சனி, 4 ஆகஸ்ட், 2012

புத்தக திருவிழா கொண்டாட்டம் முதல் நாள் 3-8-2012

ஈரோடு புத்தக திருவிழா ஆரம்பித்து விட்டது . 10000 நபர்களுடன் இன்று ஆரம்பித்த "ஈரோடு வாசிக்கின்றது " மாராத்தான் ஓட்டத்துடன் உற்சாக  கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது.புத்தக திருவிழாவின் முதல் நாள் இன்று மாலை  ஆரம்பித்தார்கள், நமது காமிக்ஸ் புத்தகம் உள்ள அரங்கில் பத்திரிக்கையாளர் சுப்ராஜா (தினத்தந்தியில் ஞயிறு அன்று திகில் தொடர் எழுதுவதாக கூறினார்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .நமது காமிக்ஸ் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் மட்டுமல்லாது நமது காமிக்ஸ் பார்த்த  அனைவரிடம் இருந்தும் வந்த்த  ஒரே கேள்வி மிக பழய புத்தகம் (85 களுக்கு முந்தயவை ) கிடைக்குமா? லார்கோவை எடுத்து சொன்னாலும் அதனை படிக்காத காரணத்தால் அவர்களால் சமாதானம் அடையமுடியவில்லை.
நாளை நமது அன்பர் திரு ராதாகிருஷ்ணன் வருவதாகவுள்ளார்.4 மாதங்களுக்கு முன் 1500 அரங்க விண்ணப்பங்கள் வந்து குவிந்த பொழுது அவற்றில் 200 மட்டும் மிக கவனமாக தேர்வு செய்து அரங்கம் அமைக்க அனுமதிக்கப்பட்டதாம்.   நாம் மிக தாமதமாகவே கடைசி நேரத்தில் முயற்சி செய்ததால் அனைத்து அரங்கங்களும் முடிந்து விட்டன. நண்பர் "கிங் விஸ்வா"வும் பல விதங்களில் முயற்சித்தார் . அடுத்த முறை நிச்சயம் தனி அரங்கம் கிடைத்து விடும்


புத்தக திருவிழாவில் லயன் -முத்து கமிக்ஸ்கள் இதழ்கள் அரங்கம் எண் 125 -பல்லவி ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் அன்ட் மாஸ் கம்யூனிகேஸன்ஸ் பி லிட்   மற்றும் அரங்கம் எண் 27,28 - ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் - ஆகிய இடங்களில் கிடைக்கும்
இன்று எனது மொபைல் காமிராவில் எடுத்த படங்கள் இவை நாளை எனது கை வீடியோ காமிராவில் எடுத்து பதிவிடுகிறேன்.இன்று இவ்வளவுதான் நண்பர்களே!

கண்காட்சி சம்பந்தமான புகைப்படம் , வீடியோக்கள் விரைவில் .......

11 கருத்துகள்:

 1. என்னை ஈரோடு கண்காட்சிக்கே அழைத்து சென்றதற்கு நன்றி நண்பா,பழைய வாசகர்கள் லார்கோவை புரிந்து கொள்ளாதது ஆச்சரியமே,புத்தகத்தை பார்த்தும்,அவர்கள் ரசனை மாறியிருக்கலாம்,பழைய புத்தகங்களை கேட்பதும் அவர்களது ,கடந்த கால நினைவுகளில் மூழ்கவே,கண்டிப்பாக இனி வரும் நாட்களில் பல வாசகர்கள் திரள்வார்கள்,லார்கோவை பார்த்து மயங்குவார்கள் .பகிர்வுக்கு நன்றிகள்,தங்கள் ஹாண்டி கேமரா படங்களையும் எதிர் பார்த்து .............................

  பதிலளிநீக்கு
 2. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே.
  உங்களது கடுமையான உழைப்பு இதில் தெரிகிறது.
  எப்படியோ கஷ்டப்பட்டு இரண்டு ஸ்டால் இல் நமது காமிக்ஸ் கிடைக்க வழி வகை செய்து விட்டீர்கள்.
  நமது காமிக்ஸ் விற்பனை பற்றி தினசரி அப்டேட் கொடுங்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பா உங்கள் ஊர் எதுவோ..... வாருங்களேன் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள...

   நீக்கு
 3. லயன் முத்து இதழ்கள், புதிய வாசகர்களை சென்றடைவதற்கு தற்போதைய நேரடி முறை, இப்படிபட்ட புத்தக கண்காட்சிகளே. பெரிய நகரங்களை விட்டு, வாசிப்பு வட்டத்தை பெருக்குவதற்கும் அதுவுவே சிறந்த வழிமுறை. அதற்கு உழைத்த ஸ்டாலின் மற்றம் இதர காமிக்ஸ் நண்பர்களுக்கு நன்றி.

  கொண்டாட்டங்கள் களை கட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களைப்போல் உள்ள நண்பர்களின் நல்ல எண்ணம்தான் இதற்கு காரணம் நண்பரே!

   நீக்கு
 4. அடுத்த பதிர்விர்க்காக காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமும் பதிவிட எண்ணியுள்ளேன் நண்பா. ம்.. பார்ப்போம்....

   நீக்கு