செவ்வாய், 23 செப்டம்பர், 2014

முத்து காமிக்ஸின் வண்ணப்பயணம் பகுதி -1

வணக்கம் நண்பர்களே!
சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் "தேவரகசியம் தேடலுக்கல்ல" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவிசிவாவின் பதிவோடு ஒப்பிட்டு பார்த்த பொழுது ஸ்தம்பித்து விட்டேன். மனிதர் என்னமாய் தேடியிருக்கிறார்....'கடினஉழைப்பு" என்ற வார்த்தைகளில் மட்டும் அதனை பெருமை படுத்திவிட முடியாது. அதையும் மீறிய ஏதோ ஒரு உந்துதல் +அதீத ஆர்வம் + இத்தியாதிகள் உள்ளன என்பதுமட்டிலும் உண்மை

சென்ற பதிவில் மாயாவி கொடுத்திருந்த விளம்பரத்தினை தொடர்ந்து அது சம்மந்தமான முதல் பதிவினை அனுப்பியுள்ளார். மீண்டும் அவரது கலை நயம் என்னை மிரளவைக்கிறது.
இதன் ஆக்கம் குறித்து உங்கள் பதிவுகளை தெரியப்படுத்துங்களேன்

நட்புடன்

ம.ஸ்டாலின்
 














             

புதன், 17 செப்டம்பர், 2014

பதிவல்ல ஒரு தொடக்கம்.....

வணக்கம் நண்பர்களே!
நோகாமல் நோம்பு இருப்பது பற்றி ஒரு போட்டி வைத்தால் முதல் பரிசு எனக்குத்தான். ஏதோ வருடத்திற்கு ஒருமுறை வரும் புத்தகத்திருவிழாவின் போது ஈரோடு விஜயை வைத்து பதிவு போடுவதாகட்டும். இலவசமாக கிடைக்கும் வலைத்தலத்தில் இப்போது மாயாவி சிவாவை உள்ளே இழுத்து குளிர்காய்வதாகட்டும்....என நான் ஹாயாக வேடிக்கை பார்ப்பதனை நான் வேறு எப்படி சொல்வது :).ஏதோ ராமருக்கு உதவிய ( ! ? )அணிலாய் இந்த வலைத்தலம் இருப்பது ஒரு மகிழ்வே!
மாயாவி சிவாவின் அசத்தலான சென்றபதிவின் அனைத்து புகழும் அவரையே சாரும் . கடினமான ஒரு அர்பணிப்பும் காமிக்ஸ் மீதான தீராத அதீத ஆர்வமும் மட்டுமே அந்த பதிவை பறை சாற்றியது என்றால் அது மிகையாகாது. அதனை சென்ற பதிவின் பின்னூட்டங்கள் தெளிவுபடுத்தியது நீங்கள் அறிந்ததே
சென்ற பதிவை எழுதிய அடுத்தநாள் என்னிடம் தொடர்பு கொண்ட பொழுது அடுத்து ஒரு பதிவை தாயார் செய்து வருவதாகவும் ஆனால் அந்த தொடர் பதிவை பற்றி எதுவுமே எனக்கு தற்பொழுதைக்கு தெரியப்படுத்த போவதில்லை எனவும் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே நேற்று அனுப்பிய மின்னஞ்சலை பார்த்த பொழுது எனக்கு ஒன்றும் தலைகால் புரியவில்லை. பதிவு எதைப்பற்றியது என கணிக்கவும் முடியவில்லை. இதில் எனது பெயரை வேறு குறிப்பிட்டுள்ளார் . இந்த குழப்பம் புரியாததால் "திக்கு தெரியாத தீவை" பற்றிய ரகசியத்தை அறிந்ததாக அவர் கூறிய ஈரோடு விஜயிடம் தொடர்பு கொண்ட பொழுது " திக்கு தெரியாத தீவு எந்த திக்கில் இருக்கிறது" என அவரும் தெரியாது என புலம்பினார். இந்த பதிவை எழுதிய மாயாவிக்காவது தெரியுமா? உங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன் நண்பர்களே...............குழப்புவதில் சிவா கோவை இரும்புக்கையாரையும் மிஞ்சிவிடுவாரோ :)

(கடந்த பல வாரத்தில் ஓயாத பணி, காந்தி பிறந்த மாநிலத்தில் ஊர் ஊராக பணி நிமித்தமாக அலைந்து வாங்கி கட்டிக்கொண்ட உடல் நலக்குறைவு, பற்றாத குறைக்கு தொடர்விமான பயணத்தால் மீழ முடியாது காது வலி என படுத்தி எடுத்துவிட்டது. உங்களின் அன்பான ஆறுதல் வார்த்தைகளின் பரிவுக்கு பின்னே உடல் நலம் தற்பொழுது பூரண ந்லம் நண்பர்களே. மிக்க நன்றி!

நட்புடன்

ம.ஸ்டாலின்
-----------------------------------------------------------------------------------


வணக்கம் நண்பர்களே !
சென்றபதிவுக்கு கிடைத்த வரவேற்பு உண்மையில்
இனிவரும் பதிவுகளுக்கு தான் கிடைக்கும் என கணித்திருந்தேன்...! ( இப்பதிவுபற்றிய கணிப்பு...
இந்தமுறை எந்தமாதிரி புஸ்...ஓஓ...)

இனிவரும் பதிவுகள் பற்றிய, உங்களுக்கு பிடித்த
ஸ்டைலில், வித்தியாசமான ஒரு விளம்பர....
முயற்சியே இந்த பதிவு...!

நட்புடன்,
மாயாவி.சிவா





செவ்வாய், 9 செப்டம்பர், 2014

தேவ ரகசியம் பற்றிய ரகசியம்...!!!



நண்பர்களே
வணக்கம் . மாயாவி சிவா வின் அசத்தலானா ஒரு பதிவு மீண்டும் இங்கே உங்களுக்காக ... படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்களேன்.கதையை படிக்காவிட்டாலும் நமது மாயாவியின் தேடலுக்கான இந்த பதிவை பார்த்தவுடன் கதையை படிக்கத்தொடங்கிவிட்டேன்.

நன்றியுடன்
ம.ஸ்டாலின்

வணக்கம் நண்பர்களே!

//"தேவ இரகசியம் தேடலுக்கல்ல" இன்னொரு "The Davinci Code" movie-ஐ பார்த்த விளைவை ஏற்படுத்துகிறது.//
என்று ப்ளாக்கில் வந்த ( நண்பர் மகேஷ் ) விமர்சனம்,என்னை
புத்தகம் பெறும் ஆர்வத்தை துண்டியதன் விளைவுகள்.....
ப்ளாக்கில்,facebookல் நீண்ட புலம்பல்கள்.

ஒரு வழியாக நண்பர் ஈரோடு விஜய் புத்தகம் படிக்க பெற்று
படித்தேன்.அப்படி வாங்கிபடித்து என்ன செய்தேன்னு நீங்களே
கீழே பாருங்கள் புரியும்.....
கட்டாயம் புத்தகத்தை எடுத்துவைத்துக்கொண்டு கிழே பாருங்கள்...




நெட்டில்தேடி,சேகரித்து,ஒழுங்க்குபடித்தி...பலூன்கள் போட்டு
இதை செய்து முடிப்பதற்குள் முடிஉடைந்துவிட்டது.
கொஞ்சம் ஆழமான,வித்தியாசமான முயற்சி,குறை இருந்தால்
குறிப்பிடுங்கள் நண்பர்களே !

நட்புடன்,
மாயாவி.சிவா