ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

காவேரிக்கரையில் ஒரு காமிக்ஸ் அரங்கம்


வணக்கம் நண்பர்களே
 குதுகலமான புத்தக திருவிழாஆரம்பமாகிவிட்டது.
ஆடிப்பெருக்கு தினமான இன்று கரைபுரண்டு ஓடிய காவிரியாற்றங்கரையில் மக்கள் வெள்ளம் தலைகளாக மட்டுமே தெரிந்திருக்க மற்றொருபுறம் மாலையில் ஆரம்பிக்க உள்ள புத்தக திருவிழாவிற்கு காலையிலேயே ஆஜராகிவிட்ட வெளியூர் நண்பர்கள் குழுமம்

KPN -ல் வரவேண்டிய புதிய இதழ்கள் வருவதற்கு தாமத்மானதால்  ST கொரியரில் வந்திருந்த அனைத்து இதழ்களும் விழா ஆரம்பித்த உடனே விற்றுத்தீர்ந்துவிட்டன
சுட்டி லக்கியை முதலில் வாங்கியேதீருவேன் என்ற எனது ஜூனியரின் தொந்தரவு தாங்கமல் அவரின் தேவையை  உடனே நிவர்த்தி செய்தபிறகுதான் மற்ற வேலைகளை பார்கக் முடிந்தது

பல புதிய நண்பர்கள் வெகுதூரத்திலிருந்து காமிக்ஸ் ஸ்டாலை பார்ப்பதற்காகவே வந்திருந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது . குடும்பத்துடன்வந்திருந்த நண்பர் ஒருவர் காமிக்ஸ் ஸ்டால என உள்ளே ஓடோடிவந்து அனைத்தையும் அள்ளியதை மறக்க முடியவில்லை . இவர்களைப்போல் அனைத்து குடும்பமும் இருந்தால் எப்படி இருக்கும் ?

 கரையோரம் உள்ள வீடுகளை மூழ்கடிது பெருக்கெடுத்து ஓடும் காவேரி ஆடி-18 திருவிழா

                                                      காமிக்ஸ் குடும்பம்
 ஜெய்லானி (காங்கேயம்) செல்வம் ( கோவை ) சாரதி ( கொடுவாய்) , சுந்தரன் ( ஈரோடு) பொன்னுசாமி ( நாமக்கல்)
                    சுட்டி லக்கியுடன் எனது ஜூனியர் மனோஜ்  ( எ) ராமேஸ்வர்
                                       மயிலாடுதுறை ராஜாவுடன் புனித சாத்தான்

இன்னும் வளரும்... நண்பர்களே!

18 கருத்துகள்:

 1. // காவேரிக்கரையில் ஒரு காமிக்ஸ் அரங்கம் //

  எப்படிங்க இப்படியெல்லாம்?! ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Erode VIJAY:
   சென்னை புத்தக விழாவுக்கு, "கடற்கரையில் ஒரு காமிக்ஸ் அறை" என்று பெயர் வைப்பாரோ?! :D

   நீக்கு
  2. @ கார்த்திக்

   பெங்களூரென்றால்,
   "கார்டன் சிட்டியில் ஒரு காமிக்ஸ் குடிசை" என்றும் பெயர் வைப்பார்! ;)

   நீக்கு
  3. @Erode VIJAY:
   ஆமாம், சரியாக சொன்னீர்கள். ஈரோட்டில் பெரிய அரங்குகளிலும், சென்னையில் விசாலமான அறைகளிலும் காமிக்ஸ்கள் மலை போல் குவிந்து கிடக்கின்றன! ஏழைப்பட்ட பெங்களூரிலோ குடிசை ஓரங்களில் மட்டுமே சில காமிக்ஸ்கள் மட்டுமே சிதறிக் கிடக்கின்றன! :p

   நீக்கு
  4. //குடிசை ஓரங்களில் மட்டுமே!//
   திருத்திக் கொள்ளவும் ,சில ஜாம்பவாங்களிடம் :)

   நீக்கு
 2. பகிர்விற்கு நன்றி ஸ்டாலின் முகம் அறிய நண்பர்களது முகங்களை அறிமுகம் செய்வதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. சுட்டி பயல் கையில் சுட்டி புயல் , ஒன்றாம் வகுப்பில் எனது கையில் இருந்த பாட புத்தகத்தை நினைவுறுத்துகிறது!

  பதிலளிநீக்கு
 4. புதிய நண்பர்கள் அதிகரிப்பது சந்தோசம்! விற்பனை இந்த அளவு நீடித்தால் ...அடுத்து உடனே எஞ்சியுள்ளஸ்பைடரை கேட்க வேண்டும் உங்கள் தலைமையில் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எஞ்சியுள்ளஸ்பைடரை கேட்க வேண்டும் உங்கள் தலைமையில் !//
   ஏன் ஏன் இந்த பழிவாங்கும் படலம்?

   நீக்கு
 5. அருமையான Updates ஸ்டாலின் ஸார் ,11 ன்றாம் தேதி உங்களை எல்லாம் சந்திக்க முயற்சி செய்கின்றேன் ...கடந்த நான்கு நாட்களாக வைரல் காய்ச்சலால் நான் படுத்த படுக்கையாய் உள்ளேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரைவில் குணமடைந்து விழாவில் கலந்து கொள்ளவும் நண்பரே

   நீக்கு
 6. சுட்டிப்பயலின் கையில் சுட்டி லக்கி புத்தகம் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஸ்டாலின் ஸார் அருமையான உங்களை எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தக திருவிழாவிற்கு வந்திருந்தீர்களா? .....உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விட்டதா?

   நீக்கு
  2. NO DEAR FRIEND, I AM RAAJA, SUB POSTMASTER,FROM MAYILADUTHURAI . THIS IS MY BLOG NAME BROTHER. THANKS FOR EVERYTHING.

   நீக்கு