ஞாயிறு, 4 நவம்பர், 2012

தமிழ் காமிக்ஸ் கிளப்



 
வாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள்  பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழும்  . கடந்த ஞாயிறு(28/10/2012)  ஈரோடு காமிக்ஸ் சந்திப்பாளர்களின் நிகழ்வும் அப்படித்தான் திக்குமுக்காட வைத்துவிட்டது.

 எந்த ஒரு பெரிய முன்னேற்பாடுகளோ எதிர்பார்ப்போ இல்லாமல் ஆரம்பித்த இந்த கன்னி முயற்சிக்கு நல்லதொரு வரவேற்பு இருந்தது. முகூற்த நாள் என்பதால் கடைசி நேரத்தில் பல நண்பர்கள் வரமுடியாமல் போனது தெரிந்த பொழுதுதான் தேதியை மாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் உறைத்தது.

கூட்டத்தின் மூலம் ஏதோ தமிழ் காமிக்ஸை உடனே தூக்கி நிறுத்தி விடலாம் என்றோ , ஏதோ சாதித்து விட்டோம் என்றோ நாங்கள் நினைக்காவில்லை.  தமிழ் காமிக்ஸின் மீதுள்ள காதலையும் , அனுபவத்தையும் பகிற்வாதற்கான ஒரு வாய்ப்பாகவேதான் கருதினோம். வெகுதொலைவில் இருந்து வந்திருந்த நண்பர்களை பார்த்த பொழுது தமிழ்காமிக்ஸ் மீதுள்ள நண்பர்களின் பற்றுதல் ஒரு இனம்புரியா மகிழ்வை ஏற்படுத்தியது
காலை 11 மணிக்கு மெரிடியன் ஹோட்டலில் ஆரம்பிப்பதாக இருந்த நிகழ்வுக்கு சில நண்பர்கள் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். புனித சாத்தானின் வரவேற்புரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய பால்ய காலத்து காமிக்ஸ் அனுபவங்களையும் , தாங்கள் புத்தகம் வாங்குவதற்கு போராடிய கதைகளையும், ஒவ்வொரும் தங்களுக்கு பிடித்த ஹிரோக்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு கடந்த பாதைகளையும் பகிர்ந்துகொண்ட விதம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது

நடுவில் முத்தாய்ப்பாய் அனைவரும் ஆசிரியர் விஜயனுடன் தங்கள் மகிழ்வுகளை தொலைபேசியில் பகிர்ந்து கொண்டனர் . காமிக்ஸ் வளர்ச்சிக்கு தங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும் , தற்சமயம் வெளிவரும் கதையின் தரத்தைப்பற்றிய விவாதங்களும்,
தரப்பட்ட எண்ண பிரதிபலிப்புடன் நடந்தேறியது


மதியவிருந்துக்குப்பின் அரட்டை கச்சேரியாக அமந்த நிகழ்வுகள் மாலை ஆறு மணியளவில்தான் ஈரோடு விஜயின் நன்றியுரையுடன் முடிவுக்கு வந்தது.

வந்திருந்த அனைவருக்கும் காமிக்ஸ் க்ளப் சார்பாக " அப்புசாமியின் கலர் டீவியும் " என்ற ஜெயராஜ் ஒவியத்தில் வந்த காமிக்ஸ் புத்தகம் வழங்கப்பட்டது . இதனை திருப்பூர் ப்ளுபெரி ( நாகராஜ்) தனது அன்பளிப்பாக்கினார் . அவருக்கு அனைவரின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 நண்பர்கள் சிலர் 
சுப்ரமணி (பெங்களூரு)
ஆடிட்டர் ராஜா (பள்ளிபாளயம்)
 புனித சாத்தான்(பள்ளிபாளயம்)
விஜய ராகவன் (சேலம்)
 நம்பியார் (எ) அசோகன் (எ) வீரப்பன் (எ) ஈரோடு விஜய்
பரணிதரன் (தாரமங்கலம்)
ராஜசேகர் ( ஆட்டயாம் பட்டி)
 இங்கு பதிவிடுவது மட்டும்தான் எனது வேலை .மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு முக்கிய காரணமானவர்கள் புனித சாத்தான் , விஜய் , ராஜா ஆகியோர்கள்தான். இந்த நிகழ்வை சிரமேற்கொண்டு நடத்திய அவர்களுக்கும் மற்றய நண்பர்களுக்கும் நன்றிகள் என்றும் உரித்தாகுக...


அடுத்த சந்திப்பிற்கு அனைவரும் நாள் கேட்கும் பொழுதுதான் இந்த சந்திப்பின் வெற்றி புரிந்தது. என்னதான் முழுமையாக  பதிவிட நினைத்தாலும் இந்த வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தால்தான் அனைவரும் அறிந்து கொள்ள முடியுமே தவிர வரிவடிவங்களில் அதனை முன்னிருத்த முடியாது.




தமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்கு நண்பர்கள் தெரிவித்த யோசனைகளில் சிலவைகள்....
*நெவர் பிபோர் இதழுடன் அனைத்து ஹீரோக்களுடன் கூடிய தினசரி காலண்டர் வழங்கினால் அனைவரும் தினமும் பார்த்து மகிழ்வதுடன் நல்ல விளம்பரமும் கிடைக்கும்
*சிறுவர்களை கவரும்வண்ணம் (தனியிதழாக )  கார்டூன் கதைகள்  ஆரம்பித்து அவர்களையும் உள் இழுக்க வேண்டும் ( டின் டின்இ வால்டிஸ்னி போன்றவை )
*அனைத்து அரசு நூலகங்களுக்கும் அனுமதி பெற்று புத்தகம் அனுப்பலாம்
* நகரத்தில் உள்ள பெரிய உணவகம் ,டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வைக்கலாம்
*அனைத்து பேருந்து நிலையங்களிலும் இதழ்கள் கிடைப்பதற்கு ஏஜெண்டுகள் நியமிக்க வேண்டும் அந்தந்த ஊரில் உள்ள வசக நண்பர்கள் அதற்கு உதவ வேண்டும்
* மீண்டும் தீபாவளி மலர், கோடை மலர்,பொங்கல் மலர் வெளியிடுவது வாசகர்களை கவரும்

19 கருத்துகள்:

  1. நன்றி நண்பரே! நீங்கள் வராததுதான் குறை

    பதிலளிநீக்கு
  2. நேரம் போவதே தெரியாமல் கலகலப்புடன் நடந்து முடிந்த இச்சந்திப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும், கலந்துகொள்ள முடியாததற்கு வருத்தம் தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல!

    பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் இச்சந்திப்புக்கு வரமுடியாமல் போக முகூர்த்த நாள் முக்கியக் காரணியாக அமைந்துவிட்டது. அடுத்த சந்திப்புக்கு திட்டமிடும்போது இந்த விஷயத்தை மனதில் இருத்திக் கொள்வோம்.

    கலந்துகொண்ட அனைவருக்கும் அன்புப் பரிசாக புத்தகத்தை அளித்த நண்பர் ப்ளூபெர்ரிக்கு நன்றிகள் பல!

    உண்மையில், இச்சந்திப்புக்கு முழுக்காரணமும் நண்பர் ஸ்டாலினே! அவரது ஆர்வமும், முயற்சியுமே பல நல்ல காமிக்ஸ் நண்பர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் நண்பர்களே !!!

    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.

    நட்புடன்
    திருப்பூர் ப்ளுபெர்ரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.நண்பர்களின் புகை படங்களை பார்த்த பின் இன்னும் அதிகமாக ! அவர்களின் பெயர்கள் குறிப்பிடவில்லையே ?

      நீக்கு
    2. //அசோகனா ?விஜயா ?//
      நம்பியார்

      நீக்கு
    3. என்னுடன் ஒப்பிட்டு நம்பியாரையும், அசோகனையும் கேவலப்படுத்துகிறீர்களே! :)

      நீக்கு
    4. Erode VIJAY: உண்மையை ஒப்புக்கொள்ளும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.......

      நீக்கு
  4. எவ்வளவு அருமையான சந்திப்பு !! வாழ்த்துக்கள் நண்பர்களே!!!! இதுபோன்ற சந்திப்புகளை தொடர்ந்து நடத்துங்கள்,என்றாவது ஒரு நாள் நானும் உங்களோடு சந்திக்கும் நாள் வராமலா போகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. HAJA ISMAIL: நன்றி நண்பரே!அடுத்த சந்திப்பில் உங்களை எதிர் பார்க்கிறோம்....

      நீக்கு
    2. அவரோட T0- & Fro டிக்கெட் செலவை மட்டும் நீங்கள் ஏத்துக்கணும், ஓக்கேவா?

      நீக்கு
  5. நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    ம. ஸ்டாலின்

    பதிலளிநீக்கு
  6. இன்னும் யாரெல்லாம் புகை படத்தில் உள்ள நண்பர்கள் என குறிப்பிடவில்லையே ! நான் மட்டும் மாயமாக உள்ளேன் !அனைவர் பின்னாலும் !

    பதிலளிநீக்கு
  7. பெயர்கள் வெளியிட்டாகிவிட்டது நண்பரே!

    பதிலளிநீக்கு