நண்பர்களே
வணக்கம் . ஈரோடு புத்தகத்திருவிழா நிறைவடைந்தாலும் அது குறித்த பதிவு பின்னர் வெளிவரும் .
இன்று நண்பர் மாயாவி சிவா அனுப்பியுள்ள ஆசிரியரின் டாப் டென் இதழ் குறித்த தொகுப்பினை இப்பொழுது பார்க்கலாம்.....மாயாவி சிவா அவர்களின் கைவண்ணத்தில் அட்டப்படங்கள் மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதனை என்னப்போல் நீங்களும் மிகவும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
வணக்கம் . ஈரோடு புத்தகத்திருவிழா நிறைவடைந்தாலும் அது குறித்த பதிவு பின்னர் வெளிவரும் .
இன்று நண்பர் மாயாவி சிவா அனுப்பியுள்ள ஆசிரியரின் டாப் டென் இதழ் குறித்த தொகுப்பினை இப்பொழுது பார்க்கலாம்.....மாயாவி சிவா அவர்களின் கைவண்ணத்தில் அட்டப்படங்கள் மேலும் மெருகேற்றப்பட்டிருப்பதனை என்னப்போல் நீங்களும் மிகவும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்
----------------------------------------------
எடிட்டர்-ன் டாப் டென்
30
ஆண்டுகளில் 230+ இதழ்களில் இருந்து எடிட்டர் பத்தே பத்து இதழ்கள் தேர்வு
செய்கிறார் என்றால் அந்த இதழ்கள் எடிட்டரிடம் எத்தகைய கமெண்ட் பெற்றிருக்கும் என்பதை
உங்களுக்கு
சொல்லவேண்டுமா என்ன..!
1- நானே நானாய் உருவாக்கிய முதல் இதழ்;
என் பெயரை அச்சில் முறையாக பார்க்க
உதவிய படைப்பு !
2- நிறைய விதங்களில் நமது பால்யங்களை ஒரு
அதிரடி அனுபவமாய் மாற்றிய பெருமை இந்த இதழுக்கு; மறக்க முடியாத இதழ்இது.!
3- பொங்கல் மலராய் வெளியாகி அச்சான
பிரதிகள் சகலமும் 3வது நாளே காலியாகி போன பெருமை சேர்த்த இதழ் இது !
4- இலண்டனிலிருந்து வரவழைத்த ஒரு
சுவாரஸ்யமான கதை இந்த இதழுக்கு உண்டு என்பதால் எப்போதும் பளிச்சென்று நினைவில்
நின்ற இதழ் !
5- இன்றளவிற்கும் இந்த இதழின்
விளம்பரங்களும் வெளியான முதல் வாரத்து விற்பனைகளும் ஏற்படுத்திய பரபரப்பை வேறு
எந்த இதழும் தொட்டுக்ககூட பார்த்திராதென்பது நிச்சயம் !
6- இன்றளவில் ever green நாயகராக வலம் வருபவரை கதையோடு
அறிமுகம் செய்த இதழ் amongst my all
time favorites!
7- 532 பக்கங்கள்; ரூ10 விலையில் என்ற
combo காலத்தால் அழியா சாதனை என்பது சர்வநிச்சயம்.!
8- எத்தனையோ கதைகளை நண்பர்கள்
ரசித்திருந்த போதிலும் என் பிள்ளை ரசித்த கதை இது என்ற விதத்தில் இது ஒரு...
memorable issue !
9- இந்த இதழ் வெளியான முதல் வாரத்தில்
எங்கள் அலுவலக போன்கள் – கிறிஸ்துமஸ் நாளில் வேடிக்கனில்
அடிக்கும் மணிகளை விட ஜரூராய் ஒலித்தன என்று சொன்னால் மிகையாகாது.அதகளம் செய்ததொரு
இதழ் !
10- ஏதேனும் ஒரு கால இயந்திரம் என் கைக்கு
சிக்கி அதனில் ஏறி பின் செல்ல வாய்பிருக்கும் பட்சத்தில் என் ஆசை ஒன் È¡கதனிருக்கும் – இந்த இதழ் முழு தொகுப்பின் பணிகள்
நடத்திய அந்த இறுதி 2 மாதங்கள் மீண்டும் தரிசிக்க வேண்டுமென்பதே என் ஒற்றை ஆசை !
எடிட்டரின் topten பற்றி LMS ல் அவர் எழுதிய ‘நச்’ தான் இவைகள் ! இதை மீண்டும் இங்கு
படிக்கும்போது அந்த இதழ்களை கண்களில் தடவும் ஆசை பொங்குகிறது
அல்லவா
!
உங்கள்
ஆசைக்கு விருந்தளிப்பதே இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே ! இதோ அட்டகாசமான டாப்
டென் அட்டைபட வரிசைகள். பார்த்து மகிழுங்கள் !!!
நட்புடன்,
மாயாவி.சிவா
முதல் இரண்டும் இடம் மாறிவிட்ட மாதிரி இருக்கு. அவர் வரிசையில் எத்தனுக்கு எத்தன் இரண்டாம் இடம்தான் .
பதிலளிநீக்குநீங்கள் சரியாக சொன்னீர்கள் ! விரைவில் வரிசை எண் மாற்றப்படும் நண்பரே !
நீக்குநண்பரே , அருமை .....முதல் இதழ் கத்தி முனையில் மாடஸ்டி
நீக்குபெயரில்லா,கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா: தவரை சுட்டி காண்பித்தமைக்கு நன்றி மாற்றப்பட்டுவிட்டது நண்பர்களே
நீக்குஎடிட்டரின் டாப்-10ஐ LMSல் படித்தபோது 'அட்டைப்படங்களையும் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே' என்று நினைத்தேன். கண்ணைப் பறிக்கும் வண்ணத்தில் கொடுத்து அசத்திவிட்டீர்கள் மாயாவி சிவா அவர்களே!
பதிலளிநீக்குநன்றிகளும், வாழ்த்துகளும்! :)
நன்றிகள் Erode M.STALIN சாருக்கு,வாழ்த்துக்கள் எடிட்டருக்கு,
நீக்குஉங்களின் வழிகாட்டலும்,நட்பும் எனக்கு ஓகே !
பதிலளிநீக்குமாயாவி சிவா,
உங்கள் காமிக்ஸ் ஆர்வத்திற்க்கு என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
வாழ்க.! வளர்க.!
உங்களை விடவா...நண்பரே !
நீக்குஅப்புடியே அந்த கதைகளையும் போட்டா படிச்சிருப்பேன் ....!
பதிலளிநீக்குநன்று! அப்படியே இந்த புத்தகம்களை (ரத்த படலம் தவிர) அனைத்தையும் ஒரு பார்சல் அனுபினால் நலம் :-)
பதிலளிநீக்குசிவா செய்வீர்களா செய்வீர்களா :-)
Parani from Bangalore: தராவிட்டல் நம்ம ஸ்டீல் க்ளாவிடம் சொல்லி சுட்டுட்டா போச்சு
நீக்குஅவரு நம்மகிட்ட இருந்து சுடாம இருந்தா போதும் ஸ்டாலின் :-)
நீக்குஅது என்ன (ரத்த படலம் தவிர) ஒரு வேளை கலரில் போட எடிட்டர் பணிகள் துவக்கிவிட்டாரா..... நண்பரே...!.
நீக்குsuper, timing. Good work on the presentation.
பதிலளிநீக்குthanks to siva and erode stalin
i have only 8,9 and 10 :'(
முயன்றால் சேகரித்துவிடலாம் !
நீக்குவண்ணமிகு அட்டைப் படங்களைப் பார்க்கும் பொழுது மறுபடியும் வாங்கத் தோன்றுகிறது .ஆசையாகத்தான் இருக்கிறது .
பதிலளிநீக்கு