புதன், 18 ஏப்ரல், 2012

பொக்கிஷம் -1


கதை பெயர் : "உதவிக்கு வந்த நயவஞ்சகன்"
வெளிஈடு       : முத்து காமிக்ஸில் 
 
சிறுவயதில் காசுகொடுத்து வாங்கிய எனது இரண்டாவது புத்தகம் . பழைய புத்தக கடையில் பார்த்தபோது ரூ 1 .25 போட்டிருந்ததாக நினைப்பு 1975 இல் இருந்து 1980 குள் வந்த புத்தகமாக இருக்கலாம் . அட்டையுடன் உள்ளது அட்டை  இல்லாதது என இரண்டு புத்தகங்கள் கடையில் இருந்தது . அட்டையுடன்  உள்ளது 40   பைசா என்றதால் அட்டை இல்லாததை 30  பைசா சொல்லி 25  பைசாவுக்கு வாங்கி வீட்டிற்கு வந்து அம்மாவிடம் மட்டும் காதில் போட்டேன் . பலநாள் பாக்கட் மணியை வீனாகியத்தில் அம்மாவிற்கு கோபம் ( பின்னர் அவர்களும் படித்தது வேறுவிசயம் ). பலமுறை படித்து அனுபவித்த எனது பொக்கிஷம்.

































































கதை சுருக்கம் : விண்வெளியில்  இருந்து வரும் காஸ்மிக் புழுக்களை அழிக்க, வேற்றுகிரகத்தில் இருக்கும் மாண்ட்ரேக்இன் நண்பர் பேரரசர் மக்னன் தனது படை தளபதி நார்கை அனுப்புகிறார் .  காஸ்மிக் புழுக்கள் தாக்குதல் வராமல் தடுத்தபின் நார்க் தனது கிரகத்துக்கு போகாமல் பூமியை கைப்பற்ற நினைக்கிறான் . அவனிடம் உள்ள அதி அற்புத ஆயுதங்கள் எப்படிஎல்லாம் வல்லமை வாய்ந்தது என புரியவைது பூமியை அடிமைபடுத்த நினைக்கிறான்.    மாண்ட்ரேக் மற்றும் பேரரசர் மக்னன் ஆகியோர் எப்படி இந்த இடியாப்ப சிக்கலை சரி செய்கின்றார்கள் என்பது மீதி கதை .

கதையின் + பாயிண்ட் : ஒரு அறிவியல் சார்ந்த  கதை என்பதால் நன்றாக உள்ளது . க்ளைமாக்ஸ்ல் மாண்ட்ரேக்இன்  நம்பத்தகுந்த ஒரே ஒரு தந்திரம்
கதையின் - பாயிண்ட் : இன்று  இதை படிக்கும் பொழுது  15   நிமிடங்களில் படித்து முடித்து விடக்கூடிய அளவில் வசனகள் குறைவாக உள்ளது போல் மனதுக்கு தோன்றுகிறது (விஜயன் அவர்களின் மொழிபெயர்பிற்கு இன்று ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அவ்வாறு தோன்றி இருக்கலாம் )
அதிசயம் :  இதில் வரும்  மாண்ட்ரேக்இன் கை கடிகாரம் இன்றைய GPS  முறையில் இயங்க கூடியது , இவரது நண்பர் பேரரசர் மக்னன் தொடர்பு கொள்ளும் சைகோ எந்திரம் ( இன்றைய வீடியோ கன்பாரன்ஸ் ), ஒளி வருட தூர பயணம் ---- இவை எல்லாம் இன்று சாத்தியமாக உள்ளது . அன்றே இதனை கற்பனை செய்த ஆசிரியரை என்னவென்பது ?......