புதன், 15 ஆகஸ்ட், 2012

ஒரு கல்லூரி கொண்டாட்டம் ...




மீண்டும் நான் கல்லூரி பருவத்திற்கு வந்து விட்டேனோ என்ற என்னத்தில் திக்குமுக்காடிப்போனது இந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக திருவிழா...

நீண்டட்களாக வலையில் கிண்டலடித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பட்டாளம் ஒன்றுகூடினால் கேட்கவேண்டுமா?.....  ஈரோடு விஜய் சொன்னது போல பலவருடங்கள் பழகிய நட்பு குழுமமாக காட்சியளித்தது அன்றயதினம். மணிக்கணக்கில் நேரம் போனது தெரியாமல்  அரங்கம் எண் 125 க்கும் 27&28 க்கும் ஓடிக்கொண்டு வரும் புதிய  வாசகர்களுக்கு  லயன் முத்துவிற்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தோம்

 பல நாட்களாய் வலைப்பதிவில் பல முகங்களுக்குபின்னால் ஒளிந்துகொண்டிருந்த நண்பர்களை இப்படித்தான் இருப்பார்கள் என ஒரு கற்பனையில் ஒரு முகத்தை வரைந்திருப்போம் ஆனால் நேரில் பார்க்கும்பொழுது அதற்கு நேர்மாறாக காட்சியளிப்பார்கள் அதிலும் ஒரு ஆச்சரியம் இருப்பதை மறுக்கமுடியாது

 
சாத்தான், ஈரோடு விஜய், ஆடிட்டர் ராஜா, மாயாவி,சிபி இவர்களுடன் அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் என அந்த மகிழ்வான தருனங்களை விவரிக்க இரண்டு நாட்களாக தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடி கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த  லயன் ஆசிரியர் விஜயன், கிங் விஸ்வா வராதது மட்டும்தான் மனக்குறை.  


புத்கத்திருவிழா இன்றுடன் ( 14/8/2012) முடிவடைகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்து பதிப்பக உரிமையாளர்கள் சீனிவாசன்,மாணிக்கம்,நாகப்பன், பல்லவி பதிப்பகத்தின் இயக்குனர் நடராஜன், நண்பர் செல்வராஜ், ஈரோடு புத்தக திருவிழா நிர்வாகிகள், ஆசிரியர் விஜயன் , அண்ணாச்சி இராதகிருஷ்ணன், அடிக்கடி தொலைபேசியில் ஆதரவளித்த கிங் விஸ்வா, இது நாள் வரை எனது வலைப்பதிவில் பின்னூட்டமிட்டு அதற்கு உத்வேகம் அளித்த நண்பர்கள்   மற்றும் வந்திருந்த சிங்கத்தின் முகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

சில வாசகர்களின், பதிப்பகத்தாரின் பேட்டி ( சொற்பெழிவு நடந்த பொழுது எடுத்ததால் சற்று  இரைச்சலாக இருக்கும்) 
 
நீண்ட நாள் வாசகர் : சக்தி நல்லசிவம் (வாசகர் , செய்தி வாசிப்பாளர், மேடை பேச்சாளர்)
 

 

நீண்ட நாள் வாசகர் : பழனிச்சாமி


 
நீண்ட நாள் வாசகர் : ஆடிட்டர் இராஜா - பள்ளிபாளயம்
 
இந்து பதிப்பகத்தின் மூன்றாம் தலைமுறையின் எண்ணங்கள்....

 
காமிக்ஸ் நண்பர்கள் :  
 பயங்கர மின் அதிர்வுகளுக்கு பின்னர் தாக்குதலுக்கு உட்பட்டவர்
தாக்குதல் நடத்திய நபர்....

இயல்பு நிலை திரும்பிய பின்....

ஆரம்ப படத்தில் மின் அதிர்வுக்குள்ளானவர் நமது நண்பர் திருப்பூர் சிபி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நபர் நீங்கள் அனுமானித்த அதே கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா…


புனித சாத்தான், கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா, திருப்பூர் சிபி, ஆடிட்டர் இராஜா

மீண்டும் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு  (2-8-2013 முதல் 13-8-2013 வரை....)
இப்பொழுதே அழைப்பு விடுக்கிறேன் நண்பர்களே.... நன்றி!.....

புத்தக திருவிழா முடிந்தாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை...  காமிக்ஸ் குறித்த சில பேட்டிகள் ,  நண்பர்களின் படங்கள் , நான் வாங்கிய நூல்கள் விரைவில்....


78 கருத்துகள்:

  1. அந்த மகிழ்சியான தருணங்களை மீண்டும் கண் முன் நிறுத்தியமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  2. நன்றி

    ஷுக்ரியா

    தேங்க்ஸ்

    நன்றிலு.

    பதிலளிநீக்கு
  3. நண்பர்களை நேரில் சந்திக்க இயலவில்லை. இருப்பினும் அந்த குறையை போக்கியது உங்களின் ப்ளாக்.

    நன்றிகள் ஒரு கோடி.

    பதிலளிநீக்கு
  4. இப்போதுதான் தூங்கலாம் என்று நினைத்து கணினியை ஆஃப் செய்துவிட்டு வந்தால் அந்த நேரத்தில் இந்த பதிவு.

    அட்டகாசம்.

    இதுபோல அயராது உழைக்கும் தீவிர வாசகர்களே நமது சிங்கத்தின் வெற்றிக்கு முழுக்காரணம்.

    இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்படை தோற்கின் எப்படி வெல்லும்?//
      நன்றி படைத்தளபதியாரே!

      நீக்கு
  5. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
    அகநக நட்பது நட்பு!

    இங்கே பொருத்தமாக இருக்கும் என்பதால் இக்குரல்

    (வார்த்தை பிழைகள் இருந்தால் பொறுத்தருள்க :) )

    பதிலளிநீக்கு
  6. நன்றி ஸ்டாலின் பல முகம் தெரியாத நண்பர்களின் முகங்களை காட்டியதற்கு.
    நீங்கள் படம் பிடிப்பதில் பிஸியாக இருந்ததால் உங்கள் முகம் மட்டும் காணவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிருஷ்ணா வ வெ::
      அவரது புகைப்படத்தை ஃபோட்டோ ஷாப் கொண்டு அழகுபடுத்திக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்! ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று நம்புகிறேன் (மிகக் கடினமான பணி என்பதால் ஓரிரு நாட்களாவது ஆகும்தானே! ஹி!ஹி!)

      நீக்கு
    2. vijay Erode : எனது புகைபடத்தை நான் சரி செய்துவிட்டேன். உங்க படத்த பார்த்துட்டுத்தான் நம்ம கணனி ஓவிய நண்பர் ( திரு. குப்பண்ணன்) பின்னங்கால் பிடரியில் அடிக்க ஒடிவிட்டார் . அதை சரி செய்ய Microsoftல் புதிதாக மென்பொருள் கண்டு பிடித்தால் தான் உண்டாம்....

      நீக்கு
    3. ஈரோட்டாரே புலி இத்தனை நாள் பதுங்கியது இப்படி பாய்வதற்குத் தானா!

      நீக்கு
    4. விடாக்கண்டன் VS கொடாக்கண்டன் :))
      .

      நீக்கு
  7. பதில்கள்
    1. steel claw::
      நண்பரே! கிருஷ்ணா வ வெ -க்கு நான் அளித்த பதிலை நீங்கள் பார்க்கவில்லை போலிருக்கிறது!

      நீக்கு
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா:
      உங்கள் மின் அதிர்வுக்கு ஒருத்தர் வாங்கிய அடிபோதாதா?....

      நீக்கு
    3. இப்பத்தான் மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறேன் ஐயா :))
      .

      நீக்கு
  8. இளமையான பதிவு! மாயாவிக்கு வயதாகி விட்டது கண்கூடாக தெரிகிறது! ;) திருப்பூர் சிபியின் போட்டோ அட்டகாசம்! :) புத்தக கண்காட்சியில் உங்களுடைய சிறந்த பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்!

    நண்பரின் பதிவிற்கு தமிழ்மணத்தில் ஆதரவளியுங்கள்:
    http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1181447

    ஸ்டாலின், ஓட்டுப்பட்டை பிரச்சினையை சீக்கிரம் சரிப்படுத்துங்கள்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Karthik Somalinga://மாயாவிக்கு வயதாகி விட்டது//
      அடிக்கடி கரண்டுகிட்ட போகாதிங்கன்னு சொன்னா கேட்டாத்தானே......
      //ஓட்டுப்பட்டை பிரச்சினையை சீக்கிரம் சரிப்படுத்துங்கள்//

      நீங்கள் கூறியபடி செய்தேன் முடியவில்லை .... மின் அஞ்சலில் தொடர்பு கொள்கிறென்

      நீக்கு
    2. // இளமையான பதிவு! மாயாவிக்கு வயதாகி விட்டது கண்கூடாக தெரிகிறது! ;) திருப்பூர் சிபியின் போட்டோ அட்டகாசம்! //

      சாக்கிற்கு முன்பா பின்பா நண்பரே ;-)
      .

      நீக்கு
  9. மயிர்கால்கள் குத்திட்ட நிலையில்......

    Hair-ரே இல்லாத போது எப்படி மயிர்கால்கள் குத்திட்டிருக்க முடியும் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ponchandar::
      மயிர்கால்கள் என்று அவர் குறிப்பிட்டது, ஒருவேளை கால்களில் உள்ள மயிராக இருக்குமோ?!!

      நீக்கு
    2. Ponchandar:முடி இல்லாத போதே இப்படி என்றால் ...

      நீக்கு
  10. ஈரோட்டாரே, சபாஷ் சரியான பதிவு. அட்டகாசம் செய்துவிட்டீர்கள் போங்கள். மின்சாரம் பாய்ந்த சிபிச்சக்ரவர்த்தியின் போட்டோ செம ஜாலி.

    ஸ்டீல் க்ளாவை விட்டு விட்டீர்களா, அப்படியே பிடித்து க்ரிட்டில் இணைப்பு கொடுத்திருந்தால், தமிழக மின் பற்றாக் குறை ஓரளவிற்கு தீர்ந்திருக்கும்.

    ஈரோடு விஜயின் குறும்பான பின்னூட்டங்கள் மனதை லேசாக்குகின்றன.

    அவரது //நண்பர் ஸ்டாலின் அவர்களே, நேற்று என்னால் புத்தகத் திருவிழாவிற்கு வர இயலவில்லை என்பதால், நேற்றும் முருகேசனோ, குமரேசனோ காமிக்ஸை தேடி ஓடிய சம்பவங்கள் ஏதேனும் நடந்திருந்தால் அதை தங்கள் வலைப்பதிவில் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.//

    //அவரது புகைப்படத்தை ஃபோட்டோ ஷாப் கொண்டு அழகுபடுத்திக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்! ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று நம்புகிறேன் (மிகக் கடினமான பணி என்பதால் ஓரிரு நாட்களாவது ஆகும்தானே!// போன்ற பின்னூட்டங்களை மிகவும் ரசித்து சிரித்தேன்.

    ஒரு பெரிய வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறீர்கள். மீண்டும் உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    KEEP IT UP.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Balaji sundar::
      நண்பரே! எனக்கு ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது. சென்றவாரம் நாம் சந்தித்து பேசிவிட்டு கிளம்பும் தருவாயில் உங்கள் பாக்கெட்டில் ஒரு 100 ரூபாய் தாளை வைத்து அழுத்திவிட்டு, என்னைப்பற்றி ஓரிரு நல்ல வார்த்தைகளை பின்னூட்டமிடுமாறு தங்களைக் கேட்டுக் கொண்டேன். குறிப்பாக, அதை நமது நண்பர் ஸ்டாலினின் வலைத்தளத்தில் பின்னூட்டமிடுமாறு மன்றாடினேன்.
      நான் எதிர்பார்ததைவிட மிக நன்றாக எழுதி என்னைத் திக்குமுக்காடச் செய்தமைக்கு...
      நன்றி! நன்றி! நன்றி!

      நீக்கு
    2. நண்பரே பாலாஜி சுந்தர், என்னை கரெண்ட்டு கம்பத்துல தொங்க விட பாக்குறீங்களே?விஜய எப்போ பாத்தீங்க ?ஈரோடு போனீங்களா? எனக்கிது தெரியாம போச்சே ?விஜய் என்டையும் சொல்லீர்க்கலாமே?

      நீக்கு
    3. விஜய் ஈரோடு, நீர் கிளம்பும் முன் 100 ரூபாயை என் பாக்கெட்டில் வைத்து மன்றாடி கெஞ்சியது, அங்கு நிலவிய பேரிரைச்சலில், என் காதில் சரியாக விழவில்லை. நீர் கிளம்புவதை ஈரோட்டாரிடம் சொல்ல வேண்டாம் என்றும், உமது சார்பான இரவு விருந்துக்கு ரூபாய் 100ஐ கொடுக்கிறீர்கள் என்றும் நினைத்து, நீர் கிளம்பிய பின் நண்பர் ஸ்டாலின் பில் செட்டில் பண்ணுவதற்கு அந்த பணத்தை நீங்கள் கொடுத்ததாக கொடுத்துவிட்டேன். நீர் அருந்திய மூலிகை கஷாயத்திற்கே 100 ரூபாய் போதவில்லை, நல்லவேளை புத்தக கண்காட்சி முடிவடைந்தது, இல்லையென்றால் அவர் கதி அதோகதிதான் என்று ஈரோட்டாரும் முனுமுனுத்துக் கொண்டே பில்லை செட்டில் செய்தார். இப்போது தான் விஷயம் தாமதமாக புரிகிறது. எனக்கு இப்போது நீங்கள் தரவேண்டிய பணத்தை, ஒலக காமிக்ஸ் ரசிகர் கூறியிருக்கும் கடைக்கு சென்று, காமிக்ஸாக வாங்கி அனுப்பிவிடுங்கள். நீங்கள் அனுப்பப் போகும் காமிக்ஸுக்கு அட்வான்ஸாக உங்களுக்கு நன்றிகள் பல.

      நீக்கு
    4. கோயம்புத்தூர் ஸ்டீல் க்ளா: அட நீங்க வேற, ஈரோடு விஜய ரோம்ம்ம்ப்ப புகழ்ந்துட்டனாம். அதனால இப்ப என்ன கலாட்டா பண்றார். நானே ஈரோடுக்கு வரமுடிமாம போச்சேன்னு வருத்தமாக இருக்கேன். இவர் ஈரோட்டாரை கலாய்ச்சார், அடுத்து சிபியை கலாய்ச்சார் இப்போ அதையெல்லாம் பேலன்ஸ் செய்யறதுக்கு நான் மாட்டிகிட்டேன். இன்னிக்கு தூக்குன மாதிரிதான்.

      நீக்கு
    5. Balaji Sundar: உங்க கலாட்டாவில் நான் கொடுத்த 500 ரூபாய மறந்துடாதீங்க....

      நீக்கு
    6. ஈரோட்டாரே, ஓகே, ஓகே, நீங்கள் நண்பர் விஜயின் சார்பில் ஹோட்டல் பில் செட்டில் செய்ததுதானே, அதை வாழ்நாளில் மறக்க முடியுமா.. எனது டைரியில், ஹோட்டல் கல்லாவில் நீர் உமது பாக்கெட்டை துழாவி செட்டில் செய்த படத்தை ஒட்டி, ஒரு சிறு விவரக் குறிப்பும் எழுதி வைத்திருக்கிறேன் நண்பரே.

      நண்பரே, விஜய் சொன்னபடி உங்க போட்டோவில் போட்டோ ஷாப் மேட்டர் எல்லாம் முடிந்ததா? ரிலீஸ் எப்போது? நாங்கள் எல்லோரும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

      நீக்கு
    7. // ஈரோட்டாரே, சபாஷ் சரியான பதிவு. அட்டகாசம் செய்துவிட்டீர்கள் போங்கள். மின்சாரம் பாய்ந்த சிபிச்சக்ரவர்த்தியின் போட்டோ செம ஜாலி. //

      உங்களுக்கு நடந்திருந்தா அப்போ தெரியும் ;-)

      ஹ்ம்ம்ம் என்ன நண்பரே நீங்களுமா !!!!!!!!!!!!!
      .

      நீக்கு
  11. இனி நிச்சயம் ஹேர் ஸ்டைலுக்காக நிறைய பேர்கள் உங்களை தேடி வருவார்கள்.

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. கொளுத்தி போட இன்னைக்கு வேற இடம் கிடைக்கலயா?...

      நீக்கு
    2. ஈரோட்டாரே வருத்தப் படாதீர்கள், நண்பர் செழியன் என் பதிவினுடைய கமெண்டு வாலிலும் கொளுத்தி விட்டிருக்கிறார்.

      ஆமாம், ஈரோடு பெரும்புள்ளிக்கும் சூப்பர் ஸ்டாரோடு கதாநாயகியாக நடித்த மூன்று எழுத்து நடிகைக்கும் தொடர்பாமே, செழியன் கொளுத்திய புகையில் வந்த மேட்டர் இது. மூன்றெழுத்து நடிகையின் பெயர் என்ன? சொல்வீர்களா?!
      ;-))))

      நீக்கு
    3. அட கடவுளே ............ நீங்களுமா?........ இன்னைக்கு பகல் பொழப்பும் போச்சா?..........

      நீக்கு
    4. // கொளுத்தி போட இன்னைக்கு வேற இடம் கிடைக்கலயா?... //

      கொளுத்தி போட்டதே நீங்கதானே அண்ணாச்சி ;-)
      .

      நீக்கு
    5. //கொளுத்தி போட்டதே நீங்கதானே அண்ணாச்சி ;-)//

      உங்கள் பங்களிப்பு இல்லாமலா?........

      நீக்கு
  13. உள்ளேன் அய்யா.(சாத்தான் இங்கேயும் வந்துவிட்டான்.ஹிஹி).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கய்யா வாங்க... வேதாளம் முருங்கமரம் தாவுதே.....

      நீக்கு
    2. வாருங்கள் ஹிஹி, உங்களை இங்கு ஈரோட்டார் வரவேற்பதை விட, நானும், ஸ்டீல் க்ளாவும், விஜயும் சேர்ந்து வரவேற்பதே சரியானது. ஈரொட்டரின் தமிழ் காமிக்ஸ் கடந்த பாதையில் எங்கள் வரவுக்கு பிறகு தமிழ் காமிக்ஸ் கஷ்டப்பட்டு கடந்த பாதை என்று மாற்ற போகிறாராம். நீங்களும் எங்கள் ஜோதியில் (எந்த பரங்கிமலை ஜோதியா என்று கேட்காதீர்கள்) கலந்துவிட்டால், அடுத்து ஈரோட்டார் அவர் ப்ளாகின் பெயரை தமிழ் காமிக்ஸ் மிக மிக கஷ்டப்பட்டு கடந்த பாதை என்று மாற்றினாலும் சொல்வதற்கில்லை. ;-)))))))

      நீக்கு
  14. நண்பர் ஸ்டாலின்

    வணக்கம். பணிச்சுமை காரணமாக பதிவிடவும், தங்களிடம் பேசவும் முடியாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.

    அனைத்து போட்டோவையும் பார்க்கும் பொழுது, மிக சிறப்பான சில தருணங்களை தவற விட்டு விட்டோமோ என்ற ஆதங்கம் மனதில்
    எழுகிறது.

    உங்களது பங்களிப்பும், உழைப்பும் உண்மையாகவே பாராட்டப்பட்ட வேண்டியது.

    நண்பர்கள் ஈரோடு விஜய், புனித சாத்தான், திருப்பூர் சிபி, கோவை ஸ்டீல் கிளைவ் (?), ஆடிடோர் ராஜா அனைவரையும் சந்திக்க முடியாமல் போனது. நண்பர்களே விரைவில் சிந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

    நன்றி !!!
    திருப்பூர் ப்ளுபெர்ரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நண்பர்களே விரைவில் சிந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
      //
      வெகு தூரம் இல்லை....

      நீக்கு
  15. // நண்பர்களே விரைவில் சிந்திப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. //

    சந்திப்போம் :)

    பதிலளிநீக்கு
  16. நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு,

    தற்போது ஈரோட்டு வாசிகளுக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் போட்டுத் தாக்குகிறார்கள். ஒரு பின்னூட்டம் போட்டால்கூட சரமாரியாக வெடித்துத் தள்ளுகிறார்கள். பராக்கிரமச்சாலிகள் சிலர் நமது பின்னூட்டங்களை மண்ணோடு மண்ணூட்டங்களாக்குவதை நீங்கள் உணரவில்லையா?
    வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் - என்றபோதிலும், தொடர்ந்து தோல்வியை மட்டுமே சந்திப்பது எவ்வகையில் வீரனுக்கு அழகாகும்? மதியூகியான உங்களுக்கே இந்த நிலை எனும்போது அப்பாவியான என் நிலையைக் கேட்கவும் வேண்டுமா?!
    நிலவரம் சரியில்லாதபோது அடக்கிவாசிப்பதுதானே அறிஞர்களுக்கு அழகு!
    (இதையெல்லாம் எப்படியோ முன்கூட்டியே அறிந்துகொண்ட நம் சாத்தான் அடங்கிக் கிடப்பதைப் பாருங்கள்!)
    எதிரிகள் பலசாலிகளென்றால் நாம் பதுங்கிக்கொள்வதும் வீரமே!
    பதுங்குவோம்...
    பாய்வோம்...

    வீரத்துடன்,
    விஜய்

    பதிலளிநீக்கு
  17. STYLE : Ginhampton
    FABRIC: S/JERSEY 165
    SIZE FOR COSTING: L White 201 75
    Qty
    Average 100.500 37.5
    BODY LY.RIB
    24's 201.00 100.50 MSMT DIA ALLOW FIN DIA
    Knitting 10.00 65.00
    Dyeing 75.00 37.50 CHEST 21 2 23
    Compacting 24.00 24.00 LENGTH HSP 28 4 32
    310.00 227.00 SLV LENGTH 8 1.7 9.7
    8% PROCESSING LOSS 26.96 19.74
    336.96 246.74 TOTAL LENGTH 41.7

    Body fabric cost 68.81 METRE SQ 1.2375
    LYCRA RIB 7.00 CONS 204
    75.81
    TOTAL 0.204
    75.81 NECK RIB 0.01
    CMT 34.00
    Chest Print 27.00
    Sleeve Print 5.00
    Back Print 3.00
    Yoke Fabric Black 0.00
    Neck Emb 4.00
    Accessories 4.75
    Neck Tape 0.00
    Garment Wash 8.00
    Lab Test 0.50
    Packing 5.00
    167.06
    Profit & wastage 22 % 36.75
    203.81
    Revised
    Final Price 204/-

























































































    ஆஹா நம்மள வச்சு ஒரு போட்டோ மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லி அத வச்சு ஒரு படமே எடுத்து தள்ளிவிட்டீர்களே ;-)
    .







    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சிபி இப்போதான் அதிர்ச்சி அடைந்துள்ளீர்கள் போலுள்ளதே

      நீக்கு
    2. cibiசிபி: ஸ்டீல் க்ளா கொடுத்த ஷாக்கில் குழப்பமடைந்தது இத்தனை நாள் ஆகியும் இன்னும் தெளியவில்லையா?

      உமது கம்பெனி கொட்டேஷனை போட்டு எங்க எல்லோருக்கும் ஷாக் கொடுக்கறீங்க!

      நல்லவேளை, காப்பி பேஸ்டில் ஏதோ கொட்டேஷன் வந்தது. உங்க நெருக்கமானவங்களுக்கு அன்போட எழுதிய இமெயில் ஏதும் காப்பி பேஸ்ட் செய்யாம விட்டீங்களே, அது வரைக்கும் எல்லோரும் (உங்களுடன் சேர்த்து) தப்பித்தோம்.

      நீக்கு
  18. அய்யய்யோ என்ன கொடும சார் இது

    நான் ஆர்டருக்கு கொடுத்த Costing இங்கே வந்திருக்கிறதே , Stalin சார் ஏதாவது மந்திரம் மாயம் போட்டாரான்னு தெரியலையே
    :((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. CIBI::

      ?????
      உங்களுக்கு வேலைப்பளு அதிகமென்பதை இப்படியெல்லாமா உணர்த்துவது?!!

      நீக்கு
    2. ஆஹா வந்துட்டாரையா .....
      என்ன நண்பரே நல்லாதானே பேசி போய்கிட்டு இருந்துச்சு எப்புடி சைக்கிள் கேப்புல நம்ம பாலாஜி சுந்தர் அண்ணாச்சி பாக்கெட்டுல நூறு ரூவா தாள வெச்சீங்க
      பக்கத்துலையே தானே நான் இருந்தே நம்மள அதுக்குள்ளார மறந்திட்டீங்களே ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் ;-)
      .

      நீக்கு
    3. //உங்களுக்கு வேலைப்பளு அதிகமென்பதை இப்படியெல்லாமா உணர்த்துவது//

      நல்ல வேலை வீட்டு லாண்டரி கணக்கை எழுதாம விட்டுட்டாருன்னு சந்தோஷப்படலாம்

      நீக்கு
  19. // மீண்டும் நான் கல்லூரி பருவத்திற்கு வந்து விட்டேனோ என்ற என்னத்தில் திக்குமுக்காடிப்போனது இந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக திருவிழா... //

    முற்றிலும் உண்மை நண்பரே

    // சாத்தான், ஈரோடு விஜய், ஆடிட்டர் ராஜா, மாயாவி,ஸ்டாலின் இவர்களுடன் அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் என அந்த மகிழ்வான தருனங்களை விவரிக்க இரண்டு நாட்களாக தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடி கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த லயன் ஆசிரியர் விஜயன், கிங் விஸ்வா வராதது மட்டும்தான் மனக்குறை. //ஆமா ஆமா ஆமா

    நேரம் போனதே தெரியவில்லை நண்பர்களே

    // மீண்டும் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு (2-8-2013 முதல் 13-8-2013 வரை....)
    இப்பொழுதே அழைப்பு விடுக்கிறேன் நண்பர்களே.... நன்றி!..... //

    ஹ்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் மறுபடியுமா ........................
    முடியல அழுதிடுவேன் ( ஸ்டீல் கிளா ஷாக்க நினைச்சாலே என்னோட மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கிறது ;-) )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //முடியல அழுதிடுவேன்//
      அடுத்த முறை உங்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட்டெல்லாம் கிடயாது......கருப்பு கிழவியை விட்டு டைரக்டா ஊடு சூனியம்தான் .....

      நீக்கு
    2. கருப்புக் குமரிகளை வைத்து உங்க ஊடு சூனிய வேலைகளைச் செய்யக்கூடாதா ஸடாலின் சார்? ஊடு சூன்யமும் உற்சாகமாகிடுமே! ஹிஹிஹி!

      நீக்கு
  20. ERODE STALIN: பாருங்க! சந்தடிசாக்கில் சிபி கூட உங்களை ' மந்திரவாதி' ஆக்கிட்டார்.
    இப்படியே போனா சீக்கிரமே யாராவது உங்களை குடுகுடுப்பைகாரன் ஆக்கிடுவாங்க போலிருக்கே!

    (ஒரு ஐடியா! குடுகுடுப்பைக்காரன் பற்றி ஒரு சிறப்புக் கண்ணோட்ட வலைப்பதிவு வெளியிடலாமே?! தலைப்புக்கூட 'குடுகுடுப்பைக்காரன் கடந்த பாதை' என்று வைத்தால் நன்றாக இருக்குமே?!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குடுகுடுப்பைக்காரன் கடந்த பாதை' என்று வைத்தால் நன்றாக இருக்குமே//
      உங்கள் கடந்த பாதையை விளம்பரப்படுத்த இப்படி ஒரு யுக்தியா?

      நீக்கு
  21. நண்பரே, அடுத்த பதிவு காமிக் கான் தான் என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லையா உங்களுக்கு ?

    பதிலளிநீக்கு
  22. நண்பரே,பழய புத்தகங்களை பதிவிட மிகவும் ஆவலாகத்தான் உள்ளது ஆனால் வேலைப்பளு துரத்துகிறதே . ... ஈரோடு புத்தகத்திருவிழா பதிவே இன்னும் ஒன்று பாக்கியுள்ளது . இதில் எங்கு காமிக்கானுக்கு தாவ முடியும் ..... அதற்குத்தான் நமது BPK உள்ளாரே....
    மதுரை புத்தக கண்காட்சி வரும் 30-8-2012முதல்10-9-2012 வரை உள்ளது நண்பர்கள் முடிந்தால் சென்றுவரலாமே!

    பதிலளிநீக்கு
  23. :-O

    என்ன்ன்ன்ன....... புத்தகதிருவிழா பதிவே இன்னும் பாக்கி இருக்கிறதா?

    அதை விட்டு எடிட்டர் ப்ளாகில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கீறீர்களா...

    எடிட்டருக்காக கோயம்புத்தூரார் எழுதிக் கொண்டுள்ளார். உங்கள் அடுத்த பதிவை மிகவும் விரைவில் எதிர்பார்க்கிறேன் நண்பரே.
    ;-)) Just Joking.

    அவசரமில்லை, நன்கு நிதானமாக மெருகேற்றியே பதிவிடுங்கள்.

    Bye Bye.. Goodnight.

    பதிலளிநீக்கு
  24. Stalin sir,
    இன்னிக்கி மதியம் எனக்கு ஒரு Phone call வந்துச்சு; யாரோ ஹாலிவுட்காரங்களாம்; நீங்க கொடுத்த photo ஒன்னை அவங்க என்னமோ ரொம்பக் கஷ்டப்பட்டு கிராபிக்ஸ் வொர்க் எல்லாம் பண்ணியிருக்காங்களாம்; அவங்களுக்கு ஏதோ பேலன்ஸ் அமௌண்ட் நீங்க தரவேண்டியிருக்காம்; அதைக் கொடுத்திட்டா கிராஃபிக்ஸ் பண்ணிய ஃபைலை உடனே அனுப்பிவைக்கிறாங்களாம். உங்க ஃபோன் 'நாட் ரீச்சபுள்' வந்திச்சாம்; அதான் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாங்களாம். என்னவோ எனக்கு ஒரு எழவும் புரியல. நீங்களே அவுங்ககிட்ட பேசிக்கங்க.

    பதிலளிநீக்கு
  25. Guys here is a great forum for tamil comics

    http://tamilcomicsjunction.forumotion.in/

    Visit and have a great time!!

    பதிலளிநீக்கு
  26. நண்பர்களே! இன்று 30/8/2012 முதல் மதுரையில் ஆரம்பித்துள்ள புத்தக கண்காட்சியில் லயன் , முத்து &cc காமிக்ஸ்கள் ஸ்டால் எண் 125,126 "இந்து பப்ளிகேஷன்"ஸில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அருகில் உள்ள நண்பர்கள் இந்த இனிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  27. இன்று (31/8/2012 ) 11 வது திருமண நாள் விழா கொண்டாடும் நமது காமிக்ஸ் நண்பர் ஆடிட்டர் ராஜாவுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆடிட்டர் ராஜாவிற்கு வாழ்த்துக்கள்.

      இன்றுதான் தமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியும், சிறுவர் இலக்கிய சிந்தனை சிற்பியுமான திரு அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் அவர்களின் பிறந்த நாளும்கூட. தன்னுடைய பதின்ம வயதினை முடித்துக்கொண்டு இருபதுகளில் காலடி வைக்கும் அன்னாரை வாழ்த்த (எனக்கு) வயதில்லை என்பதால் வணங்குகிறேன்.

      நீக்கு
  28. பட்டைய கிளப்பி இருக்கீங்களே தலைவா அறுபதொன்பதாவது ஆளா வந்தாலும் வந்தொம்லே நாங்களும் இருக்கொம்லே! நண்பர் சிபி, ஸ்டீல் ஆகியோரை காட்டி கொடுத்தமைக்கு நன்றி. நண்பர்களே வாழ்க நலமுடன்! என்றும் அன்புடன் ஜானி

    பதிலளிநீக்கு
  29. நண்பர்களே! இன்று (2/9/2012) பிறந்த நாள் காணும் சாத்தானுக்கு நல்வாழ்த்துக்கள்........(ஆமா சாத்தானுக்கு பிறப்பு உண்டா?.... ஹி ஹி ஹி )

    பதிலளிநீக்கு
  30. நண்பர்களே

    இந்த வதந்தியை நம்பி நான் நேராக வாழ்த்து கூற (?) திரு புனித சாத்தான் அவர்களின் இல்லத்திற்கே சென்று விட்டேன். பின்பு தான் தெரிய வந்தது அது நமது நண்பர் ஸ்டாலின் அவர்களால் கிளப்பபட்ட ஒரு வதந்தி என்று.

    சாத்தான் அவர்களது வீடு நமது மாயஜால மன்னன் மண்ட்ரக் இல்லம் போல உள்ளது. ஆமாங்க அவர் காமிக்ஸ் புக்ஸ் வைத்துள்ள இடத்தை சாதாரண மானிடர்கள் அடைவது சுலபம் அல்ல. சிக்கலான பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி புத்தகங்களை வைத்துள்ளார்.

    நான் செய்த புண்ணியம் அவரது பொக்கிஷங்களை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது, நன்றி திரு புனித சாத்தான் அவர்களே. அது மட்டும் அல்ல அவரது குடும்பத்தினரையும் சந்திக்க கூடிய வாய்ப்பும், சில மணித்துளிகள் அவர்களுன் உரையாடவும் வாய்ப்புகள் கிடைத்தது மிக சந்தோஷமான தருணம்.

    திரு ஸ்டாலின் நேற்று மாலை முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. திரு ஈரோடு விஜய் அவர்கள் நான் செய்த போன் காலை அட்டென்ட் செய்யவில்லை (கோயம்புத்தூர் ஸ்டீல் கிளவ் உடன் ஏதேனும் மீட்டிங்க்ஸ் இருந்திருக்கலாம் )

    நண்பர் திரு ஆடிட்டர் ராஜா அவர்களது மொபைல் நம்பர் என்னிடம் இல்லாததாலும், நேரம் சற்று குறைவாக இருந்தாலும் அவரை அடுத்த முறை ஈரோடு செல்லும் பொழுது சந்திக்க ஆவல் :)

    நேற்றைய நாளை மறக்க இயலாத நாளாக மாற்றிய திரு புனித சாத்தான் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கும் நன்றிகள் பல...

    திருப்பூர் ப்ளுபெர்ரி

    பதிலளிநீக்கு
  31. காமிக்ஸ் நண்பர் வங்கி மேலாளரின் சேலம் குமாரின் திருமண நாளை ஆர்வக்கோளாரால் சாத்தானின் பிறந்த நாளாக நினைத்து விட்டேன்( சாத்தானின் பிறந்த நாள் , திருமணதினம் இரண்டையும் முன்தினம்தான் குறித்து வைத்தேன்)

    நான் முதன் முதலாக பிறந்த நாள் தேதி வாங்கிய காமிக்ஸ் நபர் யார் தெரியுமா? ஆசிரியர் விஜயன் . அவரிடம்தான் 1989 ஆம் ஆண்டு அவரை முதலில் சந்தித போது வாங்கிய ஆட்டோகிராப்பில் எழுதிக்கொடுத்தார். அந்த ஆட்டோகிராப் வீடு மாற்றும் பொழுது எங்கோ இடம் மாறிவிட்டது...

    பதிலளிநீக்கு
  32. Ungal jothi il (jothimeena alla) nanum vanthu vidukiren nanbaray..!

    பதிலளிநீக்கு
  33. Ungal jothi il (jothimeena alla) nanum vanthu vidukiren nanbaray..!

    பதிலளிநீக்கு