புதன், 17 செப்டம்பர், 2014

பதிவல்ல ஒரு தொடக்கம்.....

வணக்கம் நண்பர்களே!
நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான். ஏதோ வருடத்திற்கு ஒருமுறை வரும் புத்தகத்திருவிழாவின் போது ஈரோடு விஜயை வைத்து பதிவு போடுவதாகட்டும். இலவசமாக கிடைக்கும் வலைத்தலத்தில் இப்போது மாயாவி சிவாவை உள்ளே இழுத்து குளிர்காய்வதாகட்டும்....என நான் ஹாயாக வேடிக்கை பார்ப்பதனை நான் வேறு எப்படி சொல்வது :).ஏதோ ராமருக்கு உதவிய ( ! ? )அணிலாய் இந்த வலைத்தலம் இருப்பது ஒரு மகிழ்வே!
மாயாவி சிவாவின் அசத்தலான சென்றபதிவின் அனைத்து புகழும் அவரையே சாரும் . கடினமான ஒரு அர்பணிப்பும் காமிக்ஸ் மீதான தீராத அதீத ஆர்வமும் மட்டுமே அந்த பதிவை பறை சாற்றியது என்றால் அது மிகையாகாது. அதனை சென்ற பதிவின் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்தியது நீங்கள் அறிந்ததே
சென்ற பதிவை எழுதிய அடுத்தநாள் என்னிடம் தொடர்பு கொண்ட பொழுது அடுத்து ஒரு பதிவை தாயார் செய்து வருவதாகவும் ஆனால் அந்த தொடர் பதிவை பற்றி எதுவுமே எனக்கு தற்பொழுதைக்கு தெரியப்படுத்த போவதில்லை எனவும் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே நேற்று அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பொழுது எனக்கு ஒன்றும் தலைகால் புரியவில்லை. பதிவு எதைப்பற்றியது என கணிக்கவும் முடியவில்லை. இதில் எனது பெயரை வேறு குறிப்பிட்டுள்ளார் . இந்த குழப்பம் புரியாததால் "திக்கு தெரியாத தீவை" பற்றிய ரகசியத்தை அறிந்ததாக அவர் கூறிய ஈரோடு விஜயிடம் தொடர்பு கொண்ட பொழுது " திக்கு தெரியாத தீவு எந்த திக்கில் இருக்கிறது" என அவரும் தெரியாது என புலம்பினார். இந்த பதிவை எழுதிய மாயாவிக்காவது தெரியுமா? உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன் நண்பர்களே...............குழப்புவதில் சிவா கோவை இரும்புக்கையாரையும் மிஞ்சிவிடுவாரோ :)

(கடந்த பல வாரத்தில் ஓயாத பணி, காந்தி பிறந்த மாநிலத்தில் ஊர் ஊராக பணி நிமித்தமாக அலைந்து வாங்கி கட்டிக்கொண்ட உடல் நலக்குறைவு, பற்றாத குறைக்கு தொடர்விமான பயணத்தால் மீழ முடியாது காது வலி என படுத்தி எடுத்துவிட்டது. உங்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகளின் பரிவுக்கு பின்னே உடல் நலம் தற்பொழுது பூரண ந்லம் நண்பர்களே. மிக்க நன்றி!

நட்புடன்

ம.ஸ்டாலின்
-----------------------------------------------------------------------------------


வணக்கம் நண்பர்களே !
சென்றபதிவுக்கு கிடைத்த வரவேற்பு உண்மையில்
இனிவரும் பதிவுகளுக்கு தான் கிடைக்கும் என கணித்திருந்தேன்...! ( இப்பதிவுபற்றிய கணிப்பு...
இந்தமுறை எந்தமாதிரி புஸ்...ஓஓ...)

இனிவரும் பதிவுகள் பற்றிய, உங்களுக்கு பிடித்த
ஸ்டைலில், வித்தியாசமான ஒரு விளம்பர....
முயற்சியே இந்த பதிவு...!

நட்புடன்,
மாயாவி.சிவா

26 கருத்துகள்:

 1. அதீத காமிக்ஸ் ஆர்வம் + மலைக்க வைத்திடும் உழைப்பு + எப்போதும் உற்சாகம் + வித்தியாசமான நேர்மறை எண்ணங்கள் = மாயாவி சிவா

  கண்கவர் கிராஃபிக் வேலைகள் + அரிய தகவல்கள் + குழப்பும் எழுத்துநடை + கொஞ்சமாய்(?) பில்டப் = மாயாவி சிவாவின் பதிவுகள்

  சட்டுபுட்டுனு அடுத்த பதிவைப் போட்டுவிடுங்க சிவா ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிராத தோழமையான குரல்+ஒவ்வொரு அசைவும் நட்புக்கு இலக்கணம்+எல்லோரையும் பாரட்டி படிஏற்றிவிடும் பண்புள்ள குணம்=ஈரோடு விஜய்
   நாக்கில் கொக்கி போட்டு இழுக்கும் கேள்விகள்+மலையே நடுங்கும் (நன்றி:மேச்சேரி மர்பி)'டையமிங்' நகைசுவைநடை+நேரில் நின்று பேசுவது போன்ற எழுத்துக்களின் கோர்வை=ஈரோடு விஜய் கமெண்ட்

   கூடவே இருந்து கருத்துக்கள் சொல்லி...இப்படி செய்தால் கலக்கலாம் என
   வழிசொன்ன உங்களுக்கு இங்கு நன்றிகள் நண்பரே...!

   நீக்கு
  2. பொய் சொல்லுவதில் என்னை விஞ்சி விட்டீர்கள்! ;)

   நீக்கு
 2. இந்த புள்ளைக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்.!!!
  (எதுவுமே தெரியாத மாதிரி எப்புடி நடிக்குது.!!???)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கமெண்ட் ஈரோடு விஜய்-யை பார்த்துசொன்னது தானே
   நண்பரே...?

   நீக்கு
 3. இந்த பதிவு பார்த்து...யோசித்து டென்சனாவர்களுக்கு கொஞ்சம்
  (நல்லாவே)சிரிக்க இதை படிங்க...நன்றி:கண்ணன் ரவி

  Kannan Ravi15 September 2014 23:15:00 GMT+5:30
  (http://lion-muthucomics.blogspot.in/2014/09/blog-post_14.html )
  Selvam abirami &
  Erode Vijay.,
  உங்களின் Sci.fiction கதைக்கு நான் லைக் போடாமல் விட்டதற்க்கு ஒரு காரணம் உண்டு.
  உங்கள் படைப்பில் வில்லனே இல்லை. வில்லன் இல்லாத கதை வெற்றிபெற்றதாய் சரித்திரம்.,ஹிஸ்ட்ரி.,வரலாறு எதுவுமே இல்லை.
  பிழையான கதைக்கு லைக் போட்டால் என் ஒண்ணு "விட்ட" கொள்ளுத்தாத்தா (நக்கீரர்) மீண்டும் ஒண்ணு விட்டுவிடுவார்.
  நீங்க விரும்பினா அந்த கேரக்டர ஒரு மிகத்திறமையான.,வில்லனுக்கே உரிய தோற்றம் கொண்ட அதிஅற்புத மனிதரை அபார புத்திசாலியை ஏற்க வைத்து கதையை தொடர்கிறேன்.
  என்ன சொல்றீங்க.,?

  (வில்லன் கேரக்டர பண்ணலாமின்னு இருக்கிறது ஹிஹி நான்தான், இதையும் யோசிச்சுக்குங்க.)

  சி.புள்ளயும் ருக்குவும் வானில் வட்டமடித்து கீழிறங்கி தலைவரிடம் ஆசி வாங்கும் வேளையில் புதர் மறைவில் இருந்து வெளிவரும் மேச்சேரி மர்பி (வில்லனோட பேருங்க.) வின்செஸ்டரை காட்டி அனைவரையும் கால யந்திரத்தில் கடத்திக் கொண்டு அரிஸோனா செல்கிறார்.
  அங்கு டைகருக்காக காத்திருக்கும் சில்க் புள்ளயிடம் டைகர் அழைத்துவரச் சொன்னதாக ஏமாற்றி அதையும் கடத்துகிறார். அங்கே வரும் டைகர் கால யந்திரத்தை குதிரையில் விரட்டி வருகிறார்.(அவரு செய்வாருங்க.)
  இதற்க்கிடையே ருக்கு தனக்கு தங்கை முறை என்று தெரிய வர வேறுவழியில்லாமல் அன்புத் தங்கையையும் அருமை மைத்துனரையும் அந்திமண்டலத்தின் இன்வெராரரியில் ஒரு நெல்லி மரத்தடியில் இறக்கிவிட்டு "இன்று போல் என்றும் வாழ்க" என வாழ்த்திதி கண்கலங்கியபடி பயணத்தை தொடர்கிறார் மர்பி. சிவகாசி தலைவர் மீண்டும் மினி லயன் வெளியிடுவதாக உறுதிகூறவும் அவரையும் விடுவித்து விடுகிறார் மர்பி.
  சில்க்கை சூப்பர்ஸ்டிஷன் மலைத்தொடரில் ஒரு குகையில் அடைத்து "அரிமா அரிமா " என பாடுகிறார் மேச்சேரி மர்பி. அந்த இனிய கானத்தில் மயங்கும் சில்க் நான் உங்களுடனே இருந்துவிடுகிறேன் என சொல்லும் வேளையில் டைகர் குறுக்கே வருகிறார்.
  மர்பியும் டைகரும் ஒற்றைக்கொற்றை சவாலில் எதிரெதிராய் நிற்கிறார்கள்.
  அந்நேரத்தில் அங்கு வரும் டெக்ஸ்.,டைகரிடம் மேற்கு மேச்சேரியின் மோசமான விரியன் இந்த மர்பி இவனிடம் வம்பு வேண்டாம் என டைகருக்கு புத்தி சொல்கிறார்.
  பிறகு மேச்சேரி மர்பியிடம் சில்க் டைகரின் சொத்து.,நீ அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படும் ரகமில்லையே மர்பி நண்பா என டெக்ஸ் கேட்கிறார்.
  டெக்ஸின் அறிவுரையில் மனம் திருந்தும் மர்பி சில்க்கை டைகரின் கையில் ஒப்படைக்கிறார்.(சோக பின்னனி இசையோடு).

  மீண்டும் கால யந்திரத்தில் ஏறும் மர்பியிடம் எங்கே நண்பா பயணம் எஎன டெக்ஸ் கேட்க, மலையே நடுங்கும்படி பயங்கரமாய் சிரிக்கும் மர்பி,
  ஜாங் ஜியை தேடிப்போறேன்,
  மேச்சேரி மர்பியின் தேடல்கள் தொடரும் என்று மீண்டும் சிரிக்க.,
  அங்கே தொடரும் போடுகிறோம்.(இது தொடர்கதை சீஸன் இல்லையா.?)

  பதிலளிநீக்கு
 4. அப்பாவி (?) மாயாவி சார், ஓப்பன் த சீக்ரெட் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே.... படம் மட்டுமே என் கைவண்ணம்...பலூன் வேலைகள்.அதில் உள்ள 'டயலாக்'ஸ்டாலின் மற்றும்
   முக்கியமாக ஈரோடு விஜய் செய்தவைகள்...!

   நானும் புரியாமல் தலையை சொரிந்துகொண்டுதான்
   நிற்கிறேன்...சேலம் tex

   நீக்கு
  2. //படம் மட்டுமே என் கைவண்ணம்...பலூன் வேலைகள்.அதில் உள்ள 'டயலாக்'ஸ்டாலின் மற்றும்
   முக்கியமாக ஈரோடு விஜய் செய்தவைகள் //

   பொய்! உங்களுடைய கலர்ஃபுல் கிராபிக்ஸ் வேலைகளைப் பார்த்து வாய் பிளந்து நின்றது மட்டுமே நானும் ஸ்டாலினும் செய்த வேலை!
   ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு தன்னடக்கம் கூடாது சிவாஜி!

   நீக்கு
  3. இதுக்கு பேர்தான் "எஸ்கேபிசமா"...? (நன்றி:மேச்சேரி மர்பி)

   நீக்கு
 5. si-fi in mayavi style, felt happy to see our old timers Steel claw,etc...
  :)

  +1

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. அய்யய்யோ,
   நான் வேற ரொம்ப பேசுவேனே.!!
   இனிமே அடக்கித்தான் வாசிக்கனும்.(அது கூட எடிட்டர விட்டு நாளஞ்சடி தள்ளி நின்னு.)

   நீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  3. கண்ணன் ரவி...கவனித்தீர்களா...இப்போதெல்லாம் நல்ல
   திறமைசாலிகள் நாள்கணக்கில் அல்ல மணிகணக்கில் கூட
   ஒளிந்திருக்க முடியாதுன்னு தெரிஞ்ச்சிடிச்சி..!

   பலூன்,டைலாக் இதெல்லாம் நான் செயலைன்னு சொன்ன
   'சிஷ்யபுள்ள'..மைண்டு வாய்ஸ் போட்டு மாட்டிகிட்டாரு...!

   நீக்கு
  4. நண்பரே! டெக்ஸ், கார்சன், கிட், டைகர், டைகர், ஷெல்டன், ஆர்ச்சி, மாடஸ்தி, வில்லி, மார்ட்டின், டைலன், தோர்கல், அதிரடிப்படை, இவர்களுக்கு அழைப்பு வரவில்லை என்பதற்க்கு சரியான விளக்கத்தை தரவேண்டிய தார்மீக கடமை தங்களுக்கு உண்டென்பதை இதன் மூலம் தெரிவிக்கிறேன்.

   நீக்கு
  5. மேலும் ஜானி, லக்கிலூக், சிக்பில் & co, ரிண்டின் இவர்களும் விடுபட்டவர்களில் சேர்த்தி. ஆவலுடன் விளக்கத்தை எதிர்நோக்கி காமிக்ஸ் ரசிகன்.

   நீக்கு
  6. @ இளமாறன்

   LMS வெளியீட்டு விழாவிற்கு வருவீர்களென்று எதிர்பார்த்திருந்தேன் நண்பரே... அடுத்த வருடமாவது வருவீர்களா?!

   நீக்கு
  7. இளமாறன்
   தங்களுடைய பதிவு முலம் ...
   //சரியான விளக்கத்தை தரவேண்டிய தார்மீக கடமை தங்களுக்கு உண்டென்பதை இதன் மூலம் தெரிவிக்கிறேன்.//
   என் கடமையை உணர்கிறேன்.

   இவர்களை அழைத்து என்னமாதிரியான விஷயங்களை
   சொல்லவைக்கலாம் என ஒரு ஸ்கிரிப்டு சொல்லுங்களேன் .

   நீக்கு
 7. வணக்கம். அருமையான முயற்சி. பாராட்டுகள் !

  ஆனால், வலைதளம் கடத்தப்படுவது என்பது "சப்பை மேட்டரு''. வலைதளம் கடத்தப்பட போவதாக இரும்பு கை சொல்கிறது, ஆனால் டாக்டர் செவன், வைரஸை ஏவி அழிக்கப்போவதாக கொக்கரிக்கிறார். வலைதளம் கடத்தப்படுமா அல்லது அழிக்கப்படுமா என்று கூடத் தெரியாமல், முன்னாள் ரிடையர்ட் டிடெக்டிவ் ஆசாமிகள் எல்லோரும், கூட்டமாக கூடி நின்று கும்மி அடிக்கிறார்கள் :)

  நல்ல வேலை, இந்த மொக்கை ஆசாமிகள் எல்லோரும் கூண்டோடு கைலாசம் போய் விட்டார்கள் :) பாவம், என்ன விஷயம் என்றே தெரியாமல் லார்கோவும், சைமனும் வராண்டாவிலிருந்து எட்டிப் பார்த்து இதில் மாட்டிக் கொண்டார்கள் !

  நாங்க கொஞ்சம் டெரர் தான், பரவாயில்லையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக வரவேற்கப்படுகிறீர்கள் நண்பரே ...!
   அப்போதுதானே பதிவின் பலம், பலவீனம் ,
   தெரிந்து கொள்ளமுடியும்...!

   நீக்கு
  2. //நாங்க கொஞ்சம் டெரர் தான்//
   அப்ப நீங்க ரெண்டு பேரா...ஒருவர் கைநாட்டு,
   அடுத்தவர் கத்துகுட்டியா....
   ஒருவர் படம்மட்டுமே பார்க்க தெரிந்த கைநாட்டா...
   அடுத்தவர் காமிக்ஸ் பற்றி தெரியாத கத்துகுட்டியா...
   இவ்வளவு 'வீக்'கான நீங்க டெர்ரா...
   என உங்களை சீண்டிபார்க்க நான் மரமண்டையல்ல.
   //வணக்கம். அருமையான முயற்சி. பாராட்டுகள் ! //
   என மரியாதையுடன் துவங்கியது...
   'கைநாட்டு கத்துகுட்டி' பெயரில் எனக்கு(எங்களுக்கு)
   ஒன்றுமே தெரியாதுங்க, என்ற செய்தி சொல்கிறிர்கள்
   என்றால், காமிக்ஸ் பற்றி கரைத்து குடித்தவர்(கள்)
   என்பது தெளிவாகிறது....நண்பரே(களே)!
   உங்கள் வாயிலாக இன்றைய காமிக்ஸ் ரசிகர்கள் சில
   தகவல்களை தெரிந்து கொள்ள...
   சுவைக்காக ஒரு கேள்வி: 'இந்த மொக்கை ஆசாமிகள்
   எல்லோரும் கூண்டோடு கைலாசம் போய் விட்டார்கள்...'
   என நீங்கள் கூறும் பட்டியலில் ஒரு 'பிரபளர்'விடுபட்டு
   விட்டார்...அந்த கைலாசம் போன ஆசாமி யார் ?

   நீக்கு
 8. //*(எங்களுக்கு) ; குடித்தவர்(கள்) ; நண்பரே(களே)*//

  தயக்கமே வேண்டாம், தாராளமாக நீங்கள், எங்களைப் பன்மையிலேயே அழைக்கலாம். ஏனெனில், நாங்கள் இருவர் என்பதே உண்மை. அதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஒருவரின் பெயர் கைநாட்டு மற்றவரின் பெயர் கத்துகுட்டி ! எங்களுக்கு பிடித்ததெல்லாம் சண்டை ; சண்டை ; மேலும் சண்டை ; இரத்தம் ; அதுவும் சிகப்பு கலரில் ;) எனவே எங்களைச் சீண்டிப்பார்க்க தயங்க வேண்டாம் தோழரே !

  உங்கள் கேள்விக்கு விடை தெரிந்தால் தான் அது ஆச்சரியம். பதில் தெரியவில்லை நண்பரே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'விங் கமாண்டர் ஜார்ஜ்' என்பது என் பதில்....நண்பர்களே...!

   நீக்கு