வணக்கம் நண்பர்களே!
ஆகஸ்ட் மாதம் வந்தாலே ஈரோடு சுற்று வட்டார மக்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் தான் . ஒன்று எந்த மாவட்டத்திலும் இல்லாத ஆடிப்பதினெட்டு திருவிழா கொண்டாட்டம் அதில் குவியும் மக்கள் வெள்ளம். இரண்டாவது புத்தகத்திருவிழா. முதலாவதைவிட இரண்டாவது விழாவிற்கு கொஞ்சம் மவுசு ஜாஸ்தி. காரணம் 12 நாட்கள் திருவிழா என்பது மட்டுமல்ல அனைத்து மக்களும் மேற்கொள்ளும் ஒரு தவம் என்றால் அது மிகையாகாது
இவ்வாண்டு புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 3 முதல் 14 வரை நடைபெற உள்ளது. உங்கள் அனைவரையும் வருக வருக என ஈரோடு நண்பர்கள் சார்பில் வரவேற்கின்றோம்.
சிறப்பு நிகழ்வாக இம்முறை காமிக்ஸிற்காக ஒரு பிரத்தியேக அரங்கத்தில் பிரகாஷ் பப்ளிகேஷன் மிளிரப்போகின்றது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் விஜயன் அவர்கள் 11 ம்தேதி வருகை தர உள்ளார் . அனைவரும் தவராமல் வருகை புரியா மீண்டும் அழைக்கின்றோம்
புத்தக கண்காட்சி மற்றும் காமிக்ஸ் நண்பர்களின் கொண்டாடம் இங்கு அவ்வபொழுது பதிவேற்றப்படும்.
Up date 2-8-2013
78-பிரகாஷ் பதிப்பகத்தின் அரங்கம்
சிவகாசியின் சிங்கங்கள்
நாளைக்கு தயாராகும் புத்தக அரங்கங்கள்




















































