடிகிறது. அப்படி ரசிக்கப்பட்ட அட்டைப் படங்களில் சில: LMS புக் நெ.1, எதிர் வீட்டில் எதிரிகள், பூதவேட்டை.
* 'இரத்தப் படலம்' முழுத் தொகுப்புக் கிடைக்குமா என்று கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 5.
* ஏதோ ஒரு ரூபத்தில் காமிக்ஸ் மீது ஈர்க்கப்பட்டு ஆர்வமாய் வருகைதந்த சிறுவர்கள் சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் உண்டு. அவர்களுக்குப் பிடித்த நாயகன் யாரென்று கேட்டால் உடனே பதில் வருகிறது -"டெக்ஸ்".
* தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து ஆர்வமாய் காமிக்ஸ் வாங்கிக் கொடுத்த தாய்மார்களும் உண்டு. அவர்களின் தேர்வு பெரும்பாலும் 'லக்கிலூக்'.
* சில தாய்மார்களுக்கு ஸ்பைடரைத் தெரிந்திருந்தது.
* "மொத்தமாய் வாங்கிட்டுப் போனா வீட்ல டோஸ் விழுகும்ங்க" என்று இரண்டு மூன்றாய் வாங்கிப்போன கணவன்மார்களும் உண்டு.

அன்புடன்


Erode Vijay




வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பேச வைக்கும் படங்கள் part-1



வணக்கம் நண்பர்களே
இரண்டு நாட்களாக அதிகப்படியான அலுவலக பணிக்காக தேசாந்திரம் சுற்றியதால் இன்று புத்தக திருவிழா முடியும் நேரம் மட்டுமே செல்ல முடிந்தது .  நண்பர் விஜய் நாளை பதிவிடுவதாக கூறியுள்ளார். சில புகைப்படங்களை மட்டும் இங்கு இப்போதைக்கு இங்கு பதிவிடுகிறேன்

ஆசிரியர் அறிவித்த டெக்ஸ் புத்தக வெளியீட்டு குறித்த வீடியோ பதிவு  புகைப்பட கருவியில் இருந்து வெளியில் எடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வந்து எனது கணணியில் உள்ளது அதன் பிக்ஸல் 290 MB ல் அதிக ரெஸலூயூசனில் பதிவிடமுடியாமல் உள்ளது அதனை குறைக்க ஏதெனும் வழி இருந்தால் சொல்லவும். ஒரு முக்கிய மான விசயம் அதனை பார்த்த பிறகு ஆசிரியர் எத்தனை பக்கங்கள் வாக்குறுதி கொடுத்துளார் என்பதும் கணக்கில் 336+336 = 700 சில்லறை பக்கம் என்பதனை யார் சொன்னார்கள் என்பதற்கான விடையும் கிடைக்கும்






ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

LMS எனும் புதிய சாகாப்தம்

நண்பர்களே
வணக்கம் . இன்றய LMS வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது
* ஆசிரியர்,ஜூனியர் ஆசிரியர் விக்ரம் ஆகியோர் காலை 10.30கு கண்காட்சி திறக்குமுன்ன்ரே ஆஜர்
* முதல் பிரதியை வாங்க வாய்ப்பளித்த  ஆசிரியருக்கும் விஜைய்க்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்
* முத்து விசிறி அவர்களின் இல்லத்தரசி அவர்கள் எழுதிய உல்லாச கப்பல் குறித்த தமிழின் முதல் பயண நாவல் கருத்தரங்கம் நடந்தேறியது

* திருப்பூர் நண்பர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்ட விழா அமர்களமாக நடந்தது
* நண்பர்களின் தொடர்ந்த பிக்கல் பிடுங்களுக்கு பிறகு ஆசிரியர் அறிவித்த 700+ பக்க வண்ண டெக்ஸ் வில்லரின் இரு கதை தொகுப்பு
   இன்னும் ஏறாளமான விசயங்களை ஈரோடு விஜய சேகர் கீழே அவர்பாணியில் கலக்கப் போகிறார்.....


ஈரோடு புத்தகத் திருவிழா : 2ம் நாள் : LMS என்ற பொக்கிஷம் வெளியிடப்பட்ட நாள்
எதை எழுத; எதை விட? விளக்கிச் சொல்ல முடியாத குதூகலத்தை ஒரு நாள் முழுக்க நெஞ்சில் சுமந்த நாள்! அளவிலா மகிழ்ச்சியை அள்ளித் தெளித்த நாள்! கொண்டாட்டத்தின் உச்சங்களை கொட்டித்தந்த நாள்!!
நினைவிலிருக்கும் சில முக்கிய சம்பவங்கள் மட்டும், நண்பர்களுக்காக இங்கே:
* அதிகாலையிலேயே Radja from france, கிங்-விஸ்வா, பிரசண்ணா from bangalore, shallum fernandez (with his wife) from nagergoil - ஈரோடு மாநகருக்குள் ஆஜராகிவிட்டிருந்தனர்.
* பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரத்திற்கு வெகு நேரம் முன்பாகவே எடிட்டருக்காகவும், நண்பர்களுக்காகவும் காத்திருந்தது - Radja from France. ரஜினியின் 'Boss' ஸ்டைலில் மெல்லிய தாடியுடன் அசத்தலாக இருந்தார்.
* EBF அரங்கத்திற்குள் அனுமதிக்கப்படும் நேரமான 11 மணிக்கு பத்து நிமிடம் முன்பாகவே எடிட்டர் ஆஜராகியிருந்தார். இம்முறை விக்ரமும் உடன் வந்திருந்தது எதிர்பாரா சர்ப்ரைஸ்!
* அரங்கத்தின் உள்ளே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட சில வினாடிகளிலேயே நமது ஸ்டாலின் முன்பு மட்டும் ஒரு சிறு கூட்டம் LMSஐக் கண்டிடும் ஆவலுடன் கூடியிருந்தது.
* சுமார் 11:10 மணியளவில் LMS ஐ எடிட்டர் வெளியிட ஈரோடு ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். பலத்த கரகோஷங்களும், கூக்குரல்களும் (யாருப்பா அது விசிலடிச்சது?) அப்பகுதியிலிருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அழகாக Gift wrap செய்யப்பட்டிருந்த LMS அடங்கிய பார்சலை ஸ்டாலின் திறக்க, கூடியிருந்த நண்பர்களுக்கு heart beat எகிறிக் கொண்டிருந்தது. அட்டகாசமான அட்டைப்படத்துடன் குண்ண்ண்டாய் LMSன் பிரதான புத்தகம் நண்பர்கள் அனைவரையும் பிரம்மிக்கச் செய்தது. Hard-bound அட்டையை சற்றும் எதிர்பாரா நண்பர்கள் அனைவரும் பிரம்மிப்பில் வாய்பிளந்து நின்றனர்.
* LMS வெளியீடு நடைபெற்ற சில நிமிடங்களிலேயே நடைபாதையில் ட்ராஃபிக் ஜாம் ஆகுமளவுக்கு வாசக நண்பர்கள் கூடிவிட்டிருந்தனர். மற்ற ஸ்டால்களில் ஓரிருவர் மட்டுமே பார்வையிட்டுக் கொண்டிருந்த அந்தக் காலைப் பொழுதில் நம் ஸ்டால் மட்டும் திருவிழாக் கோலத்தில் திளைத்திருந்தது.
* நண்பர் சேலம் சிவக்குமார் தானே தயாரித்திருந்த பல வகையான போஸ்டர்களுடனும், டீஷர்ட்டில் ஒட்டப்பட்டிருந்த டெக்ஸ், வேதாளர் உருவப்படம், லயன்-முத்து லோகோ சகிதம் அசத்தினார். அவரது ஈடுபாடும், நண்பர்களை பரிவோடு அவர் கவனித்த விதமும் அவரது காமிக்ஸ் காதலை அப்பட்டமாய் பறைசாற்றியது. நன்றி சிவா சார்!
* உள்ளூரிலிருந்தும் வெளியூரிலிருந்தும் நண்பர்கள் நாள்முழுக்கத் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். மேற்கூறிய நண்பர்களோடு,
AKK Raja
Parani from Bangalore
Ajay palanisamy, Bangalore
tex vijayaragavan, salem
karnan, salem
sridhar, salem
Ravi kannan, salem
kumar, salem
steel claw ponraj, Coimbatore
Dr.Sathish, Coimbatore
Selvaraj, Coimbatore
Gogul C
Dr. swaminathan, kodumudi
Senthil Madhesh (குடும்பத்துடன்)
Vinoj, Erode
vinoth, Erode
vishnu, Erode
Dharmaraj, vellode
Blueberry, tiruppur
Devaraj, tiruppur
tex sampath
Ramesh (RummiXIII)
Govindaraj, Mettur
Rajkumar, Ataiyampatti
Paranitharan, Tharamangalam
Jeyaganthan, puliyampatti
Kumar, Erode
Nambi, Erode
Palanisany, veppadai
gunasekaran, veppadai
Sarathi, kangayam
Palanivel arumugam (குடும்பத்துடன்)
postal phoenix Raja, mayiladudurai
sankar, erode
sathyamurthy, kangayam
Dr. sundar, Salem
Barathi nandeeshwaran, komarapalayam
karthik (குடும்பத்துடன்), Salem
Anand, chennimalai
Cibi, tiruppur
kruthika (writter)
இவர்களோடு...
அறிமுகம் செய்துகொள்ள நேரம் கிடைக்காத, அறிமுகம் செய்தும் மறந்துவிட்ட, நான் ஸ்டாலில் இல்லாத நேரங்களில் வந்து சென்ற பலரும் உண்டு.
இவர்களோடு,
saint satan,
Auditor Raja
(தொடரும்)