மீண்டும்
நான் கல்லூரி பருவத்திற்கு வந்து விட்டேனோ என்ற என்னத்தில் திக்குமுக்காடிப்போனது இந்த
ஞாயிற்றுக்கிழமை புத்தக திருவிழா...
பல நாட்களாய் வலைப்பதிவில் பல முகங்களுக்குபின்னால் ஒளிந்துகொண்டிருந்த நண்பர்களை இப்படித்தான் இருப்பார்கள் என ஒரு கற்பனையில் ஒரு முகத்தை வரைந்திருப்போம் ஆனால் நேரில் பார்க்கும்பொழுது அதற்கு நேர்மாறாக காட்சியளிப்பார்கள் அதிலும் ஒரு ஆச்சரியம் இருப்பதை மறுக்கமுடியாது
சாத்தான்,
ஈரோடு விஜய், ஆடிட்டர் ராஜா, மாயாவி,சிபி இவர்களுடன் அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் என அந்த
மகிழ்வான தருனங்களை விவரிக்க இரண்டு நாட்களாக தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடி கொண்டிருக்கிறேன்
கிடைக்கவில்லை. எதிர்பார்த்த லயன் ஆசிரியர் விஜயன், கிங் விஸ்வா வராதது மட்டும்தான்
மனக்குறை.
புத்கத்திருவிழா இன்றுடன் ( 14/8/2012) முடிவடைகிறது.
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்து பதிப்பக உரிமையாளர்கள் சீனிவாசன்,மாணிக்கம்,நாகப்பன்,
பல்லவி பதிப்பகத்தின் இயக்குனர் நடராஜன், நண்பர் செல்வராஜ், ஈரோடு புத்தக திருவிழா
நிர்வாகிகள், ஆசிரியர் விஜயன் , அண்ணாச்சி இராதகிருஷ்ணன், அடிக்கடி தொலைபேசியில் ஆதரவளித்த
கிங் விஸ்வா, இது நாள் வரை எனது வலைப்பதிவில் பின்னூட்டமிட்டு அதற்கு உத்வேகம் அளித்த
நண்பர்கள் மற்றும் வந்திருந்த சிங்கத்தின் முகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றிகள்
சில வாசகர்களின், பதிப்பகத்தாரின் பேட்டி ( சொற்பெழிவு நடந்த பொழுது எடுத்ததால் சற்று இரைச்சலாக இருக்கும்)
நீண்ட நாள் வாசகர் : பழனிச்சாமி
நீண்ட நாள் வாசகர் : ஆடிட்டர் இராஜா - பள்ளிபாளயம்
இந்து பதிப்பகத்தின் மூன்றாம் தலைமுறையின் எண்ணங்கள்....
காமிக்ஸ் நண்பர்கள் :
பயங்கர மின் அதிர்வுகளுக்கு பின்னர் தாக்குதலுக்கு உட்பட்டவர்
தாக்குதல் நடத்திய நபர்....
இயல்பு நிலை திரும்பிய பின்....
ஆரம்ப
படத்தில் மின் அதிர்வுக்குள்ளானவர் நமது நண்பர் திருப்பூர் சிபி அவரை அதிர்ச்சிக்கு
உள்ளாக்கிய நபர் நீங்கள் அனுமானித்த அதே கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா…
புனித சாத்தான், கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா, திருப்பூர் சிபி, ஆடிட்டர் இராஜா
மீண்டும் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு (2-8-2013 முதல் 13-8-2013 வரை....)
இப்பொழுதே அழைப்பு விடுக்கிறேன் நண்பர்களே.... நன்றி!.....
புத்தக
திருவிழா முடிந்தாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை... காமிக்ஸ் குறித்த சில
பேட்டிகள் , நண்பர்களின் படங்கள் , நான் வாங்கிய நூல்கள் விரைவில்....