சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் "தேவரகசியம் தேடலுக்கல்ல" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவிசிவாவின் பதிவோடு ஒப்பிட்டு பார்த்த பொழுது ஸ்தம்பித்து விட்டேன். மனிதர் என்னமாய் தேடியிருக்கிறார்....'கடினஉழைப்பு" என்ற வார்த்தைகளில் மட்டும் அதனை பெருமை படுத்திவிட முடியாது. அதையும் மீறிய ஏதோ ஒரு உந்துதல் +அதீத ஆர்வம் + இத்தியாதிகள் உள்ளன என்பதுமட்டிலும் உண்மை
சென்ற பதிவில் மாயாவி கொடுத்திருந்த விளம்பரத்தினை தொடர்ந்து அது சம்மந்தமான முதல் பதிவினை அனுப்பியுள்ளார். மீண்டும் அவரது கலை நயம் என்னை மிரளவைக்கிறது.
இதன் ஆக்கம் குறித்து உங்கள் பதிவுகளை தெரியப்படுத்துங்களேன்
நட்புடன்
ம.ஸ்டாலின்
ஸ்தம்பிக்கச் செய்திடும் வேலைப்பாடு! ஆச்சர்யப்படுத்திடும் தகவல் திரட்டு! இத்தனையும் செய்து முடிக்க எத்தனை நாட்களை விழுங்கியதோ தெரியவில்லை!
பதிலளிநீக்குஉங்களது காமிக்ஸ் காதல் வாழ்க, மாயாவி சிவா அவர்களே!
இன்னும் எப்படியெல்லாம் எங்களை ஆச்சர்யப்படுத்திட திட்டம் தீட்டியுள்ளீர்களோ...
உங்கள் அன்பும்,தோழமையும்,எனக்கு தந்த ஆச்சர்யத்திற்கு
நீக்குஈடாக செய்ய, பெரிதாக என்னிடம் ஒன்றும் இல்லை...நண்பரே !,
அருமையான பதிவு நண்பர் மாயாவி சிவா அவர்களே ...
பதிலளிநீக்குவெறுமென கலரில் வெளிவந்த புத்தகங்கள் என லிஸ்ட் செய்யாமல் ஒவ்வொன்றுக்கும் தங்களின் உழைப்பு ... உண்மையிலேயே எங்களை அதிர செய்கிறது நண்பரே ...
எத்தனை மணி நேரங்களோ அல்லது எவ்வளவு நாட்களோ இதற்காக நீங்கள் செலவளித்தீர்கள் என்பது தெரியாது .. ஆனால் சில நிமிடம் ஒதுக்கி உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை ...
Good Job ... Keep it up ....
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
@ திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
நீக்குபதிவிடும் போது 'ஒரு நினைவுட்டல்...sms ' கேட்டிருந்தீர்கள்...
இங்கு மழை காரணமாக '3G நெட்' கிடைக்கவில்லை.
உங்கள் கமெண்ட் மூலமாகத்தான் ,நண்பர் ஸ்டாலின்
பதிவிட்டுஉள்ளார்..அது உங்களை அடைந்தவிட்டது
என்பதும் தெரிந்தது நண்பரே !
உங்கள் பாராட்டின் ஆழம்,பதிவின் அழகையும் சொல்கிறது,
பாராட்டுக்கு நன்றிகள்.
மாயாவி சிவா,
பதிலளிநீக்குகடின உழைப்பு கண்கூடாக தெரிகிறது. Extraordinary work. Great.
தொடர்ந்து கலக்குங்கள்.
அன்புடன்,
ராஜா
@ ராஜா
நீக்குஉங்கள் தொடர்புக்காகவே தொடர்கிறேன்...நண்பரே !
பதிலளிநீக்குஅபாரம் மாயாவி.!
அதீத உழைப்பு
அட்டகாசமான வேலைப்பாடு
அற்புத குறிப்புகள்.
அடங்காத காமிக்ஸ் நேசம்
அழகிய வண்ணச்சேர்க்கை
சூப்பரப்பு.!!!!!
@ கண்ணன் ரவி
நீக்குஅபாரமான அட்டையுடன்
அதீத கதாபாத்திரங்களுடன்
அட்டகாசமான சித்திரங்களுடன்
அற்புத கதைகளுடன்
அடங்காத வெள்ளம்போல
வந்த முத்துகாமிக்ஸ்-ஐ
கொஞ்சம் வரிசைபடுத்தியுள்ளேன்.
அவ்வளவுதான் நண்பரே !
நீங்கள் அன்று சொன்னதை செய்தால்...
உண்மையில் சூப்பராக இருக்கும் !
பதிலளிநீக்கு+1
Mayavi sir .. simply rocking ... keep going friend !
@ Satishkumar S
நீக்குthank u friend !
Excellent work and rare informations mayavi Siva... hats off
பதிலளிநீக்கு@ Gokul C
நீக்குநன்றி நன்பரே !
Test
பதிலளிநீக்குஹி ஹி ஹி
//எடிட்டர்:இன்று இரவு..புதியதொரு பதிவோடு சந்திக்கிறேன் ! அது வரை have a great day all !//
நீக்குகொர்ர்....கொர்ர்.....கொர்ர்
outstanding effort ....mesmerizing ......only deep love over comics can bring out such mind blowing endeavours ....
பதிலளிநீக்கு@ selvam abirami
நீக்கு//only deep love over comics can bring out such mind blowing endeavours //
உண்மை தான் நண்பரே !
திரு மாயாவி சிவகுமார் அற்புதம் உங்கள் வயது என்னவென்று நான் அறியேன்
பதிலளிநீக்குஆனால் நான் இதுவரை படிக்காத தீ விபத்தில் திரைப்பட சுருள் ,மற்றும் பில்லி சூனியமா
பித்தலாட்டமா இரண்டையும் ஞாபக படுத்தி விட்டீர்கள் நன்றி
@ VETTUKILI VEERAIYAN
நீக்குஇரும்புக்கை மாயாவியை தமிழகம் சந்தித்த,முத்துகாமிக்ஸ்
வெளிவந்த வருடம் தான் நான் பிறந்தேன் !
லாரன்ஸ் & டேவிட்-ன்,பிளைட் 731...வரும் போது எனக்கு
வயது இரண்டு மாதம் நண்பரே !
மாயாவி சிவா,
பதிலளிநீக்குஉங்களின் காமிக்ஸ் காதலுக்கு முன் எதுவும் நிகரில்லை என எண்ணுகிறேன். உங்களின் கடின உழைப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் – Dr. A. K. K. Raja
@ AKK
நீக்குடாக்டர் சார்...என் காதலுக்கு முன் என பிரித்து சொல்வதை
விட,நம் காமிக்ஸ் காதல் முன் எதுவும் நிகரில்லை என
நினைக்கிறேன்.
மனமார்ந்த பாரட்டுக்கு நன்றிகள் !
மாயாவி சார் ......
பதிலளிநீக்குஅட்டகாச படுத்தி விட்டீர் .உங்கள் படைப்பை பார்க்கும் பொழுது அந்த புத்தகத்தை என் கையில் சொந்தமாக கிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சி கிட்டுமோ அதே மகிழ்ச்சி இந்த சமயம் எனக்கு கிட்டுகிறது .பாராட்ட வார்த்தை இல்லை .எனது வாழ்த்துக்கள் மட்டும்..........
பிறகு ஒரு பணிவான மன்னிப்பை கோருகிறேன் சார் .தங்கள் வலை பதிவை கண்டவுடன் தான் தாங்கள் அலைபேசியில் வினவிய விஷயம் நினைவிற்கு வருகிறது .கடை ...அலுவலகம் என மாறி ...மாறி அழைக்கும் பணி அதை மறந்து விட வைத்து விடுகிறது .இன்றோ ..நாளையோ தெரிவித்து விடுகிறேன் சார் ...மீண்டும் மன்னிக்க ...
@ Paranitharan K
நீக்குவாழ்த்துக்கள் எல்லாம் வேண்டாம் நண்பரே...உங்கள் அன்பும்,
நட்பும் (நிறைய) கிடைத்ததால் போதும் !
அப்புறம் தகவல்கள் தயார் நிலையில் உள்ளன,தேவையெனில்
அனுப்புகிறேன் நண்பரே !
மாயா மச்சிந்ரா மாயம் காட்ட வந்தீரா ! மாயங்கள் காட்டி ........................................
பதிலளிநீக்கு@ சேலம் Tex விஜயராகவன்
நீக்குஹா..ஹா...நிச்சயம் மோசம் செய்ய அல்ல,நண்பரே !
வாவ்...கலக்கிட்டீங்க...மாயாவி சிவா நண்பரே :)
பதிலளிநீக்குஉங்களின் ஒவ்வொரு பதிவிலும் காமிக்ஸ் மீது தங்களுக்கு உள்ள காதலை உணர்கிறேன்...
simply superb... :)
@ சத்யா
நீக்குஉங்களுக்குள் இதை விட அதிக காதல் இருப்பதை
உணர்கிறேன்,நண்பரே !
சிவா பின்னிட்டீங்க ! அது போல இரு வண்ண இதழ்களயும் ஆசிரியர் விட்டால் அருமையாக இருக்கும் !
பதிலளிநீக்குவண்ணத்தில் மாயாவி பளிச்சிடுகிறார் !
இந்த வண்ண கதைகளை ஆசிரியர் இப்போதைய சைசில் வண்ணத்தில் வெளியிட உங்கள் பதிவு உறுதுணையாய் இருக்கட்டும் !
3 தூண் மர்மம் மஞ்சள் நிற இரு வர்ணம் ! அருமை !
இரு வண்ண க்மதைகள் அனைத்தும் கண்ணில் காட்டுவீர்கள் என நினைக்கிறேன் !
அப்புறம் அட்டை படங்கள் ஆஹா ! மாயாவியின் பின் அட்டை, இரத்த வெறியர்கள் தூள் !
நேற்றே படிக்க வேண்டும் என்று இருந்தேன் ! இன்று ரசித்து விட்டேன்
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு......
@ ஸ்டீல் க்ளா
நீக்குநன்றி இருக்கட்டும்....இங்கு உடனே தேவை மின்சாரம் !
இன்று மின்சாரம் ....மாச" கட்" கொஞ்சம் ஸ்டாக் இருந்தால்
அனுப்புங்கள்...நண்பரே !
முகமூடி வேதாளன் மட்டும் என்னிடம் உண்டு !
பதிலளிநீக்குஇரும்பு மனிதன்,கொலைபடை பற்றியும் வருமா மாயாவியாரே?
பதிலளிநீக்கு@ abujack ravanan
பதிலளிநீக்குஎந்தமாதிரி தகவல்களை கொடுத்தால் சுவையாக இருக்கும் ஐடியா
சொல்லூங்கள் நண்பரே !
அருமையான பதிவு ; வாழ்த்துகள் மாயாவி சார் !
பதிலளிநீக்குகிராபிக்ஸ் வேலைகள் நன்றாக இருந்தாலும், தாங்கள் முன் வைக்கும் கருத்துகளுக்கு அது இடையூறாக இருக்கிறது. அழுத்தமான வண்ணங்கள் நம் கண்களை பதம் பார்ப்பதாகவும், சிறிது நேரத்திற்குள்ளாகவே கண்களில் உறுத்தல் ஏற்படுவதுமாக இருக்கிறது. மிக இலேசான வர்ணங்களாகவே இருந்தாலும், கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில், அது மிகவும் பிரகாசமாக எதிரொலிக்கும் என்பதால், முத்துவின் வண்ணப் பயணம் சம்பந்தமான அட்டைப் படங்களும், தங்களின் கருத்துகளும் தத்தம் முக்கியத்துவத்தை நன்றாகவே இழக்கின்றன !
போலவே, ஒவ்வொரு படத்திலும் தவறாமல் இடம்பெறும் தங்களின் மாயாவி சிவா என்ற லோகோ அவசியமா என்பதையும் தாங்கள் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இது போன்று, காலத்தின் காமிக்ஸ் கால் சுவடுகளைப் பதிவாக வலையேற்றம் செய்யும் போது, அதனதன் ஒரிஜினல் தன்மையை இழக்காமல் இருப்பதே சிறப்பாக அமையும் என்று எண்ணுகிறேன் !
உதாரணமாக .. ..
உதாரணமாக, இது போன்ற வரலாற்றுப் பதிவுகள் இளையராஜாவின் இசை போன்று இருப்பதே சிறப்பாக அமையும். அதுவே A. R. Rahman இசை போன்று பல வண்ணத்தில் ஒரு புயலாக அவதாரம் எடுக்கும் போது அதன் சிரஞ்சீவி தன்மை காலத்தால் அழிக்கப்படும் நிலைகளும் ஏராளம் என்பதை மனதிற் கொள்ளுதல் இங்கு அவசியம் என்று கருதுகிறேன் !
நீக்குபாடல் செவிகளுக்கு கேட்கும் விதமாகவும், அர்த்தம் உணர்ந்து இலயிக்கும் படியான இதமாகவும், பின்னணி இசை மனித குரலுக்கு பின்னேயும் அமையும்படி இசையமைத்தவர்களில் வல்லமைப் பெற்றவர் இளையராஜா !
ஆயிரம் நவீன யுக்திகள் புகுத்தியும் ; ஆரவாரம் செவிகளில் மோதிச் சிதறும் ஆர்ப்பரிக்கும் கடலைகளாக, இசையை மட்டுமே நம்மைக் கேட்க வைத்தவரில் முதன்மையானவர் A. R. Rahman. இங்கே பாடல் வரிகள் மறுக்கப்படுகின்றன ; அல்லது கேட்கவே இயலாமல் போகின்றன !
இது போல் தங்களின் கிராபிக்ஸ், உங்களின் கருத்துகளையும், தமிழ் காமிக்ஸ் வரலாற்று ஆவணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடாமல் இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதே என் கருத்து !
தங்களின் உழைப்பு, அதீதமாக காமிக்ஸிற்கு செலவிடப்படுவதால் ஒரு வேண்டுகோள் ; நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்தது போல், எடிட்டர் விஜயனின் காமிக்ஸ் வெளியீடுகளில் மாதமோ, வருடமோ குறிப்பிடப்படுவதில்லை. இதற்கான காரணத்தை ஏற்கனவே ஒரு மொபைல் ஃபோன் பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார்.
பதிலளிநீக்குஇதனால் என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட வெளியீடு எந்த வருடம் வெளி வந்தது என்றோ ; எந்த மாதம் வெளி வந்தது என்றோ நிர்ணயித்துக் கூறுவது இயலாத காரியமாகவே இருக்கிறது. இந்தத் தைரியத்தில் தான் எடிட்டர் அவர்கள் சமீபத்தில் ஒரு போட்டியை அறிவித்தார் என்று நினைக்கிறேன்.
இது போன்ற சிக்கல்கள் ; போட்டிகள் வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே வருகிறது என்றால், இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து இருக்கும் நிலைமையை சொல்லவே வேண்டாம். எனவே, இந்த வலைதளத்தின் பெயருக்கு ஏற்ப, தங்களின் அயராத உழைப்புக்கு சாட்சியாக ஒரு பதிவை அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். contd..
உதாரணமாக ''வருடங்களும் காமிக்ஸ் வண்ணங்களும் !'' என்ற மாதிரியான வேறு ஒரு அழகான தலைப்பில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் காமிக்ஸ் வெளியீடுகளைப் பதிவாக தொகுத்து வைத்தீர்கள் என்றால் அது ஒரு அரிய போக்கிஷமாக அனைவராலும் கருதப்படும் ! அதில்..
நீக்கு1. தலைப்பு !
2.மாதம் !
3.விலை !
4.ஹீரோ !
5.பக்கம் !
6.status !
2014
1.தேவரகசியம் தேடலுக்கல்ல - செப்டெம்பர் - 120 - கிராபிக் நாவல் - 166 - முழு வண்ணம் !
என்று ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு லிஸ்ட் தயார் செய்து, ஒரே பதிவில் update செய்து வந்தால் நீங்களும் ஒரு நடமாடும் லைப்ரரியாக திகழ்ந்து, காமிக்ஸ் வாசகர்களையும் திகழச் செய்வீர்கள் என்று வாழ்த்துகிறேன். நன்றி !
மன்னிக்க வேண்டும், சிறு தொடர்பு ஒன்று விடுபட்டு போய் விட்டது..
நீக்கு1.தலைப்பு !
2.மாதம் !
3.விலை !
4.ஹீரோ !
5.பக்கம் !
6.status !
7.லோகோ ! (முத்து ; லயன் ; சன்ஷைன் )
இதை நீங்கள் 2012 வருடத்திலிருந்து மட்டுமே ஆரம்பிக்கலாம் !
@ மிஸ்டர்.மரமண்டை part 1
நீக்குவணக்கம் நண்பரே,
உங்கள் விரிவான பதிவு,என் 'ஆரோக்கியமான அலசல் கடிதம்'
பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது,நண்பரே...
உங்கள் கருத்து,சிந்தனை,அதைவெளிப்படுத்த தேர்தெடுக்கும்
வழிமுறைகளை...இன்னும் பல விசயங்களை கணக்கிட்டு
பார்க்கும்போது...நம் இருவரின் சிந்தனைமுறை சிலவிஷயங்களில்
ஒத்துபோவதாக உணர்கிறேன் !
காமிக்ஸ்உலகத்தில், யாருடனும் எதிரெதிர் நின்று பேசுவதை விட,
தோழில் கைபோட்டு போசவே மிகவிரும்புகிறேன்,உங்கள் தோழில்
கைபோட்டு கொள்ளவா ? நண்பரே !
(உங்கள் தோழில் கைபோட்டு பேசுவதாக நினைத்து தொடர்கிறேன்)
முதலில் நீங்கள் விரும்பும் கடைசிவிஷயத்தில் இருந்துவருகிறேன்.
2012 to 2014 பட்டியல் என்னிடம் தயாராகவே உள்ளது, அந்த பணி
எனக்கு எளியது.மேலும் இதை 3 நண்பர்கள் செய்யபோவதாக விருப்பம்
தெரிவித்துள்ளனர்.முக்கியமாக நண்பர்:போ.கு.தா பரணிதரன்.
நீங்கள் குறிப்பிடும் 7 விசங்களை தாண்டி அசத்தலாக அட்டவணையை
தரமுடியும்...இதனால் மறைமுகமாக நண்பர்களை ( மனதை ) நசுக்கு-
-வதுடன்....நல்ல, வளர்க்கப்படவேண்டிய ஆர்வங்களை,சர்வாதிகாரிகள்
செய்வது போன்ற அடக்குமுறையாவதுடன்...
'காமிக்ஸ் மேல் உள்ள அதீதகாதல்-ன் வெளிப்பாடு' என இந்தநிமிடம்வரை
நினைத்துக்கொண்டிருக்கும் நண்பர்களிடம்...ஏன்...அப்படி நினைத்துக்கொண்டு
செயல்படும் நானே...அந்த நினைப்பை,காலில் போட்டு நசுக்குவதைபோல-
அதீதகாதல் என்பதை தாண்டி,வெறியன் என்பதையும் தாண்டி,தீவிரவாதி
என்பதையும் தாண்டி அதற்கும் கீழானசெயலாக -ஆகிவிடும்,நண்பரே !
(கொஞ்ச தூரம் நீங்கள் என் தோழில் கைபோட்டு நடந்து வாருங்கள்)
மேலும் நீங்கள் கணிப்பது போல 2012 to 2014 பட்டியல் என்ற ஒரு சின்ன
விசயத்திக்காக 'நடமாடும் லைப்ரரி' பெயரெல்லாம் வந்துவிடாது,அப்படி
சொன்னாலும் அது பொய்,தற்காலிகம் தான் !
இன்னும் சற்றுஅழமாக என் அபிப்பிராயம் சொல்லவா...நண்பர்'கிங் விஸ்வா'
மற்றும் நண்பர் 'கலீல்' (விடுபட்டவர்கள் மன்னிக்க) போன்றவர்களுக்கு
உரியது, 'நடமாடும் லைப்ரரி' என்ற சிறப்புபெயர். எடிட்டரே முத்துகாமிக்ஸ்
வரிசைபட்டியல் வேண்டுமென்றால்,நண்பர் 'கலீல்' blogஐ தான் குறிப்பிடுகிறார்.
அதை இன்னும்சிறப்புசேர்க்க என்னால் அவருக்கு எப்படி உதவமுடியும் ?
என யோசிக்க முடிகிறதே ஒழிய, 'மாலைமதி காமிக்ஸ்' பட்டியலில் குளறுபடி...
தகவல்கள் தவறு,என வம்பிழுக்க என்மனதில் இடமேயில்லை. சரியான பட்டியல்
இதுதான் எனகொடுப்பது எப்பிடிநம்பகத்தன்மை பெறும்...? புத்தகங்களை
வரிசையாக வைத்து, இதன்பின்இது...இதன்பின்னர் இது...என பார்த்தால்தான்
நானே ஒத்துக்கொள்வேன். அந்த சந்தர்ப்பத்தை 'கலீல்'க்கு ஏற்படுத்தி தரவே
ஆர்வம் போகிறதே ஒழிய,வேறுஎண்ணம் எழவில்லை...நண்பரே !
இங்கு எனக்கு பிடித்த தத்துவம் சொல்கிறேன்...நீங்களும் ரசிப்பீர்கள்...
"கடவுள் வேறு வேறு காரணங்களுக்காக ஒவ்வொருவரையும் படைத்துள்ளார் !
ஒரே காரணத்துக்காக இருவரை படைக்க அவர் முட்டாள் அல்ல ! "
என் படைப்பின் காரணம் நான் அறிவேன். 2015 வரை காத்திருப்போம்,
திருப்பதியான பட்டியல் கிடைக்கவில்லையெனில் உங்கள் துணையுடன்
பட்டையை கிளப்புவோம்..சரியா நண்பரே..!
அடுத்த விஷயம் படங்களுக்கு இடையில் என் 'logo'...
@ மிஸ்டர்.மரமண்டை part 2
நீக்கு//அழகான வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் படம் ஒன்று இணைத்துள்ளேன்; அது எதற்காக என்று கேட்டிருக்கலாம்; இந்த படம் இந்த பதிவிற்கு பொருத்தமானதா என்று வினவியிருக்கலாம்; பதிவில் உள்ள அத்தனை விஷயங்களும் எப்படி இந்த படத்தில் அடக்கமாகி இருக்கிறது என்று அலசியிருக்கலாம்; //
இது உங்கள் வரிகள்... வேறு விசயத்திற்கு மேல் வரிகள்எழுதப்பட்டவையே என்றாலும்,“ஒரு படம் போடுவதற்க்கு பின்னால் இவ்வளவு பெரிய சிந்தனையா” என ஒரு அசத்தல் பதிலை கையில் வைத்துக்கொண்டு, “எதற்காக இந்த புத்தர் படம் ?” என்ற கேள்விக்காக (இன்றுவரை?) நீங்கள் காத்திருப்பதாகவே அந்த
வரிகள், மெல்லிய சங்கீதம் போல, என்னை கேட்கிறது நண்பரே !
blog படிக்கும் ஒவ்வொரு காமிக்ஸ் பிரியனுக்கும் ‘அழகான வெளிர் ஆரஞ்சு வண்ணத்தில் புத்தர்’ படத்தை பார்த்தவுடன் உங்கள்பெயர் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியாத அளவிற்கு, அந்தபடம் உங்கள் logo ஆகிவிட்டதை நீங்களே கூடமறுக்கமுடியாது.
1000 பக்கங்கள் படித்து அதில் 2 வரி விதையை எடுத்து,அதை
wallpaper ராக மாற்றி நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டதை, சில மாதங்கள் கழித்து வேறு பெயரை போட்டு நமக்கே ‘ஹாய்’ சொல்லும் வலைத்தளம் பற்றி, (அந்த கணம்பற்றி) உங்களுக்கு சொல்லவேண்டுமா நண்பரே !
காமிக்ஸ் பற்றிய ‘கமெண்ட்’களை பொறுமையாக படித்து,அவற்றைஉள்வாங்கி எழுத்தியவரின் மனநிலைக்கு மாறி,தரம்பிரித்து,எதை எழுதினால்இந்தஉலகம்திரும்பி
பார்க்கும்,என பதிவை செதுக்கி,பலநாள்சிந்தனையின் பதிவுகள் புரியாமல்,பத்தோடுபதினொன்றுஆகி விட்டால்...? எ ன்னசெய்வது என அதையே bolg ல் பதிவாகி பத்திர
படுத்தும்போது....(இந்த மாத்தியோசி விஷயத்தில்தான் நாம் ஒத்து போகிறோம் நண்பரே)
பலநாள்கண்ட கனவை,கண்கள் எரிய,விரல்கள் வலிக்க,தீட்டிய ஓவியத்திற்கு அதன் ஒரு ஓரத்தில் கையெழுத்திடாமல் தருவது,காலத்தின் கால்சுவடுக்கு உதவும்,என்ற சித்தாந்தம் ஏற்புடையதல்ல...மேலும் ஒரிஜனல் தன்மையுடன் வந்தவற்றைஇந்த உலகம் மறைத்ததும்,மறந்ததும்,புதைத்தாலும் ஏற்கனவே
நடந்து விட்டது (நான் குறிப்பிடும் எனக்கு முகம் தெரியாத நபர் நண்பர்: சொக்கலிங்கம் பன்னீர்செல்வம்...அவர் கையெழுத்திடாமல்கொடுத்த பல காமிக்ஸ்படங்கள் பலரால் பந்தாடப்படுகிறது )
பிரச்சனை என்னவென்றால் என் logo வின் தாக்கம் தான்,
‘பெப்ஸி,கொக்கோகோலா’ லோகோவை போலவே அழ்மனதைதொடக்ககூடியவை !(தாக்கத்தின் அளவுகோள் நன்குஅறிவேன்)
இது இப்போதைய சிந்தனையல்ல நண்பரே...30
வருடங்களுக்குமுன்பே வேதாளனின் ‘மண்டைஓடு’ தான் என்புத்தகங்கள் என்பதற்கு அடையாளமே..!
அந்தஅடையாளமிடும் தெளிவுமட்டும் இல்லாருந்திருந்தால்,
காமிக்ஸ்வேட்டையர்கள் கையில் சிக்கி, இந்த logo விற்கு
இணையான தகவல்களை தர,கையிருப்புக்கள் இல்லாமல் வாழ்க்கை ஓட்டத்தில் என்றோ கரைந்துபோயிருப்பேன் நண்பரே !
அடுத்த விஷயம்...இளையராஜா vs AR ரகுமான்....
நீக்கு@ மிஸ்டர்.மரமண்டை part 3
உண்மையில் இங்கு இளையராஜா....old முத்துகாமிக்ஸ் தான் !
ஆர்ப்பரிக்கும் AR.ரகுமான் இங்கு....new முத்துகாமிக்ஸ் என்பதே சரி !
எதோ எனக்கு தெரிந்த விதத்தில் கொஞ்சமாக வண்ணப்
படுத்தி,என் ஆசைக்கு அழகுபடுத்தி பதிவிட்டுள்ளேன் என்று கருத்து கூறுவதுதான் ஆரோக்கியமானது நண்பரே ...!
ஆனால் இந்த ஆரோக்கியம் தாண்டிய கொஞ்சமாக சலசலப்பையும்,
"ஒரு கருத்தை விளக்க...உதாரணம் சொன்னால்,அந்த உதாரணத்தை வேறு விதமாக விளக்கிவிட்டு, விஷயத்தில் இருந்து நழுவி உன்சமார்த்தியத்தை காட்டுகிறாயா...?" என கேட்கப்படுவது தளத்திற்கேஉரிய பண்புகள்...! எனவே வேறுவிதத்தில் தொடர்கிறேன்....
பதிவிட்ட படங்களை ஆராய்ந்தால்,வெளிசட்டமும்,
வெளியீட்டு எண்கள்,தவிர மற்றவைகள் ஒரு ஒழுங்கு
முறையின்றி படத்திற்கு படம் மாறுபட்டிருக்கும்.
முழு அட்டைபடமோ,முழுபக்கமோ பார்க்கவே முடியாது.
இது முழுக்கமுழுக்க கண்களை கூசாவும்,பழைய நினைவுகளை கிளரவும், மட்டுமே நோக்கம் கொண்டு செய்யப்பட்டவை.
இந்த படங்கள் காலசுவடுகளுக்கு ஏற்றதல்ல....
30 ஆண்டுகாலம் ஒரு மலைபிரதேச கிராமத்தில்,தனி ஒருவனாகவே காமிக்ஸ்-ஐ ரசித்துகொண்டிருந்தவன்....
இனிவரும் 30 ஆண்டுகள் உங்களை போன்ற பல நண்பர்களுடன்,பேசி,பகிர்ந்துகொண்டுகாமிக்ஸ் உலகின்
பயணத்தை தொடரப்போகிறேன்...நண்பரே !
இந்த காமிக்ஸ் உலக கால்சுவடை எதிர்கால இளைய தலைமுறை அசந்து போகும் அளவிற்கு, அட்டகாசமாக
தயாரிக்க வேண்டும். இது கூட்டு முயற்சியில்தான்,
சிறப்பாக செய்யமுடியும்.கைவசம்பல வருடங்கள் உள்ளன...
பொறுமையாக திட்டமிட்டு வரலாறு
படைப்போம்...நண்பரே...!
உங்கள் தோழ்மீது கைபோட்டு பேசியதில்,எனக்கு மிக்கமகிழ்ச்சிநண்பரே..உங்கள் கையை ஒருமுறை குலுக்கிக்கொண்டு விடைபெறுகிறேன்...!
நட்புடன்,
மாயாவி.சிவா
செயற்கரிய செய்வர் பெரியோர்
பதிலளிநீக்கு@ R.Anbu
நீக்குஇந்த வரிகளை பிரகாஷ் பப்ளிகேஷன்ஸ்க்கு நானே எழுத நினைத்தேன்...நீங்கள் எழுதிவிட்டீர்கள்,என்ன தளம் மாறி
விட்டது...ஓகே உங்கள் சார்பாக அனுப்பிவிடுகிறேன், நண்பரே !
Dear siva I'm waiting for ur new post......
பதிலளிநீக்குநானும் கூட நண்பரே..!
நீக்குமுத்து கலர் காமிக்ஸ்களை அங்கொன்று இங்கொன்றுமாக நண்பர்களின் சேகரிப்பில் மட்டுமே பார்த்திருக்கிறேன்... அது ஒவ்வொன்றையும் இவ்வளவு பிரம்மாண்டமாக ஸ்கான் செய்து, கிளீன் செய்து, கிராபிக்ஸ் செய்து பதிவிட்டிருப்பதை பார்த்தால், உங்கள் காமிக்ஸ் மீதான காதல் அபரீதம் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதொட்ர்ந்து கலக்குங்கள் சிவா...!
@ Rafiq Raja
நீக்குஉங்கள் பார்வையிடலுக்கும்,பாராட்டுக்கும் நன்றிகள் நண்பரே..!
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் நண்பரே....
பதிலளிநீக்கு