வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

புத்தகத் திருவிழாவில் சில துளிகள்...

 வணக்கம் நண்பர்களே...

ஈரோடு புத்தகத் திருவிழாவில் சில துளிகள்...
* வழக்கம்போல டெக்ஸ் வில்லரே விற்பனையிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். 'காமிக்ஸ்னு எதைக் கொடுத்தாலும் படிப்பேன்' என்ற வாசகர்களைத் தாண்டி 'செலக்ட்டிவ்வாக காமிக்ஸ் படிப்பேன்' ரக வாசகர்களின் ஏகோபித்த தேர்வு எப்போதும் டெக்ஸ் புத்தகங்களாகவே இருக்கிறது. இவருக்கு அடுத்து நிற்பவர், வேறு யார் லக்கிலூக் தான்!
* பழைய ( மாயாவி, ஸ்பைடர்) ரசிகர்களில் பலர் தன்னுடன் அழைத்துவந்தவர்களிடம் 'நானெல்லாம் அந்தக்காலத்துல...' என்று தொடங்கி இரும்புக்கையின் புகழ் பாடி பீற்றிக்கொண்டனர். இவர்களில் பலர் நமது தற்போதைய வெளியீடுகளைத் புரட்டிப் பார்த்ததோடு சரி!
* "அட! இது லயன் காமிக்ஸுப்பா! இதெல்லாம் இன்னுமா வந்துகிட்டிருக்கு?!!" என்று தனக்குத்தானே பேசிக் கொண்டு அவசர அவசரமாக மாயாவியைத் தேடியவர்கள் உண்டு. "இப்பல்லாம் இரும்புக்கை மாயாவி ஏன் வர்றதில்லை?" என்று கேட்டவர்களின் எண்ணிக்கை கணிசமானது. பதில் சொல்லி மாளல.
* மாதிரிக்காக வைக்கப்பட்டிருந்த LMS ஐ புரட்டிப்பார்த்துவிட்டு புருவத்தை உயர்த்தியவர்கள் ஏராளம். டெக்ஸ், டைலன் பக்கங்கள் அதிகம் ரசிக்கப்பட்டன.
* புதிய வாசகர்களைக் கவரவும், வாங்கத் தூண்டவும் வண்ணமயமான அட்டைப்படம் பிரதானப் பங்கு வகிப்பதை உணரமுடிகிறது. அப்படி ரசிக்கப்பட்ட அட்டைப் படங்களில் சில: LMS புக் நெ.1, எதிர் வீட்டில் எதிரிகள், பூதவேட்டை.
* 'இரத்தப் படலம்' முழுத் தொகுப்புக் கிடைக்குமா என்று கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 5.
* ஏதோ ஒரு ரூபத்தில் காமிக்ஸ் மீது ஈர்க்கப்பட்டு ஆர்வமாய் வருகைதந்த சிறுவர்கள் சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் உண்டு. அவர்களுக்குப் பிடித்த நாயகன் யாரென்று கேட்டால் உடனே பதில் வருகிறது -"டெக்ஸ்".
* தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து ஆர்வமாய் காமிக்ஸ் வாங்கிக் கொடுத்த தாய்மார்களும் உண்டு. அவர்களின் தேர்வு பெரும்பாலும் 'லக்கிலூக்'.
* சில தாய்மார்களுக்கு ஸ்பைடரைத் தெரிந்திருந்தது.
* "மொத்தமாய் வாங்கிட்டுப் போனா வீட்ல டோஸ் விழுகும்ங்க" என்று இரண்டு மூன்றாய் வாங்கிப்போன கணவன்மார்களும் உண்டு.

அன்புடன்


Erode Vijay




10 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் நண்பர் ஜெகதீஸ் அவர்கள் உங்களை இப்படி அழைத்ததால் வந்த பிரதிபளிப்போ :) மாற்றி விட்டேன்

    பதிலளிநீக்கு
  3. காமிக்ஸ் பிரியர்களில் பலரின் மனதை படம் பிடித்து பாய்ண்ட்,பாய்ண்ட்டாக பதிவிட்ட அழகு....
    போடோவில் காமிக்ஸ் மாலை(மலர் மாலைபோல)
    அலங்கரிப்பது போலவே, உங்கள் பாய்ண்ட் மாலை
    அழகோஅழகு நண்பரே...!!!

    பதிலளிநீக்கு
  4. ஈரோடு காமிக்ஸ் காமிக்ஸ் திருவிழாவில் காமிக்ஸ் பிரியர்களில் சுவையான சந்திப்புகளின் போது எடுத்த
    விடியோ- கவரேஜ் link name

    பதிலளிநீக்கு