ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

முத்துகாமிக்ஸின் முதல் பக்கங்கள் -பாகம் -1

நண்பர்களே!
வணக்கம். முத்துகாமிக்ஸின் ஒரு ரூபாய் இதழ்கள் எவ்வளவு பிரசித்தமோ அதேபோல் அதில் வெளிவந்த முதல் பக்க நகைச்சுவைகளூம் பிரசித்தம். வசனங்கள் இல்லாமலேயே நம்மை விலாநோக சிரிக்கவைக்கும் வரவேற்பாளர்கள். வெளியீடு எண் 95வரை "உங்களுக்கு தெரியுமா?" என்ற பகுதியும் , நகைச்சுவையும் ஒரே பக்கத்தில் பாதி பாதி இடங்களை பகிர்ந்து கொண்டன(சில இதழ்களில் தனித்துவமாக வந்ததுண்டு) 96 வது இதழ் முதல் முன்பக்கம் முழுவதும் ( நடுவில் ஒருசில இதழ்கள் தவிர) நகைச்சுவை சித்திரங்கள்தான் ஆக்கிரமித்துக்கொண்டன 131 வது இதழ்களுக்குபின் இது வந்ததாக தெரியவில்லை ( தெரிந்த நண்பர்கள் பகிற்து கொள்ளவும்) . நண்பர்களின் பார்வைக்காக அந்த சிரிப்பு தோரணங்களின் முதல் பகுதி இதோ...

96 முதல் 131 வரை நகைச்சுவையை முதல் பக்கமாக கொண்ட இதழ்கள்
96 விசித்திர மண்டலம்
97 தலையில்லாக் கொலையாளி
98 பூவிலங்கு
99 சூரிய சாம்ராஜ்யம்
100 யார் இந்த மாயாவி?
101 சர்வாதிகாரி
102 பறக்கும் தட்டு மர்மம்
103 உதவிக்கு வந்த வஞ்சகன்
104 கையெழுத்து மோசடி
106 ஆழக்கடலில் மாயாவி
107 கானகக் கள்வர்கள்
109 யார் அந்த கொலையாளி?
110 கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி
111 ராணுவ ரகசியம்
112 கொலைக்கு விலை பேசும் கொடியவன்
113 மரணக் குகை
114 பயங்கரவாதி டாக்டர் செவன்
115 நாலுகால் திருடன்
117 விபத்தில் சிக்கிய விமானம்
125 விண்வெளி ஒற்றர்கள்
126 திகிலூட்டும் நிமிடங்கள்
127 யார் அந்த அதிர்ஷ்டசாலி?
128 சுறாமீன் வேட்டை
129 துருக்கியில் ஜானி நீரோ
130 சூதாடும் சீமாட்டி
131 கனவாய்க் கொள்ளையர்

9 கருத்துகள்:

 1. சூப்பர் தலைவரே! பின்னிப் பெடலெடுத்துட்டீங்க! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. இன்று (8/4/2013) பிறந்த நாள் காணும் சேலம் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்துக்கள்  பதிலளிநீக்கு
 3. மியாவியின் முன்னோடி அன்றே இருந்திருக்கிறது.
  பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்டாலின்.
  நான் என்னிடம் இருக்கும் ஒருசில கதைகள் படித்த பொழுதும் இதனை கவனித்ததில்லை.

  முக்கியமாக ஈமெயில் மூலம் புதிய பதிவை பற்றி தெரிவித்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஈமெயில் மூலம் புதிய பதிவை பற்றி தெரிவித்ததற்கு //
   பின் தொடருபவர்களின் பட்டியலில் தெரியவில்லை என நீங்கள் சொன்னதன் விளைவு :)

   நீக்கு
 4. நண்பரே..,உங்கள் பதிவில் அப்படியே புது புத்தக விமர்சனத்தை பற்றியும் எழுதலாமே ?

  இந்த பதிவின் நகைசுவை படங்கள் அழகு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //புது புத்தக விமர்சனத்தை பற்றியும் எழுதலாமே ?//
   சுடச்சுட அனைவரும் தெரிந்த விசயத்தை எழுத வேண்டுமா என ஒரு எண்ணம். இனி எழுதிட்டா போச்சு

   நீக்கு
 5. நமது காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும்

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :))
  .

  பதிலளிநீக்கு