சுஜாதாவின் "நைலான் கயிறு"
ஆசிரியர் : சுஜாதா
ஒவியர் : ஜெயராஜ்
பதிபகம் : தெரியவில்லை
பதிப்பு : இருவண்ணம்
அட்டைபடம் : இல்லை (வழக்கம் போல்)
"சுஜாதா" இந்த மூன்றெழுத்து மந்திரத்திற்கு கட்டுப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரியது.
கணிப்பொறியியல், இலக்கியம், தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று மனிதர் தொடாத துறைகளே இல்லை . காமிக்ஸயும் இவர் கதை பதம்பார்துள்ளது நமக்கு ஒரு மிகப்பெரிய வரம்.
சென்ற ஆண்டு ஈரோடு புத்தக கண்காட்ச்சியின் பொழுது சுஜாதாவின் பழய புத்தகங்களின் மீதி இருந்த சிலவற்றை 10 புத்தகம் 112 ரூபாய்க்கு வாங்கினேன். அனைத்தும் 80களில் அவர் எழுதிய பொதினங்கள்.
எனது பொக்கிஷப்பெட்டியை அழகு படுத்தும் நைலான் கயிறு இப்போது
BPK, நிஜாம் மற்றம் பல நண்பர்களுக்காகவும்.... கணேஷ் -வசந்த்
ஆரம்ப காலத்தில் டில்லியில்
வசித்து வந்ததாக கணேஷை சித்தரித்து அதனை மையமாக வைத்து
உருவாக்கியது இந்த கதை. முதலில் கணேஷை மட்டும்
வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில் வசந்த் கிடையாது . பின்னர் வந்த
கதைகளில் கணேஷ் - வசந்த் இணைந்து பல ஹிட் கொடுத்ததால் மறுஅவதாரமாக வந்த
இந்த சித்திர கதைக்காக வசந்தை இணைத்திருக்கலாம். அனேகமாக கணேஷ் - வசந்த்
இருவரும் வந்த "நைலான் கையிறு " கதை இதுவாகத்தான் இருக்கும் .
கதைச்சுருக்கம்:
அனைவரும் படித்திருக்கும் கதைதான் என்றபோதிலும் மறுபடியும்.....
நைலான் கையிறு மூலம் கொலை செய்யப்படும் கிருஷ்ணன் , அதற்கு தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கை சந்திக்கும் தேவ்தத்தன் மற்றும் ஹரிணி, இவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிதரும் கணேஷ் . இப்படி போகும் கதை இதன் பிறகு தான் சூடுபிடிக்கிறது
அனைவரும் படித்திருக்கும் கதைதான் என்றபோதிலும் மறுபடியும்.....
நைலான் கையிறு மூலம் கொலை செய்யப்படும் கிருஷ்ணன் , அதற்கு தவறுதலாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கை சந்திக்கும் தேவ்தத்தன் மற்றும் ஹரிணி, இவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிதரும் கணேஷ் . இப்படி போகும் கதை இதன் பிறகு தான் சூடுபிடிக்கிறது
,உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க கணேஷ் - வசந்த் எடுக்கும் முயற்சிகள் ஒரு சிறு நூலிலையை பிடித்து முன்னேறுகிறது
இறுதியில் கொலை செய்யப்பட்டதற்கு கூறப்படும் நியாயமான
காரணம் ( இன்றய பல கதைகளுக்கு இதுதான் முன்னோடி),
கதையின் மிக முக்கிய பலம் ; ஃப்ளாஷ் பேக் என்ற பெயரில் கதையின் மூலக்கருவை ஒரேடியாக சொல்லி போரடிக்காமல் டைரி மூலமாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லுவது சுஜாதாவிற்கே உள்ள டச்... (இதுதான் பின்னர் கமலின் ஆளவந்தான் படத்தில் பிரதிபளித்தது )
ஓவியம்: ஜெயராஜின் அற்புத தூரிகை கதையை மேலும் பிரகாசிக்க
செய்கின்றது . பொதுவாக பெண்களின் ஓவியத்தில் ஒரு கிரக்கத்தை ஏற்படுத்தும் வகையில்
அனாடமி விசயத்தில் பின்னுவார். இதற்காகவே பலர் அடிமையாகிவிடுவார்கள்
இந்த கதையில் நீதி மன்ற காட்சிகளயும் , சில கிளுப்பான
இடங்களிலும் , வழக்கம் போல தனது முத்திரையை பதித்து விட்டார் ஜெயராஜ்
சரி நண்பர்களே அடுத்த பதிவில் சந்திக்கும்முன் ஒரு
கொசுறு செய்தி : ஓவிய மன்னன் ஜெயராஜ் எனது சிறுகதை ஒன்றுக்கு ஓவியம் வரைந்துள்ளார்
என்றால் நம்ப முடிகிறதா? 83 ல் வந்த அந்த புத்தகம் எனது பொக்கிஷத்தில் எங்கோ புதைந்துள்ளது.
அப்புறம் இன்னும் ஓட்டு போடாத நண்பர்கள் மேலே ஒரு பதம் பார்த்தால் நல்லது ........
அப்புறம் இன்னும் ஓட்டு போடாத நண்பர்கள் மேலே ஒரு பதம் பார்த்தால் நல்லது ........