திங்கள், 31 டிசம்பர், 2012

கண்ணாம் பூச்சி ( பொக்கிஷம்-5)

கனவான்களே ! சீமாட்டிகளே!
ஆந்தை தூக்கம் வந்த ஒரு இரவில் தாத்தாகொடுத்த தகரபெட்டியை உருட்டிய பொழுது கரயாண்களின் எச்சங்களுக்கு நடுவில் 1967 ல் வெளி வந்த நான் மிகவும் பாதுகாக்கும் பொக்கிஷம் தட்டுப்பட்டது.
குமுதம் வார இதழின்  ஒரு அங்கமான மாலைமதி யின் 10 வது பிரசவம் இது. 1967 செப்டம்பரில் வெளிவந்திருக்கிறது. மாலைமதியின் முதல் சித்திரக்கதை எது தெரியுமா! அப்புசாமி சீதாப்பாட்டியின் " காதல் காவலர் அப்புசாமி" என இதன் முந்தைய பட்டியலின் மூலம் அறிய முடிகிறது

அன்றய காலகட்டத்தில் மாலைமதியின் முதல் இதல் 40 பைசாவுக்கு வெளிவந்துள்ளது . அதன் பின்னர் 50 பைசாவிற்கு இரு இதழ்கள் வந்திருந்தாலும்  இந்த இதழ் 30 பைசாவுக்கு வெளிவந்துள்ளது. அந்த சமயத்தில் நமது கொள்ளூ தாத்தவுக்கும் எள்ளுத்தாத்தாவுக்கும் இது மிகப்பெரிய தொகையாகவும் அவர்களின் புதல்வர்கள் இதனை புத்தக கடையினில் மட்டும் ஆவலாய் பராக்க பார்த்த இதழாகவும் இருந்திருக்கும்.
 நண்பர்கள் யாரேனும் தமிழில் வந்த முதல் சித்திரக்கதை எது , அது எப்பொழுது வந்தது அதன் ஒவியர் மற்றும் ஆசிரியம் யார் என தெரியப்படுத்திட்டால் எனது தாத்தா கொடுத்த தகரப்பெட்டிக்கு அவர்கள் பெயரை வைத்து விடுவேன்:)



 











கதையின் பெயர் : கண்ணாம்பூச்சி
வெளிவந்த வருடம்: செப்டம்பர்-1967
விலை: 30 பைசா
வெளியீடு: மாலைமதி
ஆசிரியர்: குறிப்பு இல்லை
ஓவியர் : குறிப்பு இல்லை
 மொத்த பக்கங்கள் : 46 ( அட்டையுடன்)

திரையரங்கங்கள் சிற்றூர்களை அதிகம் எட்டிப்பிடிக்காத அந்த காலகட்டத்தில் மக்களின் பார்வை வார, மாத சஞ்சிகைகளின் மீது பதிந்திருந்தது . மேலும் சித்திரக்கதைகள் கைகளில் தவளுகின்ற மடிகணணி திரைப்படம் போல தோன்றுவதால் அன்றய பொழுது போக்கில் சித்திரக்கதைகளுக்கு மவுசு அதிகம்தான் . அதுவும் மூக்கை சிந்துகிற அளவிற்கு கண்ணீர் வரவழைக்கும் குடும்பக்கதை அமைந்துவிட்டால் சூப்பர் டூப்பர் ஹிட்டுதான்...( இப்ப மட்டும் தினசரி அனைத்து  சேனல்களிலும் அதுதானே மெகாதொடர் என்ற பெயரில்வாழுது.. :( 
அந்த குடும்பகதை சூத்திரத்தில் உருவாககப்பட்டதுதான் இந்த சித்திரக்கதையும் .


இன்று இந்த கதையை படித்துபார்த்தால் நமது ஃபாஸ்ட் புட் ரசனைக்கு ஒத்துவராது என்பதால் கால எந்திரத்தில் பயனித்து 1967 ல் இருந்து கொண்டு .... முடிந்தால் இன்னும் பின்னோக்கி சென்று படிக்கிறேன். இருந்த போதிலும் நடு நடுவே அடைப்புக்குறியில்  2012 டிசம்பர் மாதத்து எனது மைண்ட் வாய்ஸ் முனகுவதை என்னால் தடுக்க முடியவில்லை 

கதைச்சுருக்கம்:


தனது அயோக்கிய முதலாளி  துரைவேலு தனது தங்கை கீதாவை காதலிப்பது அறிந்து அவனிடம் சண்டையிட்டு மூன்றான்று சிறைவாசம் அனுபவிக்கிறான் ரவி. சிறையிலிருந்து வெளிவரும் ரவி தனது பாசமலர் தங்கை அதே துரைவேலுவை திருமணம் செய்தது கண்டு அதிர்கிறான் மீண்டும் குழப்பம் சண்டை இப்போது துரைவேலுவின் தங்கை சுமதி  ரவியை காப்பாற்றுகிறாள் ( அட்டைப்படம்) . இதனை துரைவேலு பார்த்துவிடுகிறான் கோவத்தில் தனது தங்கையை அடிக்க ஆள் காலி ஆகிறாள்.  அந்த கோவத்தில் இரவில் துரைவேலுவை கொல்ல வருகிறான் ரவி, கடைசி நேரத்தில்  அட இது நமது தங்கையின் கணவராயிற்றே என கொலை செய்ய மறக்கும் வினாடியில் துரைவேலு விழித்துக்கொண்டு ரவியை துப்பாக்கியால் சுடுகிறான்.

அதிலிருந்து தப்பித்த ரவி மனம் நொந்து ( படிக்கும் நாம்  அல்லவா...) தற்கொலை செய்ய ரயில் பாதையில் தலை வைக்க அங்கு ஒரு குழந்தை கிடக்கிறது ( இன்னும் கதையை சொல்லித்தான் ஆகனுமா?)  அந்த குழந்தையை காப்பாற்றவாவது உயிர் வாழ நினத்து குழந்தையுடன் போர்ட்டர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்து வாழ்கிறான் .
வழக்கம் போல குழந்தையின் கழுத்தில் கிடக்கும் தாயத்தில் ஒரு முகவரி இருக்க அங்கு சென்று குழந்தை பற்றி கேட்க அந்த வீட்டு அம்மணி திரு திரு வென (நம்மைப்போல்) விழித்து ரவியை விரட்டுகிறாள் .
 ரவி திரும்பி செல்லாமல் வீட்டின் ஒரம் ஒளிந்து கொள்ள அதே சமயம் கீதா அங்கு வந்து அது துரைவேலுவின் முதல் மனைவியின் குழந்தை யென ஒரு புது விளக்கம் தருகிறாள் ( போதும் நிறுத்து ....)
மேலும்  முதல் மனைவியை துறத்திவிட்டு தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கதையையும் , அந்த குழந்தையை இது நாள்வரை இறந்துபோன துரைமுருகன் தங்கை வளர்த்ததாகவும் அந்தன் பிறகு இந்த குழந்தையை நோயில் இறந்துவிட்டதாகவும் கூறி எங்கோ தொலைத்து விட்டதாகவும் கூறுகிறாள் ( ஐயோ ... இப்பவுள்ள மெகா தொடர்களின் முன்னோடி இதுதானா?...)

என்றாவது ஒரு நாள் இப்படி நடக்குமென தெரிந்து முன்னெச்சரிக்கையாக தனது நண்பி மோகனா வீட்டு முகவரியை தாயத்தில் எழுதி வைத்ததாக கூறுகிறாள் கீதா.  அந்த சமயம் மறைவில் இருந்த குழந்தை மட்டும் தவழ்ந்துவந்து அவளிடம் சேருகிறது ( ஜானியின் இடியாப்ப சிக்கல் கதைகளே பரவாயில்லை...)


இரண்டு நாள் கழித்து தங்கை வீட்டுக்கு செல்லும் ரவி அங்கு வீடு காலிசெய்யப்பட்டிருப்பதை அறிகிறான்.அப்பொழுதுபார்த்து துரைவேலுவின் முதல் மனைவி அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்து ரவியால் காப்பாற்ற படுகிறாள் ( நெஞ்சு வலிக்குது...)

பல பக்கங்களுக்கு பிறகு அனைவரும் இறுதிக்காட்சியில் மோதிக்கொள்கிறார்கள் ( நாம் சுவற்றில் மோதிக்கொள்ளாத்துதான் குறை) கீதா இறக்க ரவி மீண்டும் சிறைக்கு போகிறான். இறுதியில் யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பதனை நீங்களே படத்தை பார்த்து புறிந்துகொள்ளுங்கள் ( அப்பாட ஆள விடுடா சாமி...)



இந்த கதை தொடராக வந்து பின்னர் முழுமையாக வந்ததன் அறிகுறிகள் தெரிகின்றன . ஆனால் இந்த கதை இன்றய மெகாதொடர் இயக்குனர் கைகளில் கிடைத்தால் 1000 எபிஸோட் தாண்டும் என்பது மட்டும் திண்ணம்.

வரைந்தது யார் என தெரியவில்லை என்றாலும் சித்திரங்கள் படு அமர்களமாக உள்ளன

நன்றி நண்பர்களே! இந்த ஆண்டின் இறுதிப் பதிவை முழுமையாக நீங்கள் படித்திருந்தால் (!) உங்கள் பொறுமைக்கு வீட்டில் சொல்லி திருஷ்டி சுற்றி போடுங்கள்.


மீண்டும் இதற்கு முன்பு வெளிவந்த (1966) ஒரு பொக்கிஷத்துடன் சந்திக்கிறேன் ( மறுபடியுமா ?....ф°∞ѣ∆√◊∙∙∏←∑ΨΨθω……)

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 





ஞாயிறு, 4 நவம்பர், 2012

தமிழ் காமிக்ஸ் கிளப்



 
வாழ்க்கையில் மகிழ்வான தருணங்கள்  பலமுறை வரும் அதில் தலைகால் புரியாமல் திக்குமுக்காட வைக்கும் மகிழ்வான தருணங்கள் மிகச்சிலவைதான்நிகழும்  . கடந்த ஞாயிறு(28/10/2012)  ஈரோடு காமிக்ஸ் சந்திப்பாளர்களின் நிகழ்வும் அப்படித்தான் திக்குமுக்காட வைத்துவிட்டது.

 எந்த ஒரு பெரிய முன்னேற்பாடுகளோ எதிர்பார்ப்போ இல்லாமல் ஆரம்பித்த இந்த கன்னி முயற்சிக்கு நல்லதொரு வரவேற்பு இருந்தது. முகூற்த நாள் என்பதால் கடைசி நேரத்தில் பல நண்பர்கள் வரமுடியாமல் போனது தெரிந்த பொழுதுதான் தேதியை மாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் உறைத்தது.

கூட்டத்தின் மூலம் ஏதோ தமிழ் காமிக்ஸை உடனே தூக்கி நிறுத்தி விடலாம் என்றோ , ஏதோ சாதித்து விட்டோம் என்றோ நாங்கள் நினைக்காவில்லை.  தமிழ் காமிக்ஸின் மீதுள்ள காதலையும் , அனுபவத்தையும் பகிற்வாதற்கான ஒரு வாய்ப்பாகவேதான் கருதினோம். வெகுதொலைவில் இருந்து வந்திருந்த நண்பர்களை பார்த்த பொழுது தமிழ்காமிக்ஸ் மீதுள்ள நண்பர்களின் பற்றுதல் ஒரு இனம்புரியா மகிழ்வை ஏற்படுத்தியது
காலை 11 மணிக்கு மெரிடியன் ஹோட்டலில் ஆரம்பிப்பதாக இருந்த நிகழ்வுக்கு சில நண்பர்கள் முன்னதாகவே வந்து காத்திருந்தார்கள். புனித சாத்தானின் வரவேற்புரையுடன் ஆரம்பித்த இந்த நிகழ்வில் நண்பர்கள் அனைவரும் தங்களுடைய பால்ய காலத்து காமிக்ஸ் அனுபவங்களையும் , தாங்கள் புத்தகம் வாங்குவதற்கு போராடிய கதைகளையும், ஒவ்வொரும் தங்களுக்கு பிடித்த ஹிரோக்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு கடந்த பாதைகளையும் பகிர்ந்துகொண்ட விதம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது

நடுவில் முத்தாய்ப்பாய் அனைவரும் ஆசிரியர் விஜயனுடன் தங்கள் மகிழ்வுகளை தொலைபேசியில் பகிர்ந்து கொண்டனர் . காமிக்ஸ் வளர்ச்சிக்கு தங்களுக்கு தோன்றிய எண்ணங்களையும் , தற்சமயம் வெளிவரும் கதையின் தரத்தைப்பற்றிய விவாதங்களும்,
தரப்பட்ட எண்ண பிரதிபலிப்புடன் நடந்தேறியது


மதியவிருந்துக்குப்பின் அரட்டை கச்சேரியாக அமந்த நிகழ்வுகள் மாலை ஆறு மணியளவில்தான் ஈரோடு விஜயின் நன்றியுரையுடன் முடிவுக்கு வந்தது.

வந்திருந்த அனைவருக்கும் காமிக்ஸ் க்ளப் சார்பாக " அப்புசாமியின் கலர் டீவியும் " என்ற ஜெயராஜ் ஒவியத்தில் வந்த காமிக்ஸ் புத்தகம் வழங்கப்பட்டது . இதனை திருப்பூர் ப்ளுபெரி ( நாகராஜ்) தனது அன்பளிப்பாக்கினார் . அவருக்கு அனைவரின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 நண்பர்கள் சிலர் 
சுப்ரமணி (பெங்களூரு)
ஆடிட்டர் ராஜா (பள்ளிபாளயம்)
 புனித சாத்தான்(பள்ளிபாளயம்)
விஜய ராகவன் (சேலம்)
 நம்பியார் (எ) அசோகன் (எ) வீரப்பன் (எ) ஈரோடு விஜய்
பரணிதரன் (தாரமங்கலம்)
ராஜசேகர் ( ஆட்டயாம் பட்டி)
 இங்கு பதிவிடுவது மட்டும்தான் எனது வேலை .மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்வதற்கு முக்கிய காரணமானவர்கள் புனித சாத்தான் , விஜய் , ராஜா ஆகியோர்கள்தான். இந்த நிகழ்வை சிரமேற்கொண்டு நடத்திய அவர்களுக்கும் மற்றய நண்பர்களுக்கும் நன்றிகள் என்றும் உரித்தாகுக...


அடுத்த சந்திப்பிற்கு அனைவரும் நாள் கேட்கும் பொழுதுதான் இந்த சந்திப்பின் வெற்றி புரிந்தது. என்னதான் முழுமையாக  பதிவிட நினைத்தாலும் இந்த வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தால்தான் அனைவரும் அறிந்து கொள்ள முடியுமே தவிர வரிவடிவங்களில் அதனை முன்னிருத்த முடியாது.




தமிழ் காமிக்ஸ் வளர்ச்சிக்கு நண்பர்கள் தெரிவித்த யோசனைகளில் சிலவைகள்....
*நெவர் பிபோர் இதழுடன் அனைத்து ஹீரோக்களுடன் கூடிய தினசரி காலண்டர் வழங்கினால் அனைவரும் தினமும் பார்த்து மகிழ்வதுடன் நல்ல விளம்பரமும் கிடைக்கும்
*சிறுவர்களை கவரும்வண்ணம் (தனியிதழாக )  கார்டூன் கதைகள்  ஆரம்பித்து அவர்களையும் உள் இழுக்க வேண்டும் ( டின் டின்இ வால்டிஸ்னி போன்றவை )
*அனைத்து அரசு நூலகங்களுக்கும் அனுமதி பெற்று புத்தகம் அனுப்பலாம்
* நகரத்தில் உள்ள பெரிய உணவகம் ,டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு வைக்கலாம்
*அனைத்து பேருந்து நிலையங்களிலும் இதழ்கள் கிடைப்பதற்கு ஏஜெண்டுகள் நியமிக்க வேண்டும் அந்தந்த ஊரில் உள்ள வசக நண்பர்கள் அதற்கு உதவ வேண்டும்
* மீண்டும் தீபாவளி மலர், கோடை மலர்,பொங்கல் மலர் வெளியிடுவது வாசகர்களை கவரும்

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஈரோட்டில் ஒரு காமிக்ஸ் சந்திப்பு

காமிக்ஸ் கிளப்
அன்பு நண்பர்களே! பதிவிடுவதற்கு பல விசயங்கள் இருந்தாலும். வெகுவான பணிச்சுமை இரும்பு பிடி போட்டு தடுத்துவிடுகின்றது. ஆனால் இந்த பதிவு  நீண்ட நாள் கனவை நிறைவேற்றும்படியாக அமைந்திருப்பது மிகவும் மன நிறைவைதருகின்றது 
. காமிக்ஸ் நண்பர்களை ஒன்று சேர்த்து ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தால் என்ன என்று மனதில் பல வருடங்கள் தோன்றிய எண்ணத்தை , ஈரோடு புத்தக திருவிழா அதனை மேலும் தூண்டிவிட்டது . இதை நண்பர்களிடம் தெரிவித்தபொழுது காமிக்ஸ் பட்டாளங்கள் புனித சாத்தான் , ஆடிட்டர் ராஜா, விஜய் மற்றும் கிங்க் விஸ்வா ஆகியவர்களின் ஒருமித்த பலத்த ஆதரவுகிடைத்தது.
 வரும் 28/10/2012 அன்று ஈரோட்டில் ஒரு சந்திப்பை ஏற்படுத்த நண்பர்கள் அனைவரும் எற்பாடு செய்துள்ளனர். காமிக்ஸ் நண்பர்கள் அனைவரையும் இந்த சந்திப்பிற்கு அன்புடன் அழைக்கின்றோம். சந்திப்பிற்கு வர விரும்பும் நண்பர்கள் மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  நண்பர்கள் விஜய் (94422 -25050) அவர்களிடமோ ஆடிட்டர் ராஜா 99765 41077 அவர்களிடமோ தெரிவிக்கலாம். ஈரோட்டில் நிகழ்வு நடைபெறும் இடம் குறித்த தகவல்கள் நண்பர்களின் முடிவுக்குப்பின் விரைவில் இங்கு வெளியிடப்படும்.  



வாருங்கள் காமிக்ஸ் நண்பர்களே! மக்களிடையே தமிழ் காமிக்ஸை கொண்டு சேர்க்க உள்ள வழிகளை அலசுவோம்....

 
இடம் : மெரிடியன் ஹோட்டல் , சவீதா மருத்துவமனை சமீபம் , பிரப் ரோடு, ஈரோடு
             ( ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட நடை தொலைவு)
நேரம் : காலை 11.00 மணி



திங்கள், 10 செப்டம்பர், 2012

மதுரை கண்காட்சியில் ஒரு காமிக்ஸ் முத்திரை

பெங்களூருவில் காமிக்கான் களைகட்டும் இந்த நேரத்தில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் கடந்த 30-8-2012 இல் ஆரம்பித்து 9/9/2012 வரை நடைபெற்ற  புத்தக கண்காட்சியில் முத்து - லயன் விற்பனை குறித்து இந்து பப்ளிகேஷன் உரிமையாளர் திரு.மாணிக்கம் அவர்களை அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்ட பொழுது கூறியவற்றையும் அந்த நிகழுவுகளை எனது வேண்டுகோளுக்கு இனங்க டிஜிட்டல் படமாக அனுப்பிய எனது மின்னியல் துறை நண்பர் பால்பாண்டி யின் ஆர்வத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


* புத்தக கண்காட்சியில் காமிக்ஸிற்கு நல்லதொரு ரெஸ்பான்ஸ் இருக்கிறது .
* குறிப்பாக சிறுவர்கள் லக்கிலூக்கிற்கு ஆர்வம் காட்டுவதை நல்தொரு வளர்ச்சியாக உணரமுடிகிறது.
* வழமைபோல தமிழில் காமிக்ஸ் வருவது இல்லை என நினைத்து கொண்டிருந்த பலர் முத்து & லயனை கண்டதும் உற்சாகத்தில் திணறியதை அறிந்துகொள்ள முடிந்தது
* அரங்கத்தில் புத்த்கத்தினை ஈரோட்டு புத்தக திருவிழாவில் அடுக்கிவைத்திருந்தது போலவே முன்னுரிமை கொடுத்து  அடுக்கிவைத்திருந்தனர்.
* வருபவர்களுக்கு வழிகாட்டியாக அண்ணாட்சி ராதாகிருஷ்ணன் கலக்கியுள்ளார் .மனிதர்  ஈரோட்டில்  கொடுத்தது போலவே துண்டு பிரசுரங்களை அள்ளி வழங்கியுள்ளார்
* மதுரையில் உள்ள காமிக்ஸ் பதிவாளர்கள் யாரேனும் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!


 பல காமிக்ஸ் நண்பர்களை அருகில் இருந்து சந்திக்க முடியவில்லையே என்ற வருத்தம் மட்டும் நீங்காமல் உள்ளது


புத்தக கண்காட்சியின் சில கண்கொள்ளாக்காட்சிகள் இதோ.........   

மேஜையின் மேல் கொட்டிக்கிடக்கும் காமிக்ஸ்கள்..........



                                                            இந்து பப்ளிகேஷன்
இந்து பப்ளிகேஷன்ஸ் நிர்வாகத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

புதன், 15 ஆகஸ்ட், 2012

ஒரு கல்லூரி கொண்டாட்டம் ...




மீண்டும் நான் கல்லூரி பருவத்திற்கு வந்து விட்டேனோ என்ற என்னத்தில் திக்குமுக்காடிப்போனது இந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக திருவிழா...

நீண்டட்களாக வலையில் கிண்டலடித்துக்கொண்டிருந்த நண்பர்கள் பட்டாளம் ஒன்றுகூடினால் கேட்கவேண்டுமா?.....  ஈரோடு விஜய் சொன்னது போல பலவருடங்கள் பழகிய நட்பு குழுமமாக காட்சியளித்தது அன்றயதினம். மணிக்கணக்கில் நேரம் போனது தெரியாமல்  அரங்கம் எண் 125 க்கும் 27&28 க்கும் ஓடிக்கொண்டு வரும் புதிய  வாசகர்களுக்கு  லயன் முத்துவிற்கு விளக்கம் அளித்துக்கொண்டிருந்தோம்

 பல நாட்களாய் வலைப்பதிவில் பல முகங்களுக்குபின்னால் ஒளிந்துகொண்டிருந்த நண்பர்களை இப்படித்தான் இருப்பார்கள் என ஒரு கற்பனையில் ஒரு முகத்தை வரைந்திருப்போம் ஆனால் நேரில் பார்க்கும்பொழுது அதற்கு நேர்மாறாக காட்சியளிப்பார்கள் அதிலும் ஒரு ஆச்சரியம் இருப்பதை மறுக்கமுடியாது

 
சாத்தான், ஈரோடு விஜய், ஆடிட்டர் ராஜா, மாயாவி,சிபி இவர்களுடன் அண்ணாச்சி இராதாகிருஷ்ணன் என அந்த மகிழ்வான தருனங்களை விவரிக்க இரண்டு நாட்களாக தமிழ் அகராதியில் வார்த்தைகள் தேடி கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த  லயன் ஆசிரியர் விஜயன், கிங் விஸ்வா வராதது மட்டும்தான் மனக்குறை.  


புத்கத்திருவிழா இன்றுடன் ( 14/8/2012) முடிவடைகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இந்து பதிப்பக உரிமையாளர்கள் சீனிவாசன்,மாணிக்கம்,நாகப்பன், பல்லவி பதிப்பகத்தின் இயக்குனர் நடராஜன், நண்பர் செல்வராஜ், ஈரோடு புத்தக திருவிழா நிர்வாகிகள், ஆசிரியர் விஜயன் , அண்ணாச்சி இராதகிருஷ்ணன், அடிக்கடி தொலைபேசியில் ஆதரவளித்த கிங் விஸ்வா, இது நாள் வரை எனது வலைப்பதிவில் பின்னூட்டமிட்டு அதற்கு உத்வேகம் அளித்த நண்பர்கள்   மற்றும் வந்திருந்த சிங்கத்தின் முகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

சில வாசகர்களின், பதிப்பகத்தாரின் பேட்டி ( சொற்பெழிவு நடந்த பொழுது எடுத்ததால் சற்று  இரைச்சலாக இருக்கும்) 
 
நீண்ட நாள் வாசகர் : சக்தி நல்லசிவம் (வாசகர் , செய்தி வாசிப்பாளர், மேடை பேச்சாளர்)
 

 

நீண்ட நாள் வாசகர் : பழனிச்சாமி


 
நீண்ட நாள் வாசகர் : ஆடிட்டர் இராஜா - பள்ளிபாளயம்
 
இந்து பதிப்பகத்தின் மூன்றாம் தலைமுறையின் எண்ணங்கள்....

 
காமிக்ஸ் நண்பர்கள் :  
 பயங்கர மின் அதிர்வுகளுக்கு பின்னர் தாக்குதலுக்கு உட்பட்டவர்
தாக்குதல் நடத்திய நபர்....

இயல்பு நிலை திரும்பிய பின்....

ஆரம்ப படத்தில் மின் அதிர்வுக்குள்ளானவர் நமது நண்பர் திருப்பூர் சிபி அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நபர் நீங்கள் அனுமானித்த அதே கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா…


புனித சாத்தான், கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா, திருப்பூர் சிபி, ஆடிட்டர் இராஜா

மீண்டும் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவிற்கு  (2-8-2013 முதல் 13-8-2013 வரை....)
இப்பொழுதே அழைப்பு விடுக்கிறேன் நண்பர்களே.... நன்றி!.....

புத்தக திருவிழா முடிந்தாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை...  காமிக்ஸ் குறித்த சில பேட்டிகள் ,  நண்பர்களின் படங்கள் , நான் வாங்கிய நூல்கள் விரைவில்....


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

காமிக்ஸ் ஒரு எட்டா கனியா!?

இரு நாட்களுக்கு முன்பு புத்தக விழா முடியும் தருவாயில் ஒரு மாணவன் மும்முரமாக நமது காமிக்ஸை புரட்டுவதை கண்டேன் விசாரித்ததில்  ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்றும் பெயர்  முருகேஷ் என்றும் கூறினான். லயன் காமிக்ஸ் பற்றி சற்று விளக்கம் கொடுக்க ஆரம்பித்த பொழுது அவனாகவே அது குறித்து நிறைய சொல்ல ஆரம்பித்து விட்டான் எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் இரண்டு வருடங்களாக  லயன் , முத்து காமிக்ஸ் வருவதில்லை என நினைத்து கொண்டானாம்.

நியூலுக்கை காண்பித்த பொழுது இது நல்லாத்தான் இருக்குது ஆனா வேண்டாம் என்றான். பின்னர் சட்டை பையை இடது கையில் பிடித்துக்கொண்டு தன்னிடம்  60 ரூபாய்தான் இருக்கிறது என்றும் 10 ரூபாய் காமிக்ஸ் வருவதில்லையா என வினாவினான். இந்து பதிப்பகத்தில் இதன் உடைத்த பண்டல் உள்ளது என அனுப்பி வைத்தேன் . அன்றய  நேரம் முடியும் தருவாய் என்பதால் இடத்தை அறிந்து கொண்டு கண்களில் ஆவலுடன் ஓடுவதை பார்த்தபொழுது எனது சிறுவயதில் காமிக்ஸிற்காக நான் அலைந்தது, பல நிமிடம் கண்முன்னே திரையோடியது. அவனிடம் தெரிந்து கொண்ட இன்னும் ஒரு விஷயம் ,இரண்டு ஆண்டுகள் முன்பு வரை அவனது பள்ளி நண்பனுடன் கூட்டு சேர்ந்து காமிக்ஸ் வாங்கினானாம் .

இனி காமிக்ஸ் 100 ரூபாயில் மட்டும் தான் வரும் என்றபொழுது அவனுடைய கண்களில் காணப்பட்ட ஒரு வினாடி ஏமாற்றத்தை நான் கவனிக்க தவறவில்லை.
காமிக்ஸ் என்பது இளம் தலைமுறைக்கு எட்டா கனியாக மட்டும் இருந்துவிடக்கூடாது.
அன்று பார்த்து நேரம் இல்லாத காரணத்தால் எனது வீடியோ காமராவை எடுத்து செல்ல வில்லை இல்லையெனில் அவனிடம் ஒரு மினி பேட்டி கண்டிருப்பேன்.

இவர்களுக்காகவாவது 50 ரூபாய் காமிக்ஸ் களாசிக் புத்தகத்தை விரைவில் ஆசிரியர் விஜயன் கொண்டுவருவது நலம்.
ஒன்று மட்டும் திண்ணமான உண்மை. தமிழ் காமிக்ஸ் என்பது அந்தகாலத்து வாசகர்கள் தான் இன்றும் படித்துகொண்டுள்ளனர், புதிய இளய சமுதாயம் இதனைப்பற்றி நினைப்பதில்லை என்பது தவறான கருத்து என்பதனை கண்டிப்பாக உணரவேண்டும் .

ஆயிரம் ரூபாய்க்கு முத்து காமிக்ஸ் வந்தாலும் வாங்கு வதற்கு இப்பொழுது சம்பாதிக்கும் நாம்மை போன்ற பழய வாசகர்கள் தயார்தான் ஆனால் இந்த முருகேசனின் தேடல்.....

இன்னும் எத்தனை முருகேன்களுக்கு காமிக்ஸ் புத்தகம் கிடைக்காமலோ அல்லது வருவது தெரியாமலோ, பணம் தட்டுப்பாட்டுடனோ ( நடுத்தர வர்க்கம்) அலைந்து கொண்டிருக்கலாம்......  இவர்களை எல்லாம் நாம் எப்படி இனம் கண்டு கொண்டு அவர்களுக்குள் இந்த அற்புத அனுபவத்தை  கொண்டு சேற்கபோகிறோம்? இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.......
இரத்தப்படலம்
இன்றுகாலை கிங் விஸ்வா தினகரன் வெள்ளிமலரில் " இரத்தபடலம் குறித்த செய்தி வந்தனை குறிப்பிட்டார்.அந்த  அறிய செய்தியின்  ஸ்கேன் காப்பி கீழே....


புத்தக கண்காட்ச்சியில் வந்துள்ள மற்ற காமிக்ஸ் + காமிக்ஸ் அல்லாத புத்தகங்கள்

வானதி பதிப்பகத்தில் வாண்டு மாமா+ விசாகானின் நூல்கள்




பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பக நூல்கள்



 அமர் சித்திரக்கதைகள்:


 ஆங்கில காமிக்ஸ் புத்தகத்திற்கான தனி அரங்கம் மற்றும் அதில் இடம் பெற்றுள்ள நூல்கள்:

















மீண்டும் நாளை சந்திக்கலாம் நண்பர்களே! நன்றி!