தமிழ் காமிக்ஸ் உலகின் பழைய பொற்காலங்களை கொஞ்சம் பின்னோக்கி
பார்க்க ஆசை பட்டாலும் இந்த தமிழ் தட்டச்சு குதிரையை பார்த்தலே, கறுப்பு கிழவி முகத்தை
விட படு அஷ்ட கோணலாக எனது முகம் மாறுவதை உணரமுடிகிறது . இதில்வேறு பலமுறை back
space பட்டனை அழுத்தி அழுத்தி சுண்டுவிரல் கோவித்துக்கொண்டு ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது
. முடிந்தவரை சண்டி குதிரையை இழுத்து பார்பதாக தீர்மானித்து விட்டேன்
இருளின் விலை இரண்டுகோடி
இதழின்
பெயர் : "இருளின் விலை இரண்டுகோடி "
வெளியீடு
: முத்து காமிக்ஸ்
வெளியீடு
எண்: தெரியவில்லை
மூன்று
கோடி மக்கள் வாழக்கூடிய ஒரு மிகப்பெரிய நகரத்தில் இரண்டு மணி நேரம் மின் தட்டுபாடு
ஏற்பட்டால் நிலமை தலைகீழாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துகாட்டாக வெளிவந்த
மாண்ட்ரேக்கின் கதை இது .
பல நாட்களாக இரவில் வெளிச்சத்தை பார்காத இருண்ட கண்டமான
நம்ம ஊரை ஒப்பிட்டு இந்தக்கதையை படித்தால் நாமெல்லாம் எவ்வளவு அடித்தாலும் தங்குகிற
ஜாதி என்பது அணைத்து தரப்பினரும் ஒப்புகொள்ள கூடிய ஒன்று
1980
கு முன்பு வெளிவந்த முத்து காமிக்ஸின் இருவண்ண கதை . தரமான தெளிவான கதை அமைப்பு.
80 களில் தெரு தெருவாய் பழைய காமிக்ஸ் புத்தகங்களை தேடி திறிந்த
பொழுது ( அந்த சுகமே தனிதான் ) கைகளில் அகப்பட்ட மற்றும் ஒரு சட்டை இல்லாத
பொக்கிஷம் . 40 பைசா விற்கு பழைய புத்தக கடையில் வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது
.
பதிவுக்காக
எனது தாத்தா கொடுத்த இன்னும் துரு ஏறாத தகர பெட்டியை உருட்டியபோது சிக்கிய
எனது சொத்துகளில் மூன்றாவது பட்டியல் ( முதல் பட்டியலில் உள்ள இதழ் குறித்த பதிவு
இவருட இறுதியில் வெளிவரும் ).
கதை
சுருக்கம் : அதீத அறிவியல் ஆற்றல் கொண்ட Dr ஜெட் தனது அற்புத கண்டுபிடிப்பின்
மூலம் குறுக்கு வழியில் பணம் தேட நினைக்கிறான் . அதனை அரசாங்கத்திற்கு உணர்த்த எட்டு
மாகாணங்களில் மின்வெட்டு ஏற்படுத்த நினைகின்றான் . அதற்கு தனது அறிவியல் கண்டுபிடிப்பை
பயன்படுத்தி நாட்டில் உற்பத்தியான மின்சாரத்தை திருடுகிறான் ( தமிழ்நாட்டில்
இப்படி எந்த புண்ணியவானும் இல்லையா?)
தனக்கு
சொந்தமான கோட் தீவில் இருந்து கொண்டு நகரத்தில் இவன் ஏற்படுத்தும் இந்த மின்திருட்டு
விருவிருக்க வைக்கின்றது . இரண்டு மணி நேரம் நீடிக்கும் இந்த
மின்வெட்டால் ஏற்படும் குழப்பத்தை சாதகமாக்கி கொண்டு தனது சகா "டட்லி"
மற்றும் அவன் சகநண்பன் "புரூச் " உதவியுடன் பல வங்கி
கொள்ளை , வழிப்பறி , திருட்டு ஏற்படுத்துகிறான். இந்த கொள்ளையில் தன்பங்காக இரண்டு
கோடி டாலர் பெற்று கொள்கிறான் Dr ஜெட் .
இது
இப்படி இருக்க . உற்பத்தியான மின்சாரம் எப்படி மாயமாக மறைந்தது என்று தெரியாமல் குழம்பும்
நகர மேயர் நமது ஹீரோ மாண்ட்ரேக் & கோ உதவியை நாடுகிறார்கள் .
Dr
ஜெட் வேண்டும் என்றே விட்டு சென்ற தடங்களை பின்பற்றி கோட் தீவை அடைகிறது நமது
கூட்டணி . அங்கு ஏற்பட்டும் அறிவியல் அனுபவங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது
. இருந்த போதிலும் தீய எண்ணம் கொண்ட Dr ஜெட் ஐ நமது ஹீரோ எப்படி பணிய வைக்கிறார்
என்பது மீத கதை .
கதையின்
+ பாயிண்ட் : நல்ல எழுத்துநடை , தெளிவான பதிப்பு , சோடைபோகாத வண்ண பதிப்பு ,
மாண்ட்ரேக்கின் மதினுட்ப தந்திரம் , Dr ஜெட் இன் 100 மில்லியன் டிகிரி
வெப்பத்தை ஏற்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்பு என சொல்லி கொண்டே போகலாம் .
பேய் நகரம் :
இந்த
இதழில் கொசுறு கதையாக மாண்ட்ரேக்கின் " பேய் நகரம் " இடம் பெற்றுள்ளது
. குட்டி கதையாக இருந்தாலும் தலைவருக்கே (மாண்ட்ரேக்) தண்ணி காட்டும் வில்லன்களின்
தந்திரம் அமர்க்களம் .
நண்பர்கள் யாரேனும் இந்த பழைய பொக்கிஷம் வைத்திருப்பின்
இதன் அட்டைபடம் மற்றும் கிழிந்தஇரண்டு பக்கங்களை ஒரு நகல் அனுப்பினால் உதவியாக
இருக்கும்
மீண்டும்
அடுத்த பதிவாக முத்து காமிக்ஸின் 100 இதழான ஒரு முழுவண்ண கதையுடன் சந்திக்கலாம்
அதுவரை கனவான்களே , சீமாட்டிகளே உங்களுடன் சேர்ந்து கொண்டு மற்ற வலைப்பதிவை
புரட்ட போகிறேன் ......
பின் இணைப்பு
பின் இணைப்பு
உங்கள் எழுத்து நடை அட்டகாசமாக முன்னேறி இருக்கிறது, இப்படி சொல்லுவது பொருத்தமாய் இராது! உங்களுக்கு தடையாய் இருப்பது தட்டச்சு மட்டுமே என்பது நன்கு புலனாகிறது! வாழ்த்துக்கள்! :)
பதிலளிநீக்குமாண்ட்ரேக் தவிர்த்த இதர ஹீரோக்களையும் வெளிக்கொணருங்கள் உங்கள் பொக்கிஷத்திலிருந்து!
உங்கள் தளத்தை மற்றவர்கள் பின்தொடர ஏதுவாக "Followers widget" இணைத்தால் உபயோகமாக இருக்கும்! அதே போல Word verification for comments-ஐ நீக்கிவிடுங்கள்!
பதிலளிநீக்கு//உங்கள் எழுத்து நடை அட்டகாசமாக முன்னேறி இருக்கிறது//
பதிலளிநீக்குஉங்களைபோல பின்னூட்டிகள் இருக்கும்பொழுது பூவுடன் சேர்ந்த நானும் வாசம் வீசதானே செய்வேன்.
//மாண்ட்ரேக் தவிர்த்த இதர ஹீரோக்களையும் வெளிக்கொணருங்கள் உங்கள் பொக்கிஷத்திலிருந்து!//
அடுத்த பதிவு நமது பலநாள் நாயகன் இரும்புக்கை தான்
//Followers widget//
உங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி அலை பேசியில் தொடர்பு கொண்டு விளக்கியமைக்கு மிக நீண்ட வந்தனக்கள் .நன்றி
good post friend . Waiting for the steel claw post
பதிலளிநீக்குthank you dear friend . sure next post will be steel claw
பதிலளிநீக்குwhen i first saw this title name in some old muthu comics book, i wondered why such title . But after reading this post by you , i realize what an apt title it was :)
பதிலளிநீக்குI'm very much glad, For you know the story through my little post
பதிலளிநீக்குமிக மிக அற்புதமான பதிவு நண்பரே. இப்புத்தகத்தை கண்ணில் கட்டிய தங்களுக்கு எனது நன்றிகள்.நானும் 1985 முதல்தான் விவரம் தெரிந்து பல புத்தக கடைகளை தேடி அலைந்துள்ளேன்.இரு வண்ண இதழ்களின் கவர்ச்சியே அலாதியனதுதான் .நானும் மாயாவியின் கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.கார்த்தி கூறியது போல followers widjet
பதிலளிநீக்குல் இணைத்துவிடுங்களேன்.
மிக மிக அற்புதமான பதிவு நண்பரே. இப்புத்தகத்தை கண்ணில் கட்டிய தங்களுக்கு எனது நன்றிகள்.நானும் 1985 முதல்தான் விவரம் தெரிந்து பல புத்தக கடைகளை தேடி அலைந்துள்ளேன்.இரு வண்ண இதழ்களின் கவர்ச்சியே அலாதியனதுதான் .நானும் மாயாவியின் கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.கார்த்தி கூறியது போல followers widjet
பதிலளிநீக்குல் இணைத்துவிடுங்களேன்.
நன்றி நண்பரே !
நீக்குநிங்கள் கூறியது போல் இருவண்ண கலவை ஒருதனி சிறப்புதான் . அடுத்ததாக வரும் பொக்கிஷம் -3 மாயாவியின் முழு வண்ணதில் வெளிவந்த முத்து காமிக்ஸ் -இன் 100 வது இதழ்
//Followers widget//
ஏதோ ஒரு வேகத்தில் ஆரம்பித்த பொழுது தெரியாமல் வைத்த தள முகவரியை மாற்றியபிறகு இணைத்து விடுகிறேன்.
ஆஹா ஆஹா வாங்க இன்னும் நிறைய பதிவிடுங்க இந்த புத்தகத்தை பார்க்க நிஜமாகவே மிகுந்த சந்தோசம்!
பதிலளிநீக்குநன்றி நண்பரே !
நீக்குநீங்கள் இங்கு பதிவு செய்த கருத்துக்களுக்கும் . முத்து காமிக்ஸ் தளத்தில் செய்த பின்னூடத்திற்கும்
// பதிவுக்காக எனது தாத்தா கொடுத்த இன்னும் துரு ஏறாத தகர பெட்டியை உருட்டியபோது சிக்கிய எனது சொத்துகளில் மூன்றாவது பட்டியல் //
பதிலளிநீக்குஹ்ம்ம் எனக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது ;-)
.
நன்றி நண்பரே !
பதிலளிநீக்குபெட்டியை கொடுத்துவிட்டு போன தாத்தா கூடவே நிறைய புத்தகங்களையும் கொடுத்துவிட்டு போனார் . ஆனால் அதில் எந்த காமிக்ஸும் இல்லாததை அந்தகாலத்து புத்தகங்கள் இன்றும் நிவர்த்தி செய்துகொண்டுதான் இருகின்றது . நேரம் இருப்பின் அதனை எழுத முயற்சிக்கிறேன்
nanrigal pala thalaivare!
பதிலளிநீக்குnext pathivu eppo?
பதிலளிநீக்குஎனக்கும் ஆசைதான் நண்பரே ! ஆனால் முட்டுக்கட்டையாக இருப்பது - இப்பதிவின் முதல் 5 வரிகளை மீண்டும் படித்து பாருங்கள் மற்றும் அலுவலக பணி குறுக்கீடு
பதிலளிநீக்குவிரைவில் அடுத்த பதிவு ....
என் பதிவில் தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி!
நீக்குசுஜாதா காமிக்ஸ் புத்தகம் பற்றி, தாங்கள் பதிவிடும்போது,
மறககாமல், என் பதிவின் கமெண்ட் பாக்ஸிலும்
தகவல் தாருங்கள்.
சரி, பதிவு எப்போ?
நன்றி நண்பரே !
பதிலளிநீக்குஎனது அடுத்த பதிவான இரும்புக்கை மாயாவி முடிந்தவுடன் இதனை பதிவிடுகிறேன் . ஆனால் உங்களைபோல் நூறாவது பதிவு போடும்பொழுது எனக்கு பல்செட் கட்டவேண்டிய காலம் வந்துவிடும் .
பிளேடு இப்பவே மூனு மாதத்தில் முப்பது போட்டு விட்டார் எப்படியும் அடுத்த இரு மாதத்தில் செஞ்சுரி அடித்துவிடுவார் என நினைகிறேன் .
நண்பரே இருளின் விலை இரண்டு கோடி கதை என் நினைவிலும் இருக்கின்றது. இதுவும் பேய் நகரமும் மிகவும் ரசித்த கதைகளே.
பதிலளிநீக்குதமிழர்களின் பாரம்பரியம் எப்படியென்றால் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். கத்தரி வெய்யிலை பனை விசிறி வைத்து கையால் கையால் விசிறியே குளிர்வித்தார்கள். அம்மியிலும் ஆட்டுக் கல்லிலும் அரைத்தர்கள். அடுப்பில் கட்டை, கரி, வரட்டியால் சமைத்தார்கள். பிரயாணத்திற்கு மாட்டுவண்டி, குதிரைவண்டி சைக்கிள் இல்லையென்றால் நடைதான். தூர பயணம் என்றால் ரயில் வண்டி.
இன்றோ விண்வெளிக்கு ஆள் அனுப்புகிறார்கள், செவ்வாய் கிரகத்தில் இந்தியா கால் பதிக்க திட்டமிடுகிறது. ஆனால் வண்டிக்கு போட பெட்ரோல் ரூ.100/- எட்டுகிறது. 100 கொடுத்தாலும் கிடைக்காத நிலை ஏற்படுகிறது. வீட்டில் இருக்கும் அத்தனை பொருட்களும் மின்சாரதில் இயங்கும் பொருட்கள், ஆனால் மின்சாரம் கிடைக்காது. அப்படியே மின்சாரம் கிடைத்தாலும் அதன் விலையும் வீட்டு மாத வாடகைக்கு ஈடாக இருக்கிறது. கேஸை வாங்க ஆள் இல்லாமல் இருந்தது. இன்று அதற்கு பயங்கர தட்டுப்பாடு. 30 40 வருடம் முன்பிருந்த பெட்ரோல், டீசல், கேஸ் கெரசின் கரண்ட்தான் இப்போதும் இருக்கின்றது. இவைகளின் தன்மையில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. இந்த பொருட்களை உபயோகப் படுத்தும் சாதனங்கள்தான் தரத்தில் உயர்ந்திருக்கின்றன. ஞாயப்படி பார்த்தால் அந்த சாதனங்களின் விலை உயர்வை ஏற்றுக்கொள்ளலாம்.
தட்டுப்பாடு வந்தால்தானே நாமெல்லோரும் அந்த பொருளை எவ்வளவு விலை கொடுதாவது வாங்குவோம்!. நீங்கள் சொல்வது 100% சரி. நாமெல்லோரும் எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்.
பதிவு முழுவதையும் படிப்பது என்பதுவே பெரிய விடயம் . அதிலும் நீங்கள் இட்டுள்ள நீண்ட பின்னூட்டம் உங்களின் சமுதாய அக்கரையை நன்கு வெளிப்படுத்துகிறது . உங்கள் வலைப்பதிவு பட்டயை கிளப்புகின்றனவே.... நன்றி நண்பரே!
பதிலளிநீக்குபெட்ரோல் தட்டுபாட்டில் மாட்டியதை நினைத்தால் நெஞ்சம் எரிகிறது நண்பா! என்ன ஒரு அரசியல் சூதாட்டத்தை நடத்தி காட்டி விட்டனர்!
பதிலளிநீக்குநள்ளிரவில் சென்னை மாநகரில் பெட்ரோல் தட்டுப்பாட்டில் குடும்பத்துடன் அலைந்ததை நினைக்கவே மிக கஷ்டமாக இருக்கு. சீக்கிரம் மாற்று எரிபொருள்கள் சந்தையை அலங்கரித்தால் தேவலை!
பதிலளிநீக்குசட்டத்தை கையில் வைத்துள்ள நீங்களே இப்படி சொன்னால் எங்களை மாதிரி ஆசாமிகள் கதை என்ன ஆவது
பதிலளிநீக்கு