காமிக்ஸ் கிளப்
அன்பு நண்பர்களே! பதிவிடுவதற்கு பல விசயங்கள் இருந்தாலும். வெகுவான பணிச்சுமை இரும்பு பிடி போட்டு தடுத்துவிடுகின்றது. ஆனால் இந்த பதிவு நீண்ட நாள் கனவை நிறைவேற்றும்படியாக அமைந்திருப்பது மிகவும் மன நிறைவைதருகின்றது
. காமிக்ஸ் நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தால் என்ன என்று மனதில் பல வருடங்கள் தோன்றிய எண்ணத்தை , ஈரோடு புத்தக திருவிழா அதனை மேலும் தூண்டிவிட்டது . இதை நண்பர்களிடம் தெரிவித்தபொழுது காமிக்ஸ் பட்டாளங்கள் புனித சாத்தான் , ஆடிட்டர் ராஜா, விஜய் மற்றும் கிங்க் விஸ்வா ஆகியவர்களின் ஒருமித்த பலத்த ஆதரவுகிடைத்தது.
வரும் 28/10/2012 அன்று ஈரோட்டில் ஒரு சந்திப்பை ஏற்படுத்த நண்பர்கள் அனைவரும் எற்பாடு செய்துள்ளனர். காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் இந்த சந்திப்பிற்கு அன்புடன் அழைக்கின்றோம். சந்திப்பிற்கு வர விரும்பும் நண்பர்கள் மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நண்பர்கள் விஜய் (94422 -25050) அவர்களிடமோ ஆடிட்டர் ராஜா 99765 41077 அவர்களிடமோ தெரிவிக்கலாம். ஈரோட்டில் நிகழ்வு நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் நண்பர்களின் முடிவுக்குப்பின் விரைவில் இங்கு வெளியிடப்படும்.
வாருங்கள் காமிக்ஸ் நண்பர்களே! மக்களிடையே தமிழ் காமிக்ஸை கொண்டு சேர்க்க உள்ள வழிகளை அலசுவோம்....
இடம் : மெரிடியன் ஹோட்டல் , சவீதா மருத்துவமனை சமீபம் , பிரப் ரோடு, ஈரோடு
( ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட நடை தொலைவு)
நேரம் : காலை 11.00 மணி

வாங்க ஸ்டாலின் வெகு நாட்களுக்கு பிறகு வந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குஅதுவும் ஒரு அருமையான நிகழ்வு பற்றிய செய்தியுடன்.
வாழ்த்துக்கள் நண்பரே.
அந்தவாரம் எனக்கு வார இறுதி ஷிபிட் உள்ளது.
ஆகையால் எனது வரவு சற்றே சிரமம்.
உங்களிடம் கேட்டு கொள்வது ஒன்று தான்.
அந்த நிகழ்வு முடிந்தபின் அதனை பற்றிய விரிவான பதிவை எதிர்பார்கிறேன்.
//விரிவான பதிவை எதிர்பார்கிறேன்.//
நீக்குகண்டிப்பாக நண்பரே! நன்றி நண்பரே
ஈரோட்டின் இரவுக்கழுகான,
பதிலளிநீக்குநீ...ண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கே பதிவிட்டிருக்கும் நண்பர் ஸ்டாலின் அவர்களை காமிக்ஸ் கூறும் நல்லுலகம் வாழ்த்தி வரவேற்கிறது! லேட்டா வந்தாலும் ஹாட்டா வந்திருக்கீங்க.
பதிவிட நேரம் கிடைப்பதில்லை என்பதெல்லாம் சரிதான், அதற்காக பிசாசுகூடத் தூங்கிவிடும் இந்தப் பின்னிரவு (அதிகாலை என்றும் கூறலாம்)
வேளையிலா பதிவிடுவது?!
உடல்நலம் என்னாவது?
சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற நிகழ்வுற வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குசந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற நிகழ்வுற வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஆரம்பிச்சுட்டாங்கய்யா! அதிரடியை! அசத்துங்க! பங்கேற்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு//ஆரம்பிச்சுட்டாங்கய்யா! அதிரடியை! //
நீக்குஉங்களைப்போன்ற காவல் துறை நமது நண்பனாக இருக்கும்போது இது சகஜம்தானே
நண்பர்களே,
பதிலளிநீக்கு* சென்னையிலிருந்து கிங் விஸ்வா
* கோவையிலிருந்நு ஸ்டீல் க்ளா
* திருப்பூரிலிருந்து சிபி மற்றும் ப்ளூ பெர்ரி
* சேலத்திலிருந்து குமார் மற்றும் விஜய ராகவன்
* பெங்களூரிலிருந்து சுப்ரமணியம்
ஆகியோர் காமிக்ஸ் கிளப் சந்திப்பிற்கு வருவதாக உறுதியளித்துள்ளனர். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம்.
பெரிதாக எந்த ஆடம்பரமுமின்றி மிக எளிமையாக நடத்தப்படும் ஒரு கலந்துரையாடல் நிகழ்வே இச்சந்திப்பு. எனினும் 'காமிக்ஸ்' என்ற மந்திர வார்த்தையினால் கட்டுண்ட ஒத்த கருத்துடைய நண்பர்கள் ஒன்று கூடும்போது அது ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்கு ஒப்பானது என்பதை ஈரோடு புத்தகத் திருவிழாவில் நம் நண்பர்களைச் சந்தித்தபோது அனுபவப்பூர்வமாகவே உணரமுடிந்த
அந்த சந்தோஷ நிகழ்வுகளின் தொடர்ச்சியே இந்தக் காமிக்ஸ் க்ளப் சந்திப்பு என்பதால், ரகளையான தருணங்களுக்கு பஞ்சமே இருக்காது என உறுதிபட நம்புகிறோம்.
கொண்டாட்டத்தில் பங்குகொள்ள காமிக்ஸ் படிப்பவர்கள் யாராயினும், என்ன வயதுடையவராயினும், எந்த ஊராயினும், அவர்களை அன்போடு அழைக்கிறோம்.
வரும் 28 ஆம் தேதியன்று ஈரோடு நகரில், அனைவரும் வந்து செல்ல வசதியானதொரு அமைவிடத்தில் நிகழவிருக்கும் இந்தச் சந்திப்புக்கு வருகைதர விருப்பமுள்ளவர்கள் தயவுசெய்து மேற்கூரிய எண்களில் எவ்விதத் தயக்கமுமின்றி தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
(ஈரோடு ஸ்டாலின் ஆசியுடன்)
விஜய், புனித சாத்தான் மற்றும் ஆடிட்டர் ராஜா.
அருமையான நிகழ்வு நண்பர்களே! காமிக்ஸ் என்பதை ஜஸ்ட் ஒரு சாதாரண பொழுதுபோக்கு என்று பார்க்காமல் அதை அதற்கு மேல் கொண்டுசெல்ல முயற்சிக்கும் உங்கள் அனைவரது முயற்சி நிச்சயம் பாராட்டுக்கு உரியது.கலந்துகொள்ள முடியாத காமிக்ஸ் ஆர்வலர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக உங்கள் கலந்துரையாடலை முழுமையாக இங்கே பதிவிட வேண்டும். வாழ்த்துக்கள்! KEEP ROCKING GUYS!!
பதிலளிநீக்கு//உங்கள் கலந்துரையாடலை முழுமையாக இங்கே பதிவிட வேண்டும். //
நீக்குகிட்டத்தட்ட ஒரு நாள் நிகழ்வு முடிந்த வரை பதிவிடுகிறோம்.நன்றி நண்பரே!
* வெப்படையிலிருந்து பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர்
பதிலளிநீக்கு* தாரமங்கலத்திலிருந்து பரணிதரன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர்
ஆகியோர் தங்களது வருகையை உறுதிசெய்துள்ளனர். வரவேற்கிறோம்!
உற்ச்சாகத்தை பாய்ச்சும் நண்பர்கள் சீக்கிரம் குரல் கொடுங்களேன்!
நீக்குஇந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அனைத்து காமிக்ஸ் அன்பர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்.வாருங்கள் .நண்பர்களே.ஜமாய்ப்போம்.
பதிலளிநீக்குசந்திப்பில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ள மேலும் இரு நண்பர்கள்,
பதிலளிநீக்கு* சேலத்திலிருந்து டாக்டர் சுந்தர்
* சேலத்திலிருந்து கர்ணன்
வரவேற்கிறோம்!
NANBARAY ,SIKIREM IDATHAI SOLLUNGAL...
பதிலளிநீக்குInnum 2 natkalay meethi..
அறிவித்தாகிவிட்டது நண்பரே!
நீக்குஇந்த சந்திப்பு பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்! :)
பதிலளிநீக்குபெங்களூரு நண்பர் சுப்ரமணியுடன் நீங்களும் வரலாமே!
நீக்குவாழ்த்துக்கள். :-)
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குமுகூர்த்த நாள் இல் இந்த நிகழ்வை வைத்தால் நாங்கள் எல்லாம் எப்படி கலந்து கொள்வது? ஹ்ம்ம்ம்...
பதிலளிநீக்குதேதி குறிக்கும் பொழுது மறந்துவிட்டோம். அடுத்த முறை அவசியம் வரவும்
நீக்குஅடுத்த சந்திப்புக்கு திட்டமிடும்போது கண்டிப்பாக இந்தத் தவறை மனதில் இருத்தித் திட்டமிடுவோம். நன்றி நண்பரே!
நீக்குகாமிக்ஸ்டா சார்பாக சந்திப்பு நிகழ்ச்சி சிறப்புற நிகழ்வுற வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குமன்னிக்கவும் வரமுடியாத சூழ்நிலை. நான் கொடுத்துவச்சது அவ்ளோதான்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
நன்றி நண்பரே! மறுபடியும் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்தால் போச்சு....
நீக்குவாழ்த்துகிறேன் நண்பர்களே..நிகழ்வு சிறப்பாக நடக்க..
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குநிகழ்ச்சிக்கு வர இயலாமைக்கு வருத்தங்கள் நண்பர் ஸ்டாலின் அவர்களே..
பதிலளிநீக்குநிகழ்ச்சி மிக அருமையாக நடந்தேறி இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
நிகழ்ச்சி பற்றிய முழு பதிவும் எப்பொழுது நண்பரே ?
திருப்பூர் ப்ளுபெர்ரி
நண்பர்களே ! காமிக்ஸ் நண்பர்களின் இன்றய சந்திப்பு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடந்தேறியது . அது குறித்த பதிவு இன்னும் இரு தினங்களில் வெளியிடப்படும் . நன்றி!
பதிலளிநீக்குநான் இந்த சந்திப்பை அடுத்த முறை சென்னை'ல் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
பதிலளிநீக்குபூபதி இல
9962770888
கண்டிப்பாக நண்பரே.நமது அடுத்த சந்திப்பு வரும் ஜனவரி மாத சென்னை புத்தக கண்காட்சியில் நடக்கும்.ஸ்டாலின் இதை உறுதிபடுத்துவார்.
பதிலளிநீக்குஇது நல்லது! ஒரே கல்லுல ரெண்டு மாங்க! ஒரு நண்பர் ஒரு புத்தகம்!
பதிலளிநீக்குi have just seen this news so i couldn't attend the meeting
பதிலளிநீக்கு