வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

காமிக்ஸ் ஒரு எட்டா கனியா!?

இரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில்  ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்றும் பெயர்  முருகேஷ் என்றும் கூறினான். லயன் காமிக்ஸ் பற்றி சற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்த பொழுது அவனாகவே அது குறித்து நிறைய சொல்ல ஆரம்பித்து விட்டான் எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களாக  லயன் , முத்து காமிக்ஸ் வருவதில்லை என நினைத்து கொண்டானாம்.

நியூலுக்கை காண்பித்த பொழுது இது நல்லாத்தான் இருக்குது ஆனா வேண்டாம் என்றான். பின்னர் சட்டை பையை இடது கையில் பிடித்துக்கொண்டு தன்னிடம்  60 ரூபாய்தான் இருக்கிறது என்றும் 10 ரூபாய் காமிக்ஸ் வருவதில்லையா என வினாவினான். இந்து பதிப்பகத்தில் இதன் உடைத்த பண்டல் உள்ளது என அனுப்பி வைத்தேன் . அன்றய  நேரம் முடியும் தருவாய் என்பதால் இடத்தை அறிந்து கொண்டு கண்களில் ஆவலுடன் ஓடுவதை பார்த்தபொழுது எனது சிறுவயதில் காமிக்ஸிற்காக நான் அலைந்தது, பல நிமிடம் கண்முன்னே திரையோடியது. அவனிடம் தெரிந்து கொண்ட இன்னும் ஒரு விஷயம் ,இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அவனது பள்ளி நண்பனுடன் கூட்டு சேர்ந்து காமிக்ஸ் வாங்கினானாம் .

இனி காமிக்ஸ் 100 ரூபாயில் மட்டும் தான் வரும் என்றபொழுது அவனுடைய கண்களில் காணப்பட்ட ஒரு வினாடி ஏமாற்றத்தை நான் கவனிக்க தவறவில்லை.
காமிக்ஸ் என்பது இளம் தலைமுறைக்கு எட்டா கனியாக மட்டும் இருந்துவிடக்கூடாது.
அன்று பார்த்து நேரம் இல்லாத காரணத்தால் எனது வீடியோ காமராவை எடுத்து செல்ல வில்லை இல்லையெனில் அவனிடம் ஒரு மினி பேட்டி கண்டிருப்பேன்.

இவர்களுக்காகவாவது 50 ரூபாய் காமிக்ஸ் களாசிக் புத்தகத்தை விரைவில் ஆசிரியர் விஜயன் கொண்டுவருவது நலம்.
ஒன்று மட்டும் திண்ணமான உண்மை. தமிழ் காமிக்ஸ் என்பது அந்தகாலத்து வாசகர்கள் தான் இன்றும் படித்துகொண்டுள்ளனர், புதிய இளய சமுதாயம் இதனைப்பற்றி நினைப்பதில்லை என்பது தவறான கருத்து என்பதனை கண்டிப்பாக உணரவேண்டும் .

ஆயிரம் ரூபாய்க்கு முத்து காமிக்ஸ் வந்தாலும் வாங்கு வதற்கு இப்பொழுது சம்பாதிக்கும் நாம்மை போன்ற பழய வாசகர்கள் தயார்தான் ஆனால் இந்த முருகேசனின் தேடல்.....

இன்னும் எத்தனை முருகேன்களுக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்காமலோ அல்லது வருவது தெரியாமலோ, பணம் தட்டுப்பாட்டுடனோ ( நடுத்தர வர்க்கம்) அலைந்து கொண்டிருக்கலாம்......  இவர்களை எல்லாம் நாம் எப்படி இனம் கண்டு கொண்டு அவர்களுக்குள் இந்த அற்புத அனுபவத்தை  கொண்டு சேற்கபோகிறோம்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.......
இரத்தப்படலம்
இன்றுகாலை கிங் விஸ்வா தினகரன் வெள்ளிமலரில் " இரத்தபடலம் குறித்த செய்தி வந்தனை குறிப்பிட்டார்.அந்த  அறிய செய்தியின்  ஸ்கேன் காப்பி கீழே....


புத்தக கண்காட்ச்சியில் வந்துள்ள மற்ற காமிக்ஸ் + காமிக்ஸ் அல்லாத புத்தகங்கள்

வானதி பதிப்பகத்தில் வாண்டு மாமா+ விசாகானின் நூல்கள்




பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நூல்கள்



 அமர் சித்திரக்கதைகள்:


 ஆங்கில காமிக்ஸ் புத்தகத்திற்கான தனி அரங்கம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள நூல்கள்:

















மீண்டும் நாளை சந்திக்கலாம் நண்பர்களே! நன்றி!

 

புதன், 8 ஆகஸ்ட், 2012

ஒளிப்பதிவும் ஒரு காமிக்ஸ் பதிவும்

காமிக்ஸ் நண்பர்களே! வணக்கம்.
பதிவிட பல விஷயங்கள் இருந்தாலும் பணிச்சுமை என்னை அதிகமாக ஆட்கொள்வதால் சில வரிகளில் இன்றய பதிவுகள்.
மகிழ்வான தருணங்களில் எடுக்கப்பட்ட ஈரோடு புத்தக திருவிழா வீடியோ பதிவுகள் இதோ....
 

A PEOPLES HISTORY OF AMERICAN:


A PEOPLES HISTORY OF AMERICAN EMPIRE  இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு   அதுவும் காமிக்ஸ் வடிவில் மிகப்பெரிய நூலாக  சுமார் 250 பக்கங்களில் வந்துள்ளது. நான்வாங்கிய  காமிக்ஸில் வித்தியாசமானது.








நடு நடுவே ... புகைப்படத்தையும் சித்திரங்களாக இனைத்துள்ளனர். சரித்திரமாக மட்டும் கொண்டு போகாமல் ஒரு கதையாக விளக்கியுள்ளனர்.  


விலை: 225/-
பதிப்பகம் : பயணி- சென்னை.

இதனை முழுவதும் படித்தவுடன் பதிவிடுகிறேன்.

விரைவில் நான் வாங்கிய மற்ற காமிக்ஸ் குறித்த பதிவுகள்....

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சிங்கத்தின் சில முகங்கள்



 இளம் வாசகர் .... இவருடய பேட்டி  நாளை......


ஸ்ரீ இந்து பப்ளிகேஷனில் நமது தோரண விளம்பரங்கள்




ஈரோடு விஜயன் 
  அண்ணாச்சி இராதாகிருஷ்ணன், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீதர், புனித சாத்தான், சேலம் குமார்



.

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

விடுமுறை தின புத்தக திருவிழா ...

நண்பர்களே!

நேற்றும் இன்றும் புத்தக கண்காட்சி நன்றாகவே சென்றது. புனித சாத்தான் , திருப்பூர் சிபி,ஈரோடு விஜய்,திருப்பூர் புளூபெரி என நமது வலை நண்பர்களை நேரிலும் கலாய்க்கும் இனிய அனுபவத்துடன் கழிந்தது .
மேலும் நமது காமிக்ஸின் நெடு நாளைய வாசகர்களின் புதிய சந்திப்பும் கிடைத்தது ( கோபி ஸ்ரீதர் , சேலம் குமார், etc.,)
பெயர் தெரியாத வாசகர்கள் அனைவருடய கருத்துக்களை மணிக்கனக்கில் பகிரும் அனுபவமும் கிடைத்தது.

காமிக்ஸ் பற்றி தெரியாத நண்பர்களும் வாசகர்களும் நமது வலை நண்பர்களின் அனுபவங்களை கேட்டு புத்தகங்களை வாங்கிச்சென்ற பாங்கு என்று இனம்புரியாத இன்பத்தில் ஆழ்த்தியதில் ஆச்சர்யம் இல்லை.
இதன் நிகழ்வுகளை வீடியோ , புகைப்படம் என்று பதிந்ததை விரைவில் பதிவிடுகிறேன்....

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா இன்னும் வரவில்லை...எதிர்பார்கிறேன்.! ( அவர் mail id இல்லாததால் தொடர்பு கொள்ள முடியவில்லை)
நடப்பு நாட்களில் வருகின்ற நிகழ்வுகளை இங்கு வெளியிட்டுள்ளேன்.



















நான் வாங்கிய முத்து - லயன் காமிக்ஸ் நீங்களாக மற்ற தமிழ் காமிக்ஸ் பற்றிய விபரங்களும் விரைவில்.....

சனி, 4 ஆகஸ்ட், 2012

புத்தக திருவிழா கொண்டாட்டம் முதல் நாள் 3-8-2012

ஈரோடு புத்தக திருவிழா ஆரம்பித்து விட்டது . 10000 நபர்களுடன் இன்று ஆரம்பித்த "ஈரோடு வாசிக்கின்றது " மாராத்தான் ஓட்டத்துடன் உற்சாக  கொண்டாட்டம் ஆரம்பித்து விட்டது.



புத்தக திருவிழாவின் முதல் நாள் இன்று மாலை  ஆரம்பித்தார்கள், நமது காமிக்ஸ் புத்தகம் உள்ள அரங்கில் பத்திரிக்கையாளர் சுப்ராஜா (தினத்தந்தியில் ஞயிறு அன்று திகில் தொடர் எழுதுவதாக கூறினார்) சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .நமது காமிக்ஸ் பற்றி வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அவர் மட்டுமல்லாது நமது காமிக்ஸ் பார்த்த  அனைவரிடம் இருந்தும் வந்த்த  ஒரே கேள்வி மிக பழய புத்தகம் (85 களுக்கு முந்தயவை ) கிடைக்குமா? லார்கோவை எடுத்து சொன்னாலும் அதனை படிக்காத காரணத்தால் அவர்களால் சமாதானம் அடையமுடியவில்லை.
நாளை நமது அன்பர் திரு ராதாகிருஷ்ணன் வருவதாகவுள்ளார்.



4 மாதங்களுக்கு முன் 1500 அரங்க விண்ணப்பங்கள் வந்து குவிந்த பொழுது அவற்றில் 200 மட்டும் மிக கவனமாக தேர்வு செய்து அரங்கம் அமைக்க அனுமதிக்கப்பட்டதாம்.   நாம் மிக தாமதமாகவே கடைசி நேரத்தில் முயற்சி செய்ததால் அனைத்து அரங்கங்களும் முடிந்து விட்டன. நண்பர் "கிங் விஸ்வா"வும் பல விதங்களில் முயற்சித்தார் . அடுத்த முறை நிச்சயம் தனி அரங்கம் கிடைத்து விடும்


புத்தக திருவிழாவில் லயன் -முத்து கமிக்ஸ்கள் இதழ்கள் அரங்கம் எண் 125 -பல்லவி ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் அன்ட் மாஸ் கம்யூனிகேஸன்ஸ் பி லிட்   மற்றும் அரங்கம் எண் 27,28 - ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் - ஆகிய இடங்களில் கிடைக்கும்
இன்று எனது மொபைல் காமிராவில் எடுத்த படங்கள் இவை நாளை எனது கை வீடியோ காமிராவில் எடுத்து பதிவிடுகிறேன்.











இன்று இவ்வளவுதான் நண்பர்களே!

கண்காட்சி சம்பந்தமான புகைப்படம் , வீடியோக்கள் விரைவில் .......