வியாழன், 31 ஜனவரி, 2013

கோவை ஸ்டீல்க்ளாவுடன் ஒரு "மரண சர்க்கஸ்"

குடியரசு தினத்தன்று கொஞ்சமாவது சுதந்திரமாக இருக்கலாமென கோவையில் நடைபெற்ற மின் மற்றும் மின்னியல் துறை சம்பந்தமான வர்த்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். சரி போகிறவாக்கில் "கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா " வைசந்தித்து பல மாதங்களாகிற்றே என ஒரு சந்திப்பிற்கு நேரம் வகுத்தேன். மனிதர் 3.30க்கு சரியாக பிக்கப்பிற்கு வந்துவிட்டார்.
இரும்புக்கை மாயாவியை ஆசிரியர் விஜயன் மூட்டைகட்டிவிட்டதால் அந்த சோகத்தில்  கார்சன் கட்சிக்கு தாவும் விதத்தில் தாடிவளர்க்க ஆரம்பித்துவிட்டாராம் நமது கோவைக்காரர்.  தனது குதிரையில் (பல்ஸர்) என்னை அமர்த்திக்கொண்டு தனது இல்லத்திற்கு அழைத்து சென்றார். காமிக்ஸ் பற்றிய பேச்சு வந்த பொழுது புத்தகங்களை பத்திரமாக வைத்திருப்பதாகவும் பாதுகாப்பு அதிகம் என்றும் சேலஞ் செய்தார். புரியாமல் விழித்துக்கொண்டிருந்த எனக்கு அதன் அர்த்தம் அவர் வீட்டு வாசற்கதவை அடைந்தபொழுதுதான் புரிந்தது .
மிகப்பெரிய இரும்புக்கோட்டையின் வாசல் அருகே கருப்புக்கலரில் ஒரு பைரவன் காவல்  இருக்க பார்த்து வாருங்கள் என அசால்ட்டாக சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தார்   இதைப்போல எத்தனை பார்த்திருப்பேன் என நினைத்து  பந்தாவாக உள்ளே நுழைந்த எனக்கு அடுத்த அதிர்ச்சியாக மற்றுமொரு நாலுகால் நண்பர் வரவேற்பு . " இதற்கே பயந்தால் எப்படி இன்னும் 7 பாக்கியிருக்கு" என்று அவர் கூறியபொழுது உண்மையாலுமே எனக்கு  உதரலெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு நாலுகால் பாதுகாவலர் சல்யூட் அடிக்க அவரது வீடு கம் அலுவலகத்தை அடந்தேன்.

இப்ப சொல்லுங்க என்னோட காமிக்ஸை யாராவது கைவக்க முடியுமா? என்று சொன்னபடியே தனது புத்தக சேகரிப்பை எடுத்து காண்பித்தார் . அதனை பார்வையிட்ட எனக்கு இந்த 7 புத்தகத்திற்குதான் 9 நாய் காவலா என நான் நற... நறக்க.... மனிதர் அதனை கண்டுக்காமல் லார்கோ ரேஞ்சுக்கு தனது ஷேர் மார்க்கட் தொழில் பற்றியும் சென்சக்ஸ் புள்ளிகளைபற்றியும் அள்ளி விளாசினார். சின்டெக்ஸ் டேங்க் பற்றி மட்டுமே தெரிந்த என்னை பார்த்து இறுதியாக "புரிந்ததா " என்று கேட்டபொழுது உங்கள் பின்னூட்டத்தைவிட  இது புரிகிறது என சொல்லிவைத்தேன். அவருடைய தாயாரின் அன்பான உபசரிப்புக்கு பின்னர் பழய புத்தக கடையை பார்த்து வர ஆயத்தமானோம்

. போகும் வழியில் பாதியில் குதிரை நின்றுவிட ..சிரித்தாவாரே குதிரைக்கு புல்லு வைக்க மறந்துட்டேன் என பெட்ரோல் கிணறு தேடி ஓட்டிக்கொண்டு போனார். எங்கே குதிரையை நம் தலையில் கட்டிவிடுவாரோ என ரோட்டுக்கு மறுபக்கம் ஒன்றுமறியாதவனாக நடக்க ஆரம்பித்தேன்

மாலை சிற்றுண்டிக்காக  இந்தா இந்தா  என 15 கிலோ மீட்டர் தள்ளியுள்ள சாந்திகீர்ஸ் கேண்டீனுக்கு அழைத்து சென்றார். மிக குறைந்த விலையில் ( உ.ம் -ரொமாலியன்ரொட்டி+பன்னீர் பட்டன் = 40 மட்டுமே) மிகத்தரமான , சுவையுடன் சுத்தமாகவும் இருந்தது. கூட்டம் சினிமா தியேட்டர் போல அலைமோதியது ( இது குறித்து ஒரு பதிவே போடலாம்)

கிளம்பும் போது 7 மணி"ஈரோ-100" பேருந்தை பிடிக்க முடியுமா ?( கோவை  to ஈரோடு இடை நில்லா மற்றும் நடத்துனர் இல்லா பேருந்து ) என  கேட்ட பொழுது எனது நாக்கில் 7.5 குடியிருந்ததை நான் அறியவில்லை. ஹோப் கல்லூரியிலிருந்து குதிரையை ஓட்ட ஆரம்பித்தவர்  அந்த மாலை நேர நெறிசலிலும் 85 ஐ எட்டியபொழுது  எனது அடிவயிற்றில் அண்டா அண்டாவாக புளியை கரைத்து ஊற்றியது. நடு நடுவே கால் தொடைகள் நடு ரோட்டை கூட்டாத குறையாக தொட்ட பொழுது காலையில் படித்த ராசிபலன்வேறு கண்முன்னே டான்ஸ் ஆடி படுத்தியது.
இந்த நிலையிலும்  நான் தான் லார்கோவில் வரும்  சைமன்  உங்களை க்ளை மேக்ஸில் பத்திரமாக சேர்ப்பது உறுதி என ஸ்டீல்க்ளா வீர சபதமிட்டபோது " தேவுடா காமிக்ஸை ஒவரா படிச்சு நம்மள இந்த உலகத்தைவிட்டே அனுப்ப முடிவு பன்னிட்டானே நாமெல்லாம் அந்த அளவுக்கு ஒர்த் இல்லப்பான்னு " மனதில் புலம்பியவாரே , உருப்படியா கைகால் இருந்தால் 100 தேங்காய் உடைப்பதாய் பெயர்தெரியாத சாமிக்கு வேண்டிக்கொண்டேன். ஒரு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்த பொழுது வண்டி முள் மட்டும் ஜீரோவாக வில்லை தேங்காயும்தான் :).
 இந்த மாதிரி ஒரு அசுரப்பயணத்தில் அருகில் வருபவர்கள் வாயில் எப்படி வாழ்த்து செய்திகள் வரும் என்பதனையும் சிக்னல், ஒன்வே இவற்றை எப்படி மிதிக்க வேண்டும் என்பதனையும் போனஸாக கற்றுக்கொண்டேன். 6 நிமிடங்களில் இந்த டிராபிக்கில் 8 கிலோ மீட்டரை  எப்படி கடக்கலாம் என்பதற்கு இந்த இரும்பு மனிதரிடம் டியூஷன் கற்கலாம். 10 நிமிடம் முன்னதாக பேருந்தில் ஏற்றி விட்ட வெற்றி களிப்பில் அவர் வாங்கி கொடுத்த சோடாவில் முகம்கழுவியபடி ஈரோடு புறப்பட்டேன் அவரின் அன்பளிப்பு காமிக்ஸுடன் ( உறைபனி மர்மம்).
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பது எப்படி என்பதனையும் உபசரிப்பில் எப்படி முன்னிற்பது என்பது பற்றியும்  இந்த அன்பு நண்பரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்
நன்றி ஸ்டீல்க்ளா (எ) பொன்ராஜ்.
                        இது தான் கார்சன் தாடியாம் ( என்ன கொடுமை சார்....)            
                                    
                                      இரும்புக்கோட்டை யின் முதல் காவலன்
                                          வீட்டின் வரவேற்பரை காவலன்

                                     
                                                    முதல் மாடி காவலர்

                                                  இரண்டாம் தளக்காவலர்

பின்பக்கக் காவல்
                                      
                                      இந்த புத்தகத்திற்குத்தான் அப்படி ஒரு பில்டப்பா?

அற்புத இதழ் சதிவலையுடன்
                      காமிக்ஸ் இல்லா உக்கடம் பழய இதழ்கள் அங்காடித்தெரு

 உங்கள் வண்டி சர்வீசுக்கு விடும்போது சொல்லுங்க மறுபடியும் வறேன். அதுவரைக்கும் புனிதச்சாத்தானையும் ஆடிட்டரையும் அனுப்பி வைக்கிறேன்

44 கருத்துகள்:

  1. அருமையான பதிவு.நகைச்சுவையுடன் கொடுத்துள்ளீர்கள்.
    என்னையும் அவர் வர கூறிக்கொண்டிருகிறார்.என்னால் தான் செல்ல முடியவில்லை.
    ஏங்க எல்லா காவலர்களும் தூங்கிக் கொண்டு இருந்தால்.
    சுலபமா தட்டிட்டு வந்துரலாம் போல இருக்கே....:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // எல்லா காவலர்களும் தூங்கிக் கொண்டு இருந்தால்.
      சுலபமா தட்டிட்டு வந்துரலாம் போல இருக்கே....:)//
      காவலர்கள் சிப்ட் முறையில் இயங்குகிறார்கள் , சில காவலர்கள் என்னைவிட பெரிய உருவத்தில் பயப்படுத்தியதால் புகைப்படம் எடுக்க முடியவில்லை:)

      நீக்கு
    2. நண்பரே தங்கள் வருகைக்காக காத்திருக்கிறேன் !
      நீங்கள் தட்டி கொண்டு செல்லுமளவிற்கு புத்தகங்கள் இல்லை !

      நீக்கு
  2. காவலர்களுக்கு தண்ணி வைக்கச்சொல்லுங்க. :) பார்க்க பரிதாபமா இருக்கு. :)

    //தனது ஷேர் மார்க்கட் தொழில் பற்றியும் சென்சக்ஸ் புள்ளிகளைபற்றியும் அள்ளி விளாசினார்//

    ஆஹா தலைவர் ஷேர் மார்க்கெட் சேவை எனக்கு தேவைப்படுமே. ஸ்டீலோட போன் நம்பரை கொடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /ஆஹா தலைவர் ஷேர் மார்க்கெட் சேவை எனக்கு தேவைப்படுமே//
      எனக்குத்தான் புரியவில்லையே தவிர ஷேர் மார்க்கெட்டில் மனிதன் படுபிசியாக இருக்கிறார். 24 x 7 அவர் பணியும் அதுதான்.
      அலை பேசி எண் உங்கள் id க்கு அனுப்பி வைக்கிறேன்

      நீக்கு
    2. என்னோட மெயில் ID : pkarthihr@gmail.com
      தொடர்புகொள்ளுங்களேன்.

      நீக்கு
    3. P.Karthikeyan: மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன் நண்பரே!

      நீக்கு
  3. போனது,
    வந்தது,
    கண்டது,
    உண்டது
    எல்லாம் விவரிச்சீங்க.
    ஷேர் மார்க்கெட் தவிர்த்து, காமிக்ஸ் பற்றி வேற என்ன பேசினீங்க? விவரமா போடலாம்ல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காமிக்ஸ் பற்றி வேற என்ன பேசினீங்க?//
      சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்:) :):)
      மனிதரரிடம் காமிக்ஸ் பற்றி பேசினால் லார்கோவை தாண்ட மட்டேன் என்கிறார். ( ஷேர் மார்க்கெட்டில் இருப்பதாலா?) நன்றி நண்பரே!

      நீக்கு
    2. நண்பரே ஒரு காலத்தில் ஆர்ச்சி ,ஸ்பைடர் ,மாயாவி,லாரன்ஸ் ,என ஆக்கிரமித்தார்கள் என் எண்ணங்களை .....பிறகு ஆசிரியர் ரேம்போ,பேட்மேன்,டொனல்ட்,ஸ்கார்பியன் என கண்ணில் காட்டியும் ,காட்டாமலும் ஏமாற்றமடைய செய்தார் .....லக்கி ,சிக் பில் கலக்கினார்கள் ....பின்னர் முழுதுமாக டெக்ஸ் ஆக்கிரமித்தார் ,பின்னர் டைகர்.....ஆனால் தற்போது இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டனர் லார்கோவும் ,ஷேல்டனும் இவர்களை மீறி யாரும் நினைவில் வர மறுக்கிறார்கள் ...அதுவும் மீண்டும் படித்த பொது ஷெல்டன் லார்கோவை தூக்கி விடுவார் போல நினைத்தேன் ,லார்கோவை படித்தால் ஏற்க இயலவில்லை .....இருவருமா சமமோ !யார் சொன்னார் லார்கோவை பெண்கள் மட்டுதான் தேடுவார்கள் என்று .......

      நீக்கு
    3. 13 ஐ மறந்து விட்டேனே ....இல்லை இல்லை இனிமேல்தான் வண்ணத்தின் வீரியத்தில் வர இருக்கிறார் !

      நீக்கு
  4. நண்பர் ஸ்டீல் க்ளவ் அவர்களை மிகவும் விசாரித்ததாக சொல்லுங்க! அவரை சந்திக்க எனக்கு கொடுத்து வைக்கலை! சந்திப்பை சுவாரஸ்ய படுத்திய உங்கள் எழுத்துக்கு நன்றிகள் தோழரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நண்பர் ஸ்டீல் க்ளவ் அவர்களை மிகவும் விசாரித்ததாக சொல்லுங்க! அவரை சந்திக்க எனக்கு கொடுத்து வைக்கலை! //

      நண்பரே .. ஒரு நாள் ஈரோடு / திருப்பூர் / கோவை விஜயம் செய்யுங்கள். நண்பர்கள் அனைவரையும் சந்தித்து விட்டு வரலாம் ...

      நீக்கு
    2. John Simon C : திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் பதிலை வழிமொழிகிறேன்

      நீக்கு
  5. நண்பர் ஸ்டாலின்,

    நீண்ட நாட்களுக்கு பிறகு நகைச்சுவை ததும்ப ஒரு பதிவு உங்களிடமிருந்து... நன்று ...

    இதை போல வரம் ஒரு முறை நடைபெறும் உங்களது காமிக்ஸ் சந்திப்பு பற்றியும் எழுதலாமே ?

    நண்பர் ஸ்டீல் க்ளவ்:

    அருமை (உங்களது பாதுகாப்பு ஏற்பாடுகள்).

    ஸ்டாலின் அவர்களை நீங்கள் ERO100 இல் ஏற்றி விட்ட பிறகு, அவர் KMCH இல் இறங்கி, சிகிச்சை எடுத்து கொண்டதாக நமது நல்ல சாத்தான் தெரிவித்தார். இது உங்களது பாதுகாவலர்களின் வேலையா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //KMCH இல் இறங்கி, சிகிச்சை எடுத்து கொண்டதாக நமது நல்ல சாத்தான் தெரிவித்தார்//
      அதற்குள் விசயம் பரவிடுச்சா? :)

      நீக்கு
  6. அனைத்துக்குமே நன்றி நண்பரே,அன்றைய பொழுதை தங்கள் வரவு இனிமையாய் கழிக்க உதவியது !மீண்டும் சந்திப்போம் !

    பதிலளிநீக்கு
  7. வேகம் என்றால் மட்டுமே விரும்பும் புனித சாத்தானையும்,ராஜாவையும் எதிர் பார்க்கிறேன் !

    பதிலளிநீக்கு
  8. கடந்த புத்தக கண்காட்சியில் என்னை மெய்(முடி ) சிலிர்க்க வைத்தார்

    // அந்த மாலை நேர நெறிசலிலும் 85 ஐ எட்டியபொழுது எனது அடிவயிற்றில் அண்டா அண்டாவாக புளியை கரைத்து ஊற்றியது. //

    இத்தனை புகைப்படங்களை எடுத்தீரே அந்த ஒரு புகைப்படத்தை எடுத்தீரே அதனை வெளியிட்டீரா ;-)

    இப்பொழுது தங்களை இப்படி படுத்தி எடுத்திருக்கிறார் என்பதை கண்களால் பார்க்க கொடுத்து வைக்க வில்லையே என்று மனம் சற்றே வருத்தம் கொள்கிறது

    .


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அந்த ஒரு புகைப்படத்தை எடுத்தீரே அதனை வெளியிட்டீரா ;-)//

      வண்டியை விட்டு எட்டு குதித்து விடுவேன் என்ற எனது கொலை மிரட்டலுக்கு பின்னர்தான் வேகமே சற்று குறைந்தது இந்த லட்சணத்தில்......photo, video ,... சிபி அண்ணாச்சிக்கு நல்ல மனசு :)

      நீக்கு
    2. நாளை (3-2-2013) தனது 10 ஆம் ஆண்டு மண நாள் காணும் சேலம் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .

      நீக்கு
    3. சேலம் டெக்ஸ் விஜய ராகவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த மண நாள் வாழ்த்துக்கள் !

      நீக்கு
    4. சிபி தாங்கள் என்னை அதனை விட அன்பால் என் முடிகளை சிலிர்க்க வைத்தீர்களே அதை விடவா !

      நீக்கு
  9. ஹா ஹா ஹா ! டியர் ஸ்டாலின் ...நீங்க இப்போ பாத்து ஜஸ்ட் ஒரு சாம்பிள் மட்டுமே ...நம்ம சார் கிட்ட இன்னமும் நீங்க அறிந்திறாத சாகசங்கள் நெறையா இருக்கு.

    //வண்டியை விட்டு எட்டு குதித்து விடுவேன் என்ற எனது கொலை மிரட்டலுக்கு பின்னர்தான் வேகமே சற்று குறைந்தது//

    இது 100 சதவீதம் நடந்திருக்கக்கூடிய அக்மார்க் உண்மை சம்பவம் . இதில் எந்த வித மிகைப்படுத்துதலும் இல்லை என்று ஸ்டீல் க்ளா வின் நீண்ட நாள் நண்பன் என்ற வகையில் நான் உறுதி கூறுகிறேன்!

    என் திருமணத்திற்கு பிறகே "இனி இவர் கூட சேர்ந்து சுத்தினா வீட்ல சோறு கிடையாது!!" என்று மறைமுக மிரட்டலுக்கு பிறகே "நீயெல்லாம் ஒரு நண்பனாடா ??" என கேட்பவர் காதுகளுக்கு உறக்கசொல்லி "சைமன்-லார்கோ" டைப் பைகிங் சற்று குறைத்துக்கொண்டோம் . இருந்தாலும் "நண்பேன்டா!" என்று சொல்லிக்கொண்டு திரைமறைவில் ஊர் சுற்றுவது அவ்வப்போது அரங்கேறுவது உண்டு !!

    பதிலளிநீக்கு
  10. //ஸ்டீல் க்ளா வின் நீண்ட நாள் நண்பன் என்ற வகையில்//
    இவருக்கும் ஒரு கால்கட்டு போடுவதற்கு நீங்களாவது ஒரு முயற்சி எடுக்கலாமே:)
    இவரிடம் உள்ள வண்டியினை கண்டுபிடித்தவர்கள் கூட இப்படி ஒரு அசாத்திய வேகத்தினை எட்டியிருப்பது அறிதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // கால்கட்டுப் போட முயற்சிக்கலாம்//

      ஏதாவது ஜெட் விமானத்தில் ஏர்-ஹோஸ்டஸாக வேலை செய்யும் பெண்தான் இவருக்கு சரிப்பட்டு வரும்! :)

      நீக்கு
  11. ஹா ஹா ஹா! நண்பர் ஸ்டாலினிடமிருந்து எதிர்பாராத ஒரு நகைச்சுவைப் பதிவு! வரிக்கு வரி நகைச்சுவை இழையோடுகிறது. இது இது இதைத்தான் எதிர்பார்க்கிறேன்!

    நம்ம ஸ்டீல் க்ளாவின் இந்த அசுரவேகத்தின் பின்னணியில் ஒரு மெல்லிய  சோகம் இழையோடும் கதை இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?
    சில வருடங்களுக்கு முன் அவர் தனது நண்பரை (நண்பியாகவும் இருக்கலாம்) பைக்கில் அமரவைத்து 30 கீ.மீ வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றபோது, ஒரு குட்டி நாய் ஒன்று அவரை ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு ஓவர் டேக் செய்து முன்னால் ஓடியது. பின்னால் அமர்ந்திருந்த நண்பர் வாய்விட்டுச் சிரிக்கவே, கடும் கோபத்தில் அந்தக்குட்டி நாயை ஓவர்டேக் செய்ய ஸ்டீல் க்ளா எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
    அவர் மேற்கொண்ட அந்தப் 6 கீ.மீ பயணத்தில் மொத்தம் 8 நாய்கள் அவரது பைக்கை ஓவர்டேக் செய்து அவமானப்படவைத்தன.

    அடுத்த சில நாட்களில்,
    * 180 cc யில் பல்சர் பைக் வாங்கப்பட்டது
    * ஓவர்டேக் செய்து மானத்தை வாங்கிய 8 நாய்களும் ஒரு கோணிப்பையில் பிடித்துவரப்பட்டு ஸ்டீல் க்ளா வீட்டில் சிறை வைக்கப்பட்டன.
    * பின்னால் யாராவது அமர்ந்துவரும்பட்சத்தில் பக்கத்துத் தெருவுக்குக்கூட 80 கீ.மீ க்குக் குறையாமல் வண்டி ஓட்டப்பட்டது.

    நடந்தது இதுதான். நம்பினால் நம்புங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Erode VIJAY://வரிக்கு வரி நகைச்சுவை இழையோடுகிறது. இது இது இதைத்தான் எதிர்பார்க்கிறேன்!//
      உங்களிடமிருந்தும் , BPK போன்றவர்களிடமும் பழகியதன் விளைவு :)

      நீக்கு
    2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்:விஜய் அவருடைய பின்னூட்டத்தில் அவருடைய சொந்தக்கதையைத்தான் அப்படி எழுதியுள்ளார். என்ன பூனைக்கு பதில் நாய் என எழுதியுள்ளார். இப்பொழுது கரடி போலும்.....

      நீக்கு
  12. டியர் ஸ்டாலின் !!!
    /// உங்கள் வண்டி சர்வீசுக்கு விடும்போது சொல்லுங்க மறுபடியும் வறேன். அதுவரைக்கும் புனிதச்சாத்தானையும் ஆடிட்டரையும் அனுப்பி வைக்கிறேன்///
    உங்களுக்கு ஏன் இந்த கொலவெறி ?

    பதிலளிநீக்கு
  13. இவ்வளவு நடந்திருக்கா?! :) மேஜிசியனுக்கே மேஜிக் காட்டிவிட்டார் போல?! ;)

    பதிலளிநீக்கு
  14. //மேஜிசியனுக்கே //
    இது போட்டு வாங்கறதா இல்லைனா .................:)

    பதிலளிநீக்கு
  15. ஈரோட்டாரே தாமதத்திற்கு பொருத்தருள்க.

    //அந்த மாலை நேர நெறிசலிலும் 85 ஐ எட்டியபொழுது எனது அடிவயிற்றில் அண்டா அண்டாவாக புளியை கரைத்து ஊற்றியது. நடு நடுவே கால் தொடைகள் நடு ரோட்டை கூட்டாத குறையாக தொட்ட பொழுது காலையில் படித்த ராசிபலன்வேறு கண்முன்னே டான்ஸ் ஆடி படுத்தியது.//

    ரகளையான பதிவு. கோயம்புத்தூர் விசிட்டை அமர்க்களமாக பதிவாக இட்டுவிட்டீர்கள். மிகவும் ரசித்தேன். உங்கள் ஊரில் புளி விலை மிகவும் குறைந்து விட்டதாமே. அதே போல் தினமும் உங்களை அழைத்து புளிகரைத்துத் தர வேண்டும் என்ற அன்பு கோரிக்கையோடு, ஸ்டீல் க்ளா வீட்டு வாசலில் பெண்கள் பெரிய க்யூவில் நிற்கிறார்களாமே.

    பரவாயில்லை எடிட்டருக்கும், ஈரோடு இளைய தளபதிக்கும் நீங்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கின்றீர்கள். 10 கேள்விகளில் உங்களைக் காப்பாற்றி, பைக் ஸீட்டில் எடிட்டரை உட்கார வைத்துவிட்டார் விஜய்.

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். மேலும் தொடரட்டும் உங்கள் பதிவுப் பயணமும், கோயம்புத்தூர் பைக் பயணமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஸ்டீல் க்ளா வீட்டு வாசலில் பெண்கள் பெரிய க்யூவில் நிற்கிறார்களாமே.//
      அப்படியாவது இந்த புண்ணியவானுக்கு ஒரு கல்யாணமாகி காலைக் கட்டினால் சரி :)
      //10 கேள்விகளில் உங்களைக் காப்பாற்றி, பைக் ஸீட்டில் எடிட்டரை உட்கார வைத்துவிட்டார் விஜய்//
      அப்படியே பல்ஸருக்கும் ஒரு நல்ல விளம்பரம்
      //மேலும் தொடரட்டும் உங்கள் பதிவுப் பயணமும், கோயம்புத்தூர் பைக் பயணமும். //
      ஏன் ஏன் ஏன்..... பதிவு போடவேண்டாம்னு சொன்னா விட்டுறேன். அதற்காக ஒரு பிள்ள பூச்சிய இப்படி கொல்ல நினைக்காதீங்க :)

      நீக்கு
  16. இன்னும் ஒரு கால் மணி நேர பயணத்தில் உங்களை உங்கள் வீட்டிலெயே கொண்டு விட்டிருப்பர் ஸ்டீல் க்ளா.

    பதிலளிநீக்கு
  17. இன்னும் ஒரு கால் மணி நேர பயணத்தில் உங்களை உங்கள் வீட்டிலெயே கொண்டு விட்டிருப்பர் ஸ்டீல் க்ளா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னும் ஒரு கால் மணி நேர பயணத்தில்//
      ஈரோட்டிற்கா அல்லது ஒரேடியாவா......:)

      நீக்கு