இரு நாட்களுக்கு முன்பு
புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை
புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்றும் பெயர்
முருகேஷ் என்றும் கூறினான். லயன் காமிக்ஸ் பற்றி சற்று விளக்கம் கொடுக்க
ஆரம்பித்த பொழுது அவனாகவே அது குறித்து நிறைய சொல்ல ஆரம்பித்து விட்டான்
எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களாக லயன் , முத்து
காமிக்ஸ் வருவதில்லை என நினைத்து கொண்டானாம்.
நியூலுக்கை காண்பித்த பொழுது இது நல்லாத்தான் இருக்குது ஆனா வேண்டாம் என்றான். பின்னர் சட்டை பையை இடது கையில் பிடித்துக்கொண்டு தன்னிடம் 60 ரூபாய்தான் இருக்கிறது என்றும் 10 ரூபாய் காமிக்ஸ் வருவதில்லையா என வினாவினான். இந்து பதிப்பகத்தில் இதன் உடைத்த பண்டல் உள்ளது என அனுப்பி வைத்தேன் . அன்றய நேரம் முடியும் தருவாய் என்பதால் இடத்தை அறிந்து கொண்டு கண்களில் ஆவலுடன் ஓடுவதை பார்த்தபொழுது எனது சிறுவயதில் காமிக்ஸிற்காக நான் அலைந்தது, பல நிமிடம் கண்முன்னே திரையோடியது. அவனிடம் தெரிந்து கொண்ட இன்னும் ஒரு விஷயம் ,இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அவனது பள்ளி நண்பனுடன் கூட்டு சேர்ந்து காமிக்ஸ் வாங்கினானாம் .
இனி காமிக்ஸ் 100 ரூபாயில் மட்டும் தான் வரும் என்றபொழுது அவனுடைய கண்களில் காணப்பட்ட ஒரு வினாடி ஏமாற்றத்தை நான் கவனிக்க தவறவில்லை.
காமிக்ஸ் என்பது இளம் தலைமுறைக்கு எட்டா கனியாக மட்டும் இருந்துவிடக்கூடாது.
அன்று பார்த்து நேரம் இல்லாத காரணத்தால் எனது வீடியோ காமராவை எடுத்து செல்ல வில்லை இல்லையெனில் அவனிடம் ஒரு மினி பேட்டி கண்டிருப்பேன்.
இவர்களுக்காகவாவது 50 ரூபாய் காமிக்ஸ் களாசிக் புத்தகத்தை விரைவில் ஆசிரியர் விஜயன் கொண்டுவருவது நலம்.
ஒன்று மட்டும் திண்ணமான உண்மை. தமிழ் காமிக்ஸ் என்பது அந்தகாலத்து வாசகர்கள் தான் இன்றும் படித்துகொண்டுள்ளனர், புதிய இளய சமுதாயம் இதனைப்பற்றி நினைப்பதில்லை என்பது தவறான கருத்து என்பதனை கண்டிப்பாக உணரவேண்டும் .
ஆயிரம் ரூபாய்க்கு முத்து காமிக்ஸ் வந்தாலும் வாங்கு வதற்கு இப்பொழுது சம்பாதிக்கும் நாம்மை போன்ற பழய வாசகர்கள் தயார்தான் ஆனால் இந்த முருகேசனின் தேடல்.....
இன்னும் எத்தனை முருகேசன்களுக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்காமலோ அல்லது வருவது தெரியாமலோ, பணம் தட்டுப்பாட்டுடனோ ( நடுத்தர வர்க்கம்) அலைந்து கொண்டிருக்கலாம்...... இவர்களை எல்லாம் நாம் எப்படி இனம் கண்டு கொண்டு அவர்களுக்குள் இந்த அற்புத அனுபவத்தை கொண்டு சேற்கபோகிறோம்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.......
இரத்தப்படலம்
இன்றுகாலை கிங் விஸ்வா தினகரன் வெள்ளிமலரில் " இரத்தபடலம் குறித்த செய்தி வந்தனை குறிப்பிட்டார்.அந்த அறிய செய்தியின் ஸ்கேன் காப்பி கீழே....
புத்தக கண்காட்ச்சியில் வந்துள்ள மற்ற காமிக்ஸ் + காமிக்ஸ் அல்லாத புத்தகங்கள்
வானதி பதிப்பகத்தில் வாண்டு மாமா+ விசாகானின் நூல்கள்
பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நூல்கள்
அமர் சித்திரக்கதைகள்:
ஆங்கில காமிக்ஸ் புத்தகத்திற்கான தனி அரங்கம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள நூல்கள்:
மீண்டும் நாளை சந்திக்கலாம் நண்பர்களே! நன்றி!
நியூலுக்கை காண்பித்த பொழுது இது நல்லாத்தான் இருக்குது ஆனா வேண்டாம் என்றான். பின்னர் சட்டை பையை இடது கையில் பிடித்துக்கொண்டு தன்னிடம் 60 ரூபாய்தான் இருக்கிறது என்றும் 10 ரூபாய் காமிக்ஸ் வருவதில்லையா என வினாவினான். இந்து பதிப்பகத்தில் இதன் உடைத்த பண்டல் உள்ளது என அனுப்பி வைத்தேன் . அன்றய நேரம் முடியும் தருவாய் என்பதால் இடத்தை அறிந்து கொண்டு கண்களில் ஆவலுடன் ஓடுவதை பார்த்தபொழுது எனது சிறுவயதில் காமிக்ஸிற்காக நான் அலைந்தது, பல நிமிடம் கண்முன்னே திரையோடியது. அவனிடம் தெரிந்து கொண்ட இன்னும் ஒரு விஷயம் ,இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அவனது பள்ளி நண்பனுடன் கூட்டு சேர்ந்து காமிக்ஸ் வாங்கினானாம் .
இனி காமிக்ஸ் 100 ரூபாயில் மட்டும் தான் வரும் என்றபொழுது அவனுடைய கண்களில் காணப்பட்ட ஒரு வினாடி ஏமாற்றத்தை நான் கவனிக்க தவறவில்லை.
காமிக்ஸ் என்பது இளம் தலைமுறைக்கு எட்டா கனியாக மட்டும் இருந்துவிடக்கூடாது.
அன்று பார்த்து நேரம் இல்லாத காரணத்தால் எனது வீடியோ காமராவை எடுத்து செல்ல வில்லை இல்லையெனில் அவனிடம் ஒரு மினி பேட்டி கண்டிருப்பேன்.
இவர்களுக்காகவாவது 50 ரூபாய் காமிக்ஸ் களாசிக் புத்தகத்தை விரைவில் ஆசிரியர் விஜயன் கொண்டுவருவது நலம்.
ஒன்று மட்டும் திண்ணமான உண்மை. தமிழ் காமிக்ஸ் என்பது அந்தகாலத்து வாசகர்கள் தான் இன்றும் படித்துகொண்டுள்ளனர், புதிய இளய சமுதாயம் இதனைப்பற்றி நினைப்பதில்லை என்பது தவறான கருத்து என்பதனை கண்டிப்பாக உணரவேண்டும் .
ஆயிரம் ரூபாய்க்கு முத்து காமிக்ஸ் வந்தாலும் வாங்கு வதற்கு இப்பொழுது சம்பாதிக்கும் நாம்மை போன்ற பழய வாசகர்கள் தயார்தான் ஆனால் இந்த முருகேசனின் தேடல்.....
இன்னும் எத்தனை முருகேசன்களுக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்காமலோ அல்லது வருவது தெரியாமலோ, பணம் தட்டுப்பாட்டுடனோ ( நடுத்தர வர்க்கம்) அலைந்து கொண்டிருக்கலாம்...... இவர்களை எல்லாம் நாம் எப்படி இனம் கண்டு கொண்டு அவர்களுக்குள் இந்த அற்புத அனுபவத்தை கொண்டு சேற்கபோகிறோம்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.......
இரத்தப்படலம்
இன்றுகாலை கிங் விஸ்வா தினகரன் வெள்ளிமலரில் " இரத்தபடலம் குறித்த செய்தி வந்தனை குறிப்பிட்டார்.அந்த அறிய செய்தியின் ஸ்கேன் காப்பி கீழே....
புத்தக கண்காட்ச்சியில் வந்துள்ள மற்ற காமிக்ஸ் + காமிக்ஸ் அல்லாத புத்தகங்கள்
வானதி பதிப்பகத்தில் வாண்டு மாமா+ விசாகானின் நூல்கள்
பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நூல்கள்
அமர் சித்திரக்கதைகள்:
ஆங்கில காமிக்ஸ் புத்தகத்திற்கான தனி அரங்கம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள நூல்கள்:
மீண்டும் நாளை சந்திக்கலாம் நண்பர்களே! நன்றி!
இதைவிட அழகான முறையில் அந்தச் சிறுவனின் ஏக்கத்தை/இயலாமையை வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாது. அந்தச் சிறுவன் 10 ரூபாய் காமிக்ஸ் தேடி ஓடியதைப் படிக்கும்போது நம் மனதும் பதைபதைப்புடன் அவன் பின்னாலேயே ஓடுகிறது. காமிக்ஸ் என்பது எந்த தரப்பு மக்களுக்கும் ஒரு எட்டாக்கனியாக இருந்துவிடக் கூடாது என்பதை ஒரு நெகிழ்சியான சம்பவம் மூலம் மிகத்தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். இதில் நம் எடிட்டரின் நிலை என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.
பதிலளிநீக்குhats-off to you, stalin sir!
நன்றி நண்பா! மாலை விரைவில் வந்து ஆஜராகிவிடுங்கள். உங்கள் சார்பில் இன்று இரவு விருந்து என ஈரோடு காமிக்ஸ் ரசிகர்கள் கூற கேள்விப்பட்டேன்
பதிலளிநீக்குநானும் உங்களது ஆதங்கத்தை ஆமோதிக்கிறேன் நண்பரே.
பதிலளிநீக்குஎனது கேள்வியெல்லாம் இரண்டு கதைகள் 100 என விற்கும் போது ஏன் ஒருகதை நாம் 50 என விற்க கூடாது.
நாம் இதுவை எப்பொழுதும் ஒரு கதை தானே படித்துள்ளோம்.
இதற்கும் விஜயன் சார் தான் பதில் சொல்லவேண்டும்.
கிருஷ்ணா வ வெ: நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் அதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக் ஏற்கனவே ஆசிரியர் கூறியுள்ளார்.வரும் ஜனவரியில் CC ஐ கொண்டுவரும் பொழுது இந்த பிரச்சனைகள் தீரும்
பதிலளிநீக்குசிறுவனின் உணர்வுகளை வெகு அழகாய் படம் பிடித்து காட்டிவிட்டீர்கள் எழுத்துக்களால்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்று கிடைக்காமல் நாம் இழந்தவைகள் எத்தனையோ....
நீக்குஅருமையான கட்டுரை!
பதிலளிநீக்கு//இவர்களுக்காகவாவது 50 ரூபாய் காமிக்ஸ் களாசிக் புத்தகத்தை விரைவில் ஆசிரியர் விஜயன் கொண்டுவருவது நலம். //
&
//ஜனவரியில் CC ஐ கொண்டுவரும் பொழுது இந்த பிரச்சனைகள் தீரும்//
ஐம்பது ரூபாயில் காமிக்ஸ் க்ளாசிக்ஸ் - இதில் பிரச்சினை என்னவென்றால் நூறு ரூபாய் கொடுத்து புதிய காமிக்ஸ் கதைகளை படிக்க முடியாத இளம் வாசகர்கள் அரதப் பழசு கதைகளை மட்டுமே படித்து விட்டு வெறுத்துப் போகும் வாய்ப்பு இருக்கிறது!
//அரதப் பழசு கதைகளை மட்டுமே படித்து விட்டு வெறுத்துப் போகும் வாய்ப்பு இருக்கிறது//
நீக்குமுழுவதும் மறுப்பதற்கில்லை .........
100 சதவீதம் மறுக்க முடியாத உண்மை.
நீக்குPart - 1.
பதிலளிநீக்குஇந்தியாவில் ஹீரோக்களுக்கும், கதைகளுக்கும், காமிக்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லை என்பதை அமர் சித்திரக் கதைகள் நிரூபிக்கின்றன. எத்தனை கதைகள்! எத்தனை புத்தகங்கள்! காமிக்ஸ் காமிக்ஸ் என்று காமிக்ஸ் புத்தகம் வாங்குவதற்கு அலைந்தாலும் அமர் சித்திரக் கதை புத்தகங்களை ஒட்டு மொத்தமாக பார்த்தபின் வாங்க ஆசை இருந்தாலும் பல முறை வாங்காமல், வாங்க முடியாமல் திரும்பியிருக்கிறேன். இன்றளவிலும் வாங்க முடியவில்லை. வசதி இருந்தாலும், ஏதாவது ஒருவகையில் தடங்கல் அல்லது வேறு கடமைகளினால் ஏற்பட்ட தடை.
அது போன்றதொரு சமயங்களில் நான் உணர்ந்த இயலாமையே சிறுவன் முருகேஷுக்கும் இருந்திருக்கும்.
அந்த வகையில் நானும், பாக்கெட்டில் ரூ.60/-யுடன் வந்த சிறுவன் முருகேஷும் ஒரே நிலையில் இருப்பதாகவே நினைக்கின்றேன். வயதும் சூழ்நிலையும் மாறுபட்டாலும் நிலை ஒன்றுதான்.
இதற்கு என்ன செய்யலாம்? அது ஆலோசிக்க வேண்டிய விஷயம்.
இந்த நிலையை நிச்சயம் CC முழுமையாக தீர்த்து வைக்காது என்பது என் எண்ணம். ஏனெனில், பாக்கெட்டில் 60 ரூபாயோடு இந்து பதிப்பகத்தை தேடி ஓடிய சிறுவன், அங்கு 10 ரூபாய் விலையில் பல காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்திருந்தால், வழித்தட செலவிற்கு போக மிச்சம் இருக்கும் பணம் அத்தனைக்கும் காமிக்ஸே வாங்கி இருப்பான், அல்லது அந்த சிறுவன் நானாக இருக்கும் பட்சத்தில் அனைத்து பணத்திற்கும் காமிக்ஸ் வாங்கிவிட்டு, மனதில் சந்தோஷத்தோடு நடந்தோ அல்லது லிப்ட் கேட்டோ வீடு போய் சேர்ந்திருப்பேன்.
சரி அடுத்த விஷயத்திற்கு செல்வோம். இன்றளவில் இருக்கும் நிலையில் பிரகாஷ் பதிப்பகத்தார், புதிய அதிரடியான சோதனை முயற்சிகளை பரிட்சித்துப் பார்க்கும் நிலையில் இல்லை என்பதே எனது ஊகம். என் எண்ணம் தவறாகவும் இருக்கலாம். ஏறக்குறைய 900-ம் பக்கங்களைக் கொண்ட XIII-ன் ரத்தப் படலமும், முத்துவின் 40-வது ஆண்டு மலரான நெவர் பிபோர் இஷ்யூவும் அதிரடியான சோதனை முயற்சிகளே. ரத்தப் படலம் மெகா இஷ்யூவின் புத்தக சைஸும் புதியது, பக்கத்தின் ஸைசும் புதியது. அதில் நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும், அந்த புத்தகம் கான்செப்ட் என்கிற கனவு நிலையில் இருந்து, நினைவாக நிஜமாக நமது கைகளில் கனக்க, மன்னிக்கவும், (நமது குழந்தை எவ்வளவு கனமாக இருந்தாலும் நாம் உபயோகிக்கும் சொல் தவழ என்பதே) கைகளில் தவழ எடுத்துக் கொண்ட காலம் எவ்வளவு, 2 வருடமா அல்லது அதற்கும் மேலா என்று சரியாக தெரிந்தவர்கள் சொல்லலாம் - கிங் விஸ்வா ப்ளீஸ் நோட். இப்போதும் நெவர் பிபோர் ஸ்பெஷலுக்கு எடிட்டர் 6 மாதம் டைம் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் முன் பதிவில்லாமல் இந்த புதிய கனவும் சாத்தியமே இல்லை. இதை இங்கு சொல்வதற்கு காரணம் எடிட்டரின் புதிய முயற்சிகள் இல்லாமல் இல்லை அது வருடத்திற்கு ஒன்றோ அல்லது எப்போதாவது செய்யும் ஒரு முயற்சியே தவிர தொடர்ச்சியான, வரிசையான புத்தக வெளியிடும் முயற்சியாக அல்ல.
Part - 2.
பதிலளிநீக்குஅதே போல எடிட்டரின் "என் வழி தனி வழி” பதிவின் வழியே எடிட்டரின் அறிவிப்பும், கருத்தும் சரியில்லை என்பது எனது எண்ணம்.
என் வழி தனி வழி பதிவை படித்த பிறகு எனக்கு தோன்றியது, எடிட்டரின் வலைப்பூவில் பதிவிடுவது ஒருவரா அல்லது பல நபர்களா என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது அந்த பதிவின் கருத்துக்கள். ஏனெனில் என் வழி தனி வழி பதிவின் கருத்துக்கள், எடிட்டரின் முந்தய பதிவின் கருத்துக்களுக்கும், அறிவிப்புகளுக்கும் முன்னுக்குப் பின் முரனாக இருக்கிறது. நண்பர்களுக்கு ஒரு விஷயத்தை இங்கு தெளிவு படுத்திவிடுகிறேன். எடிட்டரின் கருத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் பழைய கருத்தில் இருந்து மாறுபட முழு உரிமை இருக்கிறது. அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் கருத்து மாற்றத்திற்கு சொல்லப் படும் காரணங்கள் தான் வலுவாக இல்லை என்பது எனது எண்ணம். சில உதாரணங்களை இங்கே பார்க்கலாம்.
1. நயாகராவில் மாயாவி, மஞ்சள் பூ மர்மம் என்று போன்ற முத்து காமிக்ஸில் வெளிவந்த கதைகளை மறுபதிப்புக்கு தேர்வு செய்ய வேண்டாம் என்றார் (பார்க்க தலைவாங்கிக் குரங்கின் மறுபதிப்பு புத்தகத்தில் எடிட்டரின் "இது சீஸன் 2!”.
இப்போது புதிய CC -யின் முதல் இதழில் வெளிவரப் போகும் மூன்று கதைகளுமே முத்து காமிக்ஸின் பழைய கதைகளே.
2. எடிட்டரின் பதிவாய் ஒரு பதில் பதிவில் // இந்த 'குறைந்த விலைக்கு கருப்பு வெள்ளையில் சாதா edition, கூடுதல் விலைக்கு வண்ணத்தில் தரமான பதிப்பு' என்பது பற்றி எல்லாம் சிந்திக்கவே நான் தயாரில்லை. 'இந்த மைசூர்பாகு விலை குறைந்தது - இதில் சக்கரையும் கிடையாது, நெய்யும் கிடையாது - கிலோ நூறு ரூபாய் தான் ' ; 'இது கிலோ நானூறு - சூப்பர் taste' என்று போர்டு போடுவதற்குச் சமானம் அது ! நாமே நம்மிடையே ஏற்ற தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் கொண்டிடுவதற்குச் சமானமான அது போன்ற முயற்சிகளை எந்த ஒரு சூழ்நிலையிலும் நான்encourage செய்திடப் போவதில்லை !// என்று சொன்னார். இன்று காமிக்ஸ் க்ளாசிக் புத்தகம் சர்க்கரையும் இல்லாமல், நெய்யும் இல்லாமல் இருக்கும் என்று என் வழி தனி வழியில் சொல்கிறார். என்ன சொல்வது, ஏன் இந்த திடீர் நிலை மாற்றம்? ஒரே ஒரு வாசகரின் கடிதமா இந்த மாற்றத்திற்கு காரணம்? அப்போது மற்ற வாசகர்கள் போட்ட ஓட்டுக்களின் நிலை? அதை கள்ள ஓட்டுக்கள் என்று புறந்தள்ளி விடக் கூடாது.
நண்பர் ஸ்டாலின், எடிட்டரை சந்திக்கும் வாய்ப்பிருந்தால் இந்த விஷயத்தை முடிந்தால் விவாதிக்க வேண்டும். அதற்கே இங்கு பதிவிடுகிறேன்.
அன்புடன்,
பாலாஜி சுந்தர்.
நியாயமான கருத்துக்கள்.இன்னும் பலரது மனதில் இந்த கேள்விகள் ஓடினாலும்
நீக்குஅதனை ஆசிரியர் மற்றும் நண்பர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் எனதேரியாத ஒரு சிறு தயக்கமும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஸ்டீல் க்ளா: முத்து, லயன், காமிக்ஸ் க்ளாசிக்ஸ் என்று மூன்று லேபிள்களில் வருவதும் ஒரே விஷயம் தான்.
நீக்குஎன் கருத்து இப்போதைக்கு மறுபதிப்பைப் பற்றி சிந்திக்க இது நேரம் இல்லை. இப்போது அதை கையில் எடுக்கவும் கூடாது.
முதலில் எடிட்டர் இப்போதைய புதிய பார்மேட்டில் பயணத்தை ஆரம்பித்திருக்கும் காமிக்ஸ் விற்பனையில் நன்கு காலூன்ற வேண்டும். ஜனவரி 2013ல் தானே CC என்று நினைக்கக் கூடாது.
முத்து, லயன், காமிக்ஸ் க்ளாசிக், மினி லயன், ஜூனியர் என்று பல லேபிள்கள், ப்ராண்டுகள் இருந்தாலும், இவை அனைத்துமே 12 மாதத்திற்கும் ஒவ்வொரு புத்தகம் என்று வருவதில்லை. எதாவது ஒரு ப்ராண்ட் புத்தகம் சீராக 12 மாதமும் வரட்டும். அனைத்து புத்தகமும் ஒரே மாதத்தில் ஒரு சேர வெளிவர முடியுமா? இன்றைய நிலையில் சந்தேகமே.
ரூபாய் 10-க்கு புத்தகம் வருவதினால் நிறைய பேரை சென்றடையும் என்றால், முன்பு அனைத்து புத்தகங்களும் குறைந்த விலையில் தானே வந்து கொண்டிருந்தது. அந்த விலை குறைந்த புத்தகங்கள் வெளி வந்தபோது விற்பனை தேக்க நிலையும், காமிக்ஸ் புத்தகம் வருவதே தடைப்பட்ட நிலையையும் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. விலை குறைந்த புத்தகம் வாசகர் வட்டத்தை அதிகரிக்க உதவப் போவதில்லை.
இன்றய கால கட்டத்தில் டிங்கிள் புத்தகம் 40 ரூபாய் என்று நினைகிறேன். அமர் சித்திர கதை புத்தகம் சிங்கிள் இஷ்யூ 50-தோ அல்லது 60-வதோ தெரியவில்லை.
டிங்கிள் மற்றும் அமர் சித்திரக் கதா புத்தகங்களின் சிறப்பு, சிறிதளவான முயற்சியிலேயே நீங்கள் அந்த புத்தகத்தின் முழு கலக்ஷனையும் அடைந்திடலாம். நமது காமிக்ஸில் அந்த வசதி இல்லை.
பழைய காமிக்ஸ்களை மறுபதிப்பிடலாம். தவறில்லை. ஆனால் அது புதிய சைஸ், தரமான பேப்பர், வண்ணம் மற்றும் கலக்டார்ஸ் எடிஷனாக இருக்க வேண்டும். துவக்கத்தில் இருந்த்து முதல் முதலாக வெளிவந்த இரும்புக் கை மாயாவியில் இருந்து ஒரு கதை விட்டு விடாமல்அனைத்து கதைகளையும் மறுபதிப்பிட வேண்டும். அல்லது முதலில் வந்த 12 இரும்புக் கை மாயாவியின் கதைகள், 12 லாரன்ஸ் டேவிட் கதைகள், 12 மாடஸ்டி கதைகள் என்று பதிப்பிக்கலாம். இப்படி செய்தால் மறுபதிப்பிற்கும் அர்த்தம் இருக்கும். இல்லையெனில் எதற்கு மறுபதிப்பு? அதைப் பற்றிய விவாதமே தேவையில்லை.
நண்பர் ஸ்டாலின் எடிட்டரின் பதிவில் அவரின் வருத்தத்தை நகைச்சுவையாக வெளிப்படுத்தியிருந்தார். அதாவது, CC-யை இந்த ரீதியில் வெளியிட்டால், //அனைத்து கதைகளையும் ( சமீபத்திய cc தவிர) மறுபதிப்பு செய்வதானால் பல்செட் கட்டவேண்டிய காலமும் கடந்து விடுமே !. மாதம் தோறும் இது போன்ற தொகுப்பு வந்தால் இன்னும் இனிக்கும்.// என்று பின்னூட்டமிட்டிருந்தார். இது எவ்வளவு உண்மையான கூற்று!!!
ஒன்று மறுபதிப்பை சில காலம் தள்ளிப் போடலாம். அதனால் ரசிகர்களுக்கு பாதிப்பு ஏதும் வரப் போவதில்லை. இப்போதைய முடிவின் படி மறுபதிப்பு என்பதுதான் வாசகர்களுக்கு பாதிப்பை தரும் விஷயம். கலக்டார்ஸ் எடிஷனாக போடுவதன் மூலமே வாசகர்களுக்கு நன்மை.
நண்பர்களுக்கு இன்னும் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன். 2013ம் வருடம் முத்து காமிக்ஸுக்கு 40வது வருடம் என்றால், முதல் முத்து காமிக்ஸான இரும்புக்கை மாயாவி வெளி வந்தது 1973-ல் என்று எடுத்துக் கொள்ளலாம். அந்த புத்தகத்தின் விலை 0.90 பைசா. அதே வருடத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.243/-. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.24.30 பைசா. ஒரு கிராம் வெள்ளியின் விலை 0.55 பைசா. இந்த விலை விவரம் விலை ஏற்றத்தை ஞாயப் படுத்துவதற்காக இல்லை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநண்பர்களே ஸ்டாலின் அற்புதமாக நமக்கு தேவையான புத்தகங்களை காட்டியுள்ளார் அதற்க்கு எனது நன்றிகள்.
பதிலளிநீக்குநான் இந்த பின்னூட்டத்தை இடுவதற்கு முன் பலமுறை யோசனை செய்தே இடுகிறேன்,இதனால் நீங்கள்,என்னை இரக்கமற்றவன் என நினைத்து விடுவீர்களோ என பயந்தே இடுகிறேன்,உண்மை அவ்வாறு அல்ல .நாமும் அந்த சிறுவனின் நிலையில் இருந்து வந்தவர்கள்தான் .சில விசயங்களை நாம் விவாதிக்க முடியாது ,அதை போன்றே இதுவும் ,உணர்சிகரமான விசயமே,இயலாதவர்களுக்கு என்பது ,தீபாவளி ,படிப்பு ..........என பல விஷயங்கள் மனதை அரிக்கும் நிச்சயமாக.நாம் இரக்க பட்டு விட்டு ,முடிந்தால் உதவியோ அல்லது சிறிது நேரம் வருந்தி விட்டு நமது வேலைகளை கவனிக்க சென்று விடுவோம்.
நமது ஆசிரியரும் பல முயற்சிகளுக்கு பின்னரே தரம் என்ற ஒன்றை கொண்டு தனது விற்பனையை துவங்கியுள்ளார்.இந்த தரத்தில் நூறு ரூபாய்க்கு ஒரு கதை என்றாலும் நாம் தயங்காமல் வாங்கத்தான் செய்வோம்.இரண்டு கதைகள் இவளவு தரத்தில் கிடைக்காது என்பது நண்பர்கள் அனைவரும் அறிவீர்கள் .அவரும் இது ஒரு வியாபாரமாகத்தான் செய்ய வந்துள்ளார் ,ஆனால் கொள்ளையடிக்கவில்லை .ஆகவே அவரையும் குற்றம் சுமத்த இயலாது.
இப்போது 1000 அல்லது 2000 பதிவுகள் வந்தாலே பெரிய விசயம்தான்.இவற்றை நாம் முன் பதிவில் மட்டுமே பெறுகிறோம்,அதனால்தான் கடைகளுக்கு லாபம் தராததால் இந்த விலையில் கிடைக்கிறது .தற்போது நமது வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே ஆசிரியருக்கும் கணிசமான லாபம் கிடைக்கும் ,50 விலையில் புத்தகம் வெளியிட யோசிக்க இயலும்.இப்போது சர்குலேசன் குறைவே ,சம்பளம் ,இதர செலவினங்கள் ,இது ஆசிரியரின் மெயின் தொழிலாக இல்லையெனினும் ..அமர் சித்ரா கதை இந்திய முழுதும் ஏன் ஆங்கிலத்திலும் என்பதால் உலகம் முழுவதும் விற்பனை ஆகிறது,மேலும் அவர்கள் ஸ்டாக் போடும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் .மீண்டும் மறு பதிப்புகளிடவும் அவர்களுக்கு இயலும்,ஒரு புத்தகத்திலே இரு புத்தகத்தின் லாபத்தை எடுத்து விடுகிறார்கள்.அவர்களின் விலை ....... இப்போது சந்தா கட்டிய பலர் தரத்திர்க்கே ,சிறு குழந்தைகளும் வண்ணத்திர்க்கே ஈர்க்க படுகிறார்கள் என்பது நண்பர்கள் அனைவரின் வாதமே.ஆசிரியரும் தற்போது 100 க்கு குறைந்த விலையில் இல்லை என்றே கூறுகிறார்
ஸ்டாலின் போல அக்கறையுடன் துவங்க ,அதனை பின் பற்றிய நண்பர்கள் போல ,அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்தால் எண்ணிக்கை அதிகரித்தால் ,வாங்குவோர் அனைவரும் தெரிவித்தால் ஆசிரியர் இதனை முன்னெடுக்க வாய்ப்புள்ளது .ஆசிரியரும் அதற்க்கான முயற்சிகளை மேற்கொண்டால் ...................
அந்த சிறு வயது நண்பரின் ஏக்கங்கள் நிறைவேறட்டும் என நினைத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை .அனைவரும் அறிவீர்கள் 10 ரூபாய் வாய்ப்பேயில்லை .கண்டிப்பாக CC வெளியீட்டில் நண்பர் பாலாஜி சுந்தர் கூறியது போல ஆசிரியர் தவறே செய்கிறார்.பழைய பார்மேட்டை மாற்ற கடினமென தயங்குவதாக அவரது பதிலில் புலப்பட்டது ,அதற்க்கு அவர் கூறிய காரணம் ஏகப்பட்ட வேலைகள் என அலுத்து கொள்வதாகவே எனக்கும் படுகிறது .மேலும் அவரும் CC விலை உயர்வை விரும்பவில்லை இந்த அளவில் வெளியிட்டால் அதுவும் நூறுக்கு சென்று விடும் என்றும் கூறியுள்ளார் .........எனவே
நண்பர்களே இது அத்தியாவசிய பொருளுமல்ல என்பதே எனது எண்ணம் ,யாரும் நான் கூறியதை தவறாக எடுத்து கொள்ள மாடீர்கள் ,அனைவரும் எனது நண்பர்களே என்று நினைத்தே பல தயக்கங்களுடன் தவறாகி விட கூடாதே என்றே பதிவிடுகிறேன் . யாரையும் காயப்படுத்தும் விவாதங்களுக்கு நான் செல்வதேயில்லை .தவிப்புகளும் ,ஏனோ தெரியவில்லை குற்ற உணர்ச்சிகளுமுடன் தாண்டி செல்கிறேன் ...........................புரிந்து கொள்வீர்கள் என நம்பிக்கையுடன் ...................சிந்திப்போம் நண்பர்களே
Balaji Sundar,கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா,கிருஷ்ணா வ வெ:
பதிலளிநீக்குஎனது பதிவிற்கு கூட நான் இவ்வளவு ஆழமாக எழுதியதிலை ....
நண்பர்களின் உணர்வுகளும் ஆசிரியர் அரிந்ததே!. ஆனால் ஆசிரியரிடம் நான் இது பற்றி இரண்டு முறை கூறிய பொழுது அவரின் பதில்களும் மிகவும் யோசிக்கும் விதத்தில் இருந்தது . (இதனை தட்டச்சு செய்வதற்குள் Balaji Sundar ன் part-3 பதிவு வந்துவிட்டது , எப்படித்தான் மனிதர் இப்படி விரல் நோகாமல் அடிக்கிறாரோ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா நீங்களும் தான்)
குறைந்த விலைக்கு புத்தகம் போடும் பொழுது உதாரணமாக 3000 பிரதிகள் விற்பதாக இருந்தால் வருகின்ற மொத்த தொகையே 30000 தான் இதில் ராயல்டி, ஊழியர்கள் செலவு ,புத்தக செலவு, விற்காமல் தங்கிவிடும் நூல்கள்,பணம் தராமல் நாமம் போடும் விற்பனை பிரதி நிதிகள், ஆசிரியரின் நேரம், காமிக்ஸிற்காக வெளி நாட்டுப்பயணம் .......இப்படியெல்லாம் உள்ள செலவுகளை எப்படி சரிகட்டுவது? ஆகவே 100 புத்தகத்தினை இனி மாற்றும் யோசனை இனி துளியும் இல்லை. இதனை நான் குறையாக நினைக்கவும் இல்லை . ஆனால் அதே சமயம் 35 வயதிற்கு மேற்பட்ட வாசகர்கள் மட்டும் போதுமா? என்பதுதான் வினாவாக உள்ளது. அமர் சித்திரக்கதைகள் இன்று தமிழில் 35 ரூபாய்கு வாங்கினேன் (24 புத்தகம் வந்துள்ளதாக விஸ்வாவின் தகவல்) அதனுடய மகாபாரத ஆங்கில பதிப்பு ரூபாய் 1350 .00 அவர்களின் நோக்கம் தரத்துடன் மேல்மட்ட மக்களை கவர்வது மட்டும் தான், நான் முத்து லயன் இவற்றை அப்படிப்பட்ட பார்வையில் பார்க்க வில்லை. தரமான தமிழில் வரும் இதனை படிக்கும் சூழலை புதிய தலை முறைக்கும் கொண்டு சேர்ப்பதுவும் அவரது கடமை என்பதுதான் எனது எண்ணம். அதற்காக 50 ரூபாய்க்கு கொண்டுவரும் புத்தகம் சற்று வழிவகுக்கும் கதைகள் புதியதோ பழயதோ தரம் இருந்தால் இளய சமூதாயம் வாசிக்கும் என்பது எனது எண்ணம்.
இந்த முருகேசனின் தேடலை இன்றுகாலை விஸ்வாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கூறினேன் . இன்னும் 2 வருடத்தில் காமிக்ஸின் பொற்காலம் மீண்டும் களைகட்டும் இளயசமுதாயமும் அதிகம் படிக்கும் காலம் வரும் என்றார். விஸ்வாவின் எண்ணங்களும் நமது நினைவுகளும் பலிக்கட்டும் விரைவில்...
ஈரோட்டரே, இரவு நேரம், நீர் அறிமுகப்படுத்தி வைத்த அழகி இருக்க, விரல்கள் நோகாது. அப்படியே வலியெடுத்தாலும் வருடிவிட அழகி இருக்கிறாளே. ஒரே பிரச்சனை என்ன வென்றால் எண்ணம் ஓடும் வேகத்திற்கு விரல்கள் டைப்ப மறுக்கின்றது. அவ்வளவே.
பதிலளிநீக்கு//குறைந்த விலைக்கு புத்தகம் போடும் பொழுது உதாரணமாக 3000 பிரதிகள் விற்பதாக இருந்தால் வருகின்ற மொத்த தொகையே 30000 தான் இதில் ராயல்டி, ஊழியர்கள் செலவு ,புத்தக செலவு, விற்காமல் தங்கிவிடும் நூல்கள்,பணம் தராமல் நாமம் போடும் விற்பனை பிரதி நிதிகள், ஆசிரியரின் நேரம், காமிக்ஸிற்காக வெளி நாட்டுப்பயணம் .......இப்படியெல்லாம் உள்ள செலவுகளை எப்படி சரிகட்டுவது?// = இதை மறுபதிப்பின் மூலம் சரிக்கட்டுவது சரியாகாது.
35 வயதுக்கு மேற்பட்ட வாசகர்கள் மட்டும் போதுமா என்று சொல்வது சரியல்ல. ஒவ்வொரு காமிக்ஸ் வாசகரும் குழந்தைதான். ஒவ்வொரு வாசகருக்குள்ளிருக்கும் அந்த குழந்தை தான் இன்றளவும் எவ்வளவு வயதானாலும், எவ்வளவு விலையானாலும் தயங்காமல் காமிக்ஸை வாங்குகிறது. அதனால் சிறுவர்களிடையே காமிக்ஸ் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கருத்தே விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையிலேதான் எழுகிறது.
விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறில்லை. பழைய தரத்தில் மறுபதிப்பு அதற்கு எந்தவகையிலும் உதவாது என்பதே உண்மை.
என் பள்ளியின் வாசலில் விற்ற ஒரு பைசா ஆரஞ்சு கலர், ஆரஞ்சு சுளை வடிவில் இருக்கும் புளிப்பு மிட்டாயில் இருந்து, பல நூறு ரூபாய் விலை மதிப்பு கொண்ட கொக்கோ சாக்லெட் வரை இருக்கிறது. நாம் எதை விற்கப் போகிறோம்? எதை வாங்கப் போகிறோம்? அது அவரவர் சக்திக்கு உட்பட்ட விஷயம். அதனால் முருகேசனுக்கு காமிக்ஸ் கிடைக்கக் கூடாது என்று கூறவில்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் விளையாடுவதற்கு பொம்மை எவ்வளவு அவசியமோ அந்த அளவு காமிக்ஸ் அவசியம். ஆனால் எல்லா குழந்தைகளும் காமிக்ஸை விரும்பி படிப்பதில்லை. காமிக்ஸ் என்பது ஏதோ ஒரு ப்ளட் குரூப்பை சேர்ந்தவர்களுக்கே பிடிக்கிறது. ஏன் அவர்களுக்கு மட்டும் என்பது பெரிய ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டிய ஒரு சிதம்பர ரகசியம்.
ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு, அது “FOLLOW THE LEADER” அது போல இன்றய காமிக்ஸ் லீடர் அமர் சித்திர கதா. அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று பகுத்தறிந்து, அவர்களைப் போலே வெளியிட்டால் பள்ளிச் சிறுவர்களை சென்றடையலாம்.
ஈரோட்டில் ஒரு ஸ்டாலின் இருக்கிறார் என்பதும், கோயம்புத்தூரில் ஒரு ஸ்டீல் க்ளா இருக்கிறார் என்பதும் எப்படி எனக்குத் தெரியவந்தது? இணையத்தின் மூலமாகவும் நண்பர் விஸ்வாவின் தளத்தின் மூலமாகவும் தான் அறிமுகம் ஏற்பட்டது.
லயன், முத்து காமிக்ஸ் திரும்ப வெளிவருகிறது என்பது நண்பர் கிங் விஸ்வாவின் தளத்தின் மூலமே. அது போல லயன் முத்து காமிக்ஸ் வெளிவருகிறது என்று நாலு பேருக்கு தெரிந்தால் தானே விற்பனை அதிகரிக்கும். அதற்கு ஒவ்வொரு காமிக்ஸ் வெளியீடுகளின் விற்பனையிலிருந்து ரூ.1/- ஐ தனியாக விளம்பர செலவுகளுக்கு என்று எடுத்து வைத்து விளம்பரம் செய்தால் விற்பனை அதிகரிக்கும்.
போட்டி இல்லாத எந்த ஒரு தொழிலும் சுவாரசியம் போய்விடும். எந்த காலத்தை தமிழ் காமிக்ஸின் பொற்காலம் என்று இன்று கூறுகிறோமோ அந்த காலத்தைப் பார்த்தால் ஒன்றுக்கு மேற்பட்ட காமிக்ஸ்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருந்திருக்கும்.
காமிக்ஸ் விற்பனையில் தொய்வு, நட்டம் என்பது மேலை நாடுகளிலும் நடந்த விஷயம்தான். அது போன்ற நிலை வரும்போது பதிப்பகத்தார் பெரும்பாலோர் செய்யும் விஷயம், அவர்களின் பேமஸான ஹீரோவை சாகடிப்பது. சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்றோருக்கு காமிக்ஸ் புத்தக அட்டையிலேயே சமாதி கட்டிய பதிப்பகங்கள் அங்கு உண்டு.
இன்றைய நிலையில் இருக்கும் வாசகர்களை நல்ல முறையில் சிதறி விடாமல் காப்பாறினாலே போதும். சில காலங்களில் விற்பனை உயரும்.
இப்போது நேரடி விற்பனையினால் ஏஜெண்ட் கமிஷனை, தரத்தை உயர்த்த பயண்படுத்திவிடுவதனால், இன்னொரு உத்தியை கையாளலாம். ரீடர்ஸ் டைஜஸ்டை பாருங்கள், அந்த கம்பெனி, ஒரே புத்தகத்தை சந்தாதாரருக்கு ஒரு விலையிலும் கடைகளில் ஒரு விலையிலும் விற்பனைக்கு கொடுக்கிறது. அது போல் நமது காமிக்ஸையும் கடையில் இவ்வளவு விலை, சந்தாதாரருக்கு இவ்வளவு விலை என்று அட்டையிலேயே இரு விலைகளையும் அச்சிட்டு வெளியிடலாம்.
விளம்பரம் இல்லையென்றால் இன்னும் இரண்டு வருடம் ஆனாலும் இதே நிலையே நீடிக்கலாம். காலம் தான் பதில் சொல்லும்.
//லயன், முத்து காமிக்ஸ் திரும்ப வெளிவருகிறது என்பது நண்பர் கிங் விஸ்வாவின் தளத்தின் மூலமே//
நீக்குலயன், முத்து காமிக்ஸ் திரும்ப வெளிவருகிறது என்பது நண்பர் கிங் விஸ்வாவின் தளத்தின் மூலமே தெரிந்து கொண்டேன் - என்று இருந்திருக்க வேண்டும்.
நண்பர்களே பாலாஜி சுந்தர் கூறியதை போல பணவீக்கமே இதெற்கெல்லாம் முக்கிய காரணம்,நாம் அன்று தங்கம் ஒரு பவுன் வாங்க எவ்வளவு சிரமப்பட்டோமோ ,அதே சிரமம்தான் இன்று ஒரு பவுன் வாங்கவும் .நமது சம்பளம் உயர்ந்தது ,அதே வேகத்திலோ அல்லது அதை விட வேகத்திலோ பொருளின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.அன்று 200 ரூபாய் சேர்க்க எவளவு கஷ்டமோ அதை போன்றதே இன்று நாம் 25000 சேர்த்தால்தான் முடியும்.ஏதோ முன்னேறியுள்ளதாக மாயை. மேலும் ரஷ்யாவின் மீர் பதிப்பகத்தின் முந்தய புத்தகங்கள் மலிவு விலை , தரமாக இருக்கும்.இவற்றை போல விவேகானந்தா புத்தகம் கூட வெளியிட இயலாது,காரணம் ........................தெரியாது.அரசாங்கமாக கூட இருக்கலாம் .ரீடர்ஸ் டைஜஸ்டின் அதன் விற்பனை அப்படி ,மிக பெரிய வாசகர் வட்டம் ,நாம் வெறும் 1000 அல்லது 2000 மே, இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் நண்பரே .....
பதிலளிநீக்குஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாத நிலை வரவேண்டும்............
அந்த சிறுவன் ஏங்கி ஆசை படட்டும் ,அப்போதுதான் கிடைப்பது போதும் என்ற எண்ணம் வராமல் ,தன்னை,தனது நிலையை உயர்த்தும் எண்ணம் அவனுக்கும் வரும் .அப்துல் கலாம் கூறுவது போல கனவு காணட்டும்.ஹென்றி நடுத்தர மக்களுக்கு காரை கொண்டு வந்தது போல ,நாளை அந்த சிறுவனும் ,பிறரும் படிக்க வேண்டும் என நினைத்தால் ,ஏன் நம்மில் யாரோ ஒருவரும் கூட ,அல்லது ராயல்டி ,மற்றும் அரசின் சப்சைடி ஏதோ ஒன்று குறைந்த விலைக்கு கொண்டு வர உதவலாம் .
ஸ்டாலின் கண்டிப்பாக அமர்சித்ர கதை புத்தகங்கள் குறைந்த விலை ,ஆனால் சப்பென்று ஏனோ தானோவென்று முடிந்திருக்கும்,நிறைய விஷயங்கள் ஆவன படம் எடுப்பது போல ,வரலாறு போல ஒரே வரியில் முடித்திருப்பார்கள்,கதைகளை நீட்ட வேண்டும் என்று நமக்கே தோன்றும்.ஏற்கனவே ஆசிரியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இவற்றை நாம் ஆசிரியரின் முன் வைக்க ,அவர் ஏற்கனவே புத்தக விலையை குறைக்க பல விசயங்களை ஜப்பானியரை போல முடிவெடுத்தவர்,இதன் மூலம் அவரும் பின்னோக்கி சென்று விடக்கூடாது என்பதே எனது வருத்தம்.
மேலும் அவர் முன்பு கூறியதும் இதுவே ,6 புத்தகங்களை ஒரே மாதத்தில் வெளியிடுவது ,தேவையானவற்றை வாசகர்கள் வாங்கலாம் ,அமர்சித்ர கதை போல ஸ்டாக் போட்டு விற்க வேண்டும் ,அதற்க்கு இதை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள் வேண்டும்.ஆனால் இன்று காமிக்ஸின் விற்பனை ...............கிங் விஸ்வா கூறியதை போல காமிக்ஸின் பொற்காலம் வரட்டும்.ஆசிரியரும் தரமான புத்தகங்களை மட்டுமே வெளியிடட்டும் ,தரம் குறைந்த புத்தகங்கலாய் இருந்தாலும் பரவாஇல்லை மாதம் தோறும் வரவேண்டும் ,என்று நினைப்பதை விட தரமே முக்கியம் என்று முன்னிலை படுத்தி மெதுவாக வெளியிட்டாலும் பரவாஇல்லை .ஆசிரியரும் மிகுந்தத ரசனை மிக்கவரே ,விமர்சகரே என்பது மிகை இல்லை .அவர் ரசிக்கும் புத்தகங்களை வெளியிடலாமே .லக்கி லுக் ,அல்லது டெக்ஸ் வில்லர் என்றால் எல்ல கதைகளும் சூப்பர் என்று அர்த்தமல்ல.இப்போது வந்த ஜெரோமின் கதைகளும் தேவைதானா என யோசிக்கலாம். நாமும் தரமான கதைகளை கேட்டு வாங்குவோம்.அதற்க்கு ஆசிரியர் முன் வேண்டிய கதைகளை அனைவரும் கேட்டு பெறுவோம்.பிற நண்பர்கள் நமது பின்னூட்டங்கலை பார்த்து செல்வதுடன் நின்று விடுகிறார்கள் ,250 பேர் தொடரும் நமது ஆசிரியரின் ப்ளோகில் சிலரே விவாதிக்கிறோம்,அழைத்தாலும் அழைப்புக்கு நன்றி என்று சிலர் கூறி சென்று விடுகின்றனர் .அவர்கள் தங்களின் தேவைகளை முன் வைப்பதில்லை.இந்த நிலை மாற வேண்டும்.பார்ப்போம். சில தரம் குறைந்த புத்தகங்களுடன் தரமான புத்தகங்களும் ஆசிரியரின் கோடோவ்னில் தூங்கி கொண்டிருக்கிறது .விளம்பரமின்மையே .........
வண்ணத்தில் லார்கோவை படிக்கும் போது,ரசிக்கும் போது இரத்தபடலம் நாம் ஏதோ இழந்தது போலிருக்கிறது ,நம் அனைவருக்கும் ...................
ஜெரோம் கூட பரவாயில்லை ஏற்றுக்கொள்ளலாம் .. ஆனால் லயன் நியூ லுக்கில் வந்த ஜான் ஸ்டீலின் 16 பக்க 'மரண மொக்கை' (நன்றி ப்ளேட்பீடியா கார்த்திக் ) போன்ற கதைகளை எப்படித்தான் ஆசிரியர் தேர்ந்து எடுக்கிறாரோ தெரியவில்லை.
நீக்குகோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா: எடிட்டரின் ப்ளாகில் நிறைய நண்பர்கள் பின்னூட்டம் இடக் காணோம் என்ற உங்களின் ஆதங்கமும், ஈரோட்டாரின் மனதில் முருகேசன் ஏற்படுத்திய சலனமுமே என் மௌனம் கலைந்ததற்கு காரணம். என் மனதின் ஆழ்கடலுக்கு அடியே பூகம்பம் எப்போதோ ஏற்பட்டு விட்டது. அதிர்வலைகள் எண்ணச் சுனாமியாக உருவெடுக்க ஞானபண்டிதன் தமிழ்க் கடவுள் முருகனே முருகேசனாக வந்தானோ?
நீக்குமுருகப் பெருமானே தமிழுக்கு கடவுள். தமிழ் காமிக்ஸ் வெளியீடுகள் பலம் பெற தமிழ்க் கடவுளை பிரார்த்திக்க வேண்டுமோ?
//எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாத நிலை வரவேண்டும்............//
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
ஸ்டீல் க்ளா, எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இரத்தப் படலம் கலெக்ஷன் கலரில் கட்டாயம் வெளிவரும். ஒரு வேளை லயனின் 30-வது வருட ஆண்டு மலராக கூட இருக்கலாம்.
நீக்குஎனது தவறை திருத்தியதற்கு நன்றி நண்பரே.உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்த ஒன்றே,உங்களது விவாதமும் அற்புதமே.நீங்கள் ,P .கார்த்திகேயன் எல்லோரும் அற்புதமான பின்னோட்டவாசிகள் என்பதில் ஐயமில்லை ,ஆசிரியரின் கேள்விகளுக்கு அனைவரும் எதிர்ப்பையோ ஆதரவையோ ,என்ன புத்தகம் அடுத்து வேண்டுமென்றோ,வேண்டாமென்றோ முன் வைத்தால் அற்புதங்கள் பல நிகழும்........................பார்க்கும் நண்பர்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் வலு சேர்ப்பார்கள்.......ஒரு பதிவிற்கு ஒரு பதில் போட்டால் கூட போதும் ,லார்கோ நீ ஒரு சண்டைகோழி என வின்ச் கூறுவாரே ,அது போல உங்களால் நிறுத்த முடியாது . கண்டிப்பாக ரத்த படலம் விற்று தீர்ந்து விட்டது .மறுபதிப்பு குரல்கள் ஒலிக்கும் ,அப்போது ஏற்கனவே வைத்துள்ள நாமும் கலருக்கு குரல் கொடுப்போம் .அப்போது பார்ப்போம் .........கண்டிப்பாக வரும்......வரவேண்டும் நண்பரே
நீக்குஜான் ஸ்டீலின் 16 பக்க கதை ' மொக்கை' என்று தோன்றவில்லை,கதை சிறியது என்று வேண்டுமானால் கூறலாம்.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்போதே கார்த்திக்குடன் சேர்ந்து குரல் கொடுத்திருக்கலாம் சிறிய தவறுகளை சுட்டி காட்ட வேண்டாமே ..............எழுத்து பிழை போல ................ரசிப்போமே நிறைகள் நிறைய இருக்கிறது .ஆகவே ஆசிரியருக்கு தெரிவிப்பது நமது கடமை,அவர் புத்தகம் வெளி வந்தால் விமர்சனத்தை எதிர் பார்க்கிறாரே . கதை பிடிக்கவில்லை எனில் தயங்காது கூறுங்கள்
நீக்குஸ்டீல் க்ளா, அதோ பாருங்கள் ஈரோட்டார் காற்றாலை மின் உற்பத்தி சாதனத்தில் இருந்து ஒரு இறக்கையை பிடிங்கி நம்மை அடிக்க வருகிறார். அவர் திட்டுவது எனக்கு கேட்கிறது, உங்களுக்கும் கேட்கிறதா?
நீக்கு”என்னாங்கடா நம்ம கூடு என்று சொல்லிக் கொண்டு இங்க வந்து பக்கம் பக்கமாக அனுமாரு வாலைப் போல நீள நீளமா போய் கிட்டே இருக்கர கமெண்டாக போட்டு இரண்டு நாளா ஒரே ரோதனயா போயிட்டுது?
எவ்வளவு நாள்தான் நான் அடுத்த பதிவ போடாம முகவாயில் கையை முட்டு கொடுத்துகிட்டு இருக்கிறது, ஒழுங்கா எடத்த காலி பண்றீங்களா இல்ல புடுங்கிய ரெக்கயாலயே ரெண்டு போட்டு உங்க ரெக்கய ஒடச்சி அடுப்புல சொருகாம அடங்க மாட்டிங்களா? ரெண்டுபேரும் இவ்வ்வ்வ்வளவு நீளமா அடிக்கிறீங்களே கை வலிக்கிலியான்னு நானும் எவ்வளவு மரியாதயா கேட்டு ஒரு பதிலையும் சொல்லிப்புட்டேன், அப்பிடியும் ரெண்டும் அடங்கர மாதிரி தெரியிலியே, நானா படக்கத பொஸ்தகத்த அச்சடிக்கிறேன், ஏதோ என்னாலான ஒதவின்னு ரெண்டு ஸ்டால புடிச்சு, நாலு நாளா கண்காட்சிக்கு போய் வந்தா, நம்ம கூடுன்னு ஜாய்ண்ட் போட்டு, முருகேசு பேர சொல்லி என் கூட்டையே ஹைஜாக் பண்ணிட்டீங்க, இப்பிடி உங்க தொல்ல வருமுன்னு தெரிஞ்சிருந்தா, முருகேச பத்தி மூச்சே விட்டிருக்க மாட்டேன், ஒழுங்கா வெளிய்ல போயி வெளயாடுங்க, இல்ல ரெக்க ஒடிஞ்சிடும்” என்று சத்தம் போட்டுக் கொண்டே வருகிறார் பாருங்கள். ;-)))).
அவர் அதற்க்கு சரிப்பட்டு வரமாட்டார் நண்பரே.........
நீக்குஅடப்பாவிகளா... ஆசிரியர் ப்ளாக் ஐ விட இங்கு ரொம்ப சூடு பறக்கிறதே..
பதிலளிநீக்குஎல்லாவற்றையும் படிச்சிட்டு ஒண்ணுமே புரியாம கொழப்புத்துல இருக்கேன். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டு வரேன்.
;-)))
நீக்குp . கார்த்திகேயன் நீங்களும் கலந்தால் கொதிக்கும்..............
நீக்குBalaji Sundar, கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:மெய்யாலுமே என்னால போட்டி போட முடியல......
நீக்குமுருகேசனாவது பரவாயில்லை, பாக்கெட்டில் 60 ரூபாயோடு வந்தான். அவன் வயதில் 2 ரூபாய் 3 ரூபாய் காமிக்ஸ் வந்தபோது வாங்க முடியாமல் கடைகளில் தொங்கிகொண்டிருக்கும் புத்தகங்களை ஏக்கத்தோடு பார்த்து சென்ற ஞாபகம் மறக்கமுடியாதது.
பதிலளிநீக்கு//இந்த முருகேசனின் தேடலை இன்றுகாலை விஸ்வாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கூறினேன் . இன்னும் 2 வருடத்தில் காமிக்ஸின் பொற்காலம் மீண்டும் களைகட்டும் இளயசமுதாயமும் அதிகம் படிக்கும் காலம் வரும் என்றார்//
அப்போ பெரியாவளாம் சேர்ந்து எதோ ப்ளான் பண்ணிருக்கிங்க. அப்போ காமிக்ஸ் மறுமலர்ச்சி அதிகதூரத்தில் இல்லை எனலாம்.
P.Karthikeyan:
நீக்கு//அப்போ பெரியாவளாம் சேர்ந்து எதோ ப்ளான் பண்ணிருக்கிங்க//
ஏன் நலலாத்தான போய்கிட்டு இருக்கு ஏன் இப்படி பீதியகிளப்பி எல்லோத்தயும் பயப்படுத்திறீங்க....
இப்போது உள்ள நிலையில் காமிக்ஸ் வேகம் சென்றால் 2 வருடத்தில் காமிக்ஸ் மீண்டும் புத்துயிர்பெறும் என்பதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டார்....
என் மன நிலையை நண்பர் P.karthikeyan ன் மேற்கண்ட இரு பின்னூட்டங்களும் அப்படியே பிரதிபலிக்கிறன. நண்பருக்கு நன்றிகள் பல!
பதிலளிநீக்குநண்பர் ஸ்டாலின் அவர்களே, நேற்று என்னால் புத்தகத் திருவிழாவிற்கு வர இயலவில்லை என்பதால், நேற்றும் முருகேசனோ, குமரேசனோ காமிக்ஸை தேடி ஓடிய சம்பவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அதை தங்கள் வலைப்பதிவில் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
பதிலளிநீக்குவிஜய்,
நீக்குஏன் இந்த கொல வெறி?
இரவு விருந்து உமது சார்பில் என்பதால் எஸ்கேப்பா?
ப்ப்பாவம் ஈரோட்டார்.
Balaji Sundar:உண்மை உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா...
நீக்குவிஜய் ஏமாற்றி விடாதீர்கள் ,இன்று உங்களை எதிர்பார்க்கிறேன்
பதிலளிநீக்குsteel claw: நண்பரே, இன்று மாலை கண்டிப்பாக வருவேன். உஙுகளைச் சந்திக்க நானும் ஆவலாய் இருக்கிறேன்...
பதிலளிநீக்குdear friends,
பதிலளிநீக்குI can say today is a very special for me as I met the following friends in Erode book festival.
* Cibi tiruppur
* Steel claw coimbatore
* Raja pallipalayam
* Saint satan
* Erode stalin
* Dr. Sivaraman coimbatore
* Radha krishnan annachi
We had a very nice evening filled with lot of fun. I personally thank all the above friends, especially those who came from distance for making this day as a very memorable one.
Photos of those moments will be published soon by Erode stalin in his blog.
Eagerly Waiting for it.
நீக்கு//Photos of those moments will be published soon by Erode stalin in his blog //
நீக்குகொஞ்சம் பயமாத்தான் இருக்கு..........
ஓகே, வேறுவழி இல்ல, மனச திடப்படுத்திகிட்டு உங்கள எல்லாம் பார்க்க ரெடியா இருக்கவேண்டியதுதான் ;-)
எவ்வளவோ பார்த்துட்டோம், உங்க எல்லாம் பார்க்கமுடியாதா என்ன...:-)
p.karthikeyan :: வேண்டுமானால், எங்க photos பார்க்கும் முன் ஒன்றிரண்டு ஹாலிவுட் திகில் படங்களைப் பார்த்து மனதை தயார் படுத்திக் கொள்ளலாமே!!
நீக்குஅல்லது....
நீக்குஉங்களையேகூட கொஞ்ச நேரம் கண்ணாடியில் பார்த்துக்கலாம்.
:-))
:-)))
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஎன்ன ஒரு முந்திரிகொட்டைதனம் ,வேகமாக வந்து பதிவை விட்டு எனது மறையும் தன்மையை மறைத்து விட்டீரே நண்பரே இது நியாயமா ? இதற்க்காகதான் வேகமாக வந்து விட்டீர்களோ .பூரிப்புடன் உங்களால் காட்சிபடுத்தப்பட்ட ..............
நீக்குநானும் எதிபார்க்கிறேன் நண்பர் இரவுக்கழுகாரே ,யாமிருக்க பயமேன் நண்பர் கார்த்திகேயன் அவர்களே
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஸ்டாலின் அழைத்து கொண்டிருக்கிறாரே ,கூப்பிட்டு வரவில்லையே என்று கோபித்து கொள்ள கூடாதே ,என்று அரை மனதுடன்தான் சென்றேன்,அற்புதமான நண்பர்களை சந்தித்த பின் அரை மனதுடன்தான் திரும்பி வந்தேன்,விஜய் கூறியது போல என் காமிக்ஸ் வாழ்வில் இதுவும் ஒரு பொன்னாளே.மேலும் அற்புதமான வெள்ளந்தி மனிதர் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்களையும் ஏற்கனவே ரத்தபடலம் வாங்க சென்ற போது மற்றும் சந்தா கட்ட சென்ற போது சந்தித்தது,நான் செல்ல நேரமானபோதும் அலுவலகத்தை திறந்து ,வேண்டிய புத்தகங்களை கொடுத்த போதே எனக்கு அவர் மேல் இருந்த மரியாதையை இப்போது மேலும் அதிகரித்து விட்டது . புத்தகம் வெளியிடுவது மட்டும் எக்காரணம் கொண்டும் வெளியிடுவது நிற்க கூடாதென நமது ஆசிரியர் கூறியதுடன் ,அதற்காக அவர் கடினமாய் உழைப்பதை அவர் பெருமையுடன்,சந்தோசமாய் கூறியதுடன்,லார்கோ புத்தகத்தின் வண்ண தரம் பற்றி நான் சிலாகித்த போது ,அதற்க்கு உயர்ந்த தரம் ,விலை கொண்ட மையை உபயோகிப்பதை புதிய இயந்திரத்தில் அச்சிட பட்டதென பெருமையுடன் குறிப்பிட்டார்.மேலும் தற்போது அவர்கள் நிற்க நேரமில்லாமல் வேலை செய்வதை பெருமை பொங்க பூரிப்புடன்,கண்களில் உற்ச்சாக ஒளியுடன் கூறுவதை கேட்டவுடன் காமிக்ஸ் பொற்காலம் துவங்கி விட்டது அற்புதமாய் தெரிகிறது.கண்டிப்பாக ஆசிரியரின் பக்க பலமாய் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்கள்,மற்றும் அங்குள்ள அலுவலர்கள் இருப்பது ஆசிரியர் முன்பே கூறியது எவளவு உண்மை என உணர்ந்தேன்.
இவளவு கூறியதுடன் ,நமது நமது நண்பர்களை பற்றி கூறாமல் சென்றால் நிறைவாகாது.ஸ்டாலின் எடுத்த முயற்சிகளுடன் ,அங்கு அவரது வேலைப்பளுவுடன் இதனையும் செய்து கொண்டு பம்பரமென சுற்றி வருவது வியப்பு ,மதுரை புத்தக விழாவிற்கும் செல்லும் ஆர்வத்தில் இருக்கிறார் மனிதர் .மேலும் இவருக்கு பக்க பலமாய் நண்பர்கள் சோமசுந்தரம்,விஜய் ,ராஜா என்ற உற்சாகமிகு நண்பர்கள் என விழா கலை கட்டியது.எனது மனதை ஈர்த்த இன்னொரு நண்பர் திருப்பூர் பிரபாகரனும் தனது அனுபவங்களை பகிர்ந்ததுடன் கலகலப்பை கழிந்தது அன்றைய மாலை பொழுது.
மாலை பொழுதின் மயக்கத்திலே ..........................................என்று எனது தலைப்பை நிறைவாய் ,நிறைவான மனதுடன் பின் வைக்கிறேன் நண்பர்களே.......
நன்றி சொன்னால் தீராது நண்பர்களே...........................
கடைசியில் உபசரிப்புகள் திருப்தி தந்தாலும் மூலிகை பால் கொடுத்தனர் ஒரு துளி காபி சேர்த்து ,நான்கேட்ட டீ கிடைக்கவில்லை துளி பால் சேர்த்து .....என்பதை தவிர வேறு வருத்தமேதுமில்லை
//நான்கேட்ட டீ கிடைக்கவில்லை துளி பால் சேர்த்து .....என்பதை தவிர வேறு வருத்தமேதுமில்லை //
நீக்குகோவை புத்தக கண்காட்சிக்கு வருகிறோம். துளியூண்டு என்ன பால் என்ன பெரிய இரவு விருந்தே வச்சுட்டா போச்சு .... ( செலவு உங்களுடயதாய் இருக்கறப்ப நண்பர்கள் குசிப்படுவது சகஜம் தானே...)
நண்பர் steel clawவின் சார்பாக ஈரோடு விஜய்::
நீக்கும்ஹீம்... இனி நான் எந்தப் புத்தகத் திருவிழாவுக்கும் வருவதாய் இல்லை.
( ஆத்தாடி!! விட்டா இந்த ஈரோட்டுக்காரங்க பேண்ட் சட்டையெல்லாம் உருவிட்டு விட்றுவாங்க போலிருக்கே!)
steel claw::
பதிலளிநீக்குநண்பரே, நீங்கள் அடைந்த மகிழ்சியை உங்களின் நீ....ளமான பின்னூட்டமே பறைசாட்றுகிறது. முன்பின் பார்த்திராத நண்பர்கள் நாமென்றாலும், ஏதோ பத்து வருடஙுகள் பழகியவர்களைப்போல ஒருவரையொருவர் ஏகத்திற்கும் பரிகாசம் பண்ணி விளையாடிக் கொண்டிருந்ததெல்லாம் இப்போது நினைத்தால் ஆச்சரியமாய் உள்ளது. ஒருமித்த எண்ணமுடையவர்கள் பேசிப்பழக நீண்டநாட்கள் தேவைப்படுவதில்லை என்பது புலனாகிறது.
என்ன நாஞ்சொல்றது?
நண்பர் கூறினால் மறுப்பேது?
பதிலளிநீக்குஉங்கள் தள முகப்பில் இருந்து ஏதாவது ஒரு பதிவை கிளிக்கி உள்சென்றால் தமிழ்மண ஓட்டுப்பட்டை தெரியுமல்லவா?! அதில் "Submit to TamilManam"-ஐ கிளிக்கினால் "Your Blog is not listed in Tamilmanam" என்று வருவதற்கு காரணம் உங்கள் ப்ளாக் முகவரி "Country specific domain name"-ஆக மாறுவதே! கீழே உள்ள முகவரியில் ".in"-க்கு பதிலாக ".com" என்று எடிட் செய்து submit செய்தால் உங்கள் பதிவு இணைக்கப்படும்! தமிழ்மணத்தில் உங்கள் ப்ளாக் .com டொமைனில் பதிவாகியுள்ளது!
பதிலளிநீக்குchange .in:
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://tamilcomicskadanthapaathai.blogspot.in&posturl=http://tamilcomicskadanthapaathai.blogspot.in/2012/08/blog-post_10.html
to .com
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://tamilcomicskadanthapaathai.blogspot.com&posturl=http://tamilcomicskadanthapaathai.blogspot.com/2012/08/blog-post_10.html
இந்த முறையில் உங்கள் பதிவை தற்போது தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்!
இதற்கு நிரந்தர தீர்வு காண இந்தப் பதிவை படியுங்கள்!
http://www.bloggernanban.com/2012/02/blog-post.html
இது மற்ற நண்பர்களுக்கும் உபயோகப்படும் என்பதால் இங்கு பகிர்கிறேன்!
உங்களின் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி கார்த்திக் .....
நீக்கு"நான் ஒரு தீவிர காமிக்ஸ் ரசிகன். இரும்புக்கை மாயாவியும், முகமூடி வேதாளருமே எனக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள். இவர்களை Inspirationஆகக் கொண்டே இப்படத்தை இயக்கியிருக்கிறேன்"
பதிலளிநீக்குநடிகர் ஜீவா முகமூடியணிந்த சூப்பர் ஹீரோவாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'முகமூடி' திரைப்படத்தின் promotional show க்காக, விஜய் TVயில் இன்று மாலையில் இயக்குனர் மிஷ்கின் சொன்ன வார்த்தைகள்தான் நீங்கள் மேலே படித்தது.
இயக்குனர் மிஷ்கினுக்கு காமிக்ஸ் உலகின் நன்றிகளைத் தெரிவிப்போமா?!
நண்பர்களே. இது போன்ற சூப்பர் ஹீரோ படங்கள் தமிழில் மாபெரும் வெற்றியடைந்தால், காமிக்ஸ் படிக்கும் பழக்கம் இப்போதைய தலைமுறையினரிடம் இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில், நாம் கனவுகானும் அந்த 'காமிக்ஸ் மறுமலர்ச்சி' ஏற்பட்டுவிடும்தானே?!
நானும் பார்த்தேன் நண்பா ... அனைவரின் பிரதிபளிப்பும் அதுவாகத்தான் இருக்கும்
பதிலளிநீக்குஇன்று தான் படிக்கும் வாய்ப்பும் கிட்டிற்று... அந்த சிறுவனின் எண்ண ஓட்டங்களை கவித்துவமாக விவரித்துள்ளீர்கள்... 60 ரூபாய் இதழ்கள் மாதா மாதாம் கண்டிப்பாக வெளிவர வேண்டும் என்ற எனது வேண்டுகோளை எடிட்டரின் ப்ளாகில் அதிகம் நான் கூக்குரல் இடுவதற்கு, இப்படிபட்ட எதிர்கால தலைமுறைக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதற்காக தான்.
பதிலளிநீக்குஇல்லையென்றால், 500 ரூபாய் 1000 ரூபாய் என்று ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களை வாங்க தற்போது பொருளாதார முன்னேறி உள்ள நேரத்தில் 120 ரூபாய்கள் நமக்கு பெரிதாகவா தெரிய போகிறது... ஆனால் காமிக்ஸ் படிக்கும் வட்டம் நம்முடன் சுருங்கி போய்விட கூடாது என்ற எண்ணத்தின் வழிதோன்றலாக இடபடும் கருத்துகளே அவை.