பெங்களூருவில் காமிக்கான் களைகட்டும் இந்த நேரத்தில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் கடந்த 30-8-2012 இல் ஆரம்பித்து 9/9/2012 வரை நடைபெற்ற புத்தக கண்காட்சியில் முத்து - லயன் விற்பனை குறித்து இந்து பப்ளிகேஷன் உரிமையாளர் திரு.மாணிக்கம் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்ட பொழுது கூறியவற்றையும் அந்த நிகழுவுகளை எனது வேண்டுகோளுக்கு இனங்க டிஜிட்டல் படமாக அனுப்பிய எனது மின்னியல் துறை நண்பர் பால்பாண்டி யின் ஆர்வத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
* புத்தக கண்காட்சியில் காமிக்ஸிற்கு நல்லதொரு ரெஸ்பான்ஸ் இருக்கிறது .
* குறிப்பாக சிறுவர்கள் லக்கிலூக்கிற்கு ஆர்வம் காட்டுவதை நல்தொரு வளர்ச்சியாக உணரமுடிகிறது.
* வழமைபோல தமிழில் காமிக்ஸ் வருவது இல்லை என நினைத்து கொண்டிருந்த பலர் முத்து & லயனை கண்டதும் உற்சாகத்தில் திணறியதை அறிந்துகொள்ள முடிந்தது
* அரங்கத்தில் புத்த்கத்தினை ஈரோட்டு புத்தக திருவிழாவில் அடுக்கிவைத்திருந்தது போலவே முன்னுரிமை கொடுத்து அடுக்கிவைத்திருந்தனர்.
* வருபவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணாட்சி ராதாகிருஷ்ணன் கலக்கியுள்ளார் .மனிதர் ஈரோட்டில் கொடுத்தது போலவே துண்டு பிரசுரங்களை அள்ளி வழங்கியுள்ளார்
* மதுரையில் உள்ள காமிக்ஸ் பதிவாளர்கள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!
பல காமிக்ஸ் நண்பர்களை அருகில் இருந்து சந்திக்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் நீங்காமல் உள்ளது
புத்தக கண்காட்சியின் சில கண்கொள்ளாக்காட்சிகள் இதோ.........
மேஜையின் மேல் கொட்டிக்கிடக்கும் காமிக்ஸ்கள்..........
இந்து பப்ளிகேஷன்
இந்து பப்ளிகேஷன்ஸ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
* புத்தக கண்காட்சியில் காமிக்ஸிற்கு நல்லதொரு ரெஸ்பான்ஸ் இருக்கிறது .
* குறிப்பாக சிறுவர்கள் லக்கிலூக்கிற்கு ஆர்வம் காட்டுவதை நல்தொரு வளர்ச்சியாக உணரமுடிகிறது.
* வழமைபோல தமிழில் காமிக்ஸ் வருவது இல்லை என நினைத்து கொண்டிருந்த பலர் முத்து & லயனை கண்டதும் உற்சாகத்தில் திணறியதை அறிந்துகொள்ள முடிந்தது
* அரங்கத்தில் புத்த்கத்தினை ஈரோட்டு புத்தக திருவிழாவில் அடுக்கிவைத்திருந்தது போலவே முன்னுரிமை கொடுத்து அடுக்கிவைத்திருந்தனர்.
* வருபவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணாட்சி ராதாகிருஷ்ணன் கலக்கியுள்ளார் .மனிதர் ஈரோட்டில் கொடுத்தது போலவே துண்டு பிரசுரங்களை அள்ளி வழங்கியுள்ளார்
* மதுரையில் உள்ள காமிக்ஸ் பதிவாளர்கள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!
பல காமிக்ஸ் நண்பர்களை அருகில் இருந்து சந்திக்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் நீங்காமல் உள்ளது
புத்தக கண்காட்சியின் சில கண்கொள்ளாக்காட்சிகள் இதோ.........
மேஜையின் மேல் கொட்டிக்கிடக்கும் காமிக்ஸ்கள்..........
இந்து பப்ளிகேஷன்
இந்து பப்ளிகேஷன்ஸ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
அட! :) கண்காட்சி நடந்த தினம் மதுரையில் இருந்தேன் ஆனால் நேரம் இல்லாததால் செல்ல முடியவில்லை! சிறுவர்கள் காட்டி வரும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது! :)
பதிலளிநீக்கு//நேரம் இல்லாததால் செல்ல முடியவில்லை//
நீக்குஅதான் காமிக்கானில் தூள்கிளப்பிவிட்டீர்களே!
நல்ல விஷயம்
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குதமிழ்நாட்டில் ஆங்காங்கே நடைபெறும் புத்தக்திருவிழா முதல், பெங்களூரு காமிக்கான் வரை நமது காமிக்ஸ்களுக்கு கிடைத்திருக்கும் பரவலான வரவேற்பு சந்தோஷக்கடலில் ஆழ்த்துகிறது.
பதிலளிநீக்கு(ஸ்டாலின் சார், மற்றவர்களைப் பதிவிடச்சொல்லி ஒரு பதிவா? உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம்!)
அருமை! இன்னும் நிறைய கண்காட்சிகளை நம்ம காமிக்ஸ் பதிப்பகம் அலங்கரிக்கும்!
நீக்குஎண்ணம் பலிக்கட்டும் நண்பா
நீக்குvijay Erode: //ஸ்டாலின் சார், மற்றவர்களைப் பதிவிடச்சொல்லி ஒரு பதிவா? உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம்!//
நீக்குசமீபத்தில் ஒரு நண்பர் பெங்களூரு காமிக் காணுக்கு சென்றுவந்தார் அவர் லயன் வலைப்பதிவில் எழுதிய பின்னூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார் .
//காமிக்கான் பற்றிய மொத்த நிகழ்வுகளை எடிட்டரின் வலைப்பதிவு மூலமாகவும், நண்பர்களின் வலைப்பதிவு மூலமாகவும் அறிந்துகொள்ள உங்களைப் போலவே நானும் ஆவலாயிருக்கிறேன்.//
நேரில் சென்று பார்த்த அவரே அடுத்தவர் எழுதினால் படிக்க தயாராக இருக்கும்போது நான் எவ்வளவவோ...................:D :D :D
ஆமா நீங்கள் அவரில்லைதானே?!
அது நானேதான்!
நீக்குஎன் தோல்வியை இப்ப ஒப்புக்கறேன். நெக்ஸ்ட்டு மீட் பன்றேன்!
(ம்... என்ன ஒரு வில்லத்தனம்!)
//என் தோல்வியை இப்ப ஒப்புக்கறேன்//
நீக்குஉங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு........
இந்த தளத்தில் இணைக! என்று எப்படி செட் செய்தீர்கள்
பதிலளிநீக்கு//இந்த தளத்தில் இணைக! என்று எப்படி செட் செய்தீர்கள் //இது BPK யிடம் கேட்கவேண்டிய கேள்வி இருந்தாலும் எனக்கு தெரிந்தவரையில் உங்களுக்கு தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன் (அலைபேசியில்....)
நீக்குநீங்கள் உங்கள் ஊரிலிருந்தபடியே மதுரை கண்காட்சியை ஆவனப்படுத்தியது பாராட்டத்தகுந்த விஷயம்.
பதிலளிநீக்குபல புத்தக கண்காட்சிகளும், அதில் நமது காமிக்ஸ்கள் பங்கேற்பதும், அதைப் பற்றிய வலைப்பதிவுகளும் நமது காமிக்ஸின் வளர்ச்சிக்கு ஒரு மைல்கல்லாக திகழ்கிறது.
பெங்களூர் காமிக் கானில் நமது காமிக்ஸ்களுக்கு சிறப்பான வரவேற்பு இருந்ததாக எடிட்டர் ஒரு துளி பின்னூட்டம் இட்டுள்ளார். அதைக் கண்டதும் எண்ணுள் மகிழ்ச்சி புன்னகை தோன்றியது.
ஈரோடு புத்தக திருவிழாவைப் பற்றிய ஒரு பதிவு இன்னும் பாக்கி இருப்பதாக நீங்கள் சொன்னது ஞாபகம் இருக்கிறதா ஈரோட்டாரே!.
//ஈரோடு புத்தக திருவிழாவைப் பற்றிய ஒரு பதிவு இன்னும் பாக்கி இருப்பதாக நீங்கள் சொன்னது ஞாபகம் இருக்கிறதா ஈரோட்டாரே!.//
நீக்குஇப்படி அநியாயத்துக்கு ஞாபகம் வச்சிருப்பீங்கனு தெரிஞ்சிருந்தா எழுதியிருக்கவே மாட்டேன்:D
இறுதியாக எடுத்த இரு ஒளிப்பதிவும் சற்று அதிக நீளம் என்பதால் blogspot ஏற்றுக்கொள்ளவில்லை எப்படியும் வேறுபதிவுடன் இணைத்து எழுத முயற்சிக்கிறேன்.
யூட்யூபில் ஒரு ப்ரொபைல் க்ரியேட் செய்து அங்கு அப்லோட் செய்துவிடுங்கள். பின் யூட்யூப் லிங்கை உங்களது ப்ளாகில் இணைத்து விடுங்கள். இந்த முறையில் சிக்கல் தீரும் என்று நினைக்கின்றேன்.
நீக்குஅதற்கும் ஒரு வழிகாண்பித்து விட்டீர்களா? ஒரு பதிப்பகத்தாரின் மனக்குமறல்களை கொண்ட அந்த ஒளிப்பதிவை ( போச்சு அதையும் சொல்லிட்டேனா.....) லிங்க் போட்டு விடுகிறேன் (எப்படியும் அடுத்த புத்தக திருவிழாவிற்குள் வந்துவிடும்)
நீக்கு//எப்படியும் அடுத்த புத்தக திருவிழாவிற்குள் வந்துவிடும்//
நீக்குY THIS KOLAVERIII.....
//வருபவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணாட்சி ராதாகிருஷ்ணன் கலக்கியுள்ளார்//
பதிலளிநீக்குமனிதர் எல்லா கண்காட்சியிலும் கலக்கிறார் நண்பரே.
உங்கள் அனைவரது பதிவிலும் அவரை பற்றி படித்து விட்டு அவரை சந்திக்கும் ஆர்வம் எனக்கு அதிகமாகிவிட்டது நண்பரே.
உண்மையில் நமது காமிக்ஸ் மீண்டும் அனைத்து தரப்பினரையும் சென்று சேரும் வாய்ப்பு அதிகமாகி கொண்டே இருக்கிறது.
பகிரதளுக்கு நன்றி நண்பரே.
//மனிதர் எல்லா கண்காட்சியிலும் கலக்கிறார் நண்பரே.//
பதிலளிநீக்குஅதுமட்டுமல்ல பழகுவதற்கும் மிக இனிமையானவர்
நன்றி நண்பரே!
ஸ்டால்களின் நாயகன் என நிரூபித்து விட்டீர்கள் நண்பரே...................பாக்கியுள்ள பதிவை விரைவில் தொடருங்கள்........பாதியிலே நிற்கின்றன ...........
பதிலளிநீக்கு//பாக்கியுள்ள பதிவை விரைவில் தொடருங்கள்//
நீக்குடைகர் கதையை அடிக்கடி படித்ததன் விளைவோ என்னமோ? அவர் கதையும் நிறைய தொங்குவதுபோல் இதுவும் இழுக்கின்றது
நண்பரே
பதிலளிநீக்குநீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களாக பதிவுகளை காணவில்லையே ?
சீக்கிரம் ஒரு பதிவு போடுங்க :)
நண்பர்களே!
பதிலளிநீக்குஈரோடு ஸ்டாலினை யாராவது பார்த்தீர்களா? கரையாண்கள் பற்றிய மேல்படிப்புக்காக கீழ்திசை நாடுகளுக்குப் பயணமானவர் இன்னுமா வரவில்லை? உண்மையிலேயே பெரிய படிப்புத்தான் போலிருக்கிறது!
முதல் படத்தில் ஒரு மூலையில் இருப்பவை மட்டும்தான் காமிக்ஸ்கள் மற்றவை பிற புத்தகங்கள். சரிதானே..,
பதிலளிநீக்கு