புதன், 15 ஆகஸ்ட், 2012

ஒரு கல்லூரி கொண்டாட்டம் ...




மீண்டும் நான் கல்லூரி பருவத்திற்கு வந்து விட்டேனோ என்ற என்னத்தில் திக்குமுக்காடிப்போனது இந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக திருவிழா...

நீண்டட்களாக வலையில் கிண்டலடித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பட்டாளம் ஒன்றுகூடினால் கேட்கவேண்டுமா?.....  ஈரோடு விஜய் சொன்னது போல பலவருடங்கள் பழகிய நட்பு குழுமமாக காட்சியளித்தது அன்றயதினம். மணிக்கணக்கில் நேரம் போனது தெரியாமல்  அரங்கம் எண் 125 க்கும் 27&28 க்கும் ஓடிக்கொண்டு வரும் புதிய  வாசகர்களுக்கு  லயன் முத்துவிற்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தோம்

 பல நாட்களாய் வலைப்பதிவில் பல முகங்களுக்குபின்னால் ஒளிந்துகொண்டிருந்த நண்பர்களை இப்படித்தான் இருப்பார்கள் என ஒரு கற்பனையில் ஒரு முகத்தை வரைந்திருப்போம் ஆனால் நேரில் பார்க்கும்பொழுது அதற்கு நேர்மாறாக காட்சியளிப்பார்கள் அதிலும் ஒரு ஆச்சரியம் இருப்பதை மறுக்கமுடியாது

 
சாத்தான், ஈரோடு விஜய், ஆடிட்டர் ராஜா, மாயாவி,சிபி இவர்களுடன் அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் என அந்த மகிழ்வான தருனங்களை விவரிக்க இரண்டு நாட்களாக தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடி கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த  லயன் ஆசிரியர் விஜயன், கிங் விஸ்வா வராதது மட்டும்தான் மனக்குறை.  


புத்கத்திருவிழா இன்றுடன் ( 14/8/2012) முடிவடைகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்து பதிப்பக உரிமையாளர்கள் சீனிவாசன்,மாணிக்கம்,நாகப்பன், பல்லவி பதிப்பகத்தின் இயக்குனர் நடராஜன், நண்பர் செல்வராஜ், ஈரோடு புத்தக திருவிழா நிர்வாகிகள், ஆசிரியர் விஜயன் , அண்ணாச்சி இராதகிருஷ்ணன், அடிக்கடி தொலைபேசியில் ஆதரவளித்த கிங் விஸ்வா, இது நாள் வரை எனது வலைப்பதிவில் பின்னூட்டமிட்டு அதற்கு உத்வேகம் அளித்த நண்பர்கள்   மற்றும் வந்திருந்த சிங்கத்தின் முகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

சில வாசகர்களின், பதிப்பகத்தாரின் பேட்டி ( சொற்பெழிவு நடந்த பொழுது எடுத்ததால் சற்று  இரைச்சலாக இருக்கும்) 
 
நீண்ட நாள் வாசகர் : சக்தி நல்லசிவம் (வாசகர் , செய்தி வாசிப்பாளர், மேடை பேச்சாளர்)
 

 

நீண்ட நாள் வாசகர் : பழனிச்சாமி


 
நீண்ட நாள் வாசகர் : ஆடிட்டர் இராஜா - பள்ளிபாளயம்
 
இந்து பதிப்பகத்தின் மூன்றாம் தலைமுறையின் எண்ணங்கள்....

 
காமிக்ஸ் நண்பர்கள் :  
 பயங்கர மின் அதிர்வுகளுக்கு பின்னர் தாக்குதலுக்கு உட்பட்டவர்
தாக்குதல் நடத்திய நபர்....

இயல்பு நிலை திரும்பிய பின்....

ஆரம்ப படத்தில் மின் அதிர்வுக்குள்ளானவர் நமது நண்பர் திருப்பூர் சிபி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நபர் நீங்கள் அனுமானித்த அதே கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா…


புனித சாத்தான், கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா, திருப்பூர் சிபி, ஆடிட்டர் இராஜா

மீண்டும் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு  (2-8-2013 முதல் 13-8-2013 வரை....)
இப்பொழுதே அழைப்பு விடுக்கிறேன் நண்பர்களே.... நன்றி!.....

புத்தக திருவிழா முடிந்தாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை...  காமிக்ஸ் குறித்த சில பேட்டிகள் ,  நண்பர்களின் படங்கள் , நான் வாங்கிய நூல்கள் விரைவில்....


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

காமிக்ஸ் ஒரு எட்டா கனியா!?

இரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில்  ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்றும் பெயர்  முருகேஷ் என்றும் கூறினான். லயன் காமிக்ஸ் பற்றி சற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்த பொழுது அவனாகவே அது குறித்து நிறைய சொல்ல ஆரம்பித்து விட்டான் எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களாக  லயன் , முத்து காமிக்ஸ் வருவதில்லை என நினைத்து கொண்டானாம்.

நியூலுக்கை காண்பித்த பொழுது இது நல்லாத்தான் இருக்குது ஆனா வேண்டாம் என்றான். பின்னர் சட்டை பையை இடது கையில் பிடித்துக்கொண்டு தன்னிடம்  60 ரூபாய்தான் இருக்கிறது என்றும் 10 ரூபாய் காமிக்ஸ் வருவதில்லையா என வினாவினான். இந்து பதிப்பகத்தில் இதன் உடைத்த பண்டல் உள்ளது என அனுப்பி வைத்தேன் . அன்றய  நேரம் முடியும் தருவாய் என்பதால் இடத்தை அறிந்து கொண்டு கண்களில் ஆவலுடன் ஓடுவதை பார்த்தபொழுது எனது சிறுவயதில் காமிக்ஸிற்காக நான் அலைந்தது, பல நிமிடம் கண்முன்னே திரையோடியது. அவனிடம் தெரிந்து கொண்ட இன்னும் ஒரு விஷயம் ,இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அவனது பள்ளி நண்பனுடன் கூட்டு சேர்ந்து காமிக்ஸ் வாங்கினானாம் .

இனி காமிக்ஸ் 100 ரூபாயில் மட்டும் தான் வரும் என்றபொழுது அவனுடைய கண்களில் காணப்பட்ட ஒரு வினாடி ஏமாற்றத்தை நான் கவனிக்க தவறவில்லை.
காமிக்ஸ் என்பது இளம் தலைமுறைக்கு எட்டா கனியாக மட்டும் இருந்துவிடக்கூடாது.
அன்று பார்த்து நேரம் இல்லாத காரணத்தால் எனது வீடியோ காமராவை எடுத்து செல்ல வில்லை இல்லையெனில் அவனிடம் ஒரு மினி பேட்டி கண்டிருப்பேன்.

இவர்களுக்காகவாவது 50 ரூபாய் காமிக்ஸ் களாசிக் புத்தகத்தை விரைவில் ஆசிரியர் விஜயன் கொண்டுவருவது நலம்.
ஒன்று மட்டும் திண்ணமான உண்மை. தமிழ் காமிக்ஸ் என்பது அந்தகாலத்து வாசகர்கள் தான் இன்றும் படித்துகொண்டுள்ளனர், புதிய இளய சமுதாயம் இதனைப்பற்றி நினைப்பதில்லை என்பது தவறான கருத்து என்பதனை கண்டிப்பாக உணரவேண்டும் .

ஆயிரம் ரூபாய்க்கு முத்து காமிக்ஸ் வந்தாலும் வாங்கு வதற்கு இப்பொழுது சம்பாதிக்கும் நாம்மை போன்ற பழய வாசகர்கள் தயார்தான் ஆனால் இந்த முருகேசனின் தேடல்.....

இன்னும் எத்தனை முருகேன்களுக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்காமலோ அல்லது வருவது தெரியாமலோ, பணம் தட்டுப்பாட்டுடனோ ( நடுத்தர வர்க்கம்) அலைந்து கொண்டிருக்கலாம்......  இவர்களை எல்லாம் நாம் எப்படி இனம் கண்டு கொண்டு அவர்களுக்குள் இந்த அற்புத அனுபவத்தை  கொண்டு சேற்கபோகிறோம்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.......
இரத்தப்படலம்
இன்றுகாலை கிங் விஸ்வா தினகரன் வெள்ளிமலரில் " இரத்தபடலம் குறித்த செய்தி வந்தனை குறிப்பிட்டார்.அந்த  அறிய செய்தியின்  ஸ்கேன் காப்பி கீழே....


புத்தக கண்காட்ச்சியில் வந்துள்ள மற்ற காமிக்ஸ் + காமிக்ஸ் அல்லாத புத்தகங்கள்

வானதி பதிப்பகத்தில் வாண்டு மாமா+ விசாகானின் நூல்கள்




பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நூல்கள்



 அமர் சித்திரக்கதைகள்:


 ஆங்கில காமிக்ஸ் புத்தகத்திற்கான தனி அரங்கம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள நூல்கள்:

















மீண்டும் நாளை சந்திக்கலாம் நண்பர்களே! நன்றி!

 

புதன், 8 ஆகஸ்ட், 2012

ஒளிப்பதிவும் ஒரு காமிக்ஸ் பதிவும்

காமிக்ஸ் நண்பர்களே! வணக்கம்.
பதிவிட பல விஷயங்கள் இருந்தாலும் பணிச்சுமை என்னை அதிகமாக ஆட்கொள்வதால் சில வரிகளில் இன்றய பதிவுகள்.
மகிழ்வான தருணங்களில் எடுக்கப்பட்ட ஈரோடு புத்தக திருவிழா வீடியோ பதிவுகள் இதோ....
 

A PEOPLES HISTORY OF AMERICAN:


A PEOPLES HISTORY OF AMERICAN EMPIRE  இந்த நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு   அதுவும் காமிக்ஸ் வடிவில் மிகப்பெரிய நூலாக  சுமார் 250 பக்கங்களில் வந்துள்ளது. நான்வாங்கிய  காமிக்ஸில் வித்தியாசமானது.








நடு நடுவே ... புகைப்படத்தையும் சித்திரங்களாக இனைத்துள்ளனர். சரித்திரமாக மட்டும் கொண்டு போகாமல் ஒரு கதையாக விளக்கியுள்ளனர்.  


விலை: 225/-
பதிப்பகம் : பயணி- சென்னை.

இதனை முழுவதும் படித்தவுடன் பதிவிடுகிறேன்.

விரைவில் நான் வாங்கிய மற்ற காமிக்ஸ் குறித்த பதிவுகள்....

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

சிங்கத்தின் சில முகங்கள்



 இளம் வாசகர் .... இவருடய பேட்டி  நாளை......


ஸ்ரீ இந்து பப்ளிகேஷனில் நமது தோரண விளம்பரங்கள்




ஈரோடு விஜயன் 
  அண்ணாச்சி இராதாகிருஷ்ணன், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீதர், புனித சாத்தான், சேலம் குமார்



.