புதன், 17 செப்டம்பர், 2014

பதிவல்ல ஒரு தொடக்கம்.....

வணக்கம் நண்பர்களே!
நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான். ஏதோ வருடத்திற்கு ஒருமுறை வரும் புத்தகத்திருவிழாவின் போது ஈரோடு விஜயை வைத்து பதிவு போடுவதாகட்டும். இலவசமாக கிடைக்கும் வலைத்தலத்தில் இப்போது மாயாவி சிவாவை உள்ளே இழுத்து குளிர்காய்வதாகட்டும்....என நான் ஹாயாக வேடிக்கை பார்ப்பதனை நான் வேறு எப்படி சொல்வது :).ஏதோ ராமருக்கு உதவிய ( ! ? )அணிலாய் இந்த வலைத்தலம் இருப்பது ஒரு மகிழ்வே!
மாயாவி சிவாவின் அசத்தலான சென்றபதிவின் அனைத்து புகழும் அவரையே சாரும் . கடினமான ஒரு அர்பணிப்பும் காமிக்ஸ் மீதான தீராத அதீத ஆர்வமும் மட்டுமே அந்த பதிவை பறை சாற்றியது என்றால் அது மிகையாகாது. அதனை சென்ற பதிவின் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்தியது நீங்கள் அறிந்ததே
சென்ற பதிவை எழுதிய அடுத்தநாள் என்னிடம் தொடர்பு கொண்ட பொழுது அடுத்து ஒரு பதிவை தாயார் செய்து வருவதாகவும் ஆனால் அந்த தொடர் பதிவை பற்றி எதுவுமே எனக்கு தற்பொழுதைக்கு தெரியப்படுத்த போவதில்லை எனவும் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே நேற்று அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பொழுது எனக்கு ஒன்றும் தலைகால் புரியவில்லை. பதிவு எதைப்பற்றியது என கணிக்கவும் முடியவில்லை. இதில் எனது பெயரை வேறு குறிப்பிட்டுள்ளார் . இந்த குழப்பம் புரியாததால் "திக்கு தெரியாத தீவை" பற்றிய ரகசியத்தை அறிந்ததாக அவர் கூறிய ஈரோடு விஜயிடம் தொடர்பு கொண்ட பொழுது " திக்கு தெரியாத தீவு எந்த திக்கில் இருக்கிறது" என அவரும் தெரியாது என புலம்பினார். இந்த பதிவை எழுதிய மாயாவிக்காவது தெரியுமா? உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன் நண்பர்களே...............குழப்புவதில் சிவா கோவை இரும்புக்கையாரையும் மிஞ்சிவிடுவாரோ :)

(கடந்த பல வாரத்தில் ஓயாத பணி, காந்தி பிறந்த மாநிலத்தில் ஊர் ஊராக பணி நிமித்தமாக அலைந்து வாங்கி கட்டிக்கொண்ட உடல் நலக்குறைவு, பற்றாத குறைக்கு தொடர்விமான பயணத்தால் மீழ முடியாது காது வலி என படுத்தி எடுத்துவிட்டது. உங்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகளின் பரிவுக்கு பின்னே உடல் நலம் தற்பொழுது பூரண ந்லம் நண்பர்களே. மிக்க நன்றி!

நட்புடன்

ம.ஸ்டாலின்
-----------------------------------------------------------------------------------


வணக்கம் நண்பர்களே !
சென்றபதிவுக்கு கிடைத்த வரவேற்பு உண்மையில்
இனிவரும் பதிவுகளுக்கு தான் கிடைக்கும் என கணித்திருந்தேன்...! ( இப்பதிவுபற்றிய கணிப்பு...
இந்தமுறை எந்தமாதிரி புஸ்...ஓஓ...)

இனிவரும் பதிவுகள் பற்றிய, உங்களுக்கு பிடித்த
ஸ்டைலில், வித்தியாசமான ஒரு விளம்பர....
முயற்சியே இந்த பதிவு...!

நட்புடன்,
மாயாவி.சிவா





செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தேவ ரகசியம் பற்றிய ரகசியம்...!!!



நண்பர்களே
வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கதையை படிக்காவிட்டாலும் நமது மாயாவியின் தேடலுக்கான இந்த பதிவை பார்த்தவுடன் கதையை படிக்கத்தொடங்கிவிட்டேன்.

நன்றியுடன்
ம.ஸ்டாலின்

வணக்கம் நண்பர்களே!

//"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இன்னொரு "The Davinci Code" movie-ஐ பார்த்த விளைவை ஏற்படுத்துகிறது.//
என்று ப்ளாக்கில் வந்த ( நண்பர் மகேஷ் ) விமர்சனம்,என்னை
புத்தகம் பெறும் ஆர்வத்தை துண்டியதன் விளைவுகள்.....
ப்ளாக்கில்,facebookல் நீண்ட புலம்பல்கள்.

ஒரு வழியாக நண்பர் ஈரோடு விஜய் புத்தகம் படிக்க பெற்று
படித்தேன்.அப்படி வாங்கிபடித்து என்ன செய்தேன்னு நீங்களே
கீழே பாருங்கள் புரியும்.....
கட்டாயம் புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு கிழே பாருங்கள்...




நெட்டில்தேடி,சேகரித்து,ஒழுங்க்குபடித்தி...பலூன்கள் போட்டு
இதை செய்து முடிப்பதற்குள் முடிஉடைந்துவிட்டது.
கொஞ்சம் ஆழமான,வித்தியாசமான முயற்சி,குறை இருந்தால்
குறிப்பிடுங்கள் நண்பர்களே !

நட்புடன்,
மாயாவி.சிவா





















ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

செங்குருதிச் சாலைகள்

வணக்கம் நண்பர்களே
மீண்டும் நமது நண்பர் மாயாவி சிவா ஆசிரியரின் நேற்றய பதிவின் "செங்குருதிச் சாலைகள்" பற்றிய படத்தொகுப்பினை அதிரடியாய் உடனடியாக தயாரித்து அனுப்பியுள்ளார்
நன்றி மாயாவி விரைவில் முகமூடி மாயாவியின் ஒவ்வொரு கதை குறித்து விமர்சித்தால் சூப்பராக இருக்கும்

---------------------------


வணக்கம் நண்பர்களே !
விடை தேடிடும் வினாக்கள்...!வலைப்பதிவு-ல் எடிட்டர்....

 //பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே நமது லயனில் "ஓநாய் கணவாய் " என்ற பெயரில் வெளியாகியுள்ளது சமீப வாசகர்கள் அறிந்திருக்க இயலாதென்று நினைக்கிறேன் //

லயன்காமிக்ஸ் -ன் 144 வது வெளியீடாக வந்த இதழை பற்றி குறிபிட்டிருந்தார். அந்த இதழை
புரட்டிப்பார்த்தேன்.......அருமையான ஓவியர் ஹெர்மனின் சித்திர நுணுக்கங்கள்
எடிட்டர் குறிப்பிட்டது போல அற்புதங்கள் செய்திருக்கின்றன.
அந்த இதழில் வந்த 'ஹாட்லைன்' முதல் பக்கம்,முக்கியமாக அட்டைபடம் உங்கள்
 பார்வைக்குஇங்கு பதிவு செய்துள்ளேன் நண்பர்களே!
பார்த்து மகிழுங்கள்!!!

நட்புடன்,
மாயாவி.சிவா




வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆசிரியரின் TOP -10 இதழ்கள்



நண்பர்களே
வணக்கம் . ஈரோடு புத்தகத்திருவிழா நிறைவடைந்தாலும் அது குறித்த பதிவு பின்னர் வெளிவரும் .
இன்று நண்பர் மாயாவி சிவா அனுப்பியுள்ள ஆசிரியரின் டாப் டென் இதழ் குறித்த  தொகுப்பினை இப்பொழுது பார்க்கலாம்.....மாயாவி சிவா அவர்களின் கைவண்ணத்தில் அட்டப்படங்கள் மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதனை என்னப்போல் நீங்களும் மிகவும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
             ----------------------------------------------

எடிட்டர்-ன் டாப் டென்

30 ஆண்டுகளில் 230+ இதழ்களில் இருந்து எடிட்டர் பத்தே பத்து இதழ்கள் தேர்வு செய்கிறார் என்றால் அந்த இதழ்கள் எடிட்டரிடம் எத்தகைய கமெண்ட் பெற்றிருக்கும் என்பதை
உங்களுக்கு சொல்லவேண்டுமா என்ன..!

1- நானே நானாய் உருவாக்கிய முதல் இதழ்; என் பெயரை     அச்சில் முறையாக பார்க்க உதவிய படைப்பு !

2- நிறைய விதங்களில் நமது பால்யங்களை ஒரு அதிரடி அனுபவமாய் மாற்றிய பெருமை இந்த இதழுக்கு; மறக்க முடியாத இதழ்இது.!



3- பொங்கல் மலராய் வெளியாகி அச்சான பிரதிகள் சகலமும் 3வது நாளே காலியாகி போன பெருமை சேர்த்த இதழ் இது !

4- இலண்டனிலிருந்து வரவழைத்த ஒரு சுவாரஸ்யமான கதை இந்த இதழுக்கு உண்டு என்பதால் எப்போதும் பளிச்சென்று நினைவில் நின்ற இதழ் !


5- இன்றளவிற்கும் இந்த இதழின் விளம்பரங்களும் வெளியான முதல் வாரத்து விற்பனைகளும் ஏற்படுத்திய பரபரப்பை வேறு எந்த இதழும் தொட்டுக்ககூட பார்த்திராதென்பது நிச்சயம் !

 6- இன்றளவில்  ever green நாயகராக வலம் வருபவரை கதையோடு அறிமுகம் செய்த இதழ் amongst my all time favorites!


7- 532 பக்கங்கள்; ரூ10 விலையில் என்ற combo காலத்தால் அழியா சாதனை என்பது சர்வநிச்சயம்.!

8- எத்தனையோ கதைகளை நண்பர்கள் ரசித்திருந்த போதிலும் என் பிள்ளை ரசித்த கதை இது என்ற விதத்தில் இது ஒரு... memorable issue !


9- இந்த இதழ் வெளியான முதல் வாரத்தில் எங்கள் அலுவலக போன்கள் கிறிஸ்துமஸ் நாளில் வேடிக்கனில் அடிக்கும் மணிகளை விட ஜரூராய் ஒலித்தன என்று சொன்னால் மிகையாகாது.அதகளம் செய்ததொரு இதழ் !

10- ஏதேனும் ஒரு கால இயந்திரம் என் கைக்கு சிக்கி அதனில் ஏறி பின் செல்ல வாய்பிருக்கும் பட்சத்தில் என் ஆசை ஒன் È¡கதனிருக்கும் இந்த இதழ் முழு தொகுப்பின் பணிகள் நடத்திய அந்த இறுதி 2 மாதங்கள் மீண்டும் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஒற்றை ஆசை !


 எடிட்டரின் topten பற்றி LMS ல் அவர் எழுதிய நச் தான் இவைகள் ! இதை மீண்டும் இங்கு படிக்கும்போது அந்த இதழ்களை கண்களில் தடவும் ஆசை பொங்குகிறது
அல்லவா !
உங்கள் ஆசைக்கு விருந்தளிப்பதே இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே ! இதோ அட்டகாசமான டாப் டென் அட்டைபட வரிசைகள். பார்த்து மகிழுங்கள் !!!
நட்புடன்,
மாயாவி.சிவா