ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

விடுமுறை தின புத்தக திருவிழா ...

நண்பர்களே!

நேற்றும் இன்றும் புத்தக கண்காட்சி நன்றாகவே சென்றது. புனித சாத்தான் , திருப்பூர் சிபி,ஈரோடு விஜய்,திருப்பூர் புளூபெரி என நமது வலை நண்பர்களை நேரிலும் கலாய்க்கும் இனிய அனுபவத்துடன் கழிந்தது .
மேலும் நமது காமிக்ஸின் நெடு நாளைய வாசகர்களின் புதிய சந்திப்பும் கிடைத்தது ( கோபி ஸ்ரீதர் , சேலம் குமார், etc.,)
பெயர் தெரியாத வாசகர்கள் அனைவருடய கருத்துக்களை மணிக்கனக்கில் பகிரும் அனுபவமும் கிடைத்தது.

காமிக்ஸ் பற்றி தெரியாத நண்பர்களும் வாசகர்களும் நமது வலை நண்பர்களின் அனுபவங்களை கேட்டு புத்தகங்களை வாங்கிச்சென்ற பாங்கு என்று இனம்புரியாத இன்பத்தில் ஆழ்த்தியதில் ஆச்சர்யம் இல்லை.
இதன் நிகழ்வுகளை வீடியோ , புகைப்படம் என்று பதிந்ததை விரைவில் பதிவிடுகிறேன்....

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா இன்னும் வரவில்லை...எதிர்பார்கிறேன்.! ( அவர் mail id இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை)
நடப்பு நாட்களில் வருகின்ற நிகழ்வுகளை இங்கு வெளியிட்டுள்ளேன்.நான் வாங்கிய முத்து - லயன் காமிக்ஸ் நீங்களாக மற்ற தமிழ் காமிக்ஸ் பற்றிய விபரங்களும் விரைவில்.....

21 கருத்துகள்:

 1. Dear Stalin,
  Good Initiative for our comics. Happy to see lion comics snaps in book stalls. It has been a dream whenever I visit many book fairs - for 2 decades. At last in 2012 its happening regularly. Wish this be a good beginning. My wishes for your effort in Erode book fair.

  பதிலளிநீக்கு
 2. எழுத்து மூலம் பெற்ற நட்புகளை நேரில் சந்திப்பது மகிழ்வான விசயமாகவே இருக்கும் இல்லையா நண்பரே!

  விரைவில் படங்களுடன் பதிவை எதிர்பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. //எழுத்து மூலம் பெற்ற நட்புகளை நேரில் சந்திப்பது மகிழ்வான விசயமாகவே இருக்கும் //
  கண்டிப்பாக அது ஒரு இனிய அனுபவம்தான்......வாழ்க்கையின் இனிய தருனங்களில் இதுவும் ஒன்று........

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் நண்பரே.
  //மற்ற தமிழ் காமிக்ஸ் பற்றிய விபரங்களும் விரைவில்// எதிர்பார்கிறேன்.
  என்னிடம் இல்லாத புத்தகங்கள் இருந்தால் தங்களிடம் சொல்லி வர வைத்துக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
 5. அந்த துண்டு பிரசுரத்தின் மாதிரிகளை எனக்காக எடுத்து வையுங்கள் ஸ்டாலின்! :)

  பதிலளிநீக்கு
 6. கண்டிப்பாக! ..........காமிக் கானில் கொடுக்கவா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் சுண்டல் தயார் ..... இந்த வாரம் வரும் பொழுது வாங்கிக் கொள்ளுங்கள் ...... அதற்குள் புது இதழும் கண்காட்சிக்கு வந்துவிடும்...

   நீக்கு
 7. கலக்குங்க நண்பரே'
  உங்களை எல்லாம் சந்திக்கமுடியாத ஆதங்கத்தில் இருக்கிறேன்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப்போல நண்பர்களும் வந்தால் தானே உற்சாகம் அதிகமாகும்.......(ம்... உங்கள் ஸ்தலம் எதுவோ...)

   நீக்கு
 8. நண்பரே,
  வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றுவது போல நமது லயன் முத்து காமிக்ஸ் புது உத்வேகத்துடன் வெளிவரும் இந்த சமயத்தில், வெறும் வாய் வார்த்தையோடு நின்று விடாமல் நீங்கள் செய்த முயற்சிகள் மிகவும் பாராட்டத் தகுந்த ஒரு செயல். இன்று காமிக்ஸ் மேல் உள்ள காதலால் ஒவ்வொரு ரசிகரும் காமிக்ஸ் வளர்ச்சிக்கு தங்களால் முடிந்த வேலைகளை செய்ய ஆர்வமுடன் காத்திருந்தலும் உங்களுக்கு கிடைத்த அந்த வாய்ப்பை காமிக்ஸுக்கு பலன் தரும் விதத்தில் செயல்பட்டிருக்கிறீர்கள்.

  உங்களின் அயராத சிறந்த முயற்சிகளுக்கு எனது இதய பூர்வமான பாராட்டுக்கள். எதிர்காலத்திலும் இது போன்ற உமது முயற்சிகள் தொடரவும், வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

  அதிர்ஷ்டசாலி ஐயா நீர். காமிக்ஸ் ஆர்வம் என்ற ஒரு புள்ளியை மையமாக வைத்து சுற்றிவரும் பல வாசக, வலைப்பூ நண்பர்களை நேரில் சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை பெற்றிருக்கிறீர்கள்.

  நண்பர் புனித சாத்தான் கையில் சூலத்தோடு வந்தாரா?
  அவரின் ஈட்டி வாலை பார்த்தீர்களா?
  நண்பர் சிபியின், சிபி ஸ்கொயர் பெயர் விளக்கம் தெரிந்து கொண்டீர்களா?

  ஈரோடு புத்தக கண்காட்சிக்கு வருவது என்பது எனக்கு சாத்தியமில்லை ஏனெனில் நானிருப்பது சென்னையில். நீங்கள் எப்போதாவது சென்னை வந்தால் தான் உங்களை சந்திக்க முடியும் என்று நினைக்கின்றேன்.

  பழைய கோரிக்கையையே மீண்டும் உங்களிடம் வைக்கின்றேன். புத்தக கண்காட்சியில் வேறு காமிக்ஸ்கள் என்ன பார்த்தீர்கள்? அந்த காமிக்ஸ்களை நானும் மற்ற நண்பர்களும் பெறும் வழிமுறையை குறிப்பெழுதி வைத்துக் கொள்ளுங்கள், இங்கே பதிவிலும் தெரியப் படுத்துங்க்கள்.

  Hats off to you!

  அன்புடன்,
  பாலாஜி சுந்தர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப்போன்ற நண்பர்களின் உத்வேகம் தரும் பின்னூட்டம் இருக்கும் பொழுது இது இன்னும் உற்சாகமாகிறது ....சரி ஈரோடு ஒன்றும் வெகு தொலைவில் இல்லையே... வரலாமே.....

   நீக்கு
  2. கிணற்றுத் தவளையாக வாழ்ந்து பழக்கமாகிவிட்டது. உங்களைப் போன்ற புதிய நண்பர்களை சந்திப்பதற்காக வேணும் உங்கள் ஊருக்கு வர வேண்டும் என்று ஆவல் உண்டாகிறது.

   நீக்கு
 9. நண்பர் திரு ஸ்டாலின்,

  உங்களை ஸ்டாலில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அதிக நேரம் என்னால் உங்களுடனும், ஸ்டாலிலும் செலவிட முடியவில்லை என்பதை எண்ணி வருத்தபடுகிறேன்.

  மேலும் நேரமின்மை காரணமாக நண்பர்கள் ஈரோடு விஜய், புனித சாத்தான் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது :(

  ஈரோடு புத்தக கண்காட்சியில் நமது ஸ்டால் அமைந்திட தாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அனைவரின் சார்பிலும் ஒரு ராயல் சல்யூட் :)

  தங்களது குழந்தைகள் மனோஜ் மற்றும் காயத்ரி - சில நிமிடங்கள் பழகினாலும் எனது மனம் கவர்ந்த நண்பர்கள் ஆகி விட்டனர். (நண்பர்களே நமது ஸ்டாலின் சார் தனது குழந்தைகளுக்கு காமிக்ஸ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார் என்பது பாராட்ட வேண்டிய அடுத்த அம்சம்)

  நேரம் கனிந்து வந்ததால் நாம் அனைவரும் மீண்டும் ஒரு நாள், ஒரு இடத்தில் கூடுவோம்.

  அன்புடன்
  திருப்பூர் ப்ளுபெர்ரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை சொல்வதென்றால் நமது வலை நண்பர்கள் இல்லாதிருந்தால் இந்த அளவுக்கு திருவிழா சோபித்திருக்காது.... ஆனால் புகைப்படம் எடுப்பதற்குள் டிமிக்கி கொடுத்து நழுவி விட்டீர்களே! வரும் வாரம் அதனையும் ஜமாய்த்துவிடலாம் ஆசிரியருடன் ( குடும்பத்துடன் வாருங்களேன்.....)

   நீக்கு
  2. நண்பர் திருப்பூர் ப்ளுபெர்ரி காமிக்ஸ் வாசகர்களை தொடர்பு கொள்ள ஒரு விவரக் குறிப்பு தயார் செய்து வருகிறார். அவரிடம் என் போன் தொடர்பு விவரம் இருக்கிறது. அனைவரும் ஒரு கலந்துரையாடலில் சந்திக்க திட்டம் தீட்டுவார் என்ரு நினைக்கின்றேன்.

   நீக்கு
 10. கிண்டலா சுண்டலா தெளிவு படுத்துங்கள் நண்பரே,அடுத்த வெளியீடு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இன்ப கடலில் ஆழ்த்திவிட்டீர்கள் .....................
  ஆசிரியரையும் தரிசித்து விடுவோம் ...........

  பதிலளிநீக்கு