வெள்ளி, 17 ஜூலை, 2015

ஒரு தூசி தட்டும் படலம்

நண்பர்களே

வணக்கம். பொங்கலுக்கு முன் வரும் போகியைப்போல் வருடத்திற்கு ஒருமுறை நமது புத்தக விழாவிற்காக பதிவுப்பாதையை தூசி தட்டி புதுப்பிப்பது ஒன்றும் புதிதல்லதான்.கடந்தமுறை நடந்த நண்பர்களின் சந்திப்பு இன்றும் பசுமைமாறமல் இருக்க.....இப்போது  புதிய நண்வர்களை வரவேற்க தயாராகிக்கொண்டுள்ளது எட்டிபார்க்கும் தூரத்தில் உள்ள 11ஆம் புத்தக கண்காட்சி

வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 11 வரை நடை பெறும் புத்தக கண்காட்சியில் பல ஸ்டால்கள் அணிவகுத்தாலும் நமது பாதங்கள் என்னவோ அரங்கம் 152 ல் உள்ள பிரகாஷ் பப்ளிஷர்ஸில்தான் நிலைகொள்ளும் என்பதில் இம்மியளவும் ஐயம் இல்லை ( கடந்தமுறை அரங்கம் எண் 153 )

இந்த முறையும் வலைதளத்தில் கலக்கப்போவது ஈரோடு விஜைதான் .


கடந்தமுறை கொடுத்த வாக்குறுதியை ஆசிரியர் விஜயன் அவர்கள் நிறைவேற்றிய வீடியோ இங்கே ...


அப்புறம் ஒரு சின்ன சந்தேகம் ரெண்டு டெக்ஸ் மேக்ஸி 700 சில்லரை பக்கம் 336+336 பக்கம் என்று ஆசிரியர் கணக்கு சொன்னது என் காதுக்கு மட்டும்தான் விழுந்ததா......:) கடந்த வருடம் இந்த பக்கப்பிரச்சனைகள் லயன் தளத்தில் பரபரப்பாக இருந்ததே அதற்கு தீர்வு இப்பதான் கிடைத்ததோ........:)

மீண்டும் விரைவில் சந்திப்போம் நண்பர்களே

11 கருத்துகள்:

 1. ஈரோடு புத்தக திருவிழா களைகட்ட ஆரம்பிச்சுடுச்சி

  பதிலளிநீக்கு
 2. ஈரோடு புத்தகவிழா என்னி இப்போதுமுதலே கனவு உலகில் சஞ்சரிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நூல் மன்னரே அப்படியே ஹெலிக்காரில் வந்துவிடுங்கள்

   நீக்கு
 3. வணக்கம் ஸ்டாலின் ஜி மற்றும் ஈரோடு விஜய் ....அடி ஒரு வருடம் ஆகிட்டதா???...

  பதிலளிநீக்கு
 4. தகவலுக்கு நன்றி மக்கள் ஜி.......மேப் வந்தவுடன் அப்டேட் டுங்கள் ....அவ்வப்போது இங்கே கிடைக்கும் தகவல்கள் போடுங்கள் ....இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கீடு செய்யுங்கள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டெக்ஸ் கடந்தமுறை அமைத்த அரங்கத்தை போலவேஅமைப்பதாக செய்தி கிடைத்தது அப்படி அமையும் பட்சத்தில் கார்னர் அரங்கத்திற்கு முந்திய அரங்கம் கிடைக்கும்

   நீக்கு
 5. செய்திக்கு நன்றி மக்கள் ஜீ ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போராட்டகுழு தலைவரே உங்க டெண்ட் முழுவது இங்கேதான் இருக்க வேண்டும்

   நீக்கு
 6. @ ஸ்டைலின் அவர்களுக்கு,

  புத்தக திருவிழாவில் நாம் பங்குகொள்ள இடம் கிடைத்ததும்,ஸ்டால் எண் அறிவித்ததும் சந்தோசமான செய்திகள்..!

  இத்தாலி விஜயயின் வலைப்பதிவு கலக்கல் பார்க்க இப்போதே மனசு குஷியுடன் பரபரக்கிறது..!

  உங்கள் சந்தேகத்துக்கு என் பதில் : இரண்டு டெக்ஸ் மேக்ஸி என எடிட்டர் "எதொதொரு சமயத்தில்...தனி தனி" என குறிப்பிட்டார்..! ஒன்று 'ஒக்லஹோமா' (330பக்கத்தில் கலரில்) வந்துவிட்டது, அடுத்து வரும் தீபாவளிக்கு 'பணியில் ஒரு புதையலை தேடி!' 330பக்கங்களுடன் B&W வரும் என நினைக்கிறேன்..! ஒரேயொரு முரண் இரண்டாவது மேக்சி கலரில் அல்ல, B&W என்பது மட்டுமே..!

  பதிலளிநீக்கு