கதை
பெயர் : "உதவிக்கு வந்த நயவஞ்சகன்"
வெளிஈடு
: முத்து காமிக்ஸில்
சிறுவயதில்
காசுகொடுத்து வாங்கிய எனது இரண்டாவது புத்தகம் . பழைய புத்தக கடையில் பார்த்தபோது ரூ
1 .25 போட்டிருந்ததாக நினைப்பு 1975 இல் இருந்து 1980 குள் வந்த புத்தகமாக இருக்கலாம்
. அட்டையுடன் உள்ளது அட்டை இல்லாதது என இரண்டு புத்தகங்கள் கடையில் இருந்தது
. அட்டையுடன் உள்ளது 40 பைசா என்றதால் அட்டை இல்லாததை 30 பைசா சொல்லி
25 பைசாவுக்கு வாங்கி வீட்டிற்கு வந்து அம்மாவிடம் மட்டும் காதில் போட்டேன்
. பலநாள் பாக்கட் மணியை வீனாகியத்தில் அம்மாவிற்கு கோபம் ( பின்னர் அவர்களும் படித்தது
வேறுவிசயம் ). பலமுறை படித்து அனுபவித்த எனது பொக்கிஷம்.
கதை
சுருக்கம் : விண்வெளியில் இருந்து வரும் காஸ்மிக் புழுக்களை அழிக்க, வேற்றுகிரகத்தில்
இருக்கும் மாண்ட்ரேக்இன் நண்பர் பேரரசர் மக்னன் தனது படை தளபதி நார்கை அனுப்புகிறார்
. காஸ்மிக் புழுக்கள் தாக்குதல் வராமல் தடுத்தபின் நார்க் தனது கிரகத்துக்கு
போகாமல் பூமியை கைப்பற்ற நினைக்கிறான் . அவனிடம் உள்ள அதி அற்புத ஆயுதங்கள் எப்படிஎல்லாம்
வல்லமை வாய்ந்தது என புரியவைது பூமியை அடிமைபடுத்த நினைக்கிறான். மாண்ட்ரேக்
மற்றும் பேரரசர் மக்னன் ஆகியோர் எப்படி இந்த இடியாப்ப சிக்கலை சரி செய்கின்றார்கள்
என்பது மீதி கதை .
கதையின்
+ பாயிண்ட் : ஒரு அறிவியல் சார்ந்த கதை என்பதால் நன்றாக உள்ளது . க்ளைமாக்ஸ்ல்
மாண்ட்ரேக்இன் நம்பத்தகுந்த ஒரே ஒரு தந்திரம்
கதையின்
- பாயிண்ட் : இன்று இதை படிக்கும் பொழுது 15 நிமிடங்களில் படித்து
முடித்து விடக்கூடிய அளவில் வசனகள் குறைவாக உள்ளது போல் மனதுக்கு தோன்றுகிறது (விஜயன்
அவர்களின் மொழிபெயர்பிற்கு இன்று ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவ்வாறு தோன்றி இருக்கலாம்
)
அதிசயம்
: இதில் வரும் மாண்ட்ரேக்இன் கை கடிகாரம் இன்றைய GPS முறையில் இயங்க
கூடியது , இவரது நண்பர் பேரரசர் மக்னன் தொடர்பு கொள்ளும் சைகோ எந்திரம் ( இன்றைய வீடியோ
கன்பாரன்ஸ் ), ஒளி வருட தூர பயணம் ---- இவை எல்லாம் இன்று சாத்தியமாக உள்ளது . அன்றே
இதனை கற்பனை செய்த ஆசிரியரை என்னவென்பது ?......
வாழ்த்துக்கள் நண்பரே! அரிதான இதழை பற்றிய பதிவுகளே மிகவும் அரிதானவைதான்! நீங்கள் 40 காசு கொடுத்து அட்டையுடனேயே வாங்கியிருக்கலாம் என நினைக்க தோன்றுகிறது :)
பதிலளிநீக்குசுட சுட எழுதி முடித்ததும் கருத்துபதிவா? எத்தனை நண்பர்கள் ஆந்தை தூக்கமோ . .... நன்றி !
பதிலளிநீக்குநண்பரே!!!
பதிலளிநீக்குசிறப்பான தங்கள் பதிவிற்கு நன்றிகளும், தாங்கள் தொடர்ந்து பதிவிட வாழ்த்துக்களும்....
ஸ்ரீதர் ராமமூர்த்தி,
சேலம்.
அப்பப்பா மிக அரிதான பதிவு என்னை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் நன்றி நண்பரே தங்களுக்கு என் வாழ்த்துக்கள் எனக்கும் ஸ்கேன் மற்றும் கணிபொறி வசதி முறையாக அமைந்ததும் இது போன்ற அரிய பதிவுகளை இடவே ஆசை தங்கள் முயற்சிக்கு என் மீண்டுமான வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஸ்ரீதர் ராமமூர்த்தி: John simon : நன்றி நண்பர்களே ! உங்களுக்கு மகிழ்வாக இருந்தால் அடுத்து வரும் பதிவுகளாக மிக பழைய இதழ்கள் படையெடுக்கும்
பதிலளிநீக்குஅடச்சே, உங்கள் பதிவில் முதல் நாளில் நான் இட்ட கமென்ட்டையே காணோமே?
பதிலளிநீக்குஅருமையான கதை. அற்புதமான நடை. சிறுவயதில் இந்த கதையை படிக்க முடியாமல் போனாலும்கூட சென்ற ஆண்டு எனக்கு இந்த பிறந்த நாள் பரிசாக வந்த புத்தக பார்சலில் இந்த புத்தகம் அடக்கமானதால் படிக்க முடிந்தது. இந்த கதையின் தலைப்பை அடிக்கடி என்னுடைய வேண்டப்பட்ட விரோதிகளை கிண்டல் செய்ய உபயோகப்படுத்தி இருக்கிறேன்.
சிறப்பான ஆரம்பம். அதுவும் உங்கள் முதல் (இதுதான், "அந்த" பதிவை விட்டு விடுங்கள்) பதிவாக இந்த கதையை தேர்ந்தெடுத்தது சிறப்பு. அட்டைப்படம் உங்களிடம் இல்லையா? உங்கள் மெயில் ஐடியை மின்னஞ்சல் செய்யுங்கள். அனுப்பி வைக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள் அன்பரே. காமிக்ஸ் பற்றி நாம் அனைவரும் இப்படி எழுத ஆரம்பித்ததால் தான் இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட வலைப்போக்கள் தமிழ் காமிக்ஸ் பற்றிய செய்திகளை தாங்கி வருகின்றன
பெரும்பாலானோர் ஆரம்பத்தில் வேகமாக எழுதி, பின்னர் கமென்ட்டுகளோ, அல்லது ஆதரவோ இல்லாமல் நிறுத்தி விடுகின்றனர். சிலருக்கு நேரமின்மையும் ஒரு காரணமாக அமைகின்றது. உங்களுக்கு அப்படி எதுவும் இல்லாமல், தொடர்ந்து நீங்கள் பதிவுகளை எழுத எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்திக்கிறேன்.
அதுவும் உங்கள் வலைப்பூவின் யூஆரெல் வித்தியாசமாக ஒரு தேதியினை கொண்டு இருப்பது மேலும் சிறப்பு.
பதிலளிநீக்குநண்பரிடம் இந்த வலைப்பகுதியை பற்றி சொல்லும்போது இரண்டு முறை சொல்லி, பின்னர் குறுந்தகவல் அனுப்பினேன்.
நன்றி நண்பரே !
பதிலளிநீக்கு//தொடர்ந்து எழுதுங்கள் அன்பரே. காமிக்ஸ் பற்றி நாம் அனைவரும் இப்படி எழுத ஆரம்பித்ததால் தான் இன்று நாற்பதுக்கும் மேற்பட்ட வலைப்போக்கள் தமிழ் காமிக்ஸ் பற்றிய செய்திகளை தாங்கி வருகின்றன //
முத்து - லைன் வலைபதிவில் இதை நினைவில் வைத்துதான் உங்களைப்பற்றி கூறினேன் . கண்டிப்பாக அனைவரும் ஆரம்பிக்கும் பதிவு அனைவர்க்கும் புது உற்சாகம் ஏற்படுத்தும் என்பதில் இரண்டு கருத்துகள் இருக்காது .
//பெரும்பாலானோர் ஆரம்பத்தில் வேகமாக எழுதி, பின்னர் கமென்ட்டுகளோ, அல்லது ஆதரவோ இல்லாமல் நிறுத்தி விடுகின்றனர். சிலருக்கு நேரமின்மையும் ஒரு காரணமாக அமைகின்றது//
100 % உண்மை. உங்களின் பல ஆண்டு பதிவு தொய்வில்லாமல் வருவதன் ரகசியம் என்ன . கொஞ்சம் சொலுங்கள் அனைவரும் அறிந்துகொள்ளட்டும் . இதில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாமல் பல பின்னுட்டங்களை விட்டு விட்டேன் . அடுத்த பதிவு தாமதத்திற்கும் இதுதான் காராணம் .
///அதுவும் உங்கள் வலைப்பூவின் யூஆரெல் வித்தியாசமாக ஒரு தேதியினை கொண்டு இருப்பது மேலும் சிறப்பு. ///
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை URL எப்படி அடித்தேன் என்று எனக்கே தெரியவில்லை .
மின் அஞ்சல் அனுப்புகிறேன் - அட்டைபடம் அனுப்புங்கள்
நண்பர் ஸ்டாலின் அவர்களே
பதிலளிநீக்குநல்லதொரு அருமையான பதிவு.
எனக்கு நேரமின்மை காரணமாக நான் ஆரம்பித்த ப்ளாக் பொங்கல் வாழ்த்துடன் அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது :(
எழுத கூடிய சீக்கிரம் முயற்சி செய்கிறேன் நண்பரே.
நீங்கள், ஜான், கார்த்தி போன்றவர்கள் எழுதுவதை பார்க்கும்பொழுது ஆவலாகத்தான் இருக்கிறது.
நாகராஜன்
நன்றி நண்பரே ! சீக்கிரம் நீங்களும் ஜோதியில் ஐக்கியம் ஆகுங்கள்
பதிலளிநீக்குgood post friend . Please do a post on old comics like this more . good work
பதிலளிநீக்குthanks my friend . my next post under progress ...
பதிலளிநீக்குme too waiting naaga ji! seekiram pathividungal!
பதிலளிநீக்குநண்பர் ஸ்டாலின் அவர்களே
பதிலளிநீக்குநல்லதொரு அருமையான பதிவு.
எனக்கு நேரமின்மை காரணமாக நான் ஆரம்பித்த ப்ளாக் பொங்கல் வாழ்த்துடன் அப்படியே தொங்கி கொண்டிருக்கிறது :(
எழுத கூடிய சீக்கிரம் முயற்சி செய்கிறேன் நண்பரே.