வியாழன், 7 ஜூன், 2012

யார் இந்த மாயாவி? (பொக்கிஷம் -3)


கனவான்களே ! சீமாட்டிகளே !!
இந்த பதிவை  படித்து உங்கள் கண்கள் சோர்ந்து போவதற்குள் அருகில் உள்ள வாக்கு பெட்டியில் உங்கள் பொன்னான வாக்கை ஒரு சொடுக்கு சொடுக்கி விட்டு தொடர்ந்தால் எனது விரல்கள்  பெற்ற வீக்கங்களுக்கு  ஒத்தடம் கொடுத்ததாக இருக்கும் 




எனது பால்ய பருவத்தில் மூன்றாம் வகுப்பு படித்த பொழுது முதன் முதலாக பொம்மை பார்த்த புத்தகம் " கொள்ளைகார பிசாசு ".  இது வண்ணத்தில் வந்தது . இதில் வரும் பெரிஸ்கோப் மாடல் பைப் இன்னும் எனது மனதில் பசுமையாக உள்ளது (இந்த புத்தகம் யாரிடமாவது உள்ளதா ?). இதன் கதையை எனது குட்டி நண்பர்களுடன்  எனது தாயாரிடம் கேட்டு தெரிந்து கொண்டோம் . எனது காமிக்ஸ் பயணம் இங்குதான் ஆரம்பம் ஆனது .  இங்கு வந்துள்ள பதிவு கதை நான் படித்த மாயாவின் இரண்டாவது 96 பக்க வண்ண கதை 


 சட்டைக்கும் எனக்கும் என்ன ராசியோ தெரியவில்லை இதுவும் ஒரு சட்டை இல்லா புத்தகம் தான் . இந்த காமிக்ஸ் எனது கைக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை . ஆனால் காசு கொடுத்து வாங்காமல் யாரிடமோ சுட்டது என்பது மட்டும் உண்மை. சிறுவயதில் இதனை பலமுறை படித்து படித்து பாட புத்தகம் போல மனப்பாடமே செய்து விட்டேன் . பாட புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படித்தால் எனது தந்தைக்கு பிடிக்காது ( நான் வாங்கும் மதிப்பெண்களின் லட்சணம் அப்படி ) . பலமுறை திருட்டு தனமாக பாடபுத்தகத்தின் உள்ளே வைத்து படிப்பேன் ஆனால் எனது தாயார் எப்படியோ கண்டுபிடித்து விடுவார் . அவர் மாயாவின் படு தீவிர விசிறி ( இன்றும் கூட .  ஆனால் எழுத்துக்கள் மிக மிக சிறியதாக வருவதால் அவர்களால் படிக்க முடிவதில்லை ) .

மிக பெரிய ஜனரஞ்சக வார இதழ்கள் கூட வண்ணத்தில் வராத சமயத்தில் வெளிவந்த இந்த புத்தகம் மற்றும்  இதன் வண்ணம் என்னை வெகுவாக கவர்ந்தது

முத்து காமிக்ஸ்இன்  100  வது வெளியிடு என்பதால் முழு வண்ணத்தில் வந்த இதழ் . இப்பொழுது உள்ளது போல ஆசிரியருக்கும் வாசகருக்கும் இடையே எந்த இணைப்பும் இல்லாததால் ஆசிரியர் கடிதம் கூட இல்லை . " தொடர்ந்து பேராதரவு காட்டிவரும் விற்பனையாளர்களுக்கும் வாசக அன்பகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி " என்ற ஒரு மூன்று வரிகளுடன் ஆரம்பிக்கிறது முதல் பக்கம் (  திரு .விஜயன் அவர்களாக இருந்திருந்தால் வெளுத்து வாங்கிஇருப்பார்  ) .
 
 //ஆங்கிலதில் வெளிவந்த இதன் பதிப்பயும் நடு நடுவே இணைத்துள்ளேன்.//

இதழின் பெயர் : "யார் இந்த மாயாவி  "
வெளியீடு          :  முத்து காமிக்ஸ்
வெளியீடு எண் : 100
வெளியான வருடம் : 1/sep/1979

இணைப்புகள் :
இந்த இதழுடன் " கலிவரின் யாத்திரைகள் " என்ற இலவச இணைப்பு வந்துள்ளது ( என்னிடம் இல்லை )
மேலும் இந்த கதையின் பின்பகுதியில்
"நிலவு பயணம் " ராக்கெட் பற்றிய விஞ்ஞான  தொடர் வந்துள்ளது.

கதை சுருக்கம் : மாயாவின் ஆரம்ப கால இரண்டாவது அல்லது மூன்றாவது கதையாக இருக்கலாம் . புரபசர் பாரிங்கர் அரவணைப்பில் மாயாவி திருந்தி நல்லவராக வாழவிரும்புகிறார் . வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் வில்லனாக வருகிறார்  டாக்டர் டியூட்ஸ்.
மாயாவி போலவே தானும் மாய உருவம் பெற வேண்டும் என்ற ஆராச்சியில் இறங்கும் டாக்டர் டியூட்ஸ் தனது முயற்சியில்  ஏற்படும் தவறுதலால் விலங்கு மனிதனாக மாறுகிறார் .  இந்த மாற்றத்தை பயன்படுத்தி பல கொள்ளைகளை நடத்துகிறார் . மாயாவி போல தோற்றம் அளிக்க தனது கையில் அலுமினிய வண்ணத்தை பூசி கொண்டு தான் செய்யும் தவறுகளுக்கு மாயாவியை பப்..பரப்ப... பலியாடாக மாட்ட வைக்கிறார் . அந்த கால ஆங்கில படத்தையும் மிஞ்சும் வகையில் கதை படு ஸ்பீடாக நகருகிறது .


பல இடங்களில் நெஞ்சை படபடக்க வைக்கும் கதை நகர்வு மயிர் கணுக்களை குத்திட்டு நிற்க வைக்கிறது .
உதாரணமாக : மாயவியை காவலர்கள் துரத்தும் காட்சி, விலங்கு மனிதனான டாக்டர் டியூட்ஸ் மாயவி மோதிக்கொள்ளும் பல இடங்கள் , பாதாள சாக்கடையில் மாயாவி மாட்டிக்கொண்டு உயிருக்கு தவிக்கும் நேரம் , இரயில் பாதையில் மாட்டும் இடம் இப்படி சொல்லி கொண்டே போகலாம் ./




போலீசுக்கு பயந்து தலையாரி வீட்டில் ஒளிந்த கதையாய் விலங்கு மனிதனுக்கு பயந்து சாதாரண மனித உருவத்தில் உள்ள நேரத்தில் டாக்டர் டியூட்ஸ் வீட்டில் மாயாவி தஞ்சம் புகுந்து மாட்டிக்கொள்ளும் இடம் படு அமர்களம்.
புரபசர் பாரிங்கர் அவரது மருமகள் லூசி ஆகியோரின் பக்க பலத்துடன் எப்படி  மாயாவி வெற்றியடைகிறார் என்பதுதான் மீத கதை

கதையின் + பாயிண்ட்: முழு வண்ணம் என்பதால் கண்களுக்கு நல்ல விருந்து.  படு வேகமாக நகரும் கதை , மாயவிக்கு உதவும் லூஸி,புரபசர் பாரிங்கர்  கதாபாத்திரம் , விஞ்ஞனதால் முடியாதது எதுவும் இல்லை என்ற நிரூபணம் , நிறைய உள்ளன..

மீண்டும் அடுத்த பதிவாக தமிழ் எழுத்துலகின் அறிவியல் நாயகன் சுஜாதா எழுதி காமிக்ஸாக வெளிவந்த "நைலான் கயிறு" கதையுடன் சந்திப்போம் . அதுவரை ஒரு காமிக்ஸ்  டூர் போயிட்டு வரலாம்....


பிற்சேர்க்கை:

இன்று (11/06/2012) நண்பர் Muthu Fan, RT முருகன் உதவிஉடன் அனுப்பிய கலிவரின் யாத்திரைகள் இதழை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். மிக்க நன்றி நண்பர்களே!




 



28 கருத்துகள்:

  1. அருமை நண்பரே,

    மாயாவியை கலரில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
    நான் இந்த கதையா மறுபதிப்பாக வந்த பொது படித்துள்ளேன்.

    பதிவிற்கு நன்றி.

    கிருஷ்ணா வ வெ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே !
      மாயாவி அனைவருடைய மனதில் நீங்க இடம்பிடித்தவர் என்பதில் ஐயமில்லை

      நீக்கு
  2. // கனவான்களே ! சீமாட்டிகளே !! //
    யாருங்க அது
    ஆரம்பமே அமர்க்களமாக துவக்கியுள்ளீர்கள் நடத்துங்கள் நடத்துங்கள்

    பதிலளிநீக்கு
  3. மறக்கவியலா கதை இது
    நினைவுகளை தட்டி எழுப்பியதற்கு நன்றி :))
    .

    பதிலளிநீக்கு
  4. // கனவான்களே ! சீமாட்டிகளே !!
    யாருங்க அது
    ஆரம்பமே அமர்க்களமாக துவக்கியுள்ளீர்கள் நடத்துங்கள் நடத்துங்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு. சுஜாதாவின் கதை பற்றிய பதிவிற்கு ஆவலுடன் காத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்றுதான் நைலான் கயிறு படிக்க ஆரம்பித்தேன். விரைவில் அனுபவத்தை பகிர்கிறேன்

      நீக்கு
  6. இந்த புக் வெளிவந்த போது நான் ஒரு வயது பச்சைக்குழந்தை :) மாயாவி மேல் உச்சா போனது இன்னமும் பிரகாசமாக ஞாபகமிருக்கிறது! நல்ல வேலை மாயாவிக்கு சார்ஜ் இறங்கி இருந்ததால் எனக்கு ;) ஷாக் அடிக்கவில்லை! :D Voting Bar வேலை செய்யவில்லை நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நகைச்சுவை என்றாலும் இதே அனுபவத்தை நமது தலைமுறையும் அனுபவிக்க வேண்டும் என்பதே ஆவல் . காமிக்ஸ் உணர்வை அனைவருக்கும் கொண்டு சேர்ப்போம்

      Voting Bar/தயாராகிவிட்டது . அப்படியே சொடுக்கி விட்டு போங்க

      நீக்கு
    2. நிச்சயம் நண்பரே! ப்ளாக் பெயர் பொருத்தமாக மாற்றியதிற்கு வாழ்த்துக்கள்! :)

      நீக்கு
  7. அருமையான நினைவூட்டல் நினைவு மீட்டல். மாயாவி கதையை கண் முன்னே கொண்டு வந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  8. கலிவரின் ... இணைப்பு பற்றி சொல்வீர்களா, விட்டிடுவீர்களா என்றே நினைத்தேன். (கதை படித்தீர்களா?)

    அடுத்து நைலான் கயிறில் சந்திப்போம், இறை நாட்டப்படி.

    பதிலளிநீக்கு
  9. மிக்க மகிழ்ச்சி நண்பரே !
    கலிவரின் இணைப்பு உங்களிடம் உள்ளதா? என்னிடம் இல்லை .

    //இந்த இணைப்புடன் //

    //இது குழப்புதே! //

    கழுகு கண் உங்களுக்கு . தட்டச்சு பிழை திருத்தி விட்டேன் . நன்றி !

    பதிலளிநீக்கு
  10. ஆஹா நான்தான் மிக தாமதம் போலிருக்கே! கலக்கல் பதிவு அய்யா! மிக நன்றாக பதிவு இட்டுள்ளீர்கள். எங்களையும் பின்னோக்கி ஒரு பயணம் செய்ய வைத்து விட்டீர்கள்! இது போன்ற காமிக்ஸ்கள் வந்த காலம் ஒரு போர்காலம்தான் அய்யா!

    பதிலளிநீக்கு
  11. pon+kaalam = porkaalam தமிழில் இப்படி அடிக்க முடியலை!

    பதிலளிநீக்கு
  12. ஹ... ஹ.... ஹ..... உங்கள் ஒருஎழுத்து காமடி நன்றாக உள்ளது . borkaalam = பொற்காலம் இப்படி முயற்சிக்கவும் . அல்லது இந்த அழகி (http://www.azhagi.com/)
    இலவச மென்பொருளை உபயோகித்து பாருங்கள் நன்றாக உள்ளது .

    உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி !

    பதிலளிநீக்கு
  13. இந்த கதை வந்த போது எனக்கு 3 வயது.இரண்டு வருடங்களுக்கு முன் இக்கதை எனக்கு கிடைத்தது .ஆனால் என் நண்பர் அசால்ட்டாக தொலைத்து விட்டார் .மேலும் இக்கதையை மறு பதிப்பில் படித்தேன்.அற்புதமான வண்ணக்கதையை வெளிப்படுத்திய தங்களுக்கு நன்றி.அற்புதமான பதிவுகளால் கலக்கி கொண்டிருக்கும் தங்களுக்கு எனது நன்றிகள் மற்றும் பாராட்டுகள்.நன்றி மீண்டும் வருக !!!!ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    பதிலளிநீக்கு
  14. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:உங்களைபோன்ற இரும்பு கரத்தை விட வலுவான ரசிகர்கள் மாயாவிக்கு இருக்கும் பொழுது அவர் எப்பொழுதுமே மிகப்பெரிய ஸ்டார்தான்
    வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ! தொடர்ந்து சந்திப்போம் ...

    பதிலளிநீக்கு
  15. நன்றி நண்பரே.....உங்களது அடுத்த சிறப்பான பதிவிற்காக காத்திருக்கிறேன் ..........

    பதிலளிநீக்கு
  16. http://johny-johnsimon.blogspot.in/2012/06/blog-post.html welcome to this site sir!

    பதிலளிநீக்கு
  17. மிக நல்ல பதிவு! பழைய காமிக்ஸ் பற்றிய பதிவுகள் சந்தோசத்தை உண்டு பண்ணுகின்றன.

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்பரே !

    உங்களின் உணர்வு பூர்வமான நெகிழ்வான பதிவை "லைன்" தளத்தில் பார்த்த பொழுது என்னை ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டேன்
    தொடர்ந்து வாருங்கள் ...

    பதிலளிநீக்கு
  19. கேப்டன் பிரின்ஸ் ன் பயங்கர புயல யாராவது படித்துள்ளீர்களா?

    பதிலளிநீக்கு
  20. அட்டகாசமான கதை பாக்கட் சைஸில் திகிலில் வந்தது (16 வது இதழ்) நண்பரே!.... எனது செல்லரித்த புத்தகங்களில் அதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு
  21. பதிவிற்கு நன்றி நண்பரே! இந்த புத்தகம் வெளிவரும் போது எனக்கு வயது 3 . பின்நாளில் இதை பழைய புத்தகக்கடையில் வாங்கினேன். ஆனால் இப்பொழுது தொலைந்துவிட்டது

    பதிலளிநீக்கு
  22. sir! partheengala! unga malarum ninaivugalum edi.Tr.Vijayan avargalathum ore routela porathai??

    பதிலளிநீக்கு