வியாழன், 25 ஜூலை, 2013

மாற்று பிரதிகள்

வணக்கம் நண்பர்களே!

இது ஒரு பரிசோதனை முயற்சி என்பதா அல்லது " சோதனை"தரும் முயற்சியா என்ற தயக்கத்திலேயே பல நாட்கள் சிந்தித்து தயங்கினேன். ஆனால் எதற்கும் ஒரு தொடக்கம் வேண்டும்தானே ! .

 லயன் காமிக்ஸில் வந்த காமிக்ஸ் கிளப் பில் தனது இதழ்களை மாற்று பிரதியாக  நண்பர்கள் மாற்றியிருப்பார்கள் இந்த பாணியை இப்பொழுது பின்பற்றினாலென்ன என்ற நமது பல நண்பர்களின் எண்னத்தில் உருவானது தான் இப்பதிவு. பல நண்பர்களிடம் உள்ள மாற்றுபிரதிகளின் பட்டியலை இங்கு வெளியிட்டுள்ளேன். இவற்றில் பழய இதழ்களுடன் இன்றய இதழ்கள் வரை இதழ் மாற்றலுக்கு தயாராக உள்ளன. இதழ்களை மாற்றிக்கொள்ள விரும்பும் நண்பர்கள் தாங்கள் விரும்பும் இதழ்களின் பட்டியலையும் மாற்றுப்பிரதியாக கொடுக்க விரும்பும் இதழ்களையும் பட்டியலிட்டு "My exchange list"  என்ற தலைப்பில் mastalinprabu@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அலைபேசி எண்ணுடன்  அனுப்பிவைக்கவும்.

வழிமுறைகள்
* மாற்று பிரதி பெற விரும்பும்  நண்பர்கள் பெயர் தற்சமயம் அறிவிக்கப்படமாட்டாது ( பல நண்பர்களின் அன்புக்கட்டளை)

*உங்கள் மின் அஞ்சல் மாற்றுபிரதி பெறவிரும்பும் நண்பருக்கு அனுப்பி வைக்கப்படும் ( உங்கள் பெயர் நீக்கப்பட்டு).
* இவற்றில் எந்த இதழ்களும் விற்பனைக்கு உள்ளதா என கேட்க வேண்டாமே நண்பர்களே ப்ளீஸ்!
*  இந்த புத்தக பறிமாற்றம் குறித்த மின்னஞ்ல்கள் ஆகஸ்ட் 31.வரை ஏற்றுக்கொள்ளப்படும்
* நண்பர்கள் தங்களிடம் உள்ள புத்தகத்தின் நிலை குறித்தும் ( புதியதாக உள்ளதா அட்டையுடன் உள்ளதா? etc.,,)  மின்னஞ்சல் அனுப்பவும்






 *நண்பர் சரி என்றால் அதன்பிறகு இருவரின் எண்ணகளுக்கு ஏற்ப நேரிலோ அலல்து  விருப்பங்களுக்கு ஏற்றபடி சொந்த பொறுப்பில் மாற்றிக்கொள்ளலாம்.

இது குறித்த உங்களின்  கருத்துக்களை இங்கு பதிவிடுங்களேன் நண்பர்களே!

 வருகின்ற ஆகஸ்ட் 3 முதல் 14 வரை ஈரோடு புத்த்தக்திருவிழா நடைபெறுகிறது நண்பர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். அது குறித்த பதிவுகள் அவ்வப்போது இங்கு அப்டேட் செய்திடுகிறேன்
மேலும் விபரங்களுக்கு இந்த வலைத்தளத்தை பார்க்கவும்